[உலகத்தைப் புரிந்துகொள்வது எப்படி] பாதசாரி உவமை (அல்லது) The Parable of the Pedestrian

29/12/2020

அதாவது, இந்தப் பாதசாரி த்ருஷ்டாந்தம்/எடுத்துக்காட்டு வழியாக சில உலக நடப்புகளைப் புரிந்துகொள்வது மட்டுமல்லாமல், நாம் தொடர்ந்து முன்னேற என்ன செய்யவேண்டும் (அல்லது, நம்முடைய இக்கால பிரச்சினைகளை, நாம் முனைந்து சரியாக்காமல் எதிர்கொள்ளாமல், பிறரை (நியாயமாகவே கூட) குற்றம் சாட்டுவதால்  அல்லது அவர்களுடைய உதவிபெற்று மட்டுமே தீர்த்துக்கொள்ளமுடியுமா?) என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்தப் பாதசாரி உவமையை, ஸ்ரீதர் திருச்செந்துறை அவர்களின் கட்டுரை அழகாக எடுத்தாள்கிறது: வழி தவறிய சமூகம்

இது மிக முக்கியமான கட்டுரை; ‘நாம் ஒடுக்கப்படுகிறோம்’ அல்லது ‘நசுக்கிவிட்டார்கள் நம்மை’ அல்லது ‘நாம் கொடுமைப் படுத்தப்பட்டோம், அதனால் தான் இப்படியிருக்கிறோம்’ எனப் பிறர் மீது (சரியாகவோ அல்லது தவறாகவோ) குற்றம் சாட்டி – ‘ஆகவே, அவர்கள் தாம் எம் நிலைமையைச் சரிசெய்யவேண்டும்’ எனச் சுயமுனைப்பில்லாமல், கையாலாகாத்தனப் பிலாக்கணத்திலேயே குறியாக இருக்கும் எந்தவொரு சமூகத்துக்கும், ஏன் ஒரு தனி மனிதனுக்குமேகூட இதில் ஒரு நேர்மையான, செயல்படுத்தத் தக்க பார்வை இருக்கிறது.

நம் கையே நமக்கு உதவி. ( இதனை ஏடாகூடமாக, நான் காங்க்ரெஸ் குண்டர்களை ஆதரிக்கிறேன் எனப் புரிந்துகொண்டுவிடாதீர்கள்!)

ஸ்ரீதர் அவர்களுடைய கட்டுரை அவசியம் படிக்கவேண்டியதொன்று. படியுங்கள், அசை போடுங்கள்.

முடிந்தால், ஏமி வாக்ஸ் அவர்களின் சிறு கருத்துரையைக் கேளுங்கள்: Amy Wax: Parable of the Pedestrian

பின்குறிப்பு: ஒருமாதிரி ஏறத்தாழ, இந்த பாதசாரி எடுத்துக்காட்டின் தாத்பர்யத்தைப் புரிந்துகொண்டவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்; அதாவது, நமக்கு மிகவும் ஆச்சரியம் கொடுக்கும் விதமாக, நம் செல்லத் தமிழகத்தில் தம் சமூகத்தைச் சுயமரியாதையுடனும் மாளாமுனைப்புடனும் முன்னெடுத்துச் செல்ல முனையும் தலைவருக்கான ஒரு அழகான எடுத்துக்காட்டு இருக்கிறது: அவர்தாம் ‘புதிய தமிழகம் கட்சி’ டாக்டர் க்ருஷ்ணஸ்வாமி அவர்கள்.

END

5 Responses to “[உலகத்தைப் புரிந்துகொள்வது எப்படி] பாதசாரி உவமை (அல்லது) The Parable of the Pedestrian”

 1. Sesha a.seshagiri Says:

  உங்கள் பதிவை முழுவதும் படிப்பதற்கு முன் நீங்கள் கொடுத்திருந்த சுட்டி மூலம் ஸ்ரீதர் திருச்செந்துறை அவர்களின் கட்டுரையை முதலில் படித்தேன் .உடனே என் நினைவில் தோன்றியது நம் தமிழ் நாட்டிலும் அப்படி ஒருவர் இருக்கிறார் அவர் தான் புதியதமிழகம் டாக்டர் .கிருஷ்ணசாமி என்று அதே போல் நீங்களும் உங்கள் பதிவின் இறுதியில் அவரை சிலாகித்து எழுதிஇருந்தீர்கள்! நன்றி!.(ஏழரைக்குள் என்னவொரு ஒத்திசைவு !!)மேலும் இவருக்கு நேர்மாறாக செயல்படும் திருமாவளவனை பற்றியும் நான் நினைத்தேன் ஏனோ நீங்கள் அதை சுட்டிக்காட்டி எழுத மறந்துவிட்டீர்கள்!.

  • Sridhar Tiruchendurai Says:

   அந்தக் கட்டுரையை எழுதும்போது நானும் அதைக் குறிப்பிட விரும்பினேன். கட்டுரை தடம் விலகிவிடும் என்பதால் விட்டு விட்டேன்.

 2. ராஜன் Says:

  நேர்மறை சிந்தனை என்பதே மேட்டுக்குடிக்கு உரியது என்பது போன்ற கேவலமான மனநிலையை உண்டாக்கிவிட்டனர்!அதனால் நேர்மறையாக செயல்படும் இயக்கங்கள்/அரசியல் கட்சிகள்/தனி நபர்கள் எதிர்மறை(கருப்பர் பிங்க்கர் நீலர் கூட்டங்கள் மாதிரி) கூட்டத்தினரால் வசைப்பாடப்படுவதும் அவர்கள் விலைபோய் விட்டனர் என்று அபாண்ட குற்றச்சாட்டுக்கள் வைத்து அந்த இயக்கங்கள்/அரசியல் கட்சிகள்/தனி நபர்கள் மீதான மக்களின் நம்பகத்தன்மையை முற்றிலும் நொறுக்கி வீழ்த்துவதே இவர்களின் ப்ரதான நோக்கம்


 3. […] நான் சுணங்கிப் போவதும் இல்லை. எனக்கு பேரபிள் ஆஃப் த பெடெஸ்ட்ரியனில் குவியம் உண்டு. இதெல்லாம் ஃபேக்ட் […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s