சுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (11/n)

11/02/2021

40 -> 42

40

அம்மணி மாலதி அவர்களின் ஆங்கிலக் கட்டுரை – ஓப்-இந்தியா தளத்தில் பதிப்பிக்கப் பட்டுள்ளது – பாரதம், பெண்ணியம் குறித்த சமனமான பார்வையை முன்வைக்கிறது: Feminism movement- helping or hurting Bharatiya women?

சஞ்சிகை108 தளத்திலும் அவரொரு  தமிழ்க் கட்டுரையை (மொழிமாற்றம்) எழுதியிருக்கிறார்: இஸ்லாமிய சமூகத்தின் படிநிலைகள்

எனக்குத் தோன்றுவது என்னவென்றால்: அவர் சத்தியத்தைக் காண்பிக்கிறார். (erm, this is ‘She is showing Promise’ – except that it has been ©SRamakrishnanized, sorry) – ஆகவே அவரது கட்டுரைகளைத் தொடர்ந்து படிக்கவும்.

அவர், மேன்மேலும் கடும் உழைப்பு செய்து காத்திரமான கட்டுரைகளைத் தொடர்ந்து எழுத, சிறக்க, பொலிய வாழ்த்துகள்.

இப்படியே மேலே (ஹ்ம்ம், சொல்லப்போனால், கீழே) போய், கவிதை-சிறுகதை-நாவல் என எழுதாமலிருந்தால் நான் மகிழ்வேன். ஆனால், அது அவர் இஷ்டம்.

41

கடந்த மூன்று -நான்கு வாரங்களாக, என் நெடுநாள் நண்பர் ஒருவரின், ‘இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ம்’ வகை ஆங்கிலப் புத்தகத்தை  எடிட்  (=இலக்கண/பிழை/தகவல் திருத்தம், பரிந்துரைகள், திருப்பி எழுதுதல், கழித்துக் கட்டல், அழகுணர்ச்சி(!), குறிப்புகள் கொடுத்தல், சிக்கல் சொல்லாடல்களைத் தவிர்த்தல், சுளுக்குச் சொல்லாட்சியைத் தவிர்த்தல், நீளநீள வாக்கியங்களை உடைத்தல், தகவல்களைத் தரவுகளுடன் சரிபார்த்தல் இன்னபிற) செய்துகொண்டிருக்கிறேன். ஒரு நாளைக்கு சுமார் 8 மணி நேர உழைப்பு, உரையாடல் & நரையாடல். களைப்பு. ஆனால் இந்தப் புத்தகம், கூடியவிரைவில்  வெளிவந்தேயாகவேண்டும்; ஆனால், இதுவரை பாதி ஆக்கம்கூடப் பட்டிபார்த்து டிங்கரிங் செய்யப்படவில்லை…. (இருந்தாலும், விட்டேனா பார்!)

இந்தமாதிரி எடிட்டிங் வேலையைப் பலமுறை நண்பர்களுக்கு (மட்டும்) செய்து கொடுத்திருக்கிறேன் – சிலபல கல்லூரிப் பாடப்புத்தகங்கள் உட்பட; பெரும்பாலும் அவை நன்றாகவே வந்திருக்கின்றன. (ஆனால் அவை குறித்த விவரங்களைக் கொடுப்பதாக இல்லை)

…ஆகவே இச்சமயம் தோன்றுகிறது: நம் தமிழில் வெளிவரும் பலப்பலப்பல புத்தகங்கள் – அவை புனைவானாலும் சரி, தகவல்/கருத்துக் களஞ்சியக் கட்டுரைகளானாலும் சரி – ஒரு மசுத்துக்கும் எடிட் செய்யப் படுவதேயில்லை என்று.

ஒருசில விதிவிலக்குகளுக்கு அப்பாற்பட்டு – ஒவ்வொரு எழவெடுத்த புத்தகத்திலிலும் வெறும் ஒற்றுப் பிழைகளில் இருந்து, ஒருமை-பன்மை மயக்கங்களிலிருந்து – படுபீதியளிக்கும் கருத்து/தகவல் பிழைகளிலிருந்து… படுமோசம். (கதை சொல்லல், இலக்கியத் தரம் போன்ற உயர்படுமட்ட விஷயங்களையே விடுங்கள்!)

இதற்கு நான் சமீபத்தில் படித்த சுளுந்தீ எனும் புதினம் ஒரு சோகமான உதாரணம். ஹ்ம்ம், ரணம். ரணகளம். (நன்றாக வந்திருக்கவேண்டிய இப்புத்தகம், சின்னாபின்னப் படுத்தப்பட்டுவிட்டது; இத்தனைக்கும் இதன் ஆசிரியர், இரா.முத்துநாகு அவர்கள், இதற்காகச் செலவழித்திருக்கக்கூடும் வாழ்க்கையும், கடும் முயற்சியும் எனக்குத் தெரியாமலில்லை; இருந்தாலும்… படுமோசமான உள்ளடக்க முட்டுக்கொடுத்தல், ப்ரொடக்ஷன் வேல்யூஸ் கிட்டவே போகாத தன்மை, செய்நேர்த்தியற்ற விட்டேற்றித்தனம்…)

மற்றபடி இந்த நாவலில் ஏகப்பட்ட பண்டிட் க. அயோத்திதாஸ்  அவரகள்தர – தரவுகளற்ற, முகாந்திரமே அற்ற, கற்பனைக்கழுதையோட்டும் நகைச்சுவை… பறையர்களிடமிருந்து பிராமணர்களுக்கு மருத்துவம் சென்றது எனும் மாயயதார்த்தவாதப் பதார்த்தம்; விஜய நகரப் பேரரசு 1565க்குப் பின் அடைந்த ‘வீழ்ச்சி’ இன்னபிறவற்றுக்குப் பிறகு  புலம் பெயர நேரிட்ட மக்கட்திரள்களைக் குடியமர்த்த  வலுக்கட்டாயமாக ‘பூர்வகுடி’களின் நிலம் கையகப்படுத்தப்பட்டது மட்டுமல்லாமல் அவர்கள் அநியாயமாகக் குலநீக்கம் செய்யப்பட்டது எனும் கவிதை… (எல்லாமே புனைவுதாண்டே!)​

இப்படி – தமிழ், தமிழ்வாசகர் மீதான உதாசீனம் தொடர்வதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று: தமிழ் எழுத்தாளர்களின்  அநியாயத்துக்கும் வீங்கிய சுயபிம்பம்.

“என் எழுத்து, என் சுதந்திரம், எவனாவது என் எழுத்தில் கைவைத்தால்… நடக்கிறதே வேறு! நான் எழுதிக்கொடுத்ததுபோலவே போடவேண்டும், இல்லையேல்…”

…வகை அற்பத்தனங்கள். (நான் இம்மாதிரி பலப்பல விஷயங்களை, சோக காவியங்களை நேரடியாகவே அனுபவித்திருக்கிறேன். ஆகவே. பத்ரி சேஷாத்ரி போன்ற ஓருவர் எப்படி இந்த விஷயங்களைத் தாக்குப் பிடிக்கிறார் என யோசித்துத் துணுக்குறுவதைத் தவிர்க்க முடியவில்லை)

ஆகவே, இந்த எழவெடுத்த தமிழுலகில், எடிட்டிங் என்றால், அதிகபட்சம் அட்டைப் படம் (அதுவும், ஐயகோ!) அல்லது படித்திருத்தம் – அதாவது வெறும் ஃப்ரூஃப் ரீடிங், முடிந்தால்.

தரமான எடிட்டர்களும் இல்லை, பஞ்சம் – எப்படியும், மற்றபடி ஆலையில்லா ஊராக இருக்கும் தண்டக்கருமாந்திர தமிழ் அலக்கிய/சாதா சராசரித்திணைக்கு அவர்கள் தேவையுமில்லை.

தமிழுலகில்(!) தரமான எழுத்துகள் ஏறக்குறைய இல்லாமல் போனதற்கு, மேலும் தரமான தமிழ்வாசகர்கள் மிகைஅதிக பட்சம் 500 என்ற அளவிலேயே, சுமார் 50 வருடங்களாக இருப்பதற்கு – இந்த அழிச்சாட்டிய புடைப்பூக்கவாதிகளும் ஒரு காரணம்.

(ஹ்ம்ம், யோசித்தால் – எனக்கு மட்டும் ஒரு நல்ல எடிட்டர் கிடைத்திருந்தால், நான் எங்கேயோ போயிருப்பேன்! தமிழலக்கியத்தின் தன்னிகரிலா தற்குறியாகத் தனித்துவத்துடன் திகழ்ந்திருப்பேன்! (ஆனால்: தப்பித்தீர்கள், நீங்கள்!!))

42

பாவம்.

அரவிந்தன் கண்ணையன் அவர்கள் ஏதோ, “சௌரிசௌரா (1921 போராட்டம், இன்னபிற) தொடர்பான விழாக்களை உத்தரப் பிரதேச (ஆனால், சான்றோர் அரவிந்தன் கண்ணையனால் அங்கீகரிக்கப்படாத) அரசு நடத்தியது தொடர்பாக ஒரே காந்தியத்தனமான வருத்தமும் அறச்சீற்றமும் தெரிவித்திருக்கிறார்,” என எனக்கு இன்றுவந்த ஒரு ஃபேஸ்புக் திரைச்சொட்டு தெரிவிக்கிறது – மேலும், என்னைப் போய் இதனைக் குறித்து எழுதும்படிக்கும்.

ஏனெனில், அரவிந்தனார் அவர்கள், இதிலும் ஒரு மசுத்துக்கும் வரலாற்றுப் பின்புலத்தையோ, இதே கொண்டாட்டங்களுக்கு விடுதலைக்குப் பின் காங்க்ரெஸ் அடிகோலியதையோ, மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதையோ – ஒன்றும் செய்யாமல், தெரிந்துகொள்ளாமல்  போராளித்தனமாக தொலைதூரத்திலிருந்து அட்ச்சிவுட்டிருக்கிறார்.

ஆனால் நான் அதனைக் குறித்து எழுதப் போவதில்லை.

ஏனெனில், வாய்கூசாமல்-தரவுகளில்லாமல் வெறும் அவதூறுகளாக எழுதுவதில் இந்த அரவிந்தன்கண்ணையன் வல்லவர். அவற்றைக் கேள்வி கேட்டாலும் அவருக்கு அதெல்லாம் ஒருபொருட்டில்லை. 

கலர்கலராகச் சட்டை போட்டுக்கொள்வதில் அவருக்கு இருக்கும் குழந்தைத்தனமான ஆர்வம், நேர்மையாகவும் கறாராகவும் விஷயங்களை அணுகுவதில் இல்லை.

ஆகவே கும்பமேளாவிலிருந்து சஹிப்புத்தன்மை வரை – அவர் தொடர்ந்து தொழில்முறையில் பீலாவிடுபவர். நான் இவரைக் குறித்து வேண்டியது எழுதியாகிவிட்டது – இவற்றை வைத்து ஒரு புத்தகமே போடலாம்போல!

அரவிந்தன் கண்ணையனார் புகழ்பாடும் ஒத்திசைவு காட்டுரைகள்:

கூச்சமோ நேர்மையோ இல்லாத இம்மாதிரி ஆசாமிகள் நேருவிய ஸோஷலிஸ்ட்கள் எனத் தன்னைக் கருதி மினுக்கிக்கொள்வது சரிதான்.

ஆகவே, மேற்கண்ட காட்டுரைகளில் ஒன்றுக்காவது அவரிடம் இருந்து காத்திரமான/நேர்மையான பதில் வாங்கிவரவும்.பிறகு ஆவன செய்யலாம்,

ஆனால், இவரைக் குறித்து எழுதி, இனிமேலும் நான் என் சக்தியை வியர்த்தம் செய்யவேண்டுமா?


சுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற பதிவுகள் முடிந்தபோதெல்லாம் தொடரலாம்…

12 Responses to “சுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (11/n)”

 1. seethayv Says:

  Talking of editing , I was given an educational session sorts by Ramakrishnan(Crea) long ago.He passed away and I know many writers don’t like him .Though it was brief it kind of told me the importance of commas, etc.This only made it hard cause I could see some glaring problem in some ‘big’ writers writing .Lack of proper construction of a sentence was resulting in total mayhem .Tamil writing of course.

  Of course mine is utter chaos , as my sibling would laugh .I defend by saying it is stream of consciousness writing.


  • “stream of consciousness writing.” :-) I could relate to that, with some more delusions & delirium thrown in.

   About editing, I have bumped into only a very few people, who actually ask for a feedback, and then don’t get annoyed when they indeed get one. Reminds me of my friend Harlon Ellison:

   “If you make people think they’re thinking, they’ll love you; but if you really make them think, they’ll hate you.”

  • பிரகாஷ் Says:

   தமிழ் படைப்புகள் குறித்து பேசும்போதும் ஆங்கிலத்தில் தான் பேச வரும் போல!என்னே காலனிய அடிமைத்தனம்!


   • ஐயா,

    அப்போது “காலனிய” எனத் தாங்கள் எழுதியிருப்பது, மெடா-காலனியமா? மீ-அடிமைத்தனமா? தயைகூர்ந்து விளக்குவீர்களா?

 2. seethayv Says:

  BTW I am really sorry about this Bharatiya Naari article.Utterly disappointing and shallow.


  • Thanks for the feedback; now I would seriously encourage you to write a (if possible, a detailed) rebuttal, and suggest ways by which it can be modified so as ‘not to disappoint’ and move away from being ‘not shallow.’

   Of course, what the young lady has written is not cast in stone or a by-product of getting stoned. There is always a scope for improvement – because most of our work tends to be not really a closed-form solution – but given to a tedious process of successive & meandering approximations, towards a tantalizing but brilliant perfection, or a mirage of it.

   We are all there in that path of approximation, in various degrees, and the author is also there, she is a fresh start-up – but there is a sincere attempt – and in any case, which part of ‘she is promising’ that you do not understand?

   I understand you must be a busy person, but you MUST write, irrespective of whether you do that rebuttal or not.

 3. seethayv Says:

  Thank you for asking me to write which you would have regretted by now.

  Jokes apart these kind of articles deeply hurt me.I don’t have patience to write a rebuttal .In this day and age I have not seen anyone saying, ‘oh I am sorry ,I am willing to learn’.

  I feel disturbed psychologically reading these nonsense which will ,I fear influence some people.

  India is a complex country and very well stratified in terms of class ,caste .
  8 th century woman and 23 rd century woman can coexist in the same chronological time frame.One size fits all write ups belittle the sorrow of women. I did not get my ‘women’s lib ‘ideas from the west.I Watched my intelligent mother toil in the kitchen longing for something challenging but had no avenues.This was just the beginning .My mother who is not English literate would quote Sanskrit verse and tell my why was that there were so many rules for women alone.(Not to mention a grandmother living at home who had been married at the age of 13 to a 45 year old man coz her father died young,I am talking about her despite prehistoric time zones coz the article mentions of womenGods ,queens and so on.)

  I had no English education to access as a child to,learn of Simone de Beauvoir.But when I entered Med school I witnessed cultural shock. My parents while they stuck to culturally defined roles made sure my sibling amd I had no such limitations.So at Med school to be literally pissing In fear of senior boys was traumatic. Ok, ‘oh that s all so old ‘ I hear.But is that so ?

  In my clinical practice I see women who don’t have agency over their bodies and so end up depressed. In Kanniyambadi block near Vellore ( 25 years ago when I did my PG my colleague did a study)depression was high in pregnant women ,some before and some after delivery .Important reason being fear of not having a male child .Why do you think infertility clinics thrive? If a girl doesn’t increase Indian population within two years of marriage , that’s the end .

  I don’t know where to start to be honest .Saying women had voting rights blah blah so we don’t need Western Feminism is some kind of cruel argument. Western or Eastern ,don’t call it feminism if it hurts in the wrong place ,call it by any name one fancies.But don’t shoo away the pain an Indian women suffers .
  Extrapolating from personal ,family stories to social happenings ,even today the sorrow is obvious if one cares to look.one can go and on.

  Simple, little girls go to Govt schools and little boys are sent to private schools ,even today.
  I shall stop here .


  • Yo. Of course I understand the angst, could relate to it; thanks for venting it out, as opposed to vending. (am no a fan of the second sex author either)

   Some staccato notes follow:

   These are all topics for deep and prolonged pondering – and then, for taking some meaningful action. (honestly, I am tired of my hair-brained but perhaps well intentioned attempts at such ‘meaningful action’ – am not too sure)

   Agency: Though I use the term with ease, it is easier to talk about it than to recognize/mandate it. Nothing is very simple if one goes into details and specifics. And life is all about details – commentaries (on living) and grand generalizations apart.

   In any case, I have come to the biological/behavioural psychology induced conclusion that: We are NOT created equal. There are N reasons, some debatable some not really so. So, am not convinced about ANY utopia where there would be no differences at all. There NEVER was one; and there will NEVER be one.

   What we can hope to do is minimize the obviously deleterious differences.

   Am also sure that the author would present her cases/PoV in a series of posts – and let me tell you that, the idea is not merely for an empty glorification of the past; it would be about some critical examination. I can assure you that she is no recidivist, but a thinking person.

   Anysay – Ek din, prati din and all that. And as PinkFloyd puts it, “…little by little the night turns around”

   (but write you must – in angrezi if you are more comfortable, to express your considered opinions)

   This is because, there is always some III person who would definitely benefit by the sharing of your ideas & opinions – as bhagwan aims at, so to say. In any case, the access to the share, is ensured by the long-tail availability mechanisms of the Internet. The seeker shall get it.

   ’nuff said. Take care.

 4. Sridhar Tiruchendurai Says:

  தமிழில் சரியாக எழுத விரும்புபவர்கள் படிக்க வேண்டியது – விமலாதித்த மாமல்லன் எழுதிய எழுத்துக்கலை (https://www.amazon.in/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-Vimaladhitha-Maamallan-ebook/dp/B07XKJMHJD). அதற்கு மேல், ஒத்திசைவு ராமசாமி மாதிரி யாரவது சுளுக்கு எடுத்தால், தவறுகளை குறைத்துக் கொள்ளலாம்.


  • :-) கிண்டலுக்கு நன்றி.

   இந்த மாமல்லன்-புத்தகத்தை நான் படிக்கவில்லை – ஏன், கேள்விபடக்கூட இல்லை :-(; ஆனால், சுட்டிக்குச் சென்று பார்த்ததில் அதிலுள்ள சில கட்டுரைகளைப் படித்திருப்பதாக நினைவு… ஆனால் விமா அவர்களை நான் மதிப்பவன்; அவருடைய தயவுதாட்சணியமோ இரக்கமோ அற்ற விமர்சனங்களை முடிந்தபோதெல்லாம் படிப்பவன்.

   உங்கள் பரிந்துரைக்கு நன்றி. அடுத்த ஒன்றிரு மாதங்களில் படிக்கிறேன்.

 5. seethayv Says:

  Following on,this has opened the flood gates .

  Let me narrate a family event that happened.

  About 10 years ago I was by my grandmother’s death bed. She was in much pain drifting in an out of consciousness. She would recall something in the present tense, ”oh I am also young, scared. Mornings are busy , Naivedhya should be cooked properly and be ready for Ajja’s poojey . Or else we will get it in the hanthi. So off I went young and scared ,did not check on my little one .What else , Adhu came ( farm hand ) to tell me she had fallen inside the pond. I had no time to check on her” .Needless to say I was weeping ,she was weeping.

  I am crying now my stomach churns .

  The reason I am talking of women’s issues is there is something called Attachment disorder. If you care, read about it.

  Attachment disorder is relevant to our glorified bharathiya families too. Ignore my family sob story , there are so many other stories from women if people care. Instead of parroting ‘we had voting rights ,we had voting rights”.


  • Okay, this went to spam for no ostensible reason. Anyway, retrieved.

   Yes, I am aware of this ‘Attachment Disorder’ – it is also used humorously in CS circles, where-in one says in the mail body to ‘please peruse the attachment’ and then forgetting to actually attach it. Then apologies, and attaching a wrong attachment, and then… etc.

   Again, am not trivializing your floodgate opening, been there, done that, being there, doing that too. No simple answers. But stridency does not help either. Either way, I mean.

   And if the dam breaks open many years too soon
   And if there is no room upon the hill
   And if your head explodes with dark forebodings too
   I’ll see you on the dark side of the moon
   — Pink Floyd


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s