ஹிந்து க்ருஷ்ணகிரிதுர்க்கம் : ‘ஸூஃபி’ ஸையத்பாஷா மலை :: அறியாமைகள் : பரப்புரைப் பொய்மைகள் – தரவுகளுடன் வரலாறுகளை அணுகுவது எப்படி
23/02/2021
இது பரப்புரை ஜிஹாத் குறித்த ஒரு பதிவு வரிசை; இது + இதற்கு அடுத்துவருவது – இரண்டே பதிவுகள். அவ்வளவுதான். பயப்படாதீர்கள்!
பிரச்சினை என்னவென்றால், நல்ல/வெள்ளை மனது கொண்டவர்கள் இம்மாதிரியான கலாச்சாரக் கற்பழிப்புகள் குறித்துத் தீர ஆலோசிப்பதோ, அலசுவதோ, முடிந்தவரை கறார் தரவுககள் பாற்பட்டு முடிவுகளுக்கு வந்தடைவதோ இல்லை. இதற்குப் பொதுவாகவே நம் படிப்பறிவின்மை ஒரு காரணம் என்றாலும் – அதிலும் குறிப்பாக வரலாற்றறிவு என்பதற்குக் கிட்டவே போகாத ஒருமாதிரி அனுபூதி நிலையில்தான் நம்மில் பலர் இருக்கிறோம் என்பதே பெரும் பிரச்சினை. சோழர்கள் வரலாறு என்றால் பொன்னியின் செல்வன் இல்லையானால் உடையார்++,
அல்லது மஹாபாரதம் என்றாலே அதன் ஏகபோக குத்தகைதாரரான வெண்மிராஸ்தார் சொல்வதே சரி, மடையர் என்றாலே தொ.பரமசிவன், மாற்றுவரலாறு என்றாலே பண்டித க.அயோத்திதாஸ் என்கிற நிலையில்தாமே நாம் அதலபாதாளத்தில் வீழ்ந்திருக்கிறோம்?
ஆக, நம்மில் பலர் – பலப்பல சமயங்களில் குழந்தைத்தனமான அப்பாவி அணுகல்முறை கொண்டவர்களாகவோ அல்லது சிலசமயங்களில் புளகாங்கிதக் குஞ்சுகளாகவோ இருக்க விருப்பப் படுகிறார்கள். அல்லது சுத்தமான சமரச சன்மார்க்க சத்திய சங்கத்தினர்களாக மதச்சார்பின்மை பூச்சாண்டி காட்டிக்கொண்டே அலைகின்றனர். அல்லது மெத்தனமும் நொதுமல்நிலையும்(indifference?). என்ன செய்ய…
…முதலில் ‘டேய்! நீ சொல்வது சரியில்லை, நான் அஞ்சாம்க்ளாஸ்ல பட்ச்சதுதான் ஸெரி’ என ஆரம்பித்து பின்னர் எதிர்த் தரவுகளை எதிர்கொள்ளமுடியாமல் ஒருமாதிரி பலஹீன ஈனஸ்வரத்துடன் ‘நமக்கெதுக்கு வம்பு, இன்னா நாஞ் சொல்றது.’ அல்லது, ‘இதெல்லாம் அவங்கவங்க நம்பிக்கைங்க.’ அல்லது, ‘நாம மத நல்லிணக்கத்தோட விட்டுக்கொடுக்கணும், வரலாற்றுரீதியா எல்லாத்தையும் அணுகினா வேலைக்காவாது.’ அல்லது, ‘டேய்! பிரிவினை வாதம் பேசாதே!’ அல்லது, ‘அவன் ஒரு கன்னத்துல அறைஞ்சா, நீ இன்னொரு கன்னத்தைக் காட்டு, அப்பால, திருப்பியும் முதல்கன்னம்னிட்டு இன்னொரு ரவுண்ட் ஆரம்பி, ஏன்னாக்கா சூடு கம்மியாயிருக்கும்; அப்டீதான் காந்தீ ஸொல்லிக்கீறார்.’ அல்லது, ‘நீ ஹிந்துத்துவா வெறியன்! சங்கீ!! த்தூ!!!’.
சுபம். மேற்கண்டவற்றுக்கு ஒருமாதிரி மனோதத்துப்பித்துவ ரீதியான ஊற்றுக்கண்கள் இருக்கலாம். ஆனாலும், சுபம்.
இந்தப் பதிவில், தரவுகளின் பின்னணியில் (+ஒன்றையும் மறைக்காமல்) தலைப்பு குறித்த, மேற்கண்ட தத்துப்பித்துவம் பற்றிய சிலபல கருத்துகளை முன்வைக்கிறேன்; மேலும் இம்மாதிரி அணுகுமுறையைப் பிற தமிழக (குறைந்த பட்சம்) ஸூஃபி தர்காக்களுக்கும் விரிக்கவேண்டும் எனவும் விழைகிறேன்; ஏனெனில் 99% தமிழக தர்காக்கள், பிற பாரதப் பகுதிகளைப் போலவே, ஹிந்துகோவில்களை இடித்து /ஆக்கிரமிக்கப்பட்டுக் கட்டப் பட்டவையே; ஸூஃபிகள் (ஒருவர் விடாமல்) மதவெறியும் கொலைவெறியும் பொய்மையும் மிக்கவர்களே… (இவை குறித்துப் பின்னொரு சமயம் பார்க்கலாம்)
…ஆனால்; அவசரமாக ஓடிவந்து, என்னை ‘முஸ்லீம்களுக்கெதிரான ஹிந்துவெறியன்’ அல்லது ‘ஜடாயு-வுக்கு முட்டுக்கொடுப்பவன்’ எனச் சொல்லவருபவர்கள் முதலில் நான் செய்தவற்றைச் செய்துவிட்டு (=குறைந்தபட்சம் ஒரு முஸ்லீமுக்காவது ‘வீட்டு வசதி’ செய்துகொடுத்தது, சுமார் 80+ முஸ்லீம் இளைஞர்களுக்குத் தனிப்பட்ட முறையிலும் நிர்வாகரீதியாகவும் போராடி நல்லவேலை வாங்கிக்கொடுத்தது, பல முஸ்லீம்களோடு நட்பில் இருப்பது, இஸ்லாம் பற்றி ஓரளவு இருபது-முப்பது வருடங்களுக்காவது படித்து-விவாதித்து அறிந்துகொண்டது++) பின்னர், உட்கார்ந்த இடத்திலிருந்து எனக்கு மதச்சார்பின்மை அறிவுரை கொடுக்கலாம்.
ஒரு மசுத்தையும் பிடுங்காமல், ஒரு பின்புலத்தையும்கூட அறியாமல் ‘சர்வதர்ம சம்பாவனா’ + ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என உளறுவது லேசு. நன்றி.
மேலும் நான் சொல்லவருவது என்னவென்றால்:
1) எவ்வளவோ கோரவிஷயங்கள் முற்காலங்களில் நடந்திருக்கின்றன. இதற்குச் சில முக்கியமான காரணங்கள் இருக்கின்றன – அவை நேரடியாகவோ பூடகமாகவோ தொடரவும் செய்கின்றன. ஆகவே, முன்னமே ஆதாரபூர்வமாக நடந்த விஷயங்கள் மறக்கப்படவேண்டியவையோ அல்லது மன்னிக்கப் படவேண்டியவையோ அல்ல.
2) தேவையற்ற ‘சகோதரத்துவம்’ பேசி விளக்குமாறுக்குப் பட்டுக்குஞ்சலம் கட்டி அழகுபார்க்கவேண்டிய அவசியமில்லை – அதேசமயம் அதனை வெறுக்கவேண்டிய அவசியமும் இல்லை. நான் மோமின்களை வெறுப்பவன் அல்லன், அக்கால ஜிஹாத்களுக்காக இக்கால முஸ்லீம்களைக் குறைகூறுவது சரியல்ல என நினைப்பவன்; அதே சமயம் இப்போதும் அதே ஜிஹாத்களுக்கு முட்டுக்கொடுக்கப்படுவதும் மேன்மேலும் அவை அரங்கேற்றப்பட முனைவதும் சரியல்ல எனவும் நினைப்பவன்.
3) ஆனால், நம் பாரதம் யுகசந்தியில் இருக்கிறது. அதன் தொன்மையும் மேன்மையும் பன்மையும் உள்ளிழுக்கப்பட்டு, சிடுக்குகளும் அகற்றப்பட்டு — அறிவியல்-தொழில் நுட்பங்களின் மீதாகவும் கட்டமைக்கப்பட்டு, மேலதிகமாக வீறுகொண்டெழவிருக்கும், தொடரும் பெருவெள்ளம் பாரதம். அது தொடர்ந்து பொலியவேண்டும் ஆகவே நம் அனைவருக்கும் விழிப்புணர்வு அவசியம், ஜாக்கிரதையுணர்வும் கூட. ஆக, தரவுகளற்ற புளகாங்கிதங்களுக்கும் வெட்டி உணர்ச்சிகரப் புல்லரிப்புகளுக்கும் பொய்மைகளுக்கும் அதிசராசரித்தன அறிவிலித்தனத்துக்கும் இங்கே இடமில்லை.
அவ்வளவுதான்.
1
நண்பர் ஜடாயு அவர்களின் பதிவு:
மேற்கண்ட பதிவின் மீதான – அன்பர்கள் சுரேஷ் வெங்கடாத்ரி, யதார்த்த பெண்ணேஸ்வரன், அமுதமொழி அவர்களின் வருத்தங்கள், எதிர்வினைகள்:
மேற்கண்ட ஸ்க்ரீன்ஷாட்களுக்கான சுட்டி.
இவற்றின் சாராம்சம். (என் பதிவுகளுக்குத் தேவையற்ற விஷயங்களைக் குறிப்பிடவில்லை; அதற்காக அவ்விஷயங்கள் பொருட்படுத்தத் தக்கவையல்ல எனவும் சொல்லவில்லை)
அ. நாங்கள் நெடு நாட்களாக க்ருஷ்ணகிரியில் வசித்திருக்கிறோம். எங்களுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இது ஸையத்பாஷா மலைதான். எங்கள் தாத்தா பாட்டி காலத்திலிருந்து இப்படித்தான். அது பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக நினைவில்லை.
ஆ. க்ருஷ்ணகிரி மலைமேல் கோட்டை எதுவும் இருந்தது இல்லை.
இ. திருவண்ணாமலை-சென்னை-பெங்களூரு-சித்தூர் ஆகிய ஊர்களின் நடுவில் க்ருஷ்ணகிரி இருப்பதால் இந்த மலை உச்சியின் மீது ஹைதர்-திப்பு வகையறக்கள் ஒரு கண்காணிப்பு கோபுரம் (= Watch Tower) அமைத்திருந்தார்கள்.
ஈ. ஏனெனில் அவர்களது. [ஸ்ரீரங்கப் பட்டணா] தலைநகரத்திற்குள் நுழைவதற்கு முன்பு எந்தப் படையும் கிருஷ்ணகிரியைக் கடந்தாக வேண்டும்.
உ. சையத்-பாட்சா என்ற இரு “ஸூஃபி மஹான்கள்” இங்கு அடக்கம் ஆகி இருக்கிறார்கள். அதனால் அவர்கள் பெயரால் அழைக்கப்படுவதில் எந்த பிரச்சினையும் இருக்கக் கூடாது. இதில் மதச்சார்பின்மை இருக்கிறது – ஏனெனில் அவர்களுக்கான ‘உரூஸ்’ திருவிழாவில் அனைத்து மதத்தினரும் பங்கேற்கிறார்கள்.
ஊ: “குழந்தைகள் எதையாவது கண்டு பயந்தால் இந்த மலை மேல் இருக்கும் தர்காவுக்கு அழைத்துச் சென்று மந்திரித்த கயிற்றை கட்டுவார்கள். இதில் இந்துக்கள் அதிகம் உண்டு. அதே போல இந்த மலை அடிவாரத்தில் உள்ள கோட்டை மசூதியில் சிறு வயதில் எனக்கு காய்ச்சல் வந்த போதெல்லாம் அம்மா என்னை அங்கே கூட்டிச் செல்வாள். தொழுகை முடிந்து வரும் முல்லாக்கள் மந்திரம் ஓதி முகத்தில் ஓதி தண்ணீர் தெளிப்பார்கள். அது இன்றும் உண்டு”
எ: “பழையபேட்டையில் வசிக்கும் பல பிராமணர்களும் இந்த மசூதிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று முல்லாவிடம் நீர் தெளித்து வருவார்கள்.”
சரி. இவற்றை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து இந்த முதல் பதிவில் ‘கோட்டை இருக்கவில்லை’ எனும் திகில்கதையையும் (+ உபகதைகளான கோட்டையின் பெயர், மலையின் பெயர், பெயர்க்காரணம் இன்னபிற) அடுத்த பதிவில் பீதியளிக்கும் ‘ஸூஃபி’ பற்றியும் பார்க்கலாம்.
2
எனக்கு இருக்கும் பல பித்துக்களில், கொஞ்சம் வரலாற்றார்வம் இருப்பதும் ஒன்று. இதன் காரணமாக வாசிப்பு, ஊர்சுற்றல், செய்திகளைச் சேகரித்தல் என மனோரீதி பௌதீகரீதியாக நிறைய அலைந்திருக்கிறேன்; பலமுறை பள்ளிச் சிறார்களை விதம்விதமான இடங்களுக்கு ‘அறிவுலா’ அழைத்துச் சென்றிருக்கிறேன் – புவியியல், வரலாறு, தாவரவியல் என விரிந்தவை அவை.
ஏன், பலப்பலமுறை இதே க்ருஷ்ணகிரிதுர்க்கத்துக்குத் தனியாகவும் குழந்தைகளுடனும் சென்றிருக்கிறேன்; இதே க்ருஷ்ணகிரி பக்கத்திலிருக்கும் பலப்பல ஹொய்ஸள, சோழர் காலச் சிதிலங்களுக்கும்; அதே பகுதியைச் சார்ந்த மல்லச்சந்திரம் எனும் பெருங்கற்கால சமய கற்கட்டமைப்புகளுக்கும்கூட. பின்னதின் ஒருமாதிரி ஆங்கிலக் கட்டுரை: mallasandram megalith site – visit plan, notes 23/02/2016.
சரி. இந்தக் க்ருஷ்ணகிரிக் கோட்டைக்குச் சென்றிருக்கும்போது சிலமுறை அந்தவூர்ப் பெரியவர்களுடன் உரையாடியிருக்கிறேன். மலைக்கருகில் இருக்கும் பழையபேட்டை, புதியபேட்டை (தௌலாபாத் எனும் தௌலதாபாத் – ஆச்சரியப் படத்தக்க விதத்தில் இப்படிப் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஒரு காலனிக்குப் பெயர் வைத்தது வெள்ளைக்காரர்கள்!) எல்லாம் சுற்றியிருக்கிறேன்; ‘லண்டன்பேட்டை’ என அறியப்பட்ட, நெடுஞ்சாலைப் பக்கப் பகுதியான ‘பலான’ இடஙகள் நிரம்பிய வாலிப-வயோதிகர்களுக்கான பகுதிக்கும் சுற்றுலா (மட்டும்) நடந்திருக்கிறது.
ஒருமசுரும் அறியாத கூறுகெட்ட லோகல் சுற்றுலா-கைட்களுடனும்கூட ஊடாடியிருக்கிறேன். ஒர்ரேயடியாக ஸூஃபி திப்புஸுல்தான் எனப் பீலா வுட்டுவிட்டுப் பின்னர் “அறுவதாம் படிமேல சத்தியமா நான் சொல்றதெல்லாம் நடந்ததுங்க, அக்மார்க் உண்மைங்க…” எனவும் சொல்லிவிடுவார்கள்…
என்ன சொல்லவருகிறேன் என்றால், மேற்கண்ட சுரேஷ் வெங்கடாத்ரி, யதார்த்த பெண்ணேஸ்வரன், அமுதமொழி போன்றவர்கள் நல்லெண்ணத்துடன் சொல்லும் அதே விஷயங்களை, நானும் நமட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்டே பலமுறை கேட்டிருக்கிறேன். ஒரு பிரச்சினையும் இல்லை – ஏதாவது பதில் கேள்விகேட்டால்தானே வில்லங்கம் வரும், ஐயன்மீர்??
(இந்த அறுபதாம் படி என்பது திருச்செங்கோட்டு மலை முருகன் கோவில் படிக்கட்டு எண்ணிக்கை. க்ருஷ்ணகிரி போன்ற அப்பகுதி ஊர்களில் அப்போது (ஏன் ஈரோட், தர்மபுரி பகுதிகளிலும்) கிராமங்களில் இந்த விஷயம், ‘சத்தியம்’ செய்வதற்கு உபயோகப்பட்டு வந்தது, இப்போதும் அப்படியா என்பது தெரியவில்லை – ஆனால் எனக்கு இதன் தாத்பர்யம் இதுவரை புரியவில்லை; ஏன் இந்த 60? அறிந்தவர்கள் சுட்டினால் மகிழ்வேன்!)
இது குறித்த விவரங்கள் பின்னர். (முடிந்தால், தேவையிருந்தால்)
இந்தக் கோட்டை எப்போது யாரால் ஸ்தாபனம் செய்யப்பட்டது என்பதில் வரலாற்றுரீதியான சிலபல போதாமைகள், இடைவெளிகள் இருக்கின்றன; ஏனெனில், நம் ‘அப்பேர்க்கொத்த’ சங்கயிலக்கியங்களில் க்ருஷ்ணகிரி/கோட்டை பற்றிப் பெரிய செய்தி என, எனக்குத் தெரிந்த அளவில், ஒன்றுமில்லை.
ஆனால் பிற்காலங்களில் ஐந்து விஷயங்கள் ஓரளவுக்குத் தெளிவாக இருக்கின்றன. (இந்த வரலாற்றை நீளமாக/விஸ்தாரமாக விஜயநகர, மைஸூர், மராத்தா, இஸ்லாமிய ஹைதர்திப்பு, பாஹ்மனி உதிரி ஸுல்தான்கள், ஆர்க்காடு நவாபுகள், ஃப்ரெஞ்சு, ஆங்கில ஊடுபாவுகள் எனப் பலப்பல விஷயங்களை எழுதலாம் – ஆனால் இந்தப் பதிவுக்கு எவை முக்கியமோ அவற்றை மட்டும் கொடுக்கிறேன், அவ்வளவுதான்!)
1) விஜய நகர சாம்ராஜ்ய சமயத்தில் அதாவது 16-17ஆம் நூற்றாண்டில் க்ருஷ்ணகிரி கோட்டை கட்டப்பட்டிருக்கவேண்டும்; 1565ல் அந்தப் பேரரசின் ஹம்பி அத்தியாயம் ஒரு பெரும்கோரமான முடிவுக்கு வந்திருந்தாலும், பின்னர் தெற்கத்தி பிரதேசங்களில் அதன் சிதிலங்கள் ஓரளவு தொடர்ந்தன – அவ்வரச வம்ஸாவளியினர்களில் முக்கியமான இரண்டாம் ரங்கராயர் அவர்கள் (பொதுயுகம் 1575-86) பெனுகொண்டாவிலும் சந்திரகிரியிலும் தலைநகர்களைக் கொண்டு மீதமிருந்த தெற்கத்தி விஜய நகரப் பிராந்தியங்களை ஒருங்கிணைத்து ஆண்டுவந்தார் – ஆனாலும் கோல்கொண்டா பிஜாபூர் ஸுல்தான்களுடன் சதா போர்; இவருக்குப் பின் முதலாம் வெங்கடர் (1586-1614) ஆண்டார்; தொடர்ந்து நடந்த இப்படிப்பட்ட போர்களில், விஜயநகர அரசர்களின் கீழ் பணிபுரிந்து வீரதீரமிக்கச் செயல்களைச் செய்த ஜெகதேவராயன் எனும் படைத்தலைவனுக்கு இந்த பரமஹால் (Baramahal – பனிரெண்டு கோட்டைகள்/மாளிகைகள் அமைந்திருக்கும் பகுதி) நிர்வாகம் இனாமாகக் கொடுக்கப் பட்டது; ஏறத்தாழ இதே காலகட்டத்தில் இப்போதைய பெங்களூர், சென்னப்பட்டணா, ஹோஸூர், ஆனேகல், பாகளூர் போன்ற பகுதிகளும் இதே ஜெகதேவராயனுக்குக் கொடுக்கப்பட்டன… பின்னர் இவர் மைஸூர் மஹாராஜாவுடன் ஊடாடியது பின்னர் எதிர்த்தது என்பதெல்லாம் உபரி கதைகள்.
இவற்றில், இந்த பரமஹல் பகுதியில் இருப்பதுதான் நம் க்ருஷ்ணகிரி; இந்த ஜெகதேவராயனும் அவர் மகனும் இப்பகுதியை ஆண்டவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். இதற்கெல்லாம் பலப்பல சான்றுகள் இருக்கின்றன; க்ருஷ்ணகிரி பக்கத்து ஜெகதேவிதுர்க்கம் எனும் மலைக்கோட்டைதான் சிலகாலம் இந்த சிற்றரசர்களுக்கு தலைமையிடமாக இருந்தது. அவர்கள் காலத்தில்தாம் இந்தக் கோட்டை கட்டப்பட்டிருக்கவேண்டும். அதாவது, பொதுயுகம் 16ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர்தாம்.
ஆனால், இது தொடர்ந்து க்ருஷ்ணகிரிதுர்க்கம் எனத்தான் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. துர்க்கம் வந்தபின்னர் தாம் க்ருஷ்ணகிரி அடிவாரத்தில் குடியிருப்பு ஏற்பட்டது.
பெயர்க்காரணம்: இந்த விஜயநகர் தொடர்பாக – ஆனால் முழுவதும் நிறுவப்படாத விஷயமாகத்தான் – பேரரசர் க்ருஷ்ணதேவராயர் நினைவாக இம்மலை க்ருஷ்ணகிரி எனவும் மலைக்கோட்டை க்ருஷ்ணகிரிதுர்க்கம் (துர்க்கம் = ~ கோட்டை) எனவும் அழைக்கப்பட்டது என ஒரு உரையாடல் சரடு வரலாற்றாளர்களினிடையே இருக்கிறது.
(ஆனால் என்னைப் பொறுத்தவரை இதற்குப் பெரிய தரவுகள் இல்லை; இருந்தாலும் இது உண்மையாக இருக்கலாம்)
2) ‘ஸுஃபிகள்’ தர்கா இங்கு வரும் காலத்துக்கு முன் இந்த மலையுச்சியில் க்ருஷ்ணர் கோவில் ஒன்று இருந்தது. ஆனால் அது அழித்தொழிக்கப்பட்டுவிட்டது. அல்லது அழிந்துவிட்டது. இந்தக் கோவில் காரணமாகத்தான் இந்த மலை க்ருஷ்ணகிரி என அழைக்கப்பட்டது என ஒரு உரையாடல்.
இது குறித்து 1883 கால வெள்ளைக்கார ஆவணம் சொல்வது என்னவென்றால்:
என் முதல் பயணத்தில், அந்த மலைமீது, நம்மூர் கோவில்களில் காணப்படும் வேலைப்பாடு மிக்க (புடைப்புச் சிற்பங்களிருந்த) ஒரேயொரு தூணை நான் பார்த்திருக்கிறேன். பின்வந்த காலங்களில் பார்க்கமுடியவில்லை. (தேடினேன்; அது அகற்றப்பட்டிருக்கலாம், நொறுக்கப் பட்டுமிருக்கலாம் அல்லது களவாடப்பட்டிருக்கலாம், மறைக்கப்பட்டும் இருக்கலாம்)
ஆனால், பச்சை பளிச்மினுக் தர்காவகையறா விஷயங்கள் தொடர்ந்து அதிகமாகிக்கொண்டே வந்தது தெரிந்தது – நான் பார்க்கப் பார்க்கவே ஓரளவு திறந்தவெளியில், பின்னர் கூரையின் கீழ் இருந்த அந்த ‘இரண்டு சமாதிகள்’ திடமான ஜாலிவைத்த சுவர்களினால் சூழப்பட்டு பிற ‘தர்கா’க்களைப் போலவே அச்சுஅசலாக ரஸவாத மாற்றம் கண்டுவிட்டன. கடைசியில் நான் க்ருஷ்ணகிரி துர்க்கத்துக்குச் சென்றது 2009 வாக்கில் என நினைவு; ஒரு சிறார் கும்பலுடன் சென்றேன்.
(இன்னொரு கோணம்: பலமுறை இம்மாதிரி விஷயங்கள் (மொழிகள், வரலாறுகள், நிருக்தம்) தெரிந்தவர்களிடம் நான் உரையாடியிருக்கிறேன்; மும்பய் மாநகரில் இருக்கும் ஸஞ்சய்காந்தி நேஷனல் பார்க்கில், காண்ஹேரி/காணேரி குகைகள் இருக்கின்றன; இது பிரசித்தி பெற்ற குகை ஓவியங்களும், விஹாரங்களும் உள்ள இடம்; இதன் பெயரும் க்ருஷ்ணகிரி என்றுதான் முற்காலத்தில் இருந்தது. தூரத்திலிருந்து பார்க்கையில் கறுப்புக் கல் மலையாகத் தெரிந்ததால் க்ருஷ்ணகிரி என அழைக்கப்பட்ட இடம். (க்ருஷ்ண என்றால் கருமை நிறம்)
இதேபோல, பலப்பலமுறை நம்மூர் க்ருஷ்ணகிரி சென்றுள்ள நான், அது கறுப்பு நிறப் பாறைகளுடைத்ததாக தூரத்தில் இருந்து தெரிவதால், இப்படியுமேகூட அது க்ருஷ்ணகிரியாக ஆகியிருக்கலாம் எனவும் நினைத்திருக்கிறேன்; ஆனால் இது ஒரு பார்வை மட்டுமே – ஒரு ஆதாரமும் இல்லை)
ஆனால் என்னைப் பொறுத்தவரை, இந்த க்ருஷ்ணர்கோவில் விளக்கம்தான் காத்திரமிக்கது எனப் படுகிறது. மேலும் ஸூஃபி தளங்கள்/தர்காக்கள் என்றாலே, அவை ஹிந்துகோவில்களை இடித்துக் கட்டப்பட்டவைதான் என்பதற்கு, எனக்குத் தெரிந்தவரை ஒரு விதிவிலக்குகூட இல்லை. இதுகுறித்தும், கடலூர்சீனுவின் கோவில் இடிச்சி ஸூஃபி புளகாங்கிதம் குறித்தும் ஒரு பதிவு எழுதியிருந்தேன்: மதவெறி கோவில்இடிச்சி ஸூஃபி ‘பண்ருட்டி நூர்முகமது ஷா அவுலியா’ புகழ்மாலை – கடலூர் சீனு, ஜெயமோகனாதிகளின் போலிஆன்மிக, வெறிஇஸ்லாமிய முட்டுக்கொடுத்தல்++ 10/11/2020
இன்னொன்று அந்த அயோக்கிய ஹிந்துவெறுப்பிய ஸூஃபி ஆசாமி ரூமி குறித்தது: இதுதாண்டா ஸூஃபி! இவ்ளோதாண்டா ரூமி!! 12/03/2020
3) வெள்ளைக்காரர்கள், பொதுவாகவே அதனை க்ருஷ்ணகிரி கோட்டைப் பாறை எனத்தான் விளித்திருக்கிறார்கள்; பொதுவாகவே துப்புரவாகக் குறிப்பெடுக்கும் அவர்கள் – இதனை ஸையத்-பாஷா மலை எனக் குறிப்பிடவில்லை. இது 1918ல் ரிச்சர்ட்ஸ் அவர்கள் மேம்படுத்தி வெளியிட்ட சேலம் கெஸட்டீரில் வந்த விஷயம்:
இத்தனைக்கும், ஒப்புநோக்க திப்பு-ஹைதர் போன்ற தன்னிகரற்ற மதச்சார்பின்மை இத்யாதிகளை விட ஆங்கிலேயக் கம்பெனியினர் அந்தக் கோட்டையில் தங்கியிருந்த காலங்கள் அதிகம். அங்கே வெடிமருந்து சேமிக்கப்பட்டிருந்த இடம் வெடித்துச் சிதறி அதில் வெள்ளை ராணுவத்தினர் இறந்தது முதல் எழுதப்பட்ட விலாவாரியான குறிப்புகள் உட்பட, குறைந்த பட்சம் மூன்று வெள்ளைக்கார ஓவியர்கள் இந்த க்ருஷ்ணகிரி மலையையும்/கோட்டையையும் படம் வரைந்திருக்கிறார்கள் என்பது உட்பட – பலப்பல குறிப்புகள் இருக்கின்றன.
இவை அனைத்திலும் அந்த மலைக்கோட்டை – க்ருஷ்ணகிரி துர்க்கம் அல்லது க்ருஷ்ணகிரி பாறை எனத்தான் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
4) வெள்ளைக்காரர்கள் 18-19 நூற்றாண்டுகளில் வரைந்த சித்திரங்கள் கீழே:
(கிஸ்ட்னகெர்ரி – Kistnagherry – அலெக்ஸாண்டர் அல்லன் (Sir Alexander Allan) 1794ல் வரைந்த சித்திரம்) (ப்ரிட்டிஷ் நூலகச் சுட்டி)
(கிஸ்ட்னகர்ரி – Kistnaghurry – ஜேம்ஸ் ஹண்டர் (James Hunter) 1792ல் வரைந்த சித்திரம்)
அநியாயத்துக்கு, அவர்கள் ‘ஸையத் பாஷா மலை’ என அதனைக் குறிப்பிடாமல் மதச்சார்புடையவர்களாக, வெறும் க்ருஷ்ணகிரி என அதனைக் குறிப்பிட்டு, கட்சிமாறிவிட்டனர்! அந்தோ!!
குறிப்பு: டேனியல் தாமஸ் என்ற வெள்ளைக்காரரும் க்ருஷ்ணகிரிதுர்க்கத்தின் சித்திரத்தை, மேற்கண்டவற்றின் காலகட்டத்தில் வரைந்தார் – அது மலையின்கீழே இருக்கும் வாசலையும், மலையடிவாரக் கோட்டையையும், கொஞ்சம் அரணையும் காண்பித்தது என நினைவு. கொஞ்சம் தேடினேன், அந்தச் சித்திரம் கிடைக்கவில்லை – கிடைத்தால் அதையும் பதிக்கிறேன்)
5) அண்மையில் (2007) ஒரு ஃப்ரெஞ்சு வரலாற்றாளார் (ழான் டிலாஷ், Jean Deloche) பாரதத்தில் இருக்கும் கோட்டைகள் குறித்த விலாவாரியான, மிக முக்கியமான ஒரு ஆராய்ச்சிப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்: Studies on fortification in India.
அதில் அந்த க்ருஷ்ணகிரிதுர்க்கம் (=கோட்டை) + அதன் பெயரைக் குறித்துப் பல காத்திரமான பதிவுகளைச் செய்திருக்கிறார்; அதிலிருந்து சிலபல எடுத்துக்காட்டுகள்:
(கர்நாடக-வடதமிழ்நாடு பகுதிகளில் இருக்கும் மலை/கோட்டைகளைப் பற்றிய விவரணைகள். கவனிக்கவும்: ‘க்ருஷ்ணகிரிதுர்க்கம்‘ எனத்தான் மலை+கோட்டை குறிப்பிடப்பட்டுள்ளது)
(சென்னையிலிருக்கும் தமிழ்நாடுஆவணக்காப்பக (தமிழ்நாடு ஆர்கைவ்ஸ்) நூலகத்தில் வரையப்பட்ட வரைபடம்#208 இது; க்ருஷ்ணகிரி கோட்டை எனத்தான் சொல்கிறது; அது மட்டுமல்லாமல் கோட்டையில் தானியம் சேமிக்குமிடங்கள், சத்திரம்-தங்குமிடங்கள், கிடங்குகள், வெடிமருந்து இருப்பில் வைக்கும் இடங்கள் என்பவற்றையும் குறிப்பிடுகிறது.
இன்னொரு முக்கியமான விஷயம், இதில் ஸையத்+பாஷா ‘ஸூஃபி’ சமாதிகள் குறித்து ஒன்றுமே சொல்லப்படவில்லை என்பது…
பிரச்சினை என்னவென்றால்: தொல்பொருளியலாளர்கள், துறைவல்லுநர்கள் எல்லாம் கூட்டுச் சதிசெய்து, இதனை ஒரு ‘கோட்டை’ என்று சொல்கிறார்கள் – இதற்குமுன்னர் அவர்கள் க்ருஷ்ணகிரி மலையின் கீழ் வாழும் மக்களிடம், அதற்கு அனுமதி வாங்கிக்கொண்டார்களா என்றால்…)
(மேற்கண்டவை க்ருஷ்ணகிரிதுர்க்கம் கட்டமைப்புகளின் கொத்தளங்கள், நீர்த்தேக்கங்கள், சுற்றுச்சுவர்கள் போன்றவற்றின் சிதிலங்கள்; ஆனால் க்ருஷ்ணகிரி அன்பர்கள் இதெல்லாம் வெறும் ‘கண்காணிப்பு கோபுரம்’ தான், ஒரு மசுத்துக்கும் கோட்டையே இங்கு இருந்திருக்கவில்லை என அநியாயத்துக்கு அட்ச்சிவுடுகிறார்கள்! தேவையா? ஆனால் இதுதான் ‘கோட்டை விடுதல்’ எனும் சொற்றொடரின் உண்மையான பொருளா??)
(இது கோட்டைத் தலைவருடைய கச்சேரியின் ஒரு சிறுபகுதி; இதற்குப் பக்கவாட்டில்/பின்புறத்தில் சிறுதூண்களைக் கொண்ட ஒரு மண்டபம் (உரையாடல்கள், வழக்காடல், நீதிபரிபாலனம் போன்றவை நடப்பதற்கு) இருந்தன என்பதென் நினைவு.)
3
சரி. மேற்கண்ட பின்புல விஷயங்களை வைத்துக்கொண்டு, இப்போது, அன்பர்களின் சாராம்சக் குறிப்புகளுக்கு வரலாம்.
அ. நாங்கள் நெடு நாட்களாக க்ருஷ்ணகிரியில் வசித்திருக்கிறோம். எங்களுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இது ஸையத்பாஷா மலைதான். எங்கள் தாத்தா பாட்டி காலத்திலிருந்து இப்படித்தான். அது பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக நினைவில்லை.
இந்தப் பெயர் மாற்றம் 1883லிருந்து 1918க்குள் ஏற்பட்டிருக்கவேண்டும் – பின்னர் இது பரப்புரை செய்யப்பட்டிருக்கவேண்டும்.. (இதற்கான காரணம் அடுத்த பதிவில்)
ஆனால், ஏறத்தாழ 1918 வரைகூட மலையின் பெயர் ‘ஸையத்பாஷா’ அல்ல. இது முக்கியம்.
ஆ. க்ருஷ்ணகிரி மலைமேல் கோட்டை எதுவும் இருந்தது இல்லை.
ஐயாமார்களே! அப்படியா என்ன? (மேற்கண்டவை தவிர இன்னமும் பல சான்றுகள் கொடுக்கமுடியும்; ஆனால் கொடுக்கப் போவதில்லை)
தாம் நெடுங்காலம் வசித்த இடத்தினைப் பற்றிப் பெரிதாக அறிந்துகொள்ள முடியாதது அல்லது பிறழ்கருத்துகள் வைத்திருப்பது போன்றவையெல்லாம் பெரும்தவறுகளல்ல – நம்மில் பலர் அப்படித்தான். ஆனால் அந்த அறியாமையையே ஒரு பெரும்பலமாக வரித்துக்கொண்டு பொதுவில் அட்ச்சிவுடுவது, அறமற்ற செயல் என நான் நினைக்கிறேன்.
இ. திருவண்ணாமலை-சென்னை-பெங்களூரு-சித்தூர் ஆகிய ஊர்களின் நடுவில் க்ருஷ்ணகிரி இருப்பதால் இந்த மலை உச்சியின் மீது ஹைதர்-திப்பு வகையறக்கள் ஒரு கண்காணிப்பு கோபுரம் (= Watch Tower) அமைத்திருந்தார்கள்.
இது என்ன தர்க்கம்/லாஜிக் எனத் தெரியவில்லை! கீழேயுள்ள கூக்ள் வரைபடத்தில் நான்கு ஊர்களும் இருக்கின்றன. மிச்ச 3 ஊர்களின் நடுவிலா க்ருஷ்ணகிரி இருக்கிறது?
மேலும் அந்த மூன்று ஊர்களுக்கும் இடையே போக்குவரத்து க்ருஷ்ணகிரி வழியாகப் போகவேண்டிய அவசியமும் இல்லை. பலம்னேரு பக்கத்தில் ஒரு கணவாய்/பள்ளத்தாக்கு – ஜம்மலமடுகு/தாமல்செருவு வழியாக வேலூரிலிருந்து எந்தப் படையும் கர்நாடகத்துக்குச் செல்லமுடியும்… பேர்ணாம்பட்டிலிருந்து வெங்கடகிரிக்கும் கோலார் / ஹொஸகோடேவுக்கும் க்ருஷ்ணகிரி வழியாகப் போகாமலேயே செல்லமுடியும் – படைகள் அப்படியும் சென்றிருக்கின்றன. அதெல்லாம் இருக்கட்டும், அந்த ‘கண்காணிப்பு கோபுரம்(!)’ வழியாக எவ்வளவு தூரத்தைத்தான் பார்த்திருக்க முடியும்?
க்ருஷ்ணகிரிகாரர் ஒருவர் இப்படிச் சொல்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
மற்றபடி அது வெறும் கண்காணிப்பு கோபுரமுமல்ல. அது கிலேதார் (கோட்டைத் தலைவர்) அலுவலகம் எல்லாம் இருந்த ஒரு கோட்டை; 1790களில் ப்ரிட்டிஷ்காரர்கள் இதனைக் கைப்பற்ற முயன்று இருமுறை தோற்றும் இருக்கிறார்கள். அதேபோல திப்புவுக்கும் ஒருமுறையாவது ஆகியிருக்கிறது.
ஈ. ஏனெனில் அவர்களது. [ஸ்ரீரங்கப் பட்டணா] தலைநகரத்திற்குள் நுழைவதற்கு முன்பு எந்தப் படையும் கிருஷ்ணகிரியைக் கடந்தாக வேண்டும்.
!
அப்படியா என்ன?
பலமுறை ஸ்ரீரங்கப்பட்டணா (திப்பு ஹைதர்களின் தலைநகர்) நேரடியாக இல்லாவிட்டாலும் அது குறிவைக்கப்பட்டு அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தாக்கப்பட்டிருக்கிறது. பலமுறை திப்பு-ஹைதர்கள் தோற்றிருக்கிறார்கள், வென்றுமிருக்கிறார்கள். மேலும்: தெற்கு திசை (சத்தியமங்கலம் வழியாக), மேற்குதிசை (குடகு, வீராஜ்பேட்டை, முதுமலை வழியாகவெல்லாம்), வடக்கில் துமகூரு வழியாக, கிழக்கில் மாலூர் ஹொஸகோடே வழியாக வடகிழக்கே பெனுகொண்டா வழியாக எனப் பலவழிகள், பிற அரசுகளின் படையெடுப்புகளுக்கு இருந்திருக்கின்றன.
இப்படியெல்லாம் டமால்டுமீல் என அட்ச்சிவுட்டு எழுதுவதற்கு கொஞ்சம் தெகிர்யம் வேண்டும்தான்.
மேலும், க்ருஷ்ணகிரி குறித்தும் பிற சுமார் 150வருட கால பழைய/கம்பெனி வரலாறுகளைத் தொகுத்தும் வெளியிடப்பட்ட வெள்ளைக்காரர்களின் கெஸட்டியர் (1883-1918) என்ன சொல்கிறது?
க்ருஷ்ணகிரி துர்கத்தின் முக்கியத்துவம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று எனத்தான் சொல்கிறது.
+ அலெக்ஸாண்டர் டிரொம் (Alexander Dirom) எழுதிய 1793 புத்தகத்தில்… (A Narrative of the Campaign in India which Terminated the War with Tippoo Sultan, in 1792):
மேலும் கிழக்கியக் கம்பெனி, பாதுகாப்பு ரீதியாக இதற்கு பெரிய முக்கியத்துவத்தைக் கொடுக்கவில்லை – பரமஹாலின் பிற பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது க்ருஷ்ணகிரி ஒரு பெரிய பொருளாதார முக்கியத்துவத்தையும் பெற்றிருக்கவில்லை (முதலுக்கே மோசமில்லை – ஆனால் வெள்ளைக்காரர்கள் கொடுத்துள்ள பலவிதமான புள்ளிவிவரங்கள் படி) எனத்தான் சுட்டுகிறது.
-0-0-0-0-0-
— இனி அடுத்த பதிவில் இந்த ஸூஃபி ஸையத்பாஷா மஹாத்மியத்தை, அதாவது, டகீல் பப்பரப்பாவைக் கவனமாக, தரவுகளுடன் அலசலாம், சரியா?
23/02/2021 at 15:22
அருமையான, செறிவான பதிவு. மிக்க நன்றி சார்.
23/02/2021 at 18:38
🙏🏿 ஐயா நன்றி. அடுத்த சில நாட்களில் இந்தப் பதிவின் தொடர்ச்சியாக, க்ருஷ்ணகிரி ஸையத்-பாஷா ஸூஃபி புனைகதையாடல் புல்லரிப்புகள் குறித்து எழுதுகிறேன்.
எப்படியும் அந்தக் கதையும், நம் தமிழ்பிலிம் செம்பிலிம்களைப் போல – வடக்கிலிருந்து ஈயடிச்சான் காப்பியடித்ததுதான்…
ஒரிஜினல் ஃபேக் ஸுஃபி அங்கே! ஃபேக் ஃபேக் ஸூஃபி இங்கே!
இதற்கெல்லாம் போய் வரிசையில் நின்று காதுகுத்திக்கொண்டு வருகிறார்களே என்பதை நினைத்தால்…
:-(
23/02/2021 at 20:28
அன்பு ஐயா, அருமை.அ,இ,ஈ குறிப்புகள் (நீங்கள் விளக்கங்கள் கொடுக்காமலேயே) தவறானவை என சொல்லமுடியும்.
பொதுவில் புழங்குவோர் சறுக்குமிடங்கள் தானே,நறுவிசாக/தன்மையாக வரும் முட்டாள்த்தனமான கருத்துகள். :-)
காலம்,இடம் பற்றி அறியத்தான் வேணுமா என்ன?
நிற்க..
நானும் சென்னை ராஜ்பவனுள்ளே இருக்கும் தர்காவிற்கு ஒரு வியாழனன்று சென்று வந்துள்ளேன் மற்றும் பாண்டி படேசாகிப் தர்காவிற்கும்-நம்பிக்கையோடு தான்.அந்த நம்பிக்கையை (காது குத்தியோ, தூபம் வாங்கி கொடுத்தோ) பார்த்து யார் என்ன நினைத்தால் தான் என்ன…சரி விடுங்க
நன்றி.
23/02/2021 at 20:47
நடுசென்டர் வினை-காது குத்துதல் literal பொருள் தான் என நம்பிக்கை கொண்டபடியால் :-)
23/02/2021 at 21:58
சரிதான்! அமாவாசைக்கும் அப்துல்காது குத்தலுக்கும் முடிச்சு போடுகிறீரோ? :-)
எனக்குத் தனிப்பட்ட மானுடச் செயல்பாடுகளில், நம்பிக்கைவெளிகளில், பாரம்பரியங்களில் குற்றம்காண்பது பொதுவாக ஒத்துவருவதில்லை – ஆனால் அவற்றின் ஊற்றுக்கண்கள் விசாலமானவையா, அடிப்படை நல்லெண்ணமும் அறச்சார்பும் கொண்டவையா எனப் பார்க்கிறேன். இதனால் சிலசமயங்களில் வருத்தமாகிவிடுகிறது – அவ்வளவுதான்.
மற்றபடி அடுத்த பதிவையும் (முடிந்தால்) படித்துவிட்டு, மேலும் குட்டவும்.
நன்றி!
23/02/2021 at 21:53
🙏🏿 ஐயன்மீர்!
ராஜ்பவன் மஸ்ஜித் ஒரு தர்காவா என்ன? அதற்கும் எந்த ஒரு ‘ஸுஃபி’விஷயத்துக்கும் தொடர்பே இல்லையே! (உங்களுக்குத் தெரிந்திருந்தால் சொல்லவும்)
கண்டமங்கலம் படேஸாஹிப் அருள் இதுவரை கிடைக்கவில்லை. என்ன செய்ய. (ஆனால், நல்லவேளை – அவர் ஒரு ஸூஃபி அல்லர் என்பது திருப்தி அளிப்பது) மேலும் அது ஒரு ‘தர்கா’வா? எனக்கு இது சந்தேகம்தான்.
மற்றபடி காதுகுத்தல் நம்பிக்கைகள் என்பவற்றில் கிண்டல் செய்வதற்கு ஒன்றுமில்லை. அது தனிப்பட்ட விஷயம். (ஆனால் பொய்மைகளுக்கும் அழிச்சாட்டியங்களுக்கும் துணைபோகும்போதுதான் பிரச்சினயே)
23/02/2021 at 22:26
தர்கா தானென உறுதியாகத் தெரியாது ஐயா,நான் செல்லும் போது சொல்லக் கேள்வி, மற்ற படி ஆராய முற்படவில்லை.
ஜீவசமாதி(இஸ்லாம் தொடர்புள்ள) தர்காவெனவே பொதுவில் புழங்கி வருவதை உணர முடிகிறது.
ஆசான குட்டமுடியுமா..
இப்படிக்கு,
ஒத்திசைவு மன்றம்-மத்தியகிழக்கு
24/02/2021 at 07:53
யோவ். தர்கா குறித்து இன்னொரு நாள் தர்க்கம் செய்யலாம். இந்த ஸில்ஸிலா கான்க் எல்லாமே பெரும் பிரச்சினைகள். (புரிந்துகொள்வதற்கும்)
அது ஒருபுறமிருக்க, ஆசான் (c/o நாரோயில்) அவர்களைக் குட்ட உங்களுக்கு சர்வ நிச்சயமாக அனுமதி கொடுக்கப் படுகிறது. மேதிறக் கையால் குட்டுவாங்க அவரும் கொடுத்து வைத்திருக்கத்தான் வேண்டும்.
மற்றபடி எனக்கு ஒருமாதிரி ஒரு பிரச்சினை இருக்கிறது; தாங்கள் தங்கியிருக்கும் பகுதிகள் (ஐரோப்பிய மேட்டிமைப் பார்வையுடன்) மத்தியக்-கிழக்குப் பிராந்தியம் என அழைக்கப்படவேண்டுமா அல்லது (நம் பாரம்பரிய மேட்டிமைப் பார்வையுடன்) மேற்காசியா என விளிக்கப்படவேண்டுமா என்று… உங்கள் சாச்சா நேரு பின்னதற்கு வோட்டுப்போட்டார் என்பதை உங்களுக்கு நினைவூட்டக் கடமைப் பட்டிருக்கிறேன்..
ஆகவே, இந்தப் பேர் வாய்க்காத் தகராறு முடியும் வரை கிளையின் இலைகளுக்கு நீர்பாய்ச்ச வேண்டாம்.
நன்றி.
23/02/2021 at 19:59
நீங்கள் சிறந்த ஆய்வாளர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளீர்கள். வேலாயுதபுரத்தை கேப்ரியல் புரமாக ஒரு அறிவிப்புப் பலகை வைத்தே மாற்றியதைக்கண்டு மனதுக்குள் பொருமினேன். ஏனெனில் நான் மதச்சார்பின்மை வாதி!
23/02/2021 at 21:37
🙏🏿 ஐயன்மீர்!
நன்றி. சிறந்த ஆய்வாளன் என்றெல்லாம் இல்லை; சிலவிஷயங்கள் பற்றிக் கொஞ்சம் முன்னமே தெரியும். எழுதத் தரவுகள் எங்கெங்கே கிடைக்கலாம் என்ற அனுமானமும் இருக்கிறது, மற்றபடி கையில் கொஞ்சம் நேரமும் இருக்கிறது. அவ்வளவுதான்.
முடிந்தவரை செய்வன திருந்தச் செய் – அதாவது முடியும்வரை எனும் மனோபாவமும் இருக்கிறது.
23/02/2021 at 22:02
excellent
23/02/2021 at 22:07
🙏🏿
“நீ பிறந்திருக்க வேண்டியது, இங்க்லெண்ட்…?” :-)
24/02/2021 at 01:22
😂
24/02/2021 at 08:04
Beauuuuuutiful
Maaaarvelous
Very Verry Excellent
நீ பிறந்திருக்க வேண்டியது, England…
(immortal tamil fillum songs, lift me in to highest levels of absurdity and make me reflect on the inhuman dravoodooyan condition, oh what to do…)
23/02/2021 at 23:17
/நொதுமல்நிலை/
Enjoyed this and I intend to appropriate it.
24/02/2021 at 07:55
Namaste. Happy to be of service.
Incidentally, there was an entire post on this நொதுமல்நிலை earlier.
நாம் தமிழர்கள்: தோலடிக் கொழுப்பும், நொதுமல் நிலையும்
10/12/2013
https://othisaivu.wordpress.com/2013/12/10/post-301/
24/02/2021 at 01:21
I wish I had it in me to locate references and prove beyond doubt like you .Hats off
24/02/2021 at 08:00
🙏🏿 Believe me, you have it in you. And, you must write, record etc.
Besides:
“Things that *have* to be done, *must* be done cheerfully and based on evidence.”
And, some experience (and joblessness that comes from a ripe-old-age fogie-dom) help…
;-)
24/02/2021 at 07:33
Exellent analysis. The bird Jatayu has become old. Hence his vision too is blurred.
24/02/2021 at 08:14
🙏🏿 erm, sir – Jataayu was the one who first raised objections. He is correct overall, in general; he was trying to point out issues with calling the hillock ‘syed-pasha’ and all.
And, actually he is perhaps younger than I. :-)
24/02/2021 at 11:08
Excellent article, Sir. As a history enthusiast, I bow to you for the efforts you have put to collect the documentary evidence to substantiate your stand. Eagerly waiting for the next part of the article.
24/02/2021 at 11:47
🙏🏿 அய்யா, நன்றி.
“உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடக்க முயல்கிறேன்” என்று எழுதினால் “Your anti-brahminism like rabbit on a crane will walk” என என்னருமை எஸ்.ராமகிருஷ்ணன் புரிந்துகொண்டுவிடுவாரோ எனக் கொஞ்சம் படபடப்பாக இருக்கிறது.
:-(
24/02/2021 at 19:20
இதுதான் ‘கோட்டை விடுதல்’ எனும் சொற்றொடரின் உண்மையான பொருளா??)
வச்சீரே ஒரு othisaivu பஞ்ச்!
24/02/2021 at 19:23
Sorry for misspelling othisaivu . Please correct and publish if possible
24/02/2021 at 20:29
Sir, taken care of. Relax. (but if you do it again, I may have to block you)
24/02/2021 at 20:28
🙏🏿 என்ன செய்வது சொல்லுங்கள், இம்மாதிரி எழவுக் கருத்தாக்கங்களையெல்லாம் படித்து எதிர்வினை கொடுக்கவேண்டியிருக்கிறது – இல்லாவிட்டால் பரப்புரையினால் திரும்பத்திரும்பச் சொல்லப்படுபவைகளே உண்மையாக நிறுவப் பட்டுவிடும் பெரும் பிரச்சினை எழும்பும்.
ஆக, இந்த மன இழுத்தத்தைக் குறைத்துக் கொள்வதற்காக, நடுவில் அப்படியிப்படி நகைச்சுவை(!) – பொறுத்துக் கொல்லவும்.
24/02/2021 at 21:16
விஜயநகர சாம்ராஜ்யத்தின் வீழிச்சியை பற்றியெல்லாம் படிக்கும் போது ஒரு சோர்வும்.. defeatist எண்ணங்களும் வருவதை தவிர்க்கமுடியவில்லை அய்யா..
மேலும் ஏன் பழைய குப்பையை கிளறுவானேன்…கசப்பும் அவநம்பிக்கையும் தான் மிஞ்சும் அல்லவா..
live for the moment …பிரச்சனை இல்லை அல்லவா…
ஆதலால் செகுலராக இருப்பீர் செகுலராக இருப்பீர் …
24/02/2021 at 21:41
நீங்கள் ஒருமாதிரிக் கிண்டலாகச் சொல்வதை, படு ஸீரியஸ்ஸாக எடுத்துக்கொண்டு:
1. விஜய நகரம் பொதுவாக 1565ல் வீழ்ந்திருக்கலாம் – ஆனால், பலவகைகளில் சிறிய அளவில் அது தொடர்ந்து – பிறகு அந்தக் கனவு மறுபடியும் நூறே ஆண்டுகளில் மராத்தா/ஷிவாஜி மஹராஜ் என விரிந்தது. அதுவும் பொதுவாக 1761ல் வீழ்ந்தபின்னும் பலப்பல பிரதேசங்களின் சிறிய சிறிய அரசுகளாகத் தொடர்ந்தது. (நம்மூர்: எடுத்துக்காட்டு: தஞ்சாவூர் மராத்திய-நாயக் மன்னர்கள்).
2. இவற்றிலிருந்து நமக்குப் பல படிப்பினைகள் கிடைக்கின்றன – கசப்பும் அவ நம்பிக்கையும் மட்டுமல்ல. ஆனால் பின்னவையும் நமக்கு ஒரு ‘அதிர்ச்சி வைத்தியமாக’ வேண்டிவருமோ?
3. ‘தற்காலத்தில் வாழ்வது’ – ஸெக்யூலராக இருப்பது இன்னபிற – தங்கள் கிண்டல் புரியாமலில்லை. ஆனால் இந்த ‘live for the moment’ என்பது பலவிஷயங்களில் டுபாக்குர். வெட்டி சுயமுன்னேற்ற, போலி ஆன்மிக வாதிகள் சொல்வது அது என்பது என் அபிப்ராயம்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
24/02/2021 at 22:13
டுபாக்கூர் தான் …ஆனால் பல நேரங்களில் damn it works..:)
அந்த அந்த காலகட்டத்தில் இருந்த சமூக சூழல்…இது போல நிகழ்வுகளுக்கு triggers ஆக இருந்திருக்கலாம்…வரலாறு வெறும் விவரங்களை தரும்..இந்த third dimension தருமா??
25/02/2021 at 08:10
ஐயா, சரிதான்.
ஆனால், கல்தோன்றி திராவிடன் தோன்றா காலத்திலேயே நம் தமிழ்மொழி சோழமொழிப் புகழ் கரிகாலன், damn எனக் காவிரியைத் தூற்றித் தூர்வாரிச் செப்பனிட்டுப் பின் மகிழ்ச்சியுடன் ‘it works!’ எனச் சொன்னதை நம்மில் எவ்ளோ பேர் அறிவோம்?
வரலாறு விவரங்களை மட்டும் தருவதல்ல – மாறாக நம் தற்கால நிலவரங்களின் ஊற்றுக் கண்களை – அவை நேரிடையோ எதிர்மறையோ – காண்பிக்கிறது; சுமார் 1200 ஆண்டுகளாக (அப்படியும் இப்படியும்) விதம்விதமான காலனியாதிக்கச் சூழல்களின் இடிபாடுகளை மீறி புனர்ஜன்மம் எடுக்க அது உதவுகிறது. அதே சமயம் சமனத்தையும் தருகிறது, ஓரளவுக்கு. பொய்மைகளையும் பிரச்சாரங்களையும் எதிர்கொள்ள வகையும் செய்கிறது. ++
மற்றபடி தாங்கள் குறிப்பிடும் ‘The honour of the three horses’ எனும் புதிர்ப் பகடிப் புராணத்தை நான் இதுவரை படித்ததில்லை. தாங்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்.
25/02/2021 at 22:26
அரிகாலஸ்ய கரிகாலஸ்ய சாசனம் காட்டுகிறது அப்புகழை…
History is junk என்ற கூற்றில் கொஞ்சம் உண்மை இருக்கல்லவா?
நானும் படித்தது இல்லை…யாராவது பகிர்ந்தால் நன்று…