க்ருஷ்ணகிரி மலையின் ‘ஸூஃபி ஸையத்-பாஷா’ வரலாறுகள் – நகைக்கத்தக்க பரப்புரைகளும் தரவுபூர்வமான குறிப்புகளும்

28/02/2021

பின்புலத்துக்காக, இதற்கு முந்தைய பதிவைப் படித்துவிட்டு மறுபடியும் இதற்குவருவது சரியாக இருக்கும்: ஹிந்து க்ருஷ்ணகிரிதுர்க்கம் : ‘ஸூஃபி’ ஸையத்பாஷா மலை :: அறியாமைகள் : பரப்புரைப் பொய்மைகள் – தரவுகளுடன் வரலாறுகளை அணுகுவது எப்படி 23/02/2021

இந்தப் பதிவில், கீழ்கண்ட விஷயங்கள், பலவித பார்வைகளிலிருந்தும், பின்புலங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டுக் கூர்ந்து நோக்கப்படுகின்றன:

 • சுவைமிகுந்த, திடுக்கிட வைக்கும் ஸையத்-பாஷா கதையாடல்கள் – அவற்றின் நதிமூலம் – ‘நாட்டாரியல்’ புல்லரிப்புகள்
 • ப்ரிட்டிஷ்/வெள்ளைக்கார ஆட்சியாளர்களால்/பிரயாணிகளால் + க்றிஸ்தவப் பாதிரிகளால்ஆவணப் படுத்தப்பட்ட விவரணைகள், கதையாடல்கள் (+ ஒரு ஆச்சரியம்!)
 • ‘கல்வெட்டு’ – சான்றுகள்
 • இந்த ‘மஹான்கள்’ க்ருஷ்ணகிரிக்கு வந்ததாக நம்பப்படும் சமயத்தின், சமகால க்ருஷ்ணகிரி பகுதி வரலாற்று நிலவரம்
 • பிரிட்டிஷ்/வெள்ளையர்களின் பதிவுகளிலிருந்து ‘உருஸ்’ உள்ளிட்ட விஷயங்கள் இல்லாமலிருக்கும் விஷயம் குறித்த விவரணைகள்
 • ஸூஃபி நாட்டுப்புறப் பாடல் சான்று: பராபர முண்டகப் புகழ்மாலை
 • க்ருஷ்ணகிரி ‘உள்ளூர் அன்பர்களின்’  மீதமிருக்கும் கருத்துகள் குறித்த எதிர்வினைகள்++
 • முடிவாக, சில வார்த்தைகளும் கோரிக்கைகளும்

மேலே தொடர்ந்து படிப்பது, உங்கள் இஷ்டம், உங்கள் பரப்புரை ஜிஹாத். உங்கள் நம்பிக்கை அல்லது மூடநம்பிக்கை. உங்கள் ஆர்வம் அல்லது உங்களது நொதுமல்நிலை. உங்கள் சுறுசுறுப்பு அல்லது சோம்பேறித்தனம். ஏனெனில் – இதுவும் நீளம்தான்.

4200+ வார்த்தைகள் !

(எனக்கு நன்றாகவே தெரியும் – முழுப் பதிவையும் படிப்பவர்கள் சுமார் ஐந்துபேர்தான் இருப்பார்கள் – ஏனெனில் ‘லாங்-ஃபார்ம்’ கட்டுரைகளைத் தமிழில் படிப்பவர்கள் மிகவும் குறைவு என்று; இருந்தாலும், தரவுகளைக் கொடுத்து பொழிப்புரையையும் நல்குவது என் கடமை என்பது என் மடமை மிகுந்த கருத்தாதலால், இம்மாதிரி விஷயங்கள் எங்காவது காத்திரமாக ஆவணப் படுத்தப்படவேண்டும் என நான் மனதாற விழைவதால்… …)

4

(முதல் மூன்று பிரிவுகள் 1-3 முந்தைய பதிவில்)

சுவைமிகுந்த, திடுக்கிட வைக்கும் ஸையத்-பாஷா கதையாடல்கள் – அவற்றின் நதிமூலம் – ‘நாட்டாரியல்’ புல்லரிப்புகள்

பேராசிரிய மஹமஹோ கேதரீன் ஆஷர் அவர்கள் சொல்வது போல…

ஸூஃபி கதையாடல்கள் என்றாலே, வரலாறு எங்கே முடிகிறது அல்லது மானேதேனே பீலாவாதம் எப்போது ஆரம்பிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது சிரமம். இத்தனைக்கும் அம்மணி அவர்கள் ஒரு ஸூஃபி வெள்ளையடிப்பவர்; ஸூஃபிகளின் ஒருபக்கத்தை(!) மட்டும் ஊதிப் பெருக்கி கலர்கலராகச் சித்திரம் விரிப்பவர் – இருந்தாலும் அவருக்கே முடியாமல் போய் இப்படி ஒரு பிலாக்கணம் வைக்கிறார். (அவருடைய கட்டுரை இன்னொரு தமிழ்நாட்டு  ஸூஃபி – நாகூரின் ஷாஹுல் ஹமீத் + அங்குமிருக்கும் தர்கா பற்றியது – இந்த ஆளின் பராக்கிரமத்தைப் பற்றிப் பின்னொரு சமயம் பார்க்கலாம்)

நம் க்ருஷ்ணகிரி ஸூஃபிக்களின் ஸ்பெஷல் பிரச்சினை என்னவென்றால் – இங்கிருக்கும் தர்கா/ஸூஃபிகளுக்கு முதலுக்கே மோசம், என்ன செய்ய. எதையுமே ஒன்றுடன் ஒன்றைப் பொருத்திப் பார்க்கமுடியாமல் அப்படி ஒரு கதையாடல், தொடர்ந்த அழிச்சாட்டியம், மாளா வெள்ளையடிப்புகள், கீழ்மைப் பொய்மைகள்… எவன் சரிபார்க்கப் போகிறான் எனும் படுதெகிர்ய அட்ச்சிவுடல்கள்.

சுமார் 1792லிருந்து ஓரிரு குறிப்புகள் (ஒருமாதிரிதான் – ஒரு வெள்ளைக்காரப் பயணி/ஓவியர் இந்தப் பக்கம் வந்தபோது அவர் எழுதிய நாட் குறிப்புகளில் ஓரிரு வரிகள் இது குறித்து இருந்தன என நினைவு – ஆனால் அதனைப் பற்றிய என் குறிப்புகள் எங்கே போயின எனத் தெரியவில்லை, மூலப் புத்தகமும் எங்கே போயிற்றோ தெரியவில்லை – நினைவு தவறாகவும் இருக்கலாம்) இந்த ‘சமாதிகள்’ குறித்து அரசல் புரசலாக இருந்தாலும் 1883 வருடத்தில்தான் முதன்முறையாக இந்த ‘கோரி’ கதையாடல் ஓரளவுக்கு முழுமை பெறுகிறது.  (‘கோரி’கள் என இந்தக் கல்லறைகள் விளிக்கப்படுவது தான் இஸ்லாமிய வழக்கம்)

இந்த ஸூஃபிகள் குறித்து, தொழில்முறையில் அல்லது லோக்கலாக பலப்பல மானேதேனேக்கள் இருக்கின்றன (+இனியும் வரும்தான்). இதில் ‘டூரிஸ்ட் கைடுகள்’ சொல்பவையும், உள்ளூர் வல்லுநர்கள் சொல்பவையும் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை மட்டும் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்…

மேற்படி நாட்டாரியல் வல்லுநர்கள் இவற்றைத் தொடர்ந்து ‘மாற்று வரலாறு’ அல்லது ‘ஸிமுலாக்கிரம்’ வகை மாற்றி எழுதுதல் என, பண்டிதர் க அயோத்திதாஸ் அவர்கள் போலக் கிளம்பினால் குறைந்த பட்சம் சுமார் 100 பிஹெச்டிக்களை இதனை வைத்தே ‘ரெடி’ செய்துவிடலாம்.

அல்லாவுக்காகத் தலை அர்ப்பணிப்பு

இரண்டு ஸூஃபிகளிடம் அல்லா பணிக்கிறார் – உங்களுடைய ஆன்மிக சுத்தியைச் சரிபார்க்கவேண்டும். அதாவது, உங்கள் தலையை நீங்களே வெட்டிக்கொண்டு யார் முதலில் மலைமேல் வருகிறீர்களோ, அவர்களுக்கு ஜன்னத் (சொர்க்கம்) நிச்சயம்.

ஆர்வத்துடன், ஞானவான்களாகிய இரண்டு ஸூஃபிகளும், அல்லாஹ்வின் ஆணையைச் சிரமேற்கொண்டு அதாவது சுயச் சிரச்சேதம் செய்து –  தங்கள் கைகளில் தங்கள் தலைகளை ஏந்திக்கொண்டு – ஆனால் கடைசியில் இரண்டு முண்டங்கள்* (தலைகள் புவியீர்ப்புவிசையின் காரணமாகக் கீழே உருண்டோடிவிடுவதால் லூஸ்ல வுடப்படுகின்றன) மட்டுமே மேலேறி – ஆனால் ஒரே சமயத்தில் இரண்டும் மலையுச்சியைச் சென்றடைவதால்… இரண்டுக்கும் ஜன்னத். ஆஹா! (பிரச்ச்சினை என்னவென்றால் – இந்த ஸூஃபி கோரிகள்/சமாதிகள் மலையின் உச்சியில் இல்லை!)

* இந்தப் பதிவில் ‘முண்டம்’ எனும் திருவார்த்தையானது, தலைகொய்யப்பட்ட ஆனால் ஆச்சரியப் படத்தக்க விதத்தில் இன்னமும் மற்றபடி செயல்பாட்டில் இருக்கும், தலையற்ற உடற்பாகத்தைக் குறிக்க உபயோகிக்கப் படுகிறது. ‘முண்டம்’ என்பது தமிழகத்தில் மிகச் சாதாரணமாகவும் பரவலாகவும் இருக்கும் உயிரிதான். ஏனெனில் திராவிடனுக்கு மூளையின் அவசியம் இல்லாமலிருப்பதற்கு அப்பாற்பட்டு,  தலை இருக்கவேண்டிய அவசியமும் இல்லை என்பதையும் நாம் அறிவோம். ஆகவே ‘முண்டம்’ என்பதை நடைப்பிணம் எனவும் கருதலாம், ஆட்சேபணை இல்லை.

அல்லாவுக்காகத் தலை அர்ப்பணிப்பு (இன்னொரு வடிவம்)

ஏறத்தாழ மேற்கண்ட கதையேதான்; ஆனால் இதில் ஸூஃபிகள் இருவரும் ஒருவருக்கொருவர் ஒத்தாசை செய்துகொள்கிறார்கள் – அதாவது ஒருவர் தலையை இன்னொருவர் கொய்கிறார்கள்.
சுபம்.

ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டு, சுத்த சன்மார்க்க ஸூஃபி ஆவது எப்படி?

இந்த பிற்கால ஸூஃபிக்களாகப் போகிறவர்க்குள் நடுவே ஏதோ சண்டை.

ஆக இருவரும் வாட்போரிட்டுக்கொண்டே மலை மீது ஏறும் போது பரஸ்பரம் தம் தலைகளை வெட்டி ஆன்மிக சேவை செய்துகொள்கிறார்கள்; தலைகள் கீழே கோரமாக உருண்டு போய் விடுகின்றன; அவற்றுக்குத் தனியாக சமாதிகள் க்ருஷ்ணகிரி கலெக்டரேட் அலுவலகம் பக்கத்தில் இருக்கின்றன. 

தலையற்ற முண்டங்கள் தொடர்ந்து சண்டைபோட்டுக்கொண்டே ரத்தக் களறியுடன்  மேலே தொடர்ந்து மலையேறிப் போய் – ஆங்கே விழுந்தன. ஆகவே அங்கு தர்கா. புனித இடம். ஆஹா!

“டேய், ஏண்டா பொய் ஸொல்றீங்க… இப்டிப் புளுவறீங்க… ஒருவன் தலையை இன்னொருத்தன் வெட்டிக்கிட்டா அதில் என்னடா மசுரு ஆன்மிகம்?” என ஒருவரும் கேட்கமாட்டார்கள்.

அதுலதாண்டே இருக்குது ஸூஃபிய சூட்சுமம்!

ஸூஃபிகளுடன் திப்பு கதை

இதில் முஸ்லீம் ஸூஃபிகள் திப்பு பக்கத்தில், அந்த ஆள் சார்பாகச் சண்டை போடுகிறார்கள்; எதிர்ப் பக்கம் ப்ரிட்டிஷ்.  பின்னவர்கள் மலைமேல் கோட்டையில் இருக்கிறார்கள். திப்பு வெளியேயிருந்து தாக்குதல். ஏறத்தாழ திப்பு தோற்கும் நிலையில், அதுவரை வாளாவிருந்த இரண்டு ஸூஃபிகளும் வாளேந்தி ப்ரிட்டிஷ் படைகளை மாய்க்கின்றனர்.

ஆனால் அவர்கள் தலைகள் வெள்ளைக்காரர்களால் கொய்யப் பட்டு அவர்களுடைய (வழக்கம் போன்ற) முண்டங்கள் மட்டும் போரிட்டுக்கொண்டே மேலேறுகின்றன, கோட்டையையும் பிடிக்கின்றன; பின்பு, திப்பு ஸுல்தான் கீழே வீழ்ந்த தலைகளைச் சேகரித்து மேலே சென்று தர்காவைத் தர்க்க பூர்வமாக நிறுவுகிறார்.

ஸூஃபிகளுடன் திப்பு கதை (இன்னொரு வடிவம்)

இது விட்டல்ராவ் அவர்கள் எழுதிய சுவையான புத்தகம் ஒன்றில் இருக்கிறது.

இதிலும் ஏறத்தாழ அதே கதையாடல்.

(கீழே, உங்களுக்காகக் கொடுத்திருக்கும் வெற்றிடத்தில் உங்களுக்குப் பிடித்தமான கதையை சொருகிக் கொள்ளவும்)

எடுத்துக்காட்டு: அக்பருக்கும் பாபருக்கும் ஒரு போட்டி. அவர்களுடைய மகன்களால் தத்தம் தலைசீவப்பட்டு (இதெல்லாம் எப்படியும், மொகலாயர்களுக்கும் ஸுல்தான்களுக்கும் நவாபுகளுக்கும் சகஜம்தான்), பின்னர் முண்டமாக மலையுச்சியை யார் முதலில் அடைகின்றனரோ அவருக்கே வெற்றி, ஜன்னத். இதற்கு நடுவர் ஔரங்க்ஸெப்.

ஹூமாயுன் பாபர் தலையை வெட்டினார். ஜஹாங்கீர், அக்பர் தலையை.  மிச்சமிருப்பவை மலையேறி ஓட ஆரம்பித்தன – ஆனால் இரு முண்டங்களும் ஒரே சமயத்தில் மலையுச்சியை அடைந்ததால் – இருவருக்கும் ஜன்னத் மறுக்கப்பட்டு, ஔரங்க்ஸெப் ஆலம்கிர் அவர்களே தன் தகப்பனார் (= ஷாஜஹான்) தலையை வெட்டி, தனக்குத் தானே சொர்க்கம் கொடுத்துக் கொண்டார்.

சுபம். (ஆனால், இதனால் மொகலாய வம்ஸமே காணாமல் போய்விட்டதால்தான், ப்ரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவை வெற்றிபெற முடிந்தது – என்பது ஒரு கொசுறுக் கதை)

5

ப்ரிட்டிஷ்/வெள்ளைக்கார ஆட்சியாளர்களால்/பிரயாணிகளால்  + க்றிஸ்தவப் பாதிரிகளால் ஆவணப் படுத்தப்பட்ட விவரணைகள், கதையாடல்கள் (+ ஒரு ஆச்சரியம்!)

க்ருஷ்ணகிரியைப் பொறுத்தவரை, இந்த ‘கோட்டை/கோவில் மீதான முஸ்லீம் படையெடுப்பு + கோட்டையைப் பிடிக்கமுடியாமல் முஸ்லீம் அரசன்/படைத்தலைவன் வருத்தம் +  சமகால/எதிர்கால ஸூஃபிகள் ஆன்மிகரீதியில் களத்தில் குதிப்பது +  ரத்தக் களறிச் சண்டை + தலையற்ற முண்டங்கள் மேலோடிப்போதல் +  படையெடுப்பு வெற்றி +  கோட்டை/கோவிலுக்குள் ஜிஹாதி வெறித்தன ரத்தக் களறி + ஸூஃபி தர்கா ஸ்தாபிக்கப் படல் + பிற்பாடு ஒர்ரே ஆன்மிகம்  + அனைவருக்கும் சுபிட்சம்’ வகையறாக்  கதையாடல் முதன்முதலில் 1883ல் பக்காவாக ஆவணப் படுத்தப்பட்டது. 

அதனைச் செய்தது அப்போதைய சேலம் கலெக்டர்/ஆட்சியரான வெள்ளைக்காரர் ஹென்றி லஃபனு (Henry Le Fanu) என்பவர்.

கீழே அதன் ஸ்னிப்பெட்டும் அதற்குக் கீழே அதன் ஒருமாதிரி தமிழாக்கமும் (மொழிபெயர்ப்பு அல்ல) குறிப்புகளும் கொடுத்திருக்கிறேன்; இதுதான் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்த கதையாடல் எனக் குறித்துக்கொள்ளவும். ஆகவே அதற்குப் பிறகும் மானேதேனே சேர்க்கப்பட்டிருக்கும் என்பதையும்.

… [க்ருஷ்ணகிரி] மலைமேலிருக்கும் இரண்டு கல்லறைகள்,முஸ்லீம்களால் ஏகோபித்து வழிபடப் படுகின்றன; அங்கிருக்கும் ஒரு ஃபகீர் (=பக்கிரி) வருவோரிடம் பணம் வசூலிக்கிறார்.
அதன் கதை இப்படிப் போகிறது.

…வடக்குப் பகுதியிலிருந்து வந்த அக்பர் பாஷா என்பவன் க்ருஷ்ணகிரியின் மேற்கில் தாவளம் அமைத்துத் தங்கி, க்ருஷ்ணராஜ் என்பவரால் நிர்வகிக்கப்பட்ட மலைக்கோட்டையை முற்றுகை இட்டிருந்தான். ஆனால் முற்றுகையை ஆரம்பித்து ஆறு மாதங்களாகியும் அக்பருக்கு வெற்றி கிட்டவில்லை – மாறாக மாளா சேதம்/நஷ்டம். ஆகவே, அவனுக்கு மிகவும் சலிப்பும் வருத்தமுமாகி அல்லாவுக்குப் பிரார்த்தனை செய்தான்; அவன் கனவில் வ்ந்த அல்லா சொன்னார்: அவனுடைய தாவளத்தில்/படையில் இருக்கும் மதநம்பிக்கையாளர்களாகிய இரண்டு பேருக்கு மட்டும்தான் கோட்டையை வெற்றிகொள்ளும் பராக்கிரமம் இருக்கிறது.

[ஆனால் யார் அவர்கள் என அக்பரால் கண்டுகொள்ள/கண்டுபிடிக்க முடியும்? அதற்கும் நேரடியாகப் பதில் சொல்லாமல் சுற்றிவளைத்துப் பூடகமாக ஒரு யோசனையைச் சொல்கிறார் அல்லா!]

அவன் கனவில் கேட்டது உண்மைதான் என ஐயம் திரிபறத் தெரிந்து-அறிந்து கொள்வதற்காக அன்றிரவு ஒரு கடும் புயல் வரும் – அதனால் தாவளத்தில் உள்ள அனைத்துக் கூடாரங்களும் சேதமாகிவிடும், அனைத்து விளக்குகளும் அணைந்துவிடும் – அதாவது அந்த இருவர் தங்கியிருக்கும் டெண்ட்/கூடாரம் தவிர… என்கிறார் அல்லா.

இது அப்படியே நடக்கிறது; அந்த இரண்டு பக்கிரிகள் – ஸையத் பாஷா, ஸையத் அக்பர் தங்கள் கூடாரத்துக்குள் உட்கார்ந்துகொண்டு விளக்கொளியில் கொர்-ஆன் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அக்பர்பாஷாவின் நிலைமை மோசமாக இருந்தாலும் அந்த இருவர், படைகளுக்குத் தலைமை தாங்கி வாளேந்தி கோட்டையைப் பிடிக்க எத்தனிக்கிறார்கள். அன்று ஒரு வெள்ளிக்கிழமை.
ஆனால், போர் ஆரம்பித்த சிறிது நேரத்தில் இவர்கள் இருவருக்கும் தலை [எதிரி க்ருஷ்ணராஜ் படையினரால்] கொய்யப் படுகிறது. ஆனால்.

தலையில்லாத நிலையிலேயே அவர்கள்/அதுகள் தொடர்ந்து போரிடுகிறார்கள். [ஜிஹாத்தில் இதெல்லாம் சகஜமப்பா!]

இதனால் எதிரிப் படையினர் குழம்பிப் போய்ச் சிதறி ஓடுகிறார்கள், பாவம். [ஏன், நானாக இருந்தாலும் ஓடித்தான் போயிருப்பேன் – “அனீஷ்க்ருஷ்ணன் பீகாக் நாயரே! காப்பாற்றும்! இது ஏதோ பில்லி சூனியம் வகையாக இருக்கும் போலிருக்கிறதே! நானும் இனிமேல் மாத்வன்தான்!!” எனக் கதறிக்கொண்டே நாரோயில் திக்கில் வாயுவேகம் மனோவேகமாக விரைந்திருப்பேன்!]

…அப்படியே இரு தலையில்லா முண்டங்கள் தொடர்ந்து சண்டைபோட்டு க்ருஷ்ணகிரி மலைமேல் உச்சிக்கே ஏறிவிடுகிறார்கள்!

மேலே ஆங்கே, க்ருஷ்ணாராஜ் அவர்களின் அன்னையார் நின்றுகொண்டிருக்கிறார். [முதலில் பண்டரிபாய் நினைவில் வந்தார்; ஆனால் அவர் பாய் ஆதலால், கேபி சுந்தராம்பாள் அவர்கள் தான் இந்த வேடத்திற்குச் சரியான நபர் எனப் படுகிறது]

அவருக்கும் ஆச்சரியம்தான். “என்னது! தலையில்லா முண்டங்கள் போரிட முடியுமா?” எனக் கூவுகிறார்.

அந்த நொடியில் அந்த இரண்டும் கீழே வீழ்ந்து விடுகின்றன. மேலும் மாயாமச்சீந்திரா வகையில் அவை ஒரு பெரும்பாறையின் அடியில் அமானுஷ்யமாக புதைக்கவும் படுகின்றன.

[இன்னமும் இருக்கிறது, பொறுமை காக்கவும்!]

இந்த இடத்திற்கு வந்த திப்பு ஸூல்தான், இதனைப் பராமரிக்கும் பக்கிரிக்கு ஒர் தாஸிர் [ஒரு கொடை / நல்கை] கொடுத்தான்.

[இந்த ஸூஃபிகளின் தலைகளும் மறக்கப் படவில்லை, ஆகவே…]

அந்தத் தலைகள் மலையடிவாரத்தில் புதைக்கப் பட்டிருக்கின்றன.

ஒரு சமயம் ஒரு பெருந்தொற்று இவ்வட்டாரத்தில் பரவியபோது, அங்கிருந்த அனைத்து ஜாதி மக்களிடமிருந்தும் சர்க்கரை [!] பெறப்பட்டு அந்தத் தலையற்ற முண்டங்கள் புதைக்கப்பட்ட பகுதியின்மீது கொட்டப்படுகிறது; அதுவரை அங்கு கல்லறையோ கட்டுமானமோ இருந்திருக்கவில்லை – ஆனால் அங்கு அப்படியொரு கட்டுமானம் எழுப்ப எத்தனிக்க கனவுகளில் ஒரு எச்சரிக்கை வந்தது: அதைச் செய்யக் கூடாது.

க்ருஷ்ணகிரிக்கும் வெளியே சற்று தூரத்தில், ஆகாஷ் ஸிங் + அவன் ஸிங் எனும், க்ருஷ்ணகிரியை ஆண்ட முன்னாள் ராஜபுத்திரர்களின் சமாதிகள் இருக்கின்றன.

-0-0-0-0-

இதற்குப் பிறகு 1918ல்  எஃப் ஜே ரிச்சர்ட்ஸ் (அப்போதைய சேலம் மாவட்டத்தின் ப்ரிட்டிஷ் கலெக்டர்) இதே கதையாடலை, க் ச் விடாமல் அனைத்தையும் குறிப்பிடுகிறார்.

அதற்குமேல் இரண்டு வரிகளை அடிக்குறிப்புகளாகச் சேர்க்கிறார்.

அ. இதில் தான் ஸையத்-பாஷா தர்கா எனும் பதமே உபயோகத்துக்கு வருகிறது; இதற்கு முந்தைய ஆவணத்தில் இது பற்றிய குறிப்புகளே இல்லை.

ஆ. மேலும் அந்த தர்காவின் பராமரிப்புக்காக, ஊர்ச் சபையினரால் கொடுக்கப் பட்ட  மானியம் பற்றிய விவரம். (இதுதான் திப்பு ஸூல்தானால் கொடுக்கப் பட்டதாக விரிந்திருக்கவேண்டும்; ஏனெனில் எந்த ஒரு தம்பிடி ‘பொதுகாரியத்துக்காகவே’ செலவழித்தாலும், அதில் தன்பெயரைக் கருணாநிதி போல போட்டுக் கொண்ட நபர்தான் திப்பு – ஆனால் இந்த ஸையத்-பாஷா விவகாரமாக ஒரு நாட்குறிப்போ, பட்டயமோ, கல்வெட்டோ, அல்லது ஜாகிர்/பரமஹல் ஆவணமோ இது குறித்து இல்லவே இல்லை)

(முழுவதுமாகவே இந்த ஸுஃபி விஷயம் ஈயடிச்சான் காப்பி என்பதையும் இந்தக் குறிப்புதான் தெரிவிக்கிறது)

-0-0-0-0-

சுமார் 1880லிருந்து ஆழ்ந்து கவனிக்கப்பட்டு (மிஷனரிகளின் பிற மதமாற்று நடவடிக்கைகளைப் போலவே), யார்யார் எப்படி மதம் மாறுவார்கள், எந்தப் பேய்க்கு எந்த ஆட்டை பலிகொடுத்தால் பலன் கிடைக்கும் என நோட்டம் விட்டுவிட்டு, பின்னர் அதற்கும் முன்னமே அந்தப் பிராந்தியத்தை வந்தடைந்த ஜெஸூய்ட் வெறியர்களின் தோல்வியையும் (ஏனெனில்,  அவர்கள் அப்பகுதி மதமாற்றங்களில் பெரும்வெற்றி அடைந்தாலும் – ரொம்ப ஓவராக ஆடியதால், திப்பு அவர்களை ஒடுக்கித் துரத்திவிட்டான்; துரத்தப் பட்டபின், ஜெஸூய்ட்களால் மதம் மாற்றப்பட்ட ஹிந்துக்களும் முஸ்லீம்களும் திரும்பவும் தம் தாய்மார்க்கத்துக்கே வந்துவிட்டனர்) அவதானித்த பின்  –  க்ருஷ்ணகிரி பகுதிக்கு, வந்தனர். இவர்கள் ப்ரொடெஸ்டென்ட்கள்.

ஆக – 1895ல் அமெரிக்க மிஸ்ஸௌரி இவாஞ்செலிக்கல் லுதரன் மிஷன் அமைப்பின், முதல் மதமாற்ற அமைப்பு தொடங்கப் படுகிறது.

இவர்கள் ஆவணம் ஒன்றிலும் கூட, இந்த தர்கா பற்றிய விவரணையே இல்லை. இதன் முதல் ‘ஆயர்’ ரெவெரெண்ட் தியொடர் நீதர் (Reverend Th Naether) – இவரும் இது குறித்து ஒரு வார்த்தை சொல்லவில்லை.

ஆக, ஏதோ பிணப் புதைப்புகள் சுமார் 1792 வாக்கில் இருந்து மலைமேல் இருந்திருக்கக் கூடுமானாலும், முட்டுக் கொடுக்கப்படும் கதைகளாக மாறியது 1883 வாக்கில்தாம். அது தர்காவாக மாறியது 1918க்குச் சற்றுமுன்னர்தாம்…

-0-0-0-0-

இப்போது ஒரு சுவாரசியமான விஷயத்துக்கு வரலாம்; அது என்னவென்றால் – அச்சு அசலாக (ஏறக்குறைய) இந்த ‘ஸூஃபி – தலைகொய்யல் – முண்டங்கள் போரிடுவது கதையாடல்’ சுமார் 800 வருடங்களுக்கு முந்தைய அதேபோன்ற, நடந்ததாகப் புனையப்பட்ட கதையாடலின் அப்பட்டமான , அசிங்கமான காப்பி என்பதுதான்…

இந்த உளறல் கதையாடலில் கூட ஒரு மசுத்துக்கும் தனித்துவம் இல்லை என்பதுதான் இந்த க்ருஷ்ணகிரி ஸையத்-பாஷா புருடாவின் பெருமை.

1790கள் முதற்கொண்டு அரசல்புரசலாக இக்கதையாடல்களின் ஆவணப் படுத்தல்கள் இருந்திருக்கின்றன.  இதற்கு மூலங்கள் – சுமார் 1400களில் இருந்து பாரதத்தில் உலவிக்கொண்டிருந்திருக்கிறது.

எனக்குத் தெரிந்தவரையில்… ஜேம்ஸ் டாட் (Lt James Todd) என்ற கிழக்கிந்தியக் கம்பெனி ராணுவக்காரர் 1837-8 வாக்கில் மேற்கு இந்தியப் பகுதிகளில் பயணம் செய்தார் – சுற்றுலாக் குறிப்புகளை விலா வாரியாக எழுதினார்; 1839ல் அவை புத்தகமாகப் பதிப்பிக்கப் பட்டன.

இந்தப் புத்தகத்தில்தான் இந்த மூலக்கதையாடல் முதன்முறையாகப் பரவலாகத் தெரியவரும் படிக்கு ஆவணப் படுத்தப் பட்டு இருக்கிறது.

பொதுயுகம் 1024 சமயம்: இதன் பின்புலம் கஜினி மொஹெம்மத் (குஜராத்தின் ப்ரசித்தி பெற்ற ப்ரபாஸ் பட்டன், சோமநாதரின் ஆலயத்தைக் கைப்பற்ற முடியாமல்) கையறு நிலையில் இருக்கும்போது ஸூஃபி ‘ஞானிகள்’ வாளேந்தல் –  அல்லாஹ்வின் அருளால் அவனுக்கு மனோதைரியமும் அளித்து சண்டைபோட்டு உதவி செய்தது – அவர்கள்  – தலை கொய்யல் – முண்டங்களாகவே சண்டை – அருள் – ஸூஃபி ஞானிகளுக்கு வழிபாட்டுத்தலத்தை கஜினி மொஹம்மத் உருவாக்கித் தந்தது, ஒரு காங்க்கை (ஸூஃபிகளுக்கான இருப்பிடத்தை) தயார் செய்து நிதி கொடுத்தது இன்னபிற இன்னபிற… இதில் பலப்பல கதையாடல்கள்தாம். இந்தக் கதையாடலானது எப்போதோ பாரசீக மொழியில் எழுதப்பட்டுப் பின்னர் ஹிந்தி படுத்தப்பட்டு லோக்கல் ஜிஹாதிகளால் உபயோகப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. பின்னர் இந்த டாட் மூலமாக மொழிபெயர்க்கப் பட்டது.

இந்தப் பாரசீக, ஹிந்துஸ்தானி இஸ்லாமிய ஜிஹாதிக் கதையாடல் புல்லரிப்புகள், வெளிப்பார்வைக்கு ஆங்கிலத்தின் மூலம் வந்தது இந்த 1839 புத்தகம் மூலமாகத்தான் (ஆனால் – இதில் அதன் ஹிந்தி மூலத்துக்குத் தொடர்பற்ற பலப் பல இடைச்செருகல்கள், மானேதேனே)

இதைப் பிடித்துக்கொண்டு மேலே போய். ஆழ்ந்த ஆராய்ச்சி, ஃபீல்ட் வர்க் எல்லாம் செய்து, குஜராத்தின் கத்தியவாட் பிரதேசத்தில் இருந்த, மேஜர் ஜே டபிள்யு வாட்ஸன் என்பவர் 1869ஆண்டில் இந்தியன் ஆன் டிக்வரி சஞ்சிகையின்…

ஜூன் இதழில் ஒரு நீள ஆய்வுக் கட்டுரையை எழுதினார்…

நமக்குத் தேவையான, அதன் சாராம்சம் கீழே:

நமக்கு முன்பே அறிமுகமாகியிருக்கும் கதையின் அக்பர் பாஷா (முற்றுகையிடும் படைத்தலைவன்) மூலக் கதையில் ஸுல்தான் மெஹ்மூத் (அதாவது கஜினி மொஹெம்மத்); க்ருஷ்ணாராஜ் எனும் க்ருஷ்ணகிரிதுர்க கோட்டைத் தலைவனுக்குப் பதிலாக, குன்வர்பால் எனும் குஜராத்தி அரசன்.

க்ருஷ்ணகிரிக்குப் பதிலாக, கதை ப்ரபாஸ் படான் நகரத்தின், ஸோமநாதரின் கோவிலைச் சுற்றி நடக்கிறது.

ஸோமனாதர் கோவில்/படான் நகர் முற்றுகை  – க்ருஷ்ணகிரியைப் போலவே வெற்றிகரமாக இல்லாததால், மேலும் கடும் நஷ்டங்களால், மொஹம்மத் கஜினிக்கும் சோர்வு. பின்னர் அதே கனவில் அதே அல்லா. அதே இரு இஸ்லாமிய மதப்பிடிப்புகள் உள்ளவர்கள். அதே இரவு-புயல். அதே அவர்கள் கூடாரங்கள் மட்டும் சேதமடையாமை. அதே விளக்கொளியில் அதே கொர்-ஆன்.

ஸையத் பாஷா ​+ ஸையத் அக்பர் எனும் இரு பிற்கால ஸூஃபிகளுக்குப் பதிலாக ஜாஃபர் + முனாவர்.

அதே வெள்ளிக் கிழமை. அதே போர். ரத்தக் களறி. ஆனால், மூலக் கதையில் இருவரில் ஒருவரே வீழ்கிறார். அவரே படான் நகரை வெற்றியும் கொள்கிறார்.

வீழாதவர். கலீஃபா அபுபக்ர் எனப் பட்டம் கொடுக்கப்பட்டு, படான் நகர் இஸ்லாமியத் தலைமை காஸியாக்கப் படுகிறார்.

குன்வர்பால் பக்கம் போரிட்டு வீழ்ந்த ஹிந்து வீரர்களான ஹாமிரும் வேகட்டும் – க்ருஷ்ணகிரி டெம்ப்ளேட்டில் ஆகார் ஸிங் + அவன் ஸிங்.

++

-0-0-0-0-

இது ஒருபுறமிருக்க இம்மாதிரி அச்சுஅசலான செவி வழிச் செய்திகளை நான் மத்தியப் பிரதேசத்தில் இப்படி ஸூஃபிமயமாக்கப் பட்ட பழைய ஹிந்துகோவில்/கோட்டை பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். 1986ல் நான் அறிந்துகொண்ட விஷயங்கள் இவை – ஆனால் என்னிடம் அதற்கான குறிப்புகள் இல்லை. வெறும் அனெக்டோட்/டயரிக் குறிப்புகள் வரலாறுகளாகிவிடமாட்டா – ஆகவே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

என்ன சொல்லவருகிறேன் என்றால், க்ருஷ்ணகிரி கோரதாண்டவக் கதையாடல் டெம்ப்ளேட் கதைக்குமேல், மானேதேனே அல்லது முண்டமேதண்டமே கலந்து தர்காவாக ஆகி, உலகத்தையே உய்வித்துக் கொண்டிருக்கிறது.

கயவாளித்தனத்தைத் துப்புரவாகச் செய்யவேண்டாமா? இதைக் கூடவா செய்நேர்த்தியில்லாமல், பிடிபடாததன்மையுடனில்லாமல் செய்வார்கள், இந்தப் பதர்கள்? (நம் ஆட்கள் பொதுவாகச் செவியில்புஷ்பத்துடன் அலைவதையே விடுங்கள்!)

6

‘கல்வெட்டு’ – சான்றுகள்

1980களின் இறுதியில் நான் அம்மலையேறியபோது ஒரு பெரிய கல்வெட்டும் இல்லை. ஆனால் கோரிக்கள் இருந்தன. பச்சைத் துணிகள் போட்டுக்கொண்டு உல்லாசமாகவே இருந்தன. அங்கிருந்த ஃபக்கீர்களும் ஷேக்குகளும் பக்தர்கள் (= ‘அள்ளி முடிந்தவர்கள்’ என்றறிக!) இடம் இருந்து வசூல் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

சுமார் 2001க்குப் பின் திடுதிப்பென்று கல்வெட்டுகள் முளைத்திருக்கவேண்டும். அல்லது அதுவரை வேறேதாவது இடத்திலிருந்து, ஆகவே என் கண்ணில் படாமல் போயிருக்கலாம்; ஏனெனில் 2002ல் நான் அங்கு சென்றிருந்தபோது பளப்பளா என அவை இருந்தன.

(பிரச்சினை என்னவென்றால் – என்னிடம் அவற்றின் குறிப்புகள் மட்டுமே இருக்கின்றன, புகைப்படங்கள் இல்லை – யாராவது அன்பர்கள் இந்தக் ‘கல்வெட்டுகளை’ படம் எடுத்து அனுப்பினால் மகிழ்வேன் – பொதுவாக எனக்கிருக்கும் புகைப்படப்-பிடிப்பு அலர்ஜியிலிருந்து இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மேலெழும்ப முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்)

சந்தேகத்துக்கு இடமில்லாமல் இவை ஃபோர்ஜரிகள், அசிங்கமான மோசடிகள் – இதையெல்லாம் நம்பும் ஆசாமிகள் மறுபடியும் ரெண்டாங்க்ளாஸ் படிப்பில் இருந்து தொடங்கி இப்போதாவது, இம்முறையாவது ஒழுங்காகப் படித்தால் நலம்.

சரி; இப்போது – ஒரு பேச்சுக்கு இவை 1639ல் இங்கே வீழ்ந்த ஸூஃபிகளைக் குறிப்பதாக, அதுவும் அவை உடனடியாக அமைக்கப்பட்டதாக இருக்கலாம் என்றே வைத்துக்கொள்ளலாம். இதில் பலப்பல பிரச்சினைகள்:

1. எந்தவொரு ப்ரிட்டிஷ் ஆவணத்திலும் (இத்தனைக்கும் வெள்ளைக்காரர்கள் இக்கோட்டையில் பலகாலம் தங்கியிருந்தவர்கள், சிறுவிஷயங்களையும் ஆவணப் படுத்தியவரகள்) இந்தமாதிரி கல்வெட்டுகளோ அதற்கு முந்தைய தரவுகளாகக் குறிப்புகளோ இருந்தது போலச் சொல்லவேயில்லை.

2. பாரத, தமிழகத் தொல்லியல் துறைகளில் இக்கல்வெட்டுகள் குறித்து ஒரு சான்றுமில்லை – ஏன், ‘இருந்திருக்கலாம்’ என ஒரு சிறு குறிப்பாகக் கூட இல்லை. வெள்ளைக்காரர்களாலும் குறிப்பிடப்படவில்லை; பின்னர் தமிழகத் தொல்லியல்துறையினராலும் இது சீந்தப் படவுமில்லை. (நான் முடிந்தவரை தேடிவிட்டேன் – தமிழகத் தொல்லியல் துறை நூலகத்திலும் கூட – ஒரு சுக்கும் இல்லை)

3. அந்தக் கல்வெட்டுகள் பாலிஷ்ட் கடப்பா  / கிரனைட் / பஸால்ட் கற்களின் மீது வடிவமைக்கப் பட்டிருந்தன என நினைவு. அதுவும் அவை  நவநாகரீக வழிகளில், கருவிகளை வைத்துச் செதுக்கப் பட்டிருந்தன – உளியையும் சுத்தியையும் வைத்துக் கற்களைப் ‘பொளிந்து’ செய்யப்படவில்லை. மேலும் இந்தக் கல்வெட்டுக்கான கற்கள் அந்தப் பகுதியில் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை.

4. அந்தக் கல்வெட்டுகள் முன்னாளில் இருந்த இன்னொரு கல்வெட்டிலிருந்து நகல் எடுக்கப் பட்டிருக்கலாம் என்று பார்த்தால் – அதற்கும் மூலம் என ஒன்று இருந்ததாகவே சான்று இல்லை; திப்பு வசம் இக்கோட்டை சிலகாலம் இருந்தபோது இந்த ‘தர்காவுக்கு’  பணம்/மானியம் கொடுத்ததாக ஒரு செவிவழிச் செய்தி இருக்கிறதே ஒழிய (இந்தச் செய்தியும் வெள்ளைக்காரர்கள் 1883/1918ல் குறிப்பிட்ட படிதான்!) மற்றபடி திப்புவோ ஹைதரோ இந்த தர்காவுக்குச் சுவர் எழுப்பியதாகவோ, பாஞ்சாவுக்கோ/உருஸ்ஸுக்கோ உதவியதாகவோ சரித்திரமே இல்லை; ஆனால் செவி வழிச் செய்திகளின்படி கோட்டைச் சுவற்றினை, திப்புவின் ஃப்ரெஞ்சு ஏவலாள்/கட்டமைப்பாளர் ஒருவர் மராமத்து செய்ய முயன்றார் என 1883ல் வெள்ளைக் காரர்களால் குறிப்பிடப் பட்டிருக்கிறது. அவ்வளவுதான். (திப்பு இப்பகுதிகளில் இழுபறியில் ஊடாடிய காலம் சுமார் ஏழெட்டு வருடங்களே – 1780களின் பிற்பகுதியிலிருந்து சுமார் 1796 வரை எனக் கொள்ளலாம்.)

இப்போது கல்வெட்டுக் குறிப்புகளுக்கு வருவோம்.

5. ‘கல்வெட்டு’ தேதியின் படி: 7 மே 1639 அன்று இந்த ஸூஃபிக்கள் இங்கே வீழ்ந்ததாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஆனால், ஸுல்தானிய நவாபிய காலக் கல்வெட்டுகளின் வழமைப் படி – இவற்றுக்கு அரபிய வருட (அதாவது ஹிஜ்ரி வருட) எண்ணிக்கைதான் கொடுக்கப் பட்டிருக்கவேண்டும்;  அதாவது  மொஹர்ரம் மாதம் மூன்றாம் நாள், 1049 – ஆனால் அப்படிச் சுத்தமாக இருந்திருக்கவில்லை என்பது தான் என் நினைவு; இது ஃபோர்ஜரி.

6. இது உண்மையாக இருந்தால், கல்வெட்டில் பொறிக்கப் பட்டிருப்பவை பாரசீக/பர்ஷிய மொழியில் அலெஃப்பா-ஏ-ஃபார்ஸீ எனும் வரிவடிவத்தில் எழுதப் பட்டிருக்கவேண்டும். ஆனால், இது அரேபிய மொழியில் மட்டுமே, பாரசீகத் தாக்கமில்லாமல் எழுதப் பட்டிருக்கிறது.

6. இதிலும் ஒரு பிரச்சினை: இம்மாதிரி, ‘ஃபார்மல்’ அதிகார பூர்வமான அரேபிய மொழிக் கல்வெட்டுகள், பொதுவாக நாஷிக் வரிவடிவத்தில் இருக்கும்; பொதுவாக அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் வரிவடிவமான குஃபிக்-ல் இருக்காது. ஆனால் கல்வெட்டு எழுத்துகள் பாமர, குஃபிக் வகையில் தான் பெரும்பாலும் கலந்துகட்டி இருந்தன என நினைவு.

7. இந்தக் கல்வெட்டுகளில் திடுதிப்பென்று ஔலியா / அவுலியா ஸில்ஸிலா (ஸூஃபி பரம்பரை) எனப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்/போட்டுக் கொண்டிருந்தார்கள் – இதற்கு ஒரு தரவும் கிடையாது. இது உண்மையானால், நானே ஒரு கல்வெட்டைப் பொறிப்பேன்: “அரவிந்தன் கண்ணையன் அவர்கள்தாம், ரிச்சர்ட் ஃபைய்ன்மன் அவர்களின் ஞானமரபு வாரிசு.” ஊக்கபோனஸாக, “அஹிம்ஸைகொண்டோன் ஒத்திசை ராமசாமி, இக்கால காந்தி எனப் பெரும்புகழ் பெற்றவர்!”

…எவ்வழியில் பார்த்தாலும், இந்தக் கல்வெட்டுகளும் வரலாறுகளும் நகைக்கத்தக்க ஃபோர்ஜரிகளும் அசிங்கமான இட்டுக்கட்டல்களும் மட்டுமே!

7

இந்த ‘மஹான்கள்’ க்ருஷ்ணகிரிக்கு வந்ததாக நம்பப்படும் சமயத்தின், சமகால க்ருஷ்ணகிரி பகுதி வரலாற்று நிலவரம்

இந்தக் கல்வெட்டு + உபரிக் கதையாடல்கள் ‘குறிப்பிடுவது’ போலவே, 1639 வாக்கில் இந்த ஸூஃபி விஷயம் நடந்தது எனவேகூட வைத்துக் கொள்ளலாம் – இப்போது அக்காலச் சூழலில்,  அந்தக் கால கட்டங்களில் — க்ருஷ்ணகிரி மேல் ஒரு படையெடுப்போ, ஏன் அதனருகில் ஒரு சிறு சண்டையோ நடந்தனவா என, நமக்குக் கிடைக்கும் மைஸூர் அரசு, கடப்பா நவாபு அரசு, பிஜாபூர் ஸுல்தானிய அரசு, மராத்திய அரசு இன்னபிற வரலாற்று ஆவணங்கள் மேல், உன்னிப்பாகப் பார்க்கலாம்.

17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் (பொதுயுகம் 1601-1700) இந்த பரமஹல் பிராந்தியமும் க்ருஷ்ணகிரி துர்க்கமும் (இது விஜய நகரப் பேரரசு க்ஷீணித்துப் போனபின்னர் அந்த மன்னர்களின் அதிகாரிகளால் கட்டப்பட்டது – இதற்குச் சான்றுகளை முந்தைய பதிவில் கொடுத்திருக்கிறேன்) பிஜாபூர் ஸுல்தான் வசம் வந்தன.  இதற்கு முன் 1630 வரை இது ஜெகதேவராயரின் குடும்பத்தினருக்கும் மைஸூர் மஹாராஜாவுக்கும் இடையே அல்லாடிக் கொண்டிருந்தது.

பிறகு இந்தக் கோட்டை, பிஜாபூர் ஸுல்தானின் கீழ் பணிபுரிந்த ஷாஹாஜி (இவர் ஷிவாஜி மஹராஜின் தகப்பனார்) வசம் வந்தது; இந்த ஷாஹாஜி இறந்தபின் இக்கோட்டை, அவருடைய இன்னொரு புதல்வனான ஏகோஜி (அல்லது வ்யங்கோஜி) வசம் வந்தது – பின்னர் 1670ல் ஷிவாஜி மஹராஜிடம் சேர்ந்தது.

பிரச்சினை என்னவென்றால் – இந்த 1639 ஆண்டு சமயத்தில் இந்த க்ருஷ்ணகிரிக் கோட்டை/மலைப் பகுதியில் ஒரு யுத்தமோ அல்லது ஆறுமாதக் கணக்காக முற்றுகையோ நடக்கவில்லை. ஏனெனில், அது மராத்தியர்கள் வசம் இருந்தது.

இச்சமயம் சில விஷயங்களைக் குறிப்பிடவேண்டும்; மராத்தியர்கள் இன்றேல் இந்த அளவு ஊரக வளர்ச்சியை க்ருஷ்ணகிரி பகுதிகள் பெற்றிருக்க முடியாது; மேலும், 1790களில் ஆரம்பித்த நேரடி கம்பெனி/ப்ரிட்டிஷ் ஆட்சியின்போது க்ருஷ்ணகிரியை மேம்படுத்தியதில் (முக்கியமாக அதன் புதியபேட்டை/தௌலதாபாத்தினை உருவாக்கியதில் கம்பயநல்லூர் லக்ஷ்மண்ராவ் அவர்களின் பங்கு அதிகம்.

எது எப்படியோ, இந்தப் பார்வையில்கூட – இந்த ஸூஃபி விஷயங்கள் பீலா-டகீல்கள் எனத்தான் விரிகின்றன, பாவம்! :-(

8

பிரிட்டிஷ்/வெள்ளையர்களின் பதிவுகளிலிருந்து ‘உருஸ்’ உள்ளிட்ட விஷயங்கள் இல்லாமலிருக்கும்  விஷயம் குறித்த விவரணைகள்

பொதுவாக இந்த ‘ஸூஃபி’ ஆசாமிகள் இறந்ததாகக் கருதப்படும் தினம் எனும் வகையில் அதைக் கொண்டாடுவதற்காக(!) உர்ஸ் அல்லது உருஸ் நடக்கிறது; இதன் அரபு அர்த்தம்: திருமணம்; அதாவது அல்லாஹ்வின் மீது காதலாகிக் கசிந்துருகியிருப்பதால் ஸூஃபிகள் இறந்தபின், அல்லாஹ் ஜோதியில் திருமணம் செய்து கலப்பதாகத் தொடர் ஐதிகம். இதனைப் பெருமளவில் தர்காவின் மேலாண்மைக்கார ஷேக்குகள் சிரமேற்கொண்டு நடத்துவார்கள் – ஒரு ஊர்த் திருவிழா போல நடக்கும் – சந்தனக்கூடு, கண்காட்சி, சந்தை, வேடிக்கை அதியிது போலப் பொருளாதார விஷயங்களும் நடந்தேறும். அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி கல்லா கட்டலும்தான்.

கடந்த பல வருடங்களாக – எனக்குத் தெரிந்து சுமார் 30 வருடங்களாகவாவது இந்த உருஸ், க்ருஷ்ணகிரியில் நடக்கிறது. ஆனால் சர்வ நிச்சயமாக – இந்த உர்ஸ் விவரம் 1918 வரை அங்கு நடக்கவே இல்லை. வெள்ளைக்காரர்களின் மாவட்ட கெஸட்டீர்களில் பதிக்கப் படவேயில்லை; சமகால சாட்சியங்களோ, அறவே இல்லை. ஏன் 1920களில் நடந்த கிலாஃபத் இயக்கத்தின்போதோ, 1942-46 வரை ஏற்பட்ட சுதந்திரப் போராட்ட கெடுபிடிகளின்போதோ இது குறிப்பிடப் பட்டிருக்கவேண்டும் – ஆனால் 1946 வரைகூட, ஒரு வெள்ளைக்கார ஆவணத்திலும் இது குறித்து ஒன்றுமே இல்லை.

கெஸட்டீர்களிலுமில்லை; பரமஹல் ஆவணங்கள் எனப் பெயர்பெற்ற தலையணை ஸைஸ் புத்தகத் தொகுப்புகளிலுமில்லை. உர்ஸ்/உருஸ் பற்றி வெள்ளைக்காரர்களின் குறிப்பிடவில்லை.

ஏனெனில் வெள்ளைக்காரர்கள் இருவிஷயங்களுக்காக இம்மாதிரி மக்கள் கூடுகைகளைத் தீவிரமாகக் கண்காணித்தார்கள், ஆவணப் படுத்தினார்கள். செங்கம் மாட்டுச் சந்தை, போச்சம்பள்ளி வாராந்திர சந்தை உட்பட, சிறுகோவில் திருவிழாக்கள் உட்பட, தீர்த்தமலை கனிம வளர்ச்சி உட்பட, மொஹர்ரம் ஊர்கோலங்கள் உட்பட, கோழிச்சண்டை நடக்கும் விழாக்கள் கூடக் கவனமாக   சின்னஞ்சிறு விஷயங்களும் பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன.  அக்காரணங்களாவன:

1. எத்தையாவது மறுபடியும் ‘சுதந்திரம் வேண்டும்’ என ஆரம்பித்துவிடுவார்களோ வகை சட்டம் ஒழுங்கு குறித்த கவலைகள்,  முன்னேற்பாடுகள்

2. எப்படியெல்லாம் வரிவிதித்து (=யாத்ரீகர் வரி, சந்தை வரி/பிடிப்பு++) பணத்தை அள்ளி, லண்டன் ட்யூப் / சுரங்க ரெய்ல்வே++ போன்ற விஷயங்களைக் கட்டலாம்++

நிலைமை இப்படி இருக்கையிலே – அனேகமாக இந்த உருஸ்/திருமணப் ‘பாரம்பரியப் பழக்கம்’ நாகூர் வகையறா ‘ஸூஃபி’ தளங்களில் இருந்து காப்பியடிக்கப் பட்டிருக்கலாம். ஏனெனில் 1903-5 வாக்கில் பிறந்து நான் சந்தித்துள்ள இரு வயதானவர்கள் (இவர்களும் க்ருஷ்ணகிரியில் வசித்தவர்கள்தாம்; அங்குதான்  அவர்களுடன் 1980களின் இறுதியில் இது குறித்துப் பேசியிருக்கிறேன்) நினைவில் அவர்கள் இளம் வயதில் இந்த ‘உர்ஸ்’ கொண்டாடப் படவேயில்லை.

ஆகவே இது பின்னர் வந்த விஷயமாகத்தான் இருக்கவேண்டும். பார்க்கப்போனால் பாரத விடுதலைக்குப் பின் ஆரம்பித்த, தொழில்முறையில் உருவாக்கப்பட்ட ‘பழம் ஆன்மிகப் பாரம்பரிய’மாகத்தான் இருக்கவேண்டும்.

இவ்விஷயத்தில் மேலும் ஆர்வமிருப்பவர்கள், க்ருஷ்ணகிரி/சேலம் கலெக்டரேட்டில் தொடர்ந்து தேடலாம்; அங்கு ‘நாகா பந்தி’ போன்ற பாதுகாப்பு/போலீஸ் விவரணைகளின் படி க்ருஷ்ணகிரியில் உருஸ் நடந்ததா, அல்லது டவுன் பஞ்சாயத்து இதற்கெதாவது முனைந்ததா என  1945 முதற்கொண்டு  அகழ்வாராய்ச்சி செய்யலாம்; எப்படியும் எனக்குத் தெரிந்த அளவில் சர்வ நிச்சயமாக அதற்கு முன்னர் உருஸ் கொண்டாடப்படவில்லை. அதற்கு ஒரு தரவோ ஒப்புக்கொள்ளக் கூடிய சிறு ருசுவோ இல்லை. அப்படியே இருந்தாலும் அது 1921க்கு முன்னால் போக வாய்ப்பே இல்லை.

9

ஸூஃபி நாட்டுப்புறப் பாடல் சான்று: பராபர முண்டகப் புகழ்மாலை

நாட்டுப்புறவியல் வரலாற்றுப் பாடல்கள் என இந்த க்ருஷ்ணகிரி ஸூஃபிகளைக் குறித்துப் புகழ்ச்சியாக இருக்கிறதா, அவற்றிலாவது ஏதாவது உண்மையின் ஓளிக்கீற்றுகள் இருக்கக் கூடுமா எனப்பார்த்தால் அதுவும் ஒன்றுமில்லை. என்ன செய்வது சொல்லுங்கள்?

ஆகவே, நானே மண்டையில் அடித்துக்கொண்டு, புகழேந்திப் புலவர் அவர்கள் எழுதிய தேசிங்குராஜன் கதை ‘போல’  ஓரிரு வரிகளை எழுதியிருக்கிறேன், வேறு வழியில்லை… (மிகவும் ஸீரியஸ்ஸாக இதுவரை எழுதியிருப்பதால், இன்னமும் படு ஸீரியஸ்ஸாக இப்பகுதி எழுதப் படுகிறது.)

 • […]
 • மண்டைய வெட்டி சண்டை போடுறான் ஸூஃபி ஸையத்து
 • ரத்தம் கொட்டி ஜன்னத்தை நோக்கி பாடை தெரியுது பார்
 • டாறு டாறாய்க் கிழித்துப் போடுவான் சிற்றப்ப ஸையத்தே
 • ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு சிற்றப்ப பாஷாவே
 • பிறந்த அன்றைக்கே சாவிருக்குது காஃபிர் கூட்டங்களே
 • வந்தவ னாரென்று கேட்டுப்பாரு அவன்தான் ஜிஹாதிடா!
 • அல்லாத்துக்கும் தீர்ப்பு எதுக்கும் முடிவு ஜன்னத்துல தாண்டா
 • அல்லா பேர்ல கல்லா கட்டணும் க்ருஷ்ணகிரி ஜில்லாலயும்டா
 • எப்டீடா இதச் செய்றது ன்னிட்டு பெர்ஸ்ஸா கேக்றியாடா
 • கவலே வேண்டாம்  ஊர்ல அல்லாரும் அள்ளி முடிஞ்சவண்டா!
 • […]

இப்போதைக்கு இந்த ஸாம்பிள் போதும் என்று நினைக்கிறேன். இதிலிருக்கும் தரவுகளே போதுமல்லவா?

10

க்ருஷ்ணகிரி ‘உள்ளூர் அன்பர்களின்’  மீதமிருக்கும் கருத்துகள் குறித்த எதிர்வினைகள்++

. சையத்-பாட்சா என்ற இரு “ஸூஃபி மஹான்கள்” இங்கு அடக்கம் ஆகி இருக்கிறார்கள். அதனால் அவர்கள் பெயரால் அழைக்கப்படுவதில் எந்த பிரச்சினையும் இருக்கக் கூடாது. இதில் மதச்சார்பின்மை இருக்கிறது – ஏனெனில் அவர்களுக்கான ‘உரூஸ்’ திருவிழாவில் அனைத்து மதத்தினரும் பங்கேற்கிறார்கள்.

சையத்-பாட்சா என்ற இரு “ஸூஃபி மஹான்கள்” இங்கு அடக்கம் ஆகி இருக்கிறார்கள்.” ஒரு ஸூஃபி, மஹானாக இருக்கவேண்டிய தகுதிகள் யாவை?  குறைந்த பட்சம் கொலையிலோ வன்முறையிலோ ஈடுபட்டிருக்கக் கூடாது; ஆனால் மற்றெந்த ஸூஃபியையும் போலவே, இவர்களுடைய கதையாடல் படியேகூட, இவர்களும் தலைசீவல், ஜிஹாத், போர் செய்தவர்கள்தாம். குஃபர்களை, அதாவது இந்தக் கதையாடலில், ஹிந்துக்களை ஒழித்துக் கட்டியவர்கள்தாம். தம்மை வெட்டிக் கொன்றவன் தன் பாரம்பரியங்களை உதாசீனம் செய்தவனையெல்லாம் வழிபடும் பாமர ஹிந்துக்கள், உண்மையிலேயே மதச்சார்பற்றவர்கள் மட்டுமல்லாமல், மூளைச்சார்பினர்களல்லரும்தாம்.

மேலும் இந்த அடக்கமாகியிருக்கிறார்கள் வகை பீலா-கதையாடலுக்கெல்லாம் ஒரு சுக்குக்கும் சான்றுமில்லை; ‘சமாதி’களைத் தோண்டிப்பார்த்தால் எலும்புகளுக்கோ அதுதொடர்பாக இருக்கக்கூடும் டிஎன்ஏ வகை எழவுகளுக்கோ பதிலாக ஏதாவது பூதம் கிளம்புவதுகூட சாத்தியமே.

அதனால் அவர்கள் பெயரால் அழைக்கப்படுவதில் எந்த பிரச்சினையும் இருக்கக் கூடாது.” மாறாக, இது அசிங்கம், படுகேவலம் எனச் சொல்லவருகிறார் என நினைக்கிறேன். பொய்மையில் பிறந்து பொய்மையில் வளர்ந்துகொண்டிருக்கும் எந்த எழவுமே, மேலும் அது வன்முறை எழவாக இருக்கும்போது, அது பெரும் பிரச்சினைதாம் என்பதை எப்படி இந்த ‘மதச்சார்பின்மை’ வகை லோக்கல் க்ருஷ்ணகிரி அன்பர்கள் புரிந்து கொள்ளப்போகிறார்கள்?

இதில் மதச்சார்பின்மை இருக்கிறது – ஏனெனில் அவர்களுக்கான ‘உரூஸ்’ திருவிழாவில் அனைத்து மதத்தினரும் பங்கேற்கிறார்கள்.” இதில் என்ன மசுத்துக்கு மதச்சார்பின்மை இருக்கிறது? ஹிந்துக்களைக் காஃபிர்களாகக் கருதிக் கொன்ற கதையாடலுக்கு அப்பால் –  மேலும் கோவில்களை இல்லாமல் செய்து அல்லது அவற்றை ஆக்கிரமித்து அதன்மேல் ஸூஃபி வழக்கம்போலவே நடந்திருக்கக்கூடும் தர்கா கட்டமைப்பது – போன்ற விஷயங்கள் மதச்சார்பின்மை விஷயங்களா? அல்லது க்ருஷ்ணகிரிலோக்கல் ‘கோட்டை விற்பன்னர்,’ அவர்கள், காங்கிரஸ்/காந்தி வகை மதச்சார்பின்மை என்பது இதுதான் என்பதில் உறுதியாக இருக்கிறாரா? என்ன நகைச்சுவை இது!

ஏனெனில் அவர்களுக்கான ‘உரூஸ்’ திருவிழாவில் அனைத்து மதத்தினரும் பங்கேற்கிறார்கள்” என்ன உளறல் இது? திராவிடக் கட்சிகள் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் கொள்ளைத் திருவிழாக்களில் அனைத்து மதத்தினரும், (+ஏறத்தாழ அனைத்து ஜாதியினரும்) பல மாமாங்கங்களாகப் ‘பங்கேற்கிறார்கள்.’  ஆகவே ‘அயோக்கியக் கொள்ளை’ என்பது மதச்சார்பின்மையற்றது + சமூக நீதிக்கு அடிகோலுகிறது எனச் சொல்லிவிடுவாரோ? பயமாக இருக்கிறதே!

மூதாதையர்கள் கேவலப்படுத்தப்பட்ட கதையாடல்களையா கொண்டாடுவார்கள். (ஆனால், பாரதத்தில் அனைத்துக்கும் சுதந்திரமிருக்கிறது என்பதை நினைவில் கொள்கிறேன்!)

: “குழந்தைகள் எதையாவது கண்டு பயந்தால் இந்த மலை மேல் இருக்கும் தர்காவுக்கு அழைத்துச் சென்று மந்திரித்த கயிற்றை கட்டுவார்கள். இதில் இந்துக்கள் அதிகம் உண்டு. அதே போல இந்த மலை அடிவாரத்தில் உள்ள கோட்டை மசூதியில் சிறு வயதில் எனக்கு காய்ச்சல் வந்த போதெல்லாம் அம்மா என்னை அங்கே கூட்டிச் செல்வாள். தொழுகை முடிந்து வரும் முல்லாக்கள் மந்திரம் ஓதி முகத்தில் ஓதி தண்ணீர் தெளிப்பார்கள். அது இன்றும் உண்டு”

பல நம்பிக்கையின் பாற்பட்ட விஷயங்கள், ப்ளேஸிபொக்களே.  உப்புக்குச் சப்பாணி விஷயங்களே. இதை ஒப்புக்கொள்ள முடியாவிட்டாலும் தாராளமாகப் புரிந்துகொள்ளலாம். இதற்கு ஹோமியொபதி ஒரு எடுத்துக்காட்டு. அதாவது நேரடியாக ஒரு சுக்குக்கும் பலனில்லை என்றாலும், அறிவியலுக்கும் அதற்கும் ஒரு தொடர்புமில்லை என்றாலும் – ‘காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது’ அல்லது ‘ஒன்றுக்கொன்று தொடர்பற்ற விஷயங்களை நம் மூளைப் பற்றாக்குறை காரணமாகத் தொடர்புகொண்டிருப்பதாக நினைத்தல்’ வழியாக இவற்றை வெகுசுளுவாகவும் காத்திரமாகவும் விளக்கலாம், விளங்கியும் கொள்ளலாம்.

பொதுவாக நம் மக்கள், நம்மைப் போன்ற பாமரர்கள், நல்லெண்ணம் கொண்டவர்கள், அடிப்படையில் வெகுளிகள், பிரச்சினைகள் வந்தால் ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என அல்லாடுபவர்கள் (அதனால்தானோ என்னவோ சிலசமயம் அல்லாஹ்டியும் விடுகிறார்களோ, பாவம்?)

…ஆகவே, முடிந்தவரை பெருஞ்செலவு செய்யாமல், அலையாமல், காக்கை-பனம்பழம் சார்ந்தே ஒரு விஷயம் ஆகும் என்றால் அதன் பக்கம் செல்வார்கள். அதுவும் ‘ஸாது’ அல்லது ‘மெய்ப்பொருள் காண்பவர்’ அல்லது ‘ஞானி’ என ஒரு பிம்பம் இருந்தால், அங்கு கண்டிப்பாகச் செல்வார்கள். (உலகளாவிய விஷயம்தான் இது – ஆனால் ஹிந்துக்களுக்கு இயல்பாகவே, தர்ம ஸாஸ்திரங்களின், சனாதனப் பாரம்பரியத்தின் காரணமாக ஸாதுக்களிடம் ஒரு மரியாதை இருக்கிறது. பாரதத்தின் நெடும் பாரம்பரியங்களில் –  ஏமாற்றுவேலை/செயற்கை சாமியார்கள் மிகமிகக் குறைவு – ஆனால் நம்முடைய தற்கால வீழ்ச்சியானது ‘ஷீரடி ஸாய்பாபா’ ஆசாமியிடம் இருந்து தொடங்குகிறது எனலாம் (இந்த ஆசாமி பற்றி, முடிந்தால் பின்னொரு சமயம் பார்க்கலாம்); ஆனால், இக்காலங்களிலும் நம்மால் பொதுவாக ஒப்புக்கொள்ளக்கூடிய ஆசார்யர்கள் இருக்கிறார்கள் என்பதையும் நான் அறிந்துள்ளேன்)

எது எப்படியோ – பாரத மக்களின் இந்த மரியாதைக்குரிய அணுகுமுறை காரணமாகத்தான், இங்குதான் காவி உடை அணிந்த (ஊரை ஏமாற்றும்) க்றிஸ்தவ சாமியார்கள் இருக்கிறார்கள், இருந்தார்கள். ‘அன்னை’ தெரிஸா போன்ற அப்பட்டமான மதவெறியர்கள் எப்படி மங்கோலியாவிலோ இந்தோனேஷியாவிலோ வெனிஸுவேலாவிலோ செய்யமுடியாத விஷயங்களை இங்கு செய்யமுடிந்தது – அது பாரதமக்களுக்கு இயல்பாக இருக்கும் மரியாதையும் பண்பினாலும்தான்.

இந்த ஒரு காரணத்தினாலேயே உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு பாரதத்தில் தான் நிறைய ஸூஃபி ஜீபூம்பாக்கள் அதிகமாக இருந்திருக்கிறார்கள். அதுவும் பலர் இரான், இராக், ஸிரியா போன்ற தொலைதூரப் பிரதேசங்களிலிருந்து ஹிந்துக்களை உய்விக்க, ஒரு கையில் வீச்சரிவாளுடனும் இன்னொரு கையில் கொர்-ஆனுடனும் வந்தவர்கள். ஆனால் பிம்பம் என்னவோ, ‘ஸாது’ வகை ஆன்மிக வாதிகள். ஆனால் இடித்ததெல்லாம் ஹிந்து கோவில்கள். இருந்தாலும் இவர்களுக்கும் மரியாதை. போலி ஆன்மிக போதை.

வேறெந்த உலகப் பகுதிகளில் இம்மாதிரி ஃபேக்/அப்ரஹாமிய சாமியார்கள், இந்த அளவில் செறிவுடன் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள் – சொல்லுங்கள்?

இருந்தாலும் பாமர மக்களாகிய நமக்கு இவர்கள் பேரில் ஒரு மரியாதை – ஏன் படித்தவர்களுக்குமேகூட ‘சாமியார்’ அதுவும் விசித்திர சாமியார் என்றால் ஒரு மரியாதை.. ஏனெனில் பாமரர்களாகிய நாம், ரிஷிமூலம் நதிமூலம் எனப் பார்த்துக்கொண்டிருப்பதில்லை. நமக்கு நினைவும் இருப்பதில்லை, வரலாற்றறிவும் இல்லை. அதிதி தேவோ பவ. ‘பெரியவர்களுக்கு’ – பிற மார்க்கங்களுக்கு (அவை நம் மார்க்கத்தை வெறுத்தாலும், ஒழிக்க முயன்று கொண்டிருந்தாலும்கூட) மரியாதையும் அரவணைப்பையும் கொடுக்கவேண்டும். போதாக் குறைக்கு – கொலைகாரர்களையும் கொள்ளைக்காரர்களையும் இனம் கண்டு நமக்கு ஒன்றும் ஆகவேண்டியதில்லை – ஏனெனில் நான்-என் குடும்பம் என உழல்வதற்கே நேரம் போதவில்லையே ஸ்வாமின்! ஆகவே, ‘நீயும் நானும் ஒண்ணு’ என ஒருவன் தாடிவுட்டுக்கொண்டு சொன்னால்… நமக்கு நெக்குருகி விடும். தடால் என்று காலடியில் சரண்!

ஆக குழந்தைகள் பயந்தால், அவர்களுக்கு அந்தப் பயத்தைப் போக்க, விளக்கத் தெம்பில்லையென்றால், காக்கை-பனம்பழம் என நம் சகோதரப் பாமரர்கள் செய்வது இயற்கையே. குழந்தைக்கும், ‘ஏதோ செய்கிறார்கள், நமக்கு இனி பயம் ஏன்!’ என நினைத்து, நரா ஈ-தக்பீர், லா இல்லாஹா இல்லல்லாஹூ மொஹெம்மத் அர்-ரஸுலுல்லாஹ்.  அல்லது, பரமண்டலத்திருக்கின்ற எம் பரமபிதாவே. நன்றி.

மற்றபடி, ‘முல்லாக்கள் தண்ணீர் தெளிப்பது’ எல்லாம் ஷிர்க். கொர்-ஆனுடன் ஒத்துவரவே வராத மூட நம்பிக்கை.

இறை தூதர் மொஹெம்மத்துக்கு இது சர்வ நிச்சயமாக எதிரானது – ஏனெனில் அவர் செய்தது பிற முஸ்லீம்கள் மேல் துப்பியது, பிறர் உண்ணும் உணவில் தம் எச்சிலை உமிழ்ந்தது போன்றவைதான். வெறும் நீர் தெளிப்பவை அல்ல. அதற்கான இஸ்லாமிய வரலாறுகளில் இருந்தே காத்திரமாக சான்றுகள் இருக்கின்றன: https://twitter.com/othisaivu/status/1247389357566095361 (இவற்றை இன்னொரு சமயம் தமிழ்-படுத்திக் கொடுக்கிறேன்)

ஆனால் – இந்த ஸையத்-பாஷா கல்லாகட்டும் முல்லாக்கள், அவர்களைத் தேடிவரும் பாமரர்களின்மீது துப்பாமல் வெறும் ‘புனித’ நீர்தெளிப்பு மட்டும் செய்கிறார்கள். இது கண்டிப்பாக இஸ்லாம் அல்ல.

ஆகவே, உடனடியாக ஜவாஹிருல்லாஹ், வெடிகுண்டு மதானி, திருமாவளவன், சீமான், இசுடாலிர் போன்ற ஜிஹாதிகளிடம் அந்த அயோக்கிய அமார்க்க முல்லாக்களின் ஷிர்க்குகள் குறித்து எடுத்துச்சொல்லி அவர்களுக்கு ரெண்டு அன்பளிப்புகளைச் சாத்தினால், பிரச்சினை தீர்ந்துவிடும்.

: “பழையபேட்டையில் வசிக்கும் பல பிராமணர்களும் இந்த மசூதிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று முல்லாவிடம் நீர் தெளித்து வருவார்கள்.”

இதில் தொக்கி நிற்பது: “பிராமணர்களே இவ்விஷயத்தைச் செய்கிறார்கள், நீங்கள் யார் இந்த மதச்சார்பின்மையைக் கேள்வி கேட்பதற்கு?” சிரிப்புத்தான் வருகுதய்யா!

‘கோட்டைத்துறை வல்லுநர்’ அன்பர் யதார்த்த பெண்ணேஸ்வரன் சொல்லியிருப்பதைப் படிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், இந்தமாதிரி பழையபேட்டையினர் செய்வதால் நான் பிராம்மண எதிர்ப்பாளனாக மாறிவிடமாட்டேன், கவலை வேண்டேல்.

ஒரு விஷயம்: இடஒதுக்கீடு விஷயத்தில் மற்ற ஜாதியினர் போலவே, பிராம்மண ஜாதியினர்களும் மாளா நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதாவது: உள் ஒதுக்கீடுகள் பிற ஜாதியினர் போலவேதான்.

எடுத்துக்காட்டு உள் ஒதுக்கீடுகள்: (இந்த விகிதாச்சாரங்கள் பொதுவாகவே அனைத்து மத-ஜாதியினருக்கும், மக்கட் திரளினருக்கும் பொருந்தும்; என்ன, ஒவ்வொரு திரளினரின் குணாதிசியங்கட்குட்பட்டு முன்னேபின்னே இருக்கலாம், அவ்வளவுதான்!)

சராசரி (Slow CPU) பெருமக்கள்: சுமார் 30% – இதில் அந்த க்ருஷ்ணகிரி பழையபேட்டை முல்லா தண்ணீர்தெளித்துக்கொள்ளும் அப்பாவிகளுக்கும் உள் ஒதுக்கீடு இருக்கிறது. வாயில் கட்டைவிரலை நுழைத்துச் சூப்பிக்கொண்டு ‘த ஹிந்து’ படிப்பவர்களுக்கும், ‘பாரம்பரிய காங்கிரஸ் வாக்காளர்’களும் இதில் அடக்கம். (பகிரங்கமாகச் சொல்லிக் கொள்வதற்கு வெட்கமாக இருந்தாலும் – என் குடும்பக் குழுவில் பலர் இப்படித்தான்… நானும் ஒருகாலத்தில் என் இளம்வயதில், கம்யூனிஸ்ம் காந்தியம்  தமிழலக்கியம் என நெக்குருகி ஒர்ரேயடியாக செவியைப் புஷ்பத்தால் அலங்கரித்துக்கொண்டு விரல்சூப்பிக் கொண்டிருந்தவன்தான், நல்லவேளை இடதுகைக் கட்டைவிரலாவது இன்னமும் மிச்சம் இருப்பதற்கு யாருக்கு நன்றி சொல்வது எனத் தெரியவில்லை!)

கடைந்தெடுத்த அயோக்கியர்கள், கருத்துலகக் கருமாந்திரங்கள்: சுமார் 5% – இதில் உள் ஒதுக்கீடு என்பது இடதுசாரி-லிபரல்களுக்கு (டிஎம்க்ருஷ்ணா, என்ராம், ஸித்தார்த்வரதராஜன், மாலினிசேஷாத்ரி++), நேருவிய ஸோஷலிஸ வியாபாரிகள் (பறவையரசர்? ++), திராவிட மடப்பள்ளி ஊழியர்கள் (ராஜன்குறை க்ருஷ்ணன், பெருந்தேவி++), வெட்கங்கெட்ட திருடர்கள் (பாலச்சந்தர், மணிரத்னம், கமலகாசன்++) … …

ஆக – என்னைப் பொறுத்தவரை சராசரிகளோடு சராசரியாக, அந்தப் பாமர பிராஹ்மணர்கள் இந்த எழவைச் செய்கிறார்கள். இது பெரிய விஷயமே இல்லை.

இந்த அற்ப விஷயத்தால் – அந்தப் புனைகதை ஸூஃபிகள் மஹான்களாகவோ, ப்ளேஸிபொக்கள் காத்திரமிக்க மருந்துகளாகவோ, கொலைகார மதமாற்றிகள் ஆன்மிகவாதிகளாகவோ மாறிவிடமாட்டார்கள். மன்னிக்கவும்.

11

முடிவாக, சில வார்த்தைகளும் கோரிக்கைகளும்

நம்பிக்கைகளைக் கிண்டல் செய்வது – திராவிடப் பகுத்தறிவு தர, விடலைத்தனமானது.

எனக்குத் தனிப்பட்ட மானுடச் செயல்பாடுகளில் (ஏன் சமூகச் செயல்பாடுகளிலுமேகூட), நம்பிக்கைவெளிகளில், பாரம்பரியங்களில் குற்றம்காண்பது நொள்ளை சொல்வது  பொதுவாக ஒத்துவருவதில்லை – அம்மாதிரி நம்பிக்கைகள் சிலசமயங்களில் ஆசார்யர்களிடமிருந்தும், குருக்களிடமிருந்தும் வந்தவையாக இருந்தால்கூட – நாமெல்லாம் மானுடர்கள்தாமே என, என் அல்லாடும்/படபடக்கும் மனத்தை லூஸ்லவுடப் பழக்கிக்கொண்டிருக்கிறேன்.

…ஆனால் – அம்மாதிரி நம்பிக்கைகளின் / நடவடிக்கைகளின் ஊற்றுக்கண்கள் விசாலமானவையா, அடிப்படை நல்லெண்ணமும் அறச்சார்பும் கொண்டவையா, மானுடமேன்மைக்கும் இட்டுச் செல்பவையா, சமூக இணக்கத்துக்கு வழிவகுப்பவையா எனப் பார்க்கிறேன்; பலசமயங்களில் இது சரியாகப் படுகிறது – ஆனால் சிலசமயங்களில் மாளாவருத்தமாகிவிடுகிறது; பொதுவாகவே இந்த ஸூஃபி கதையாடல்கள் அயோக்கியத்தனங்கள் + நாம் புல்லரிப்புசார் முட்டாட்கள் – அவ்வளவுதான்.அதனால் இந்த விமர்சனங்கள்/கருத்துகள்.

என் தாழ்மையான கோரிக்கைகள் என்னவென்றால்:

 1. நம் வரலாறுகளை நாம் முடிந்த அளவு அறிந்துகொள்ளவேண்டும் – தேசிய மையநீரோட்டப் பாரம்பரியங்களையும்  சுற்றுவட்டார வரலாறுகளையும் முடிந்தவரை ஐயம்திரிபறக் கற்றுக்கொள்ளவேண்டும் – வெட்டிப் புல்லரிப்புகளையோ கயமைப் பரப்புரைகளையோ விட்டேற்றி அட்ச்சிவுடல்களையோ அல்ல; மேலதிகத் தரவுகள் கிடைக்கும்போது அவற்றை உபயோகப்படுத்தி நாம் அறிந்தவைகளை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் – நம் தர்க்கரீதியற்ற கொள்கைகளுக்கு முட்டுக் கொடுக்க அல்ல. நம் மனம் விசாலமாக இருக்கவேண்டும். (அவர் என் தாய்வழி மூதாதையர்களில் ஒருவர், பாவம் – இந்தக் கட்டுரையில் விழுந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்)
 2. வரலாறு என்பது ‘தமிழ் சினிமா விமர்சனம்’ எழுதுவது போன்ற விஷயமோ அல்லது தமிழலக்கியமோ அல்ல. பலவிஷயங்களில் அது நம் முன்னெடுப்புகளை நிர்ணயம் செய்யும் பராக்கிரமம் மிக்கதால், அதனைக் கவனமாக அணுகவேண்டும், கையாளவேண்டும். விட்டேறியாகவோ அட்ச்சிவுட்டோ எழுதினால், உளறிக்கொட்டினால் நகைப்புக்கு இடமாவோம்.
 3. வரலாறு வெறும் தகவல்பூர்வமான விவரங்களை மட்டும் தருவதல்ல – மாறாக நம் தற்கால நிலவரங்களின் ஊற்றுக் கண்களை – அவை நேரிடையோ எதிர்மறையோ – காண்பிக்கிறது; சுமார் 1200 ஆண்டுகளாக (அப்படியும் இப்படியும்) விதம்விதமான காலனியாதிக்கச் சூழல்களின் இடிபாடுகளை மீறி புனர்ஜன்மம் எடுக்க அது உதவுகிறது. அதே சமயம் சமனத்தையும் தருகிறது, ஓரளவுக்கு. பொய்மைகளையும் பிரச்சாரங்களையும் எதிர்கொள்ள வகையும் செய்கிறது. ஆகவே விவரங்களும் விவரணைகளும் முக்கியம்.
 4. நமக்கு ஒரு விஷயம் (அல்லது பலவிஷயங்கள்) தெரியவில்லை என்றால் அது ஒரு பஞ்சமாபாதகம் அல்ல. எல்லா விஷயங்களிலும், அதுவும் ஒரு சுக்கு கூட அறிந்திராத விஷயங்கள் குறித்தும் கருத்துச் சொல்வது, சொல்லியே தீர்வது என ஆர்வத்துடனும்,  மனதாறவும் அட்ச்சிவுடுவது அறமற்ற விஷயமல்ல. (நம் அனைவருக்கும் கற்றுக்கொள்ள, தெளிவடைய பலப்பல விஷயங்கள் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்) – ஒரு விஷயம் நமக்குப் பிடிபடவில்லை அல்லது புரியவில்லை என ஒப்புக்கொள்வதில், அவ்விஷயத்தை நன்கு அறிந்தவர்களிடம் இருந்து நமக்குத் தெரியாதவற்றைக் கற்றுக் கொள்வதில் என்ன பிரச்சினை இருக்கமுடியும், சொல்லுங்கள்?
 5. விஷயங்களைத் திரிப்பது – ஒரு விஷயம் பற்றித் தெரிந்திருந்தும் ‘அது அப்படியல்ல, இப்படி’ எனத் திரிப்பது என்பது பொதுவாக ராமச்சந்திரகுஹா, ரிச்சர்ட்ஈடன், அமர்த்யாஷென், ரொமிளாதாபர்++  (வருந்தத்தக்க விதத்தில் நம்மூர் ஜெயமோகன் கூட) போன்றவர்கள் செயலூக்கத்துடன் செய்வது. இம்மாதிரி விஷயங்களைச் செய்து நம்மையும் நாம் தாழ்த்திக்கொள்ளவேண்டிய அவசியமேயில்லை. இந்த ஸூஃபி விஷயங்கள் பெரும்பாலும் அக்மார்க் அயோக்கியத்தனங்கள் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.

நமக்கு ஒரு ஜெயமோகன் அல்லது ஒரு அரவிந்தன்கண்ணையன் போன்றவர்கள் போதமாட்டார்களா என்ன? எதற்கு அவர்கள் படையை விஸ்தரிக்கவேண்டும்?? இருக்கும் கோமாளி/கேப்மாறித்தனங்கள் அரைவேக்காட்டு அணுகுமுறைகள் போதாமோ?

அவ்வளவுதான். நன்றி!

-0-0-0-0-0-

பின்குறிப்பு: இப்பதிவுகள் என்னால் எப்போதோ எழுதியிருக்கப் படவேண்டியவை; ஆனால் ஆங்கிலத்திலா தமிழிலா – இத்தைப் பற்றி எழுதலாமா, அத்தைப் பற்றி எழுதலாமா – இப்போது எழுதலாமா அல்லது பின்னர்(!) பார்த்துக்கொள்ளலாமா – குறைந்த பட்சம் தமிழகம் சார்ந்த ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அல்லது புளுகப் பட்ட தர்காக்களையும், கோவில்களை இடித்துக் கட்டப்பட்ட மஸுதிகளையும் குறித்து எதிர்காலத்தில் பதிவு செய்ய நினைக்கும்போது எழுதலாமே, இப்போது என்ன அவசரம் – எழுதலாமா அல்லது வேறு  வுருப்படியா ஆவுறவேலயப் பார்க்கலாமா – என்று சுணங்கிக் கொண்டிருந்தபோதுதான்…

…நண்பர் ஜடாயு அவர்களின் க்ருஷ்ணகிரி Vs ஸையத்பாஷா சிறுகுறிப்பைப் பார்க்க நேர்ந்தது.  அவருக்கும், இந்த எதிர்வினைக்குக் காரணமாக இருந்த அன்பர்கள் சுரேஷ் வெங்கடாத்ரி, யதார்த்த பெண்ணேஸ்வரன், அமுதமொழி அவர்களுக்கும் என் நன்றி.

+ இந்த எதிர்வினைகளைப் பொறுமையாகப் படித்திருக்கும்  / படிக்கப்போகும் – அதிகபட்சம் சுமார் 10 பேர்களுக்கும்.

கடைசியில் ஒரு கேள்வி: க்ருஷ்ணகிரி மலை என்பது ஸையத்-பாஷா மலை எனத்தான் அழைக்கப் படவேண்டுமா?

முஸ்லீம்கள் பார்வையில் பார்த்தால் அப்படிச் செய்வது பொய்மை. அல்லாஹ் ஒப்புக்கொள்ள மாட்டார்.

ஹிந்துக்கள் பார்வையிலும் அது சரியில்லை – அவர்கள் ஒழித்துக் கட்டப்பட்டது போன்ற ஒரு கதையாடலை அவர்களே தூக்கிப் பிடிக்கவேண்டிய அவசியம்தானென்ன…

கேள்விகள், கேள்விகள்

37 Responses to “க்ருஷ்ணகிரி மலையின் ‘ஸூஃபி ஸையத்-பாஷா’ வரலாறுகள் – நகைக்கத்தக்க பரப்புரைகளும் தரவுபூர்வமான குறிப்புகளும்”


 1. ட்விட்டரில்/ஃபேஸ்புக்கில் எங்கேயோ இருந்து இந்த ஃபோர்ஜரி/டுபாக்குர் கல்வெட்டுகளின் படத்தை வெட்டியொட்டி அனுப்பியிருக்கிறார், பெயர் குறிப்பிட விரும்பா பெருந்தகையொருவர்: :-(

  (ஏறத்தாழ  இவைபோன்றவைகளைத்தான் நான் பார்த்ததாக நினைவு – எது எப்படியோ இவற்றில் அந்தப் பொய் பெயர்களும் – அதுவும் நமக்கு உதவியாக ஆங்கிலத்தில் பொழிப்புரையுடனும் + இட்டுக்கட்டப் பட்ட தேதிகளும் இருப்பதைக் கவனியுங்கள்!)

 2. KMuthuramakrishnan Says:

  முழுவதையும் படித்தேன்.உண்மையில் இவ்வளவு தரவுகளையும் திரட்டியுள்ளது ஆச்சரியமே. பாராட்டுக்கள்.

  எல்லா ஊர்களிலுமே இதுபோன்ற சமாதிகள் (தர்ஹா) ஒன்றோ இரண்டோ உள்ளன.தஞ்சையிலும் இரட்டைமஸ்தான் என்று ஊரின் நடுவில் ஒரு சமாதியுள்ளது. அங்கும் நமது மக்கள் சென்று மயிற்பீலியால் தடவி பாடம் போட்டுக்கொண்டு வருகின்ற‌னர். எல்லாம் நம்பிக்கை. வஹாபிகள் இந்த தர்ஹா வழிபாட்டைக் கண்டிக்கின்றனர்.

  “ஊக்கபோனஸாக, “அஹிம்ஸைகொண்டோன் ஒத்திசை ராமசாமி, இக்கால காந்தி எனப் பெரும்புகழ் பெற்றவர்!”‍‍‍=== இதை நான் வழிமொழிகிறேன்.


  • 🙏🏿🙄🐸

   உங்கள் தஞ்சாவூர் நாயக்க மன்னர்கள்  (1676-1855), ஜிஹாதி விஷயங்களில் வெகுளிகள்; மாய்ந்து மாய்ந்து மானியம்மானியமாக மாமாங்கங்கள் மாமாங்கங்களாக மஸுதிகளுக்கும் தர்காக்களுக்கும் கொடுத்திருக்கிறார்கள். 

   கட்டுமானங்கள் (நாகூர் தர்காவின் பல கட்டிடங்கள், கோபுரம் உட்பட), பலப்பல கிராமங்களிலிருந்து வரிகள் நேரடியாக அந்த மஸுதி/தர்காவுக்குச் செல்வது என அந்த வினைகள், இப்போது அறுவடையாகிக்கொண்டிருக்கின்றன.

 3. arampesu Says:

  தரவுகள் ஹாஸ்யம் விவரணை மற்றும் நல்ல விளக்கங்கள் கொண்டு அருமையாக எழுதியுள்ளீர்கள்.

  நன்றி மற்றும் வாழ்த்துகள் !


  • 🙏🏿 நன்றி!

   ஆனால் பாவம், நீங்கள்தாம் (+1) கடைசி வரை படிக்கவும் படித்துப் பின்னூட்டமும்… 

   பொலிக!

 4. Em Says:

  Ram,

  Very well-written article(s). Sanjay Dixitji of Jaipur Dialogues had a short video where he says that according to Islamic scriptures (from the Quran and/or Hadith) Sufis have to be buried only in Islamic burial grounds. Therefore all these Sufi Dargahs including famous ones are mostly fake. He also notes how some dargahs stand in the middle of the road, on some railway platform, on a bridge etc. They are successful attempts at illegal land grabbing (following the encroach, occupy and regularise tactic) and establishing a business in and around that Dargah.
  Anyone interested can watch it here.

  P.S. If you write songs and become successful in the movie/music industry, what will happen to us 71/2s ?


  • Thanks for your kindness – I haven’t watched the video, will do – but before that:

   1. Sufi-dom actually came into prominence only in 12 th Century CE or thereabouts.

   2. During the life-time of Mohammed (if he had actually lived) he was very cruel to other ‘enlightened’ people (also) and actually ordered for the killing of one of his competitors. And during the initial calphate years of the first five ones, it was rather difficult for ANYONE to go beyond the tents of Islam/Mohammed so-called. So there was NO sufidom in those days. But there is a lot of propaganda to the contrary, of course.

   3. So there is no chance for any specific prescriptions for ‘Sufi’ life/burial etc in Islam – at least during those contemporary times.

   4. But Sufis ARE practicing Muslims. Even as per their so-called ‘unity with godhead’ wahdat-ul wujood, their only GOD is Allah. Bigots as usual. So for their burials, they are treated like the other Muslims – so specific muslim burial grounds.

   5. In the case of Bharat, most Sufis actually occupied existing temples  or intentionally destroyed temples (like Natharwali in Tiruchi , on Madurai Road- which is actually built on a Siva temple) and were buried there. They have actually converted the temples to an Islamic burial ground, but kinda exclusive ones, that’s all.

   6. Yes. They are land grabbers, temple grabbers – and their legacy continues to this day.

   7. Hindus do not seem to be learning ANY lesson – they flock to these ‘shrines’ so-called.

   Anyway…

 5. Em Says:

  It’s not 71/2, read as 7 and 1/2

 6. Yoga Says:

  எங்களை போன்ற,சரியான வரலாறு போதிக்கப்படாத, தெரியாத தலைமுறைகளுக்கு மிக முக்கியமான ஆவணம் போன்றது.ஜடாயு ஜி, முகநூல் பதிவிலிருந்தே இந்த பக்கத்தை பற்றி அறிந்து கொண்டேன். அவருக்கும் என் நன்றி!


  • 🙏🏿 ஐயா நன்றி.

   ஆனால் பலப்பல தலைமுறைகளாகவே நமக்கு வரலாறு(ம்) போதிக்கப்படவில்லை – வேறு முக்கியமான விஷயங்களும்தான்.

   ஆனால், உங்களைப் போன்ற, கற்றுக்கொள்ளும் முனைப்புள்ள இளைஞர்களால் பாரதம் மேலெழும்பும் ஆகவே நம் தமிழகமும் — என்பதில் எனக்கு ஐயமே இல்லை.

 7. R Sreedhar Says:

  Thanks for writing this sir. If so, much history could be distorted about a hill in a small town, how much-distorted history we are still reading :(
  It is also sad that people are not interested in knowing the truth but want to keep fake secularism alive.


  • 🙏🏿 My pleasure and also my depression.

   The thing is, there is a double whammy – things that have been projected to be great are oh so hollow; and the things for which the bharatiya civilization gets blamed for, are also hollow – of course there are some exceptions for the both cases.

   However, I find that this ‘social media’ has actually democratized the access to information – earlier, these kinds of ‘debunking’ or taking myths ‘to the cleaners’ were impossible. So I am actually very thankful for the ability afforded to access sahrudhayas, though not many people may even begin to read these kinds of longform essays.

   But, the fact is that, for any one who is interested – this stuff is there. Information that is supported by solid evidence, and hopefully articulated reasonably fine.

   I hope to continue to do whatever I meaningfully can, let us see. 💪🏿

 8. RC Says:

  நன்றி ஐயா.அருமையான பதிவு.
  சில சந்தேகங்கள்:
  1) ‘Softer Islam’அல்லது தங்கள் வேர்கள் (ஆப்கானிஸ்தான்) விட்டு இந்திய நிலத்தில் ‘state formation’க்கான தேவையென அந்நாளைய ஆட்சியாளர்களுக்கு Sufism இருந்திருக்கமுடியாதா?
  2) Islam கனிந்த ஞானிகளை, அது உருவாகி அல்லது முதலில் பரவிய மத்திய கிழக்கு பகுதிகளில் உருவாக்கியிருக்க வாய்ப்பேயில்லை என்று facts based நீங்கள் சொல்ல வருகிறீர்களா? குணங்குடி மஸ்தான் சாகிபு பற்றிய தங்கள் பின்னூட்டத்தால் வந்த சந்தேகம்.
  3) தமிழ் பேசும் முஸ்லீம் வணிகர்கள் நாகூர் ஆண்டவரை தாங்கள் சென்ற இடங்களில் (eg.singapore) வணங்க தர்கா அமைத்ததை எவ்வகையில் பார்க்கிறீர்கள்?
  4) தங்கள் பதிவு fact based என்பதை முழுமனதோடு ஏற்பினும், மனிதனின் அடிப்படை ஆன்மீக உணர்ச்சியை நம்பாத நாஸ்திகத்திற்கு தூபம் போடுவது போல் தோன்றுகிறது(என்னுடைய புரிதல் குறைவு இருக்க வாய்ப்புண்டு), தங்களுடைய approach கைக்கொண்டால் எந்த மத செயல்பாடுகளும் தப்ப வாய்ப்பில்லை தானே? தவறெனில் திருத்தவும்.
  5) தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில்,முஸ்லீம் படையெடுப்புகளில் 4 கோவில்கள் (மதுரை,சிதம்பரம்,காஞ்சி,பூந்தமல்லி) மட்டுமே எனப்படித்தேன் சிலகாலம் முன்பு. ( Source கிடைக்கவில்லை மன்னிக்க..) நீங்கள் விரிக்கும் சித்திரத்தை விடுத்து (கிருஷ்ணகிரி,பண்ருட்டி சிறு நகர தர்கா) விளிம்புநிலையிலுள்ள சமூகத்தின் வயிற்றுப்பாட்டுக்கான முயற்சி என்ற நோக்கில் பார்ப்பது சரியென நினைப்பது secular/left(derogatory sense) எனச்சொல்வீர்களா?

  தங்கள் நேரத்திற்கு நன்றி.


  • 🙏🏿 ஐயா, நல்ல ‘தூண்டில்’ கேள்விகள் – சிலவற்றை விரிக்கலாம்கூட.

   ஆனால்,  சில விஷயங்களைத் தொகுத்து, பிறகு எனக்குத் தெரிந்த அளவில் பதிலளிக்கிறேன். நன்றி.

   (இஸ்லாமிய ஜிஹாதிக் கொள்ளைகளையே விடுங்கள்! ஆனால் உங்கள் ஜாபிதாவுக்கு மேலாக – திருவண்ணாமலை அருணாசலா, ஸ்ரீரங்கம், ஜலகண்டேஸ்வரர் உட்பட பலப்பல கோவில்கள் இடிக்கப்பட்டன, சேதப்படுத்தப் பட்டன  – என்னிடம் ஸீதாராம் கோயல் அவர்களுடைய முக்கியமான கோவிலுடைப்பு ஜாபிதாவுக்கும் அப்பால் ஒரு சொந்த ஜாபிதா இருக்கிறது;  குறைந்த பட்சம் சுமார் 160க்கும் மேல் பெரியதும் சிறியதுமான கோவில்கள் அவற்றில் அடக்கம் என நினைவு – பூந்தமல்லி மஸூதி இடிப்பு ஒப்பு நோக்க சிறுவிஷயம் என்றாலும், அது பற்றித் தனிப்பதிவு எழுதவேண்டும் எனச் சென்ற 5 ஆண்டுகளாக வரைவு நிலையிலேயே ஒரு நீளப் பதிவு இருக்கிறது; சில முறை அங்கே சென்று தகவல்களையும் சேகரித்தேன்…

   இதைத் தவிர க்றிஸ்தவர்கள் இடித்தவைகள், அதன்மேல் கட்டிய கட்டிடங்கள்/சர்ச்கள் என இருக்கின்றன – சென்னை ‘ஸான்தோம்’  அயோக்கியத்தனத்தையே விடுங்கள் – நாகப்பட்டினத்தில் புத்தவிஹாரத்தை இடித்து அதற்குமேல் ஒரு சர்ச்/கல்லூரியைக் கட்டியதும், டச்சுக்காரர்களும் (+அவர்கள் பாதிரிகளும்) சேர்ந்து திருச்செந்தூர் முருகர் கோவிலைத் த்வம்சம் செய்தது, அதன் மூலவரை ஸ்ரீலங்காவுக்குக் கடத்திச் சென்றது எல்லாம் நடந்தது… இப்படிப் பலப்பல சோகக் கதைகள்.
   ஆனால் தமிழகம் இவ்விஷயங்களில், ஒப்பு நோக்க, மிகமிகக் குறைந்த அளவில் தான் இம்மாதிரி மதமாற்றி நாசம் செய்யப் பட்டிருக்கிறது என்பதும் தெரிகிறது… இருந்தாலும் ஒவ்வொரு முறை இடிபாடுகளுள்ள, மூளியான சிலைகளையும் பார்க்கும்போது மனம் பேதலித்துவிடுகிறது, என்ன செய்ய. :-(

   இதனை ஒரு தனித் தொகுப்பாகக் கொணரவேண்டுமோ என்னவோ! )

 9. RC Says:

  நன்றி.
  தனிப்பட்ட ஆர்வத்தில் திருச்செந்தூர் கோவில் தொடர்ப்பாக படிக்கிறேன்.முறையான கல்வி பின்புலம் இல்லாததால் தொகுத்துக்கொள்ள சிரமம் தான் எனக்கு.
  துளு போற்றிகள்,ராம்நாடு மறவர்,பள்ளர்,கிறுஸ்துவ பரதவர்,வடமலையப்பபிள்ளை-திருமலை நாயக்கர் வரலாறுகள், மற்ற அறுபடை வீடு சடங்குகள் என்று இலக்கின்றி விரிந்துகொண்டே செல்கிறது.
  டச்சு தெரியவேண்டியது முக்கியமோ என்ற குழப்பம் வேறு.

  universties செய்யவேண்டியது சார் இது..என்று கடுப்பு ஆகாமல் சமனத்தில் இருக்க செந்தூர் ஆண்டவர் தான் துணை நிற்க வேண்டும் :-)

  Prof Markus wink ஐ பற்றி தங்கள் கருத்தறிய ஆவல்.


  • ஐயா, தாங்கள் Markus Vink அவர்களைக் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன். (ஏனெனில் டட்ச் எனப் பேசுகிறீர்கள் – ஆனால் முதலில் தாங்கள் மஹாமஹோ ஆந்த்ரெ விங்க் / Andre Wink அவர்களைக் குறிப்பிடுகிறீர்களோ, ஏதோ இஸ்லாமிய-பாரதம் குறித்த விஷயமோ என நிநைத்துவிட்டேன்!)

   சரி. உங்கள் அகழ்வாராய்ச்சிக்கு வாழ்த்துகள். அங்குமிங்கும் போவதில் என்ன பிரச்சினை? ஜமாயுங்கள்!

   ரீஸர்ச்/ஆராய்ச்சிக்கான கேள்விகள்/முகாந்திரங்கள் என முன்னமேயே இருந்தால் நல்லதுதான் – ஆனால் நிறைய ஆழ்ந்து படிக்க படிக்க, அவை தானாகவே ‘சுயம்பு’வாக வரும் என்பது தான் என் அனுபவம். (பிரச்சினை என்னவென்றால் – நம்மில் பலருக்குச் சான்றோர்களின் நேரடி அரவணைப்பு, சுட்டல், குட்டல் எனக் கிடைக்க அவ்வளவு வாய்ப்பில்லை – ஆகவே நாமேதான் முட்டிமோதிக் கற்றுக் கொள்ளவேண்டும், மோதி இதற்கு ஒரு எடுத்துக்காட்டு)

   மற்றபடி, மார்க்கஸ் விங்க் அவர்களின் பல கட்டுரைகளைச் சஞ்சிகைகளில் படித்திருக்கிறேன். அவர் பார்வை ‘தனித்துவமானது’ என அலக்கியவெட்டித்தனத்துடன் உளறிக்கொட்ட ஆசை. ஆனால் அவருடைய நாயக்கர்-டட்ச் புத்தகத்தை நான் இன்னமும் படிக்கவில்லை, என்ன செய்வது சொல்லுங்கள் – ஆனால் நான் படித்துள்ள சிலபல கட்டுரைகள் அப்புத்தகத்தில் இருக்கின்றன என நினைக்கிறேன்.

   என்னைப் பொறுத்தவரை, அவர் டட்ச் கும்பெனியின் நிழலான (சொல்லப்போனால் நேரடியாகவே நடந்த) அடிமை/ஸ்லேவ் வியாபாரம்  பற்றி நிறையவே காத்திரமாக எழுதியிருக்கிறார்; அவருடைய ‘என்கவுண்டர்’ பார்வை – அதாவது டட்ச்-இந்தியர்கள் ஒருவர்மேல் இன்னொருவர் பரஸ்பரம் வைத்திருக்கும் முன்முடிவுகள் – எவ்வளவுதூரம் அத்திரள்களிடையே இருக்கும் உறவைப் பாதிக்கிறது எனக் காட்டியிருக்கிறார் என்பது என் அனுமானம்.

   இந்தப் பார்வையில் எனக்குத் தெரிந்து ஆங்கிலேயர்களின் இந்தியக் காலனி வரலாறு எழுதப்படவில்லை என நினைக்கிறேன். ஏறத்தாழ முழுவதுமே வெள்ளைக்காரர்கள் பாரதவாசிகளைப் பார்த்த பார்வையை வைத்துத்தான் வரலாறுகள் எழுதப் பட்டிருக்கின்றன. (no reversing the gaze has happened, at all – but, IMO, Vink accommodates that, and I would be happy to be proved wrong especially because I have not read his seminal book))

   மேலும், அவருடைய விமர்சனங்களும், கொஞ்சம் சாட்டை சொடுக்கல் போல சுளீர் என இருப்பதால், அவர் ஒத்துவருகிறார் என நினைக்கிறேன்.;-)

   ஆனால்,  எஸ் ரவிச்சந்திரன் எனவொரு ஆய்வாளர் டட்ச்-மரைக்காயர்-சேதுபதி தொடர்புகளை ஆய்ந்து நல்ல ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் வடித்திருக்கிறார் என்பது என் எண்ணம். ஆனால் அவர் யார், எங்கிருக்கிறார் என்பவற்றை நான் அறியேன்.

   மிகவும் நீண்டுவிட்டது, மன்னிக்கவும். பிற பின்.

   • dagalti Says:

    /ஆனால், எஸ் ரவிச்சந்திரன் எனவொரு ஆய்வாளர் டட்ச்-மரைக்காயர்-சேதுபதி தொடர்புகளை ஆய்ந்து நல்ல ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் வடித்திருக்கிறார் என்பது என் எண்ணம். ஆனால் அவர் யார், எங்கிருக்கிறார் என்பவற்றை நான் அறியேன்./

    https://www.periyaruniversity.ac.in/Dept/Boots/index.php?q=133

 10. seethayv Says:

  இப்படிப் பலப்பல சோகக் கதைகள்.
  ஆனால் தமிழகம் இவ்விஷயங்களில், ஒப்பு நோக்க, மிகமிகக் குறைந்த அளவில் தான் இம்மாதிரி மதமாற்றி நாசம் செய்யப் பட்டிருக்கிறது என்பதும் தெரிகிறது… இருந்தாலும் ஒவ்வொரு முறை இடிபாடுகளுள்ள, மூளியான சிலைகளையும் பார்க்கும்போது மனம் பேதலித்துவிடுகிறது, என்ன செய்ய. :-

  Oh i am so reminded of Kuvempu”s words from the song Ellidharey iru enthatharey iru

  ‘Harihara raaghavarige eraguva mana
  Haalagiha hampege koraguva mana“

  Literally i koragufiy .All my ‘secularism’ at times leaves me amd exposes my prejudice and anger.


  • 🙏🏿 🙌🏿

   Dunno whether these high5s convey what I wish to convey. But. You may have of course, read Aavarana by one of my idols, SL Bhyrappa.

   I have been thinking along these ‘prejudice’ lines for self-flagellation. In the past 1.5 decades, I have come to the conclusion that feeling anything other than ‘anger’ about such things is rather cowardly or at best, being intentionally blind if not totally dishonest and/or stupid.

   I do not think the correct word is ‘prejudice’ – which assumes that there is NO logical reason for one’s take.

   Because. Here we are, thinking about 1) THOUSANDS & LAKHS of solid, evidence based data points (of intentional mayhem, wanton destruction, ‘poll taxes,’ systematic rapes, pillages, massive slavery, factory scale executions – you name it!) 2) And, these have happened over literally 1000-2000 years at least (so they are not one-time aberration or have happened because of some momentary madness) 3) And, they continue to happen with a lot of scaffolding, rather brazenly and unapologetically.

   It is a Civilizational War. Mainly ONLY for self-protection. There ARE reasons, zillions of them. So. It is for the target communities to learn their lessons.

   I have been to so many, MANY places Seethayv – I have seen the wanton, terrible destructions. I have actually shamlessly wept. Honest.

   I think, when I saw a (then) recently demolished temple but with a mihrab over it in the maoist infested jungles of Sukma/Chatthisgarh some four years ago – wherein maoists allowed the muslims to ‘pray’ but not the local hindus (they are, in a twisted manner called ‘adivasi’ tribals etc) to even resurrect the temple – I actually lost it.

   I am angry, but am not prejudiced – but am merely careful. Everyone who is facing the abrahamic-leftist onslaught ought to be.

   As always, YMMV.

 11. ISLAM Says:

  RSS SANGI DOG

  WE KNOW YOU

  GIVING WARNING


  • நன்றி. 😂

   பேடீக் கூவான்க்ளா! ஆவுறவேலைய பாத்துக்கினு போங்கடா, முண்டங்களா.  

   💪🏿


 12. விட்டல்ராவ் அவர்களின் ஒரிஜினல்/மூலத் தமிழ்ப் புத்தகம் – ஆங்கிலக் கிண்டில் பதிப்பில் பாதிக்கும் குறைவான விலையில்.

  https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=5821

  (இந்தச் சுட்டியை அளித்த ‘ஜடாயு’வுக்கு நன்றி.)

 13. Parthasarathy Says:

  Fantastic writing

 14. Siva Says:

  செய்வன திருந்தச் செய்வது தவிர வேறொன்றறியா ஒத்திசைவு அவர்களுக்கு நன்றி!

  ‘ஷீரடி ஸாய்பாபா’ குறித்த தங்களது கருத்தை அறிய ஆவல். Mind boggling number of his staunch believers / ardent devotees. I sometimes feel like its a religion / sect unto itself.


  • 🙏🏿 Sir, noted. Hope to continue to live up to your expectations – though that would be a mere by-product of my own expectations of myself – must say in all humility. 🤕🎣

   Yes. That Shiradi bloke. Unfortunately one of my best/longtime friends has been named after him, unfortunately for him. So, thayanging a bit. Which is pretty unusual, given me.

   …Some of my relatives swear their allegiance to that myth and swoon at the very mention of Saibaba, though I swear at them.

   But, will attend to that myth in some time. And, to the extent possible, politely.


   • From that friend:

    “Just saw your comment and advance notice. :-). If one is a staunch devotee of Baba what you may write shouldn’t impact him/her personal beliefs. I would hesitate to read the article for sure not knowing what it would say as it would be a struggle between my faith in Baba and trust in my dear friend. To me both speak the truth and guide me.”

    • Siva Says:

     நன்றி. உங்கள் நண்பரது அட்வான்ஸ் நோட்டீஸை (which BTW shows why he is one of your best friends) பார்த்தபின் ஸாய்பாபா குறித்து கேட்டது சங்கடமாகி விட்டது. இருந்தாலும் இது எனக்கு நீண்ட காலமாக இருக்கும் கேள்வி / சந்தேகம். 2000-ல் பூனாவிலிருந்து ஷீர்டி, ஷனி ஷிங்னாப்பூர் சென்றதிலிருந்து. OTOH, I distinctly remember feeling ecstatic during Phandarpur annual pilgrimage. மற்றதில் ஏனோ மனது ஒட்டவில்லை. சரி நமக்கு ஸாய் அனுக்ரஹம் இல்லைபோல என்று தேற்றிக்கொள்வேன்!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s