கமலகாச பஞ்சதந்திரம் (Famine Telegram Liquor © S.Ramakrishnan, 2021) + அட்ச்சுவுட்ற ஜெயமோகனம்

03/03/2021

“இந்தியாவில் பஞ்சதந்திரத்தைப் பற்றிக் கேள்விப்படாதோர் மிகவும் அபூர்வம்,” என மிகத் தைரியமாக ஒரு அடி அடிக்கலாம் அல்லது டமாலென்று ஒரு போடு போடலாம். அதாவது, ஜெயமோகன் செய்யலாம்.

இன்னொரு போடாக — வேறு வழியே இல்லாமல், இந்தியாவின் ஒரு விசித்திர ஜந்துப் பகுதியாக, மற்ற மாநிலங்களால் வேறுவழியேயில்லாமல் சகித்துக் கொள்ளப் படும் நம் செல்ல லெமூரிய திராவிட்டைத் தமிழகத்திலும் கூட, இந்த பஞ்சதந்திரம் – அறிமுகம் ஆகியிருக்கிறது என்பது நமக்கெல்லாம் ஆச்சரியமாகவே இருக்கும் — என்பதையும் ஊக்கபோனஸ் ‘ஆஃபர்ல அள்ளிக்குங்க‘ போடாகப் போடலாம். 

இதில் இன்னொரு மகிழ்ச்சிகரமான, கண்கள் பனிக்கும் இதயம் இனிக்கும்படியான விஷயம்  என்னவென்றால், மற்ற விஷயங்களைப் போலவே இதற்கும் — அந்த ஞானத்தைத் தமிழனிடம் சேர்க்கும் பேறு திரைப்பட அண்டம்மூலமாகவே வாய்த்திருக்கிறது. (உலகம் என்பதையெல்லாம் எப்போதோ தாண்டி விட்டது நம்மைப் பீடித்த ஏழரை நாட்டுச் சனியான 7.5யாவது தமிழக பிலிம் திணை — அதாவது பிலிமும், பிலிமைச் சார்ந்த இடமும்)

இதற்கு, நாம் நம்முடைய பேரண்டத்திரைப்படக் காரர்களுக்கு – முக்கியமாக, அந்தக் காலக் காதல் இளவரசன், இந்தக் கால உலகநாயகன், மய்யா மச்சீந்த்ரன் கமல்ஹாசன் அவர்களுக்கு என்ன நன்றி சொன்னாலும் தகும்.

(சரி. ஏண்டா காலங்கார்த்தால ஆரம்ப்ச்சிட்டியேடா என வருத்தப் படாதீர்கள்…)

அவருடைய கேளிக்கைப் பிலிமான பஞ்சதந்திரம் என்பது (மிகவும் பரிந்துரைத்து வந்தபடியால்) கொஞ்ச நேரம் பார்க்க நேர்ந்து கொஞ்சம் துக்கம் ஏகத்துக்கும் அதிகமாகிவிட்ட காரணத்தால்தான் இந்தப் பிலாக்கணம்.

முதலில் –  அதன் செய்நேர்த்தியும் காமெடியும் நன்றாகவேதான் இருந்தன (பொய் சொல்லக் கூடாதுதான்) என நினைக்கும்போதே… + பார்த்துக் கொண்டிருக்கும்போது அதற்குப் பல வருடங்கள் முன் பார்த்த அந்த சனியன் பிடித்த அரைகுறைக் கேளிக்கைப்படமான வெரி பேட் திங்ஸ் (1998) நினைவுக்கு வந்து தொலைத்தது என்பது இன்னொரு விஷயம்… (இதையும் பரிந்துரைத்தது, இன்னொரு மெத்தப்படித்த தண்டக் கருமாந்திரம்; இந்த வெளி நாடு வாழ் தமிழர்களுக்கே உரித்தான மொக்கைத்தனம், தேர்ந்தரசிகத்தனம் இல்லாமல், தமிழில் எது இருந்தாலும் (அதாவது எஸ்ரா எழுதிக் குவிப்பதுபோல, மப்புவார் உடைத்துக் கடித்துத் துப்பும் கழுதைக் கவிதைகளைப் போல) அவர்கள் எதனைப் பார்த்தாலும் (அவர்கள் அம்ரீகாவில், மன்னிக்கவும் ‘யூஎஸ் ஆஃப் ஏ’யில் இருக்கிறபடியால்) அதை, சகட்டுமேனிக்குத் தராதரம் பார்க்காமல் புகழ்ந்து தள்ளுவது… ஸாவுக்கிராக்கிப் புளகாங்கிதக் குஞ்சுகள்)


இப்படியா, க் ச் விடாமல் அட்டைக் காப்பியடிப்பார்கள், பாவிகள்?

அதுவும் கமுக்கமாகவாவது இருக்கலாம்; ஆனால் பகிரங்கமான இளிக்கிறார்களே, அயோக்கியர்கள்!

இப்படிப் பொறுக்கிப் பொறுக்கிப் படுஅசிங்கமாகக் காப்பியடிக்கும் பொறுக்கிவல்லுநர் கமலஹாஸன் எனும் ஆசாமியும் அறச்சீற்றம்  காரணமாகத்தான் மய்யமாகக் கட்சியை ஆரம்பித்திருக்கிறார்.  இந்த அழகில் ‘இன்றைய காந்தி’ நேற்றைய பூந்தி எனப் போலி நெக்குருகல்வேறு! (இந்த அசிங்கப் பித்தளையானது, பத்தரை மாற்றுத் தங்கங்களைப் பார்த்து இளிப்பதையும், மேலதிகமாக அறிவுரை சொல்வதையும் நினைத்திட்டால்…)

இதே திருடனை ஏகத்துக்கும் புகழும் ஜெயமோகனும்,  அவர் நெடுநாள் வழக்கம்போலவே தொடர்ந்து இரக்கமே (நேர்மையையெல்லாம் விடுங்கள், அதெல்லாம் பெரும்பேராசானிடம் கிலோ எவ்ளோ லிட்டர் தாம்!) இல்லாமல் செயலூக்கத்துடன் புளுகிக்கொண்டே இருக்கிறார்…

எனக்கு மிக நன்றாகவும் நேரடியாகவும் தெரிந்த விஷயங்கள் பற்றியே   … … அசோகமித்திரன் எம்வி வெங்கட்ராம், பரீக்ஷா ‘ஞாநி,’ தி.ஜானகிராமன் என அவர்கள் இறந்துபோனபின் அவர்களைப் பற்றி நாக்கூசாமல் அவரு பேசிய (+தொடர்ந்து பேசிவரும்) அபாண்டப் பேச்சுகளும் ஏச்சுகளும் சும்மாவா என்ன? கொஞ்சமா நஞ்சமா?? இந்த வரிசையில் இன்னமும், எனக்குத் தெரிந்தே பலபேர் இருக்கிறார்கள். கேவலம், படுகேவலம்.

… … அண்மையில் சுந்தரராமசாமி பற்றி மறுபடியும் படுகேவலமாக அவதூறு. இதற்கு முகாந்திரம் கி.ராஜநாராயணன் அவர்கள் தொடர்புள்ள ஒரு விழா. இதில் (இதிலும்) அப்படியொரு பீலா. இங்கும் வசதியாக சுந்தரராமசாமி போய்ச்சேர்ந்துவிட்டார்.

இப்பேச்சில், ஜெயமோகனின் பலப்பல (அம்மாடியோவ்!) அட்ச்சிவுடல்களில், அவற்றுக்கெல்லாம் பழகி மரத்துப் போயிருக்கும் எனக்கேகூட ஒரு பயங்கர ஆச்சரியம்: அதாவது, ‘நாட்டார்மரபு குறித்து சுந்தர ராமசாமி அவர்களுக்கு இருந்த(!) அலட்சியம் + நொதுமல் நிலை +  ஒவ்வாமை + கீழ்மையான அபிப்ப்ராயம்.’ (என் சாராம்சம்)

சுந்தர ராமசாமி அவர்களை நான் ஒருதடவை கூட நேரில் பார்த்ததில்லை எனத்தான் நினைவு; ஆனால் சிலபல விஷயங்களின் காரணமாக 1982-4ல், மேலும் 1990-2ல் கொஞ்சம் போக்குவரத்து இருந்தது – (அஞ்சல் அட்டை, இன்லேண்ட் லெட்டர்  வகையறாக்களில்,  சில சமயங்களில் ஃபூல்ஸ்கேப் காகிதங்களில், லீனா/மீனா வகை (உதவியாளினிகள்?) கைவண்ணத்தில்  – அவருடைய பக்கத்திலிருந்து பெரும்பாலும் அழகாகத் தட்டச்சு செய்தவை வரும்; என் பக்கத்திலிருந்து கோழிகளுக்கே பொறாமை தரக்கூடும் கிறுக்கல் மஹாத்மியங்கள் அங்கும் செல்லும்).

இதில் குறைந்த பட்சம் இரண்டு முறைகளாவது இந்த நாட்டார்கலைகள், வழக்குகள், மரபுகள் குறித்து நீள ீள உரையாடல்கள் இருந்தன. இதற்குப் பின்புலம் ‘ஒரு புளியமரத்தின் கதை’ தாமோதர ஆசான் அவர்கள். (ஜேஜே: சில குறிப்புகள் வந்தபின்னர்தான் நான் அவருடன் தொடர்புகொண்டேன். 1981ல்?)

இந்த உரையாடல்களில் அவருக்கு, ஜெயமோகன் அட்ச்சிவுடுவதற்கு மாறாக,  நாட்டார் விஷயங்கள் பற்றி ஒரு விதமான ஒவ்வாமையும் இருந்திருக்கவில்லை எனத்தான் கூறுவேன்.  சுந்தர ராமசாமி அவர்களுக்கு அவற்றின்மேல் மரியாதை இருந்தது எனத்தான் கூறுவேன்; ‘புளியமரத்தின் கதை’யே பாரம்பரிய நாட்டார் பார்வையில்தான் விவரிக்கப் படுகிறது வேறு.

என் பார்வையின் பின்புலம் என்னவென்றால்: எனக்கு நாட்டார் கலைகள், மரபுகள் குறித்து ஓரளவு அறிவும் பெருமையும் இருக்கிறது. ஆனால் அதனைப் படிப்பதாக,-அலசுவதாகக் கற்பனை செய்துகொண்டு –  அதனை ‘இயல்’ செய்து உடும்புத் தைலம் விற்கும் ‘நாட்டாரியல்’ எனும் அசிங்கத்தின் மீது, குறிப்பாக அது ‘வெச்சி செய்யப்படும்’ தமிழக நாட்டாரியல்துறைகள் மீது, துளிக்கூட மதிப்பில்லை.

ஏனெனில் என் பார்வையில் – தமிழக/பாரத நாட்டாரியல் எனும் அபத்தத் துறை –  வெள்ளைக்காரர்களிடமிருந்து கடன் வாங்கப் பட்டிருக்கும், ஆனால் இங்குப் பெரிதாக உதவாத/ஒத்திவராத கருத்தாக்கங்களையும் கோட்பாடுகளையும் கொண்டிருப்பதுதான் பெரும் பிரச்சினை. இதில் க்றிஸ்தவப் பார்வைகள் வேறு  தேவையேயற்றுக் கலந்துகட்டியிருப்பது இன்னொரு விஷயம். இதற்கும் மேலாக, நாட்டாரியல் என்பது ஹிந்துப் பாரம்பரியங்களுக்கு எதிரானது என்றவொரு பொய்ப் பிரச்சாரமும் இருக்கிறது. இது நாட்டார்மரபுகள் = பழங்குடி மரபுகள் = திராவிட(!)மரபுகள்(!!) ஆகவே(!) ஹிந்துமரபல்ல எனத் தரவுகளற்று விரிவது.

நாட்டார் மரபுகள் எனப் பலபலவிதங்களில் நம் வாழ்க்கையுடன் ஊடாடுபவை — நம் பாரம்பரியங்களில் கலந்தவை, அவற்றின் இன்றியமையாத அங்கங்கள் – ஒன்றிலிருந்து இன்னொன்று பெற்றுக்கொண்டு, தானம் கொடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வளர்ந்தவை — என்பதில் எனக்கு ஐயமில்லை, பெருமையும் கூட.

ஆனால் ‘நாட்டாரியல்’ என்பது சட்டகரீதியாக வெறுப்பியத்தையும் பிரிவினையையும் பரப்புவது என்பது குறித்தும், நாட்டாரியல் வல்லுநர்கள் எனப்படுபவர்கள் பெரும்பாலும் தகுதியற்ற, படிப்பறிவற்ற,  கீழ்மையரசியல் அலப்பரைகள் என்பதிலும் எனக்கு ஐயமேயில்லை.

இந்த விஷயங்களைக் குறித்துத் திட்டவட்டமாக நான் சுந்தர ராமசாமி அவர்களுக்கு எழுதியிருக்கிறேன்; ஆனால், அவரிடம் இருந்து பதிலாக ஒரு கருத்தும் வரவில்லை. இதற்குக் காரணங்கள்: தேவையற்ற அரசியல் வேண்டாம் என இருந்திருக்கலாம், அல்லது நேரமின்மையாகவும். அல்லது, அனுபவமற்ற இளரத்தத்துடன் வாக்குவாதம் செய்ய ஒத்துவரவில்லை என்பதாகவும்…

எப்படி இருந்தாலும், நாட்டார் மரபுகள் குறித்து அவருக்குச் சர்வ நிச்சயமாக ஒவ்வாமையோ வெறுப்போ இருந்ததில்லை என என்னைப் பொறுத்த மட்டில் ஆணித்தரமாகச் சொல்லுவேன். (‘ஒரு புளிய மரத்தின் கதை’ இதற்கு ஒரு சான்று)

ஆக. ஜெயமோகன் இச்சமயத்திலும் நாக்கூசாமல் பொய்தான் சொல்லியிருக்கிறார். இறந்தவர்கள் உயிர்த்தெழுந்து கேள்வி கேட்கமாட்டார்கள் என்கிற தெகிர்யத்தில் புளுகித் தள்ளுகிறார்.

(இது என்ன படுகேவலமான கருணாநிதித்தனம் என நினைப்பதைத் தவிர்க்க முடியவில்லை)

-0-0-0-0-

சரிதான்.

எம் பெரும்பேராசான் ஜெயமோகனும், அறச்சீற்றம் பற்றித்தான் பேசுகிறார். நீட்டிமுழக்கிப் பிலாக்கணமிடுகிறார். ஆகவே, ஜோடித்தே வாழ்க்கையை நடத்தும் கமலகாசனும் ஜெயமோகனும் நல்ல ஜோடிதான்.

இன்னொரு விஷயம்.

‘பா. இந்துவன்’ என்கிற இளைஞர் எழுதிய தன்னிலை விளக்கப் பதிவொன்றை முன்வைத்து – தன் சொந்த நேர்மையையும், அறவுணர்ச்சியையும், ஹிந்து ஸனாதன தர்மத்தை உயர்த்திப்!(!) பிடிக்கும் தன்மையையும் தன்னைத்தானே ஒருமாதிரி புகழ்ந்துகொண்டு (அதாவது இந்துவன் அவர்களைப் புகழ்வதுபோல) ஆனால் இடுக்கில், பிறரைப் பற்றி அறச்சீற்ற விஷம் கக்கல். 

ஆனால் – இவர் இருக்கும் அழகில், இவருக்குச் சர்வ நிச்சயமாக ‘இடதுசாரி குண்டர்’களின் பொய்மைகள், பிரச்சாரங்கள் பற்றி ஏளனமாகவும், ஏன் சரியாக விமர்சனக் கருத்துவைக்கவேகூடத் துளிக்கூட உரிமையில்லை – பிறர் பக்க (‘ஹிந்துத்துவா’) செயல்பாடுகளைச் சந்தடிசாக்கில் குறை சொல்லவருவதையே விடுங்கள். 

தொடர்ந்து, மீயறிவே இல்லாமல் இப்படியொரு படுகேவலம்.  வெளங்கிடுண்டா. 

(இந்தக் காரணத்தால், ‘அறச்சீற்றம்’ என எவன் பேசினாலுமே சந்தேகமாக இருக்கிறது – கலாச்சார ரீதியாக இதுதான், ஜெயமோகனின், நிலைத்து நிற்கப் போகும் பங்களிப்பு)

 • புதுமைப் புளுகனின் சொல்லும் செயலும்
 • பொய்மை கொண்ட கலிக்கேகூடத் தான் புதிதன்றி
 • பழம் தின்று, கொட்டையும் போட்டு, அனுபவங்களும் வாய்த்த
 • பழப்பெருச்சாளிகளுக்குப் புதிதேயல்ல
 • — FruitCoot (பாவம், பாரதி)

(அவரவர், முதலில் தங்கள் பெருங்குடல் எப்படி இருக்கிறது, அதில் என்ன இருக்கிறது எனக் குதவழிப் பரிசோதனை செய்துகொண்டால் உலகில் பாதிப் பிரச்சினைகள் காலி, ஆனால்…

…இப்படிச் சதா தனக்குத்தானே சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொண்டே இருப்பதால் எனக்கு இரண்டு பிரச்சினைகள்: 1) கழுத்து சுளுக்கிக் கொள்கிறது 2)  ஒத்திசைவுபதிவுகள் நிறையப் போட மற்றபடி நேரமின்மையாகிவிடுகிறதும்)

-0-0-0-0-

இருந்தாலும்

… ஹ்ம்ம்ம… நான் கிண்டலுக்காக இதனைச் சொல்லவில்லை. என்னைத் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.

எனக்கு நன்றாகவே தெரியும் – நம்முடைய செல்லத்  தமிழர்களுக்கு, நம் சினிமாக்காரர்களால் அவர்களளவில் புரியவைக்கப்படமுடியாத, தெளிவிக்க முடியாத எந்தவொரு விஷயமும் ஒரு பொருட்டே இல்லை என்பதை, திராவிடத் தமிழனான நான் அறியமாட்டேனா என்ன? 

அதனால்தான் சினிமா பற்றிக் கொஞ்சம் எழுதினேன்; சினிமாத் தொழிலாளிகளின் அடிப்படை அறமின்மை, ஆனால் மாறாக அறச்சீற்ற மினுக்குதல்தன்மை குறித்தும்…

தமிழ்பிலிம் செம்பிலிம் பார்த்துத்தான் நானும் என் சொந்த ஞானமரபு முமுட்சு முழுமையை ஏறத்தாழ அடைந்திருக்கிறேன் என்றால் அது மிகையாகாது…

வியட்நாம் வீடு பிலிம் பார்த்துத்தானே நான் உலகளாவிய அமெரிக்க ஏகாதிபத்திய சதிகளைப் புரிந்து கொண்டேன்!

எழவாவது ஏழாம் அறிவு பிலிம் பார்த்துத்தானே நான் அறிவுடையவன் என்பதையே அறிந்தேன்? 

டோலர் லெனின் பற்றி அறிந்துகொண்டதே பீம்சிங் மகன் மூலமாகத்தானே!

ஏன், நம்முடைய தி. நகர் நாயுடுஹால் துணிக்கடை துவங்கப் பட்டதே,  ப்ராசக்தி பிலிமுக்குப் பின்னர்தானே?

-0-0-0-0-0-

:-(

11 Responses to “கமலகாச பஞ்சதந்திரம் (Famine Telegram Liquor © S.Ramakrishnan, 2021) + அட்ச்சுவுட்ற ஜெயமோகனம்”

 1. KMuthuramakrishnan Says:

  ஐயோ! பஞ்சதந்திரம் அட்டக்காப்பியா?

  ஆசானின் இன்றைய புலம்பல் கண்டோ? நாரோயில் மட்டும் அல்ல. எந்த ஊரிலும் உள்ளூர் மேளத்திற்கு மதிப்புக்கிடையாது என்பது அறியமாட்டோரோ? நாரோயில் அவருக்குப் பிடிக்கவில்லையாம். தொண்டர் கூட்டம் அதிகம் உள்ள ஊருக்கு மாறவாய்ப்பு உண்டு போலும்.


  • கமலகாசனின் எந்தப் படம்தான் முழுவதும் ஒரிஜினல், சொல்லுங்கள்?  மேலும் தமிழில் வரும் முக்கால்வாசிப் படங்கள், பாடல் மெட்டு/இசையமைப்புகள் காப்பியோகாப்பிதான், அல்லவா?

   ஆகவே எதற்கும் அதிர்ச்சியடையா இதயத்தைப் பெற வாழ்த்துகள்.

   மற்றபடி பெரும்பேராசான் தளத்துக்கு யாராவது சுட்டி கொடுத்தால் தான், அதுவும் நேரம் வாய்த்தால்தான் போகிறேன் – ஆகவே சின்னமேளம் பெரியமேளம் பற்றியெல்லாம் அறியேன், மன்னித்தருளுங்கள்.

 2. Em Says:

  I don’t watch his so-called serious movies bcoz am allergic to all that ariv(ketta)urai he spews so effortlessly and illogically. But used to watch the comedy ones.
  Had the same experience as you with his movie Thenali. A year later saw the movie “What about Bob?” and was like WTH?(Damn Yankees stole Kamalahaasanaar’s movie 9 years before it was released. I mean, the gall of those Americans) Later realised that most of his work are Ctrl C+Ctrl V jobs from one or more movies. He just Tamilises it for the audience. Watched Panchathanthiram knowing it would be no exception.

  No more movies for me now bcoz kids stopped taking me due to the fact I kept falling asleep. Nowadays I watch Rahul Gandhi for laughs. I believe that he missed his calling as a stand-up comic.


  • Hey. It is noose to me that Mayya Machcheendra has had a stab at some serious movies and am sure you are trying to be charitable. The way I see many of our mediocre stuff – is their incredible capacity for pure mirth. So all fillums are funnies only.

   Actually there was another plagiarized fillum called ‘Nayakan’ – and in that there was of course a plagiarized tragic scene from The Godfather II. Machcheendra tries to do a copy of Marlon Brando when the son is killed by a rival gang. And when that sad wailing happened, I actually & really heartily laughed, much to the annoyance of my rather serious cousins. Much pathos happened anyway.

   So much for that mediocre pretender.

   As far Rahul Gandhi, I must say it is terrible. But, from Motilal the grand tradition of propping up of Clown Princes and Cruel Princesses has happened; so, it is +1 now.

   However, I am still unable to make sense of as to how or why, even reasonably educated jokers support such an utterly base and lousy person. (May be it is their self-hate and hate towards Bharat that drives them)

   All said and done, I find it incredible that we have rank nincompoops like stalin and rahul supposedly contending for leadership roles!

   At least standup comics make us laugh, but these guys make us get into a shock with the proud displays of their despicable stupidity and thuggery.

   Really. I cringed when I saw the Clown Prince doing push-ups. Or when Stalin rode a sports bike.

   *sheesh*

 3. Kannan Says:

  The latest short story from Aasaan brings memories of the Cheshire cat smile from Alice, that is the smile remains even after the cat disappeared.

  ‘Ven Punnagai’ aha…


 4. அன்பர் சுரேஷ் வெங்கடாத்ரி அவர்கள் ஒத்திசைவு-ஃபேஸ்புக் பக்கத்தில் மேற்படி பதிவு குறித்த குறிப்பில் இட்டிருக்கும் பின்னூட்டம் கீழே: (அவருக்கு என் நன்றி; ஆனால் ‘ஜெமோவின் பேச்சு முதல் கமெண்ட்டில்’ என எழுதியிருப்பது புரிபடவில்லை; அனேகமாக,  அவர் வேறெங்கோ பதிவு செய்ததிலிருந்து இது வெட்டியொட்டப் பட்டிருக்கலாம்)

  —–

  கி.ரா,சு.ரா மற்றும் ஜெமோ :
  கி.ராவின் ‘மிச்ச கதைகள்’ வெளியீட்டு விழாவில் ஜெமோவின் உரை கேட்டேன்.சுவாரசியமான ஒன்றுதான்.நவீனத் தமிழ் இலக்கியத்தத்துக்கு கி.ரா கொண்டுவந்ததென்ன என்பதை அழகாக விளக்கி முத்தாய்ப்பாக முடித்தது சிறப்பாக இருந்தது.மற்றபடி,அவரது வழக்கம்போல்,வரலாற்று உண்மைகளை அறிய நாட்டார் வழக்காறுகளின் முக்கியத்துவத்தையும் அதை தமிழின் நவீனத்துவ இலக்கியவாதிகள் முற்றாக புறக்கணித்தது குறித்தும் நிறையப் பேசினார். அதிலும் வழக்கம்போலவே அவர் எடுத்துக்கொண்ட உதாரண நவீனத்துவ எழுத்தாளர் சுந்தர ராமசாமி தான். நாட்டார் மரபு குறித்த சு.ரா வின் அக்கறையின்மையையும் அலட்சியத்தையும் அலர்ஜியையுமே கூட விரிவாக விளக்கினார்.
  சு.ராவின் வீட்டுக்கு நேர் முன்னாலேயே ஒரு அம்மன் கோவில் இருப்பதாகவும் அங்கே விழா நடக்கும் சமயங்களில் அங்கு நடத்தப்படும் நாட்டார் கலை நிகழ்ச்சிகளை காண /கேட்கப் பிடிக்காமல் 15 நாட்கள் சு.ரா கன்னியாகுமரி சென்று தங்கிவிடுவார் என்றும் கூறினார்.அது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை..அப்புறம் கி.ராவின் முதல் கதையைப் பாராட்டி கி.ராவுக்கு சு.ரா ஆங்கிலத்தில் தந்தி அடித்தார் என்று சிரிப்புகளுக்கிடையே சொன்னார். அந்தக்காலத்தில் (அதாவது 1958ல்) ஆங்கிலத்தில்தான் தந்தி அடிக்க முடிந்திருக்கும்.தமிழில் தந்தி அடிக்கும் வசதி இருந்திருக்காது..(எப்போதாவது இருந்ததா?)மற்றபடி சு.ரா கோவில் விழாவின் நிகழ்ச்சிகள் பிடிக்காமல்,கன்னியாகுமரி சென்று தங்குதல் பற்றியெல்லாம் காலச்சுவடு கண்ணனும்,சு.ரா விடம் நல்ல பழக்கம் உடையவர்களும்தான் உறுதி கூற முடியும்.
  இதெல்லாம் ஒரு புறம் இருக்க,சு.ரா பற்றி ஜெமோ தொடர்ந்து வைக்கும் இந்தச் சித்திரத்தில்,ஒரு விஷயம் உறுத்துகிறது.சு.ராவுக்கு நாட்டார் வழக்கு நாட்டுப்புற இயல் போன்றவற்றின் மேல் அவ்வளவு அலட்சியமும் அக்கறையின்மையுமிருந்திருந்தால், ‘ஒரு புளியமரத்தின் கதை’நாவலை ஏன் அப்படி எழுதினார் என்று கேட்க வேண்டியிருக்கிறது.அந்த நாவல் அதிகமும் நாட்டார் மரபு சாயலையே கொண்டிருக்கிறது.புளியமரத்தின் வரலாறே நாட்டார் வாய் மொழி வரலாறாகவே அதில் சொல்லப்படுகிறது.அதில் வரும் தாமோதர ஆசான் கதாபாத்திரமே,கி.ராஜநாராயணனைப் போன்ற ஒரு கதை சொல்லிப் பாத்திரம்தான். ஒரு வட்டார வரலாற்றை கிராமிய நாட்டார் மரபில் சொல்லும் பாத்திரம்தான்.மேலும் நான் அநேகமாக சு.ராவின் அனைத்துக் கட்டுரைகளையும் படித்திருக்கிறேன். நாட்டாரியல் மீதான வெறுப்போ ஒவ்வாமையோ அவற்றில் எதுவும் இருப்பதாக தோன்றியதில்லை.
  இந்த உண்மைக்கு நேரெதிராகயிருக்கிறது சு.ரா பற்றி ஜெமோவின் தரும் தகவல்கள்..சு.ரா நாட்டுப்புற இயல் பற்றி எழுதியது ஏதாவது யாராவது பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.ஜேஜே சில குறிப்புகளில் சொல்லப்படுவது போல,ஊசியின் மீது வைக்கோற் போர்கள் கொட்டப் படுகின்றன..உண்மையை தேடி எடுப்பது இன்னொரு ஜீவனின் அவஸ்தை.போகிற போக்கில்ஜெமோ போகிற போக்கில் இறைக்கும் இந்த ‘உண்மைகளைப்’ பற்றி ஆராய்ந்து பதில் சொல்வது மிகக் கடினம்.ஒற்றை வரியில் அவர் சொல்லிவிட்டுப் போய் விடுகிறார். ஆதாரங்கள் ஏதும் தருவதில்லை.ஆனால் அதெல்லாம் சரிதானா என்று சரி பார்க்க விரும்புபவர்கள், மறுப்பவர்கள், ஆதாரங்களை தேடி அளிக்க வேண்டியுள்ளது.. என்ன செய்ய..அவிசுவாசிகளின் பாடு சிரமம்தான்.
  ஜெமோவின் பேச்சு முதல் கமெண்ட்டில்

 5. seethayv Says:

  ‘Really. I cringed when I saw the Clown Prince doing push-ups. ‘
  True.

  Someone forced me to watch Thenali or Panchathanthram,where olakkainayakan is a Jaffna tamil. My goodness ,just could not watch.Horror


  • :-) Hey! That ‘Vollakai Nayakan’ is damn kewl. Will plagiarize the idea!

   I think, given a chance, chap would also act as background-music and even as a eager-beaver fan of his own narcissistic self.

   Shameless cretin.

 6. dagalti Says:

  Methinks your opinion of Sir is due to

  1. The disproportionate praise he receives – which in turn is because, for the better part of his career he always attempted to push the envelope when no one was even trying
  2. the fact that he seems to have internalized a lot of this allround adulation

  But, amid a sea of utter mediocrity that man has IMO did more for the mainstream Tamil aesthetic than any of his contemporaries.

  It is important to note that he wasn’t attempting to be in the alternative cinema movement. He was clearly ensconced in the ஊர்கூடி தேரிழுத்தல் of mainstream cinema.

  And there his choice of themes, what he brought to the writing and filmmaking would take a lot of stubbornness to overlook.

  For instance what Mani Ratnam took from Godfather was a Mafia story. What Kamal Hassan took from it is the personal element in relation to the social (Thevar Magan):

  The son thinks he has crossed over to modernism
  He wants little to do with his father/roots
  Has he paid his dues?
  Is he indeed ‘better’?
  Or is he as much a Corleone as his father, if not more?

  To a great extent this relates to a dilemma that resonates with many of us: negotiating a heritage with all its warts and moving forward.
  what is wholesomeness?? How fulfilling can a clean break existence be if it is deracinated (McDonald Burger King)?

  He leaves the feudal world the same way he visually enters. Has he made it better? Or he has merely participated in it top-down changing nothing because he approached it without a Gandhian respect for his fellows?

  In his very next film (Mahanadi) is almost a companion work: the protagonist is a feudal Lord who is utterly ruined when he moves to ‘modernity’.

  One can be generous, respectful, ahimsic in a world where one has a surfeit of respect.

  But in an individualistic, ‘each man to himself’ world what happens? – who are you? what do you stick by? To what extent do you go to to stick by values you claim to espouse?

  You’d be hard pressed to see mainstream films that invite audience to such examination.

  Of course YMMV and all that. Since you say you are significantly underexposed to Tamil films, I thought I’d make a few comments.

  மத்தபடி, சிவாஜி வழியில் சாரும் தேர்தலில் டெபாசிட் இழந்து திரையுலகில் மீள்புகுந்தால் ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயருக்கு வடமாலை சார்த்துவதாக வேண்டுதல்.


  • ஐயா, தங்களுடைய கற்பித்தலுக்கும் கற்பிதங்களுக்கும் நன்றி. இப்படி மாய்ந்துமாய்ந்து காப்பிக்கடை அதிபருக்கு முட்டுக் கொடுப்பதினால்,  நெகிழ்வாலஜி ஹேஜியொக்ரஃபியில் ஈடுபடுவதால், உங்களுக்கு மெக்கா போய்வந்த பெருமை கிடைத்துவிட்டது.

   ஆகவே தாங்கள் இனிமேலிருந்து ஹாஜி டகால்டி இப்ன்-பிலிம் அல்-ஹாசன் அல்-கமல் என அழைக்கப்படுவீர்கள். வாழ்க நும் பராக்கிரமம்.

   சரி. வெறும் ‘ஆலையில்லா ஊர்’ அணுகுமுறையை வைத்து கமலகாசநோய் அவர்களுக்கு முட்டுக் கொடுப்பதையும் தாண்டி ஏதோ சொல்லவருகிறீர்கள், ஓரளவுக்குப் புரிந்தது.

   ஆனால், தமிழ்ப்பிலிம் பேரண்டத்தைக் குறித்து நான் துப்புரவான ஞானசூனியமும் அல்ல. அவர் அறச்சீற்றம் உள்ள அளவுக்கு நேர்மையானவரும் அல்லர் – அவருடைய பணம் தொடர்பான ஊழல்கள் சிலவற்றை நேரடியாகவே அறிவேன். அவருடைய ‘கலை’க்கு அப்பாற்பட்டும் சீந்தத் தகாதவர்தாம் அவர். ஆகவே. IMO, that man is grossly overrated. Really gross.

   In my bumble opinion, this KH should not lose terribly – so that he is neither able to focus on politics nor in fillums – there should be a balance. So that damage is minimal from the megalomaniac.

   But.

   Something tells me that, Mr  மய்யா Machcheendra will be back to tamil fillums playing 100 roles per fillum/hollywood-source per annum.

   It is not that I am mindlessly dissing your opinion, your views are always welcome.

   But, as you correctly pointed out, my mileage varies. May be sometimes, this is a problem with the ‘man who knew too much?’

   Dunno. 🙏🏿🐸


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s