[நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு] பி. கோலப்பன், கோலாட்டம் & ‘த ஹிந்து’ எழவின் திமுக ஜால்ரா!

07/03/2021

நெஞ்சே வெடித்துவிட்டது, இன்றுகாலையில் இந்தக் கோலப்பக் கோலாட்டச் செய்தியைப் படித்தபின்பு… :-(

இப்படியா நேர்மையும் செயலூக்கமும் மாளா படிப்பறிவும் அறவுணர்ச்சியும் கொண்ட ஒரு இளைஞருக்குத் துரோகம் இழைப்பார்கள், சொல்லுங்கள்?

எனக்கு ஒருமாதிரி நெகிழ்வாகவும், எம் திராவிடத் தலைமையின் அறவுணர்ச்சி கண்டு பெருமிதமாகவும் இருக்கிறதே!

-0-0-0-0-

ஆனால், இது நாடகம்தான், ஏனெனில் – அனைத்து நடிகர்களும், படுகேவலமாக (‘வில்லன்’ தவிர) ஏகோபித்து இளிப்பதைப் பாருங்கள். இந்த நாடகத்தின் சூத்திரதாரி, அந்த ஆரிய வந்தேறி 300+கோடி ரூபாய் அறிவுரையாளராக இருக்கலாம்.

இந்த, புத்தம்புதுத் திரைப்படமான ‘திராவிட நேர்கோணல் இது! போடா!!‘ கதையின் நாயகன் ‘கள்ள இறக்குமதிக் கார்‘ புகழ் உதயநிதி.

‘வில்லன்’ முக ஸ்டாலின். வில்லனின் அடியாள்: டிஆர்பாலு.

காமெடி ட்ராக்: துரைமுருகன். காமெடி அடியாள்: ஆராசா.

பிறர் அனைவரும் தண்ட எக்ஸ்ட்ராக்கள்.

சரி. மேலே படிப்பதற்கு முன், சுமார் 50 முழம் ‘மதுரே மல்லிப்பூ’ எழவினை வைத்து காதைச் சுற்றிக்கொள்ளத் தயாராக இருக்கவும்.

இந்த ‘த ஹிந்து’ கோலாட்டத்துக்கான சுட்டி.   இது உங்களுக்குத் திறக்கவில்லையானால், இங்கே அதே போலிச் செய்தியின் பிடிஎஃப் வடிவம்:

-0-0-0-0-0-

இந்த கோலாட்டக் கோலப்பச் செய்தியெழவில் இப்படியொரு முக்கியப் பகுதி:

“When he appeared for interview before the panellists, Mr. Stalin, who was present there, wondered why he had come for the interview since he had already been advised not to contest in the election,” a senior DMK source said.

என் ஒருமாதிரி தமிழில், இது:

“உதயநிதி ஸ்டாலின்,  திமுக பேனலிஸ்டுகளுக்கு முன்பாக நேர்காணலுக்கு ஆஜரானபோது, அந்தக் குழுவில் இருந்த முகஸ்டாலின், ‘தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தாலும் உதயநிதி ஏன் நேர்காணலுக்கு வந்தார்’ என்று ஆச்சரியப்பட்டார்” என்று ஒரு மூத்த திமுக தலைவர் தெரிவித்தார்.

ஒர்ரே புல்லரிப்பு, போங்கள்…

ஆமாங்கடா. அப்பனுக்கு ஒரு மசுரும் முன்னமே தெரியாமல், திடுதிப்பென்று பிள்ளை வந்தான்.

அப்பனுக்குத் துளிக்கூட இந்தப் ‘பரம்பரை ஆட்சி’யில் பிடித்தமில்லை. தன் பதவிக்குத் தானே சுயமுயற்சி(!)யில் வந்ததுபோல, தம் பிள்ளையும் உழையோஉழை என உழைத்து முன்னுக்கு வரவேண்டும் என விரும்புபவன். தான் தலைவன் என்பதாலேயே தம் பிள்ளைகளுக்கு ஒரு தகுதியும் வந்துவிடாது என நினைப்பவன்.

ஆகவே – அப்பனுக்குத் தன் பையன் இப்படிச் செய்துவிட்டதில் விசனம்.

ஆகவே கூட இருக்கும் காமெடி ட்ராக்குகளும் வில்லனின் அடியாட்களும் கொள்ளைப் பங்காளிகளும் — வில்லத்தனமாகவும் காமெடியாகவும் அப்பனை, அதாவது வில்லனை அநியாயத்துக்கு வற்புறுத்தி, ‘நீங்கள் உங்கள் பையனுக்கு இடம் கொடுத்துதான் ஆகவேண்டும்’ என்பர்.

ஆகவே வில்லன் கேட்டுக்கொண்டு பெருமனதுடன், தயக்கத்துடன், ‘நீங்கள் சொல்கிறீர்களே’ என்று தயாளகுணத்துடன் ஹீரோ-நாயகனுக்கு தேர்தல் ஸீட் கொடுக்கலாம். இப்போது, இந்த உதயநிதியின் உதயத்துக்கு மேற்படி எக்ஸ்ட்ராக்களே காரணம் என்றாகி விடும்.

மாறாக, வில்லன், வில்லத்தனமாக – ‘உனக்கு ஸீட் கிடையவே கிடையாது’ என ஆணித்தரமாகச் சொல்லலாம். பாவம் உதயநிதியின் முகம் சுண்டிவிடும்.

ஆனால் வில்லனின் மாண்பும் ‘மனு நீதிச் சோழ’ அறத்தன்மையும் அறச்சீற்றத்துடன் ஜெயமோகத்தனமாகப் பொன்னெழுத்துகளில் பொறிக்கப் படும்.

(எப்படியும் ஹீரோவுக்கு குடும்பச் சொத்து வராமலா போய்விடும் என்பது,  மேலும் ‘திராவிட நேர்கோணல் இது! போடா!!’ கதையின் இரண்டாம் பகுதி வந்தேவிடும் என்பது நமக்குத் தெரியாதா என்ன, ஹ்!)

அயோக்கிய, நாடகக்காரக் கோமாளிப் பதர்கள்.

-0-0-0-0-

சரி. ‘திமுக என்றாலே திருட்டுத்தனம் — இதிலென்ன, கேளிக்கைக்கு அப்பால் பெரிய விஷயம் இருக்கக் கூடும்’ என நாம் நினைப்பது ஓரளவுக்குச் சரிதான்.

ஆனால்.

இதைப்போய் ஒரு பெரிய செய்தியாகப் புளகாங்கிதத்துடன் பதிப்பிக்கும் தினசரி/செய்திப் பத்திரிக்காரருக்குச் சுமார் 1%மாவது அறவுணர்ச்சியோ, ஏன் கூச்சமோ இருந்திருந்தால், கீழ்க்கண்ட, பாமரனும் கேட்கக்கூடும் கேள்விகளில் ஒன்றையாவது கேட்டிருப்பார் அல்லவா?

அப்பேர்க்கொத்த, ‘த ஹிந்து’ தினசொறி – அதாவது அறச்சீற்ற நேர்மையின் சிகரம் என்றெல்லாம் தன்னைத்தானே வரித்துக்கொள்ளும் போலிப் பரப்புரைப் பத்திரிகை – இம்மாதிரி அயோக்கியத்தனங்களைக் கத்தறித்திருக்க வேண்டுமா, குறைந்த பட்சம் ஜால்ராவை மட்டுறுத்தி இருக்கவேண்டுமா இல்லையா?

இந்த தண்ட ஜால்ரா கோலப்பன் – ஒருவார்த்தை – ஒரேயொரு வார்த்தை, இந்த போலிச் செய்தி குறித்து யாரையாவது கேட்டாரா? அந்த ‘ஸோர்ஸ்’ திமுக தலைவரிடம், “ஏண்டா இப்படி காதுல பூ சுத்தறீங்க!” எனக் கேட்டாரா?

இல்லையெனில் நேரடியாக, உதயநிதியிடம் இது குறித்து வினவினாரா – உங்கள் தகப்பன் உங்களிடம் தெளிவாக இதுகுறித்துச் சொல்லியும் ஏனிப்படிச் செய்தீர்கள் எனக் கேட்டாரா?

‘ஏன் அவரை இக்கட்டில் ஆழ்த்தினீர்கள்’ எனக் கிடுக்கிப் பிடி பிடித்தாரா?

‘திமுக விதிகளுக்கு உட்பட்டு தேர்தலில் நிற்க விண்ணப்பம் அளிப்பது உங்கள் உரிமை, ஆகவே இதனைப் பின்வாங்காமல் தொடரவும்’ என ‘வெளி நாட்டுத் திருட்டுக் கார் அதிபரு’க்கு அறிவுரை கொடுத்தாரா? வினவினாரா??

இதேமாதிரி தம் பிள்ளைகளுக்காக நாயாக அலையும் பிற திராவிடத் திமுக தலைவர்களை – இதுகுறித்துக் கேட்டாரா? ஏதாவது ‘உடன்படிக்கை’ இருக்குமோ எனப் பின்னணியை ஆராய்ந்தாரா?

ஒரு மசுறும் இல்லை; மாறாக – ‘ப்ரெஸ் ரீலீஸ்’ என திமுகவே கதைவசனம் எழுதிக் கொடுத்ததை, அதே  திமுகவிடம் வெட்கமேயில்லாமல் ‘வாங்கி’க்கொண்டு அலுங்காமல் நலுங்காமல் இருந்த இடத்திலிருந்தே அதையே பதிப்பிப்பதற்கு, ஏன் இந்த கோலப்ப தண்டங்கள் அவசியம்? ‘த ஹிந்து’வுக்கு தண்டச்செலவுகள்தாமே இவை??

ஆனால் – இம்மாதிரி அயோக்கியத் தனங்களுக்கு எல்லாம் ஒரு தனித் தகுதிபடைத்த தடித்தனம் வேண்டும். அது கோலப்பனுக்கும் கோலாட்ட ‘த ஹிந்து’வுக்கும் ஏகத்துக்கும் இருக்கிறது என்பதும் உண்மையே.

ஆகவே –  திமுக பரப்புரை தண்டவாந்தியை அப்படியே உண்டு அதையே மறுவாந்தி எடுத்துக் கோலாகலக் கோலாட்டத்துடன் பத்திரிகையிலும் போட்டுவிட்டார், இந்த அற்ப ஜால்ரா.  இந்த ஓங்கிஓங்கி ஜால்ரா அடித்தல்களுக்கும் – பிற அற்ப பத்திரிகை நிருபர்கள் போலவே ‘ப்ரெஸ் கிட்’களுடன் ஏதாவது அன்பளிப்பை வாங்கிக்கொண்டாரா என்பது தெரியவில்லை.

அக்மார்க் பேடிகள், இந்த ஊடக அயோக்கியர்கள்; பரப்புரை செய்வதற்கே பிறந்தவர்கள். ஜால்ரா அடித்தே வயிற்றை ரொப்பிக் கொள்பவர்கள்…

கொஞ்சமாவது கூச்ச நாச்சம் என 5% இருந்தாலே, இந்த தண்டங்கள் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகவேண்டும்.

ஆனால் இவர்களுக்கு அந்தச் சதவீதம் 1%கூட இல்லையே அம்மணிகளே, அம்மணர்களே!

-0-0-0-0-

எது எப்படியோ.

திமுக இந்தத் தேர்தலிலும் ஒழிக்கப்படவேண்டும், பொய்மைப் பரப்புரைகளிலும் தேசவிரோதத்திலும், ஊழலிலும் தொடர்ந்து திளைக்கும் ‘த ஹிந்து’ அற்ப ஜந்துக்கள் நஷ்டத்தில் அமிழ்ந்து மூடப்படவேண்டும் என்பது என் பல அவாக்களில் இரண்டு.

நன்றி.

முந்தைய, ஞமலிமுதல்வாதப்பதிவு: கேள்வி: “நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் அளிக்கவும் 06/03/2021


5 Responses to “[நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு] பி. கோலப்பன், கோலாட்டம் & ‘த ஹிந்து’ எழவின் திமுக ஜால்ரா!”

  1. nparamasivam1951 Says:

    தி ஹிந்து ஒரு பத்திரிக்கை என நான் என்றுமே மதித்தது இல்லை. அதில் வந்த வாந்தியை வைத்து ஒரு முழு நீள பதிவு எழுதியது மட்டுமன்றி எனது பொன்னான 5 மணித்துளிகளை வீண்டித்து விட்ட சமயம், கடைசி பத்தி அதை சரி செய்து விட்டது.
    “திமுக இந்த தேர்தலிலும் ஒழிக்கப் பட வேண்டும்” என்று இருந்ததால், 5 மணித்துளி வீணானது பற்றிய கவலை பறந்து விட்டது.


  2. விவஸ்தை இல்லாத ஜன்மங்கள்! ஆனால் முட்டாள் டுமீலன்களுக்கு ஏற்ற கந்தர் கோள செய்தியாக திரித்திரிக்கிறார் அலங்கோலப்பன்!


  3. […] (பி. கோலப்பன் உட்பட அனைத்து நிருபர்களும் அகமகிழ்ந்தனர்; பின்னர் அனைவருக்கும் கவர் அளிக்கப்பட்டது; உள்ளிருப்பது சரியாக இருக்கிறதா என எண்ணிப் பார்த்துவிட்டு, அவர்கள் மகிழ்ச்சியுடன் கலைய, கூட்டம் இனிதே முடிந்தது) […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s