“நேரு காலத்தில் புதிய நகரங்கள் அமைக்கும் போது குடும்பத்தொழிலுக்கு என்று ஒரு அறை வைக்க வேண்டும் என்று வடிவமைக்கப்பட்டது!”

09/03/2021

தப்பும் தவறுமான தமிழையே விட்டுவிடுங்கள். அப்படியா என்ன?

இந்த அரைகுறை இரா.முருகவேள், என்னை நிம்மதியாக இருக்கவிடமாட்டார் போல! என்ன செய்வது, சொல்லுங்கள்?

முன்னமே இந்த ஆளின் அளவிலா, அலகிலா பீலாக்களைப் பற்றி எழுதியாகிவிட்டது:

…அவரும் தன் அசிங்கமான தவறுகளைத் திருத்திகொள்வதுபோலத் தெரியவில்லை;  படுமோசமாகச் செய்த திரித்தல்களைச் சரிசெய்ததுபோலவும் தெரியவில்லை; ஆனால் தொடர்ந்து அட்ச்சிவுடும் வேகத்தைப் பார்த்தால்,  ஒண்ணுரெண்டு புத்தகங்களைப் புரட்டிவிட்டு மினுக்கியே இவர் இன்னொரு அரவிந்தன் கண்ணையனாகி விடுவாரோ எனப் பயமாகவும் இருக்கிறது. The horror, the horror

(Off; facebook.com/murugavel.raju.9/posts/10209019906490914)

…இந்த ஆள், இப்போது இவலின் ரீட்  (Evelyn Reed) எனப்படும் (தனக்குத் தானே மானுடசமூகவியல் நிபுணர், தனக்குத்தானே மார்க்ஸியம், ட்ராஸ்கியம், தனக்குத்தானே தானே தந்தானே பெண்ணியம் இன்னபிற – சொல்லப்போனால் இந்த அம்மணியின் பெண்ணியப் புரிதல்கள் இப்போது படித்தாலும் என்னை உருண்டுவுருண்டு சிரிக்க வைப்பவை, அநியாயத்துக்கும் வயிற்றுவலி கொடுப்பவை) அறிஞர்(!) கலந்துகட்டி எழுதியிருக்கும் உளறல்களை, தரவிலா தற்குறித்தனங்களை, மிகவும் சிலாகித்து, ஆனால் மிகச் சரியாகவே இவலீன்ரீடை நம் உள் நாட்டு அரைகுறை அரைகுறைராய், மன்னிக்கவும் அருந்ததிராயுடன் பொருத்தி எழுதியிருக்கிறார். 

இந்த அழிச்சாட்டியங்களை மீறி, முதலாளித்துவம் பற்றியும் அம்மணிக்கு ஏகப்பட்ட பிழைபுரிதல்.

பிரச்சினை என்னவென்றால், நமது இக்கால இடதுசாரிகளுக்குப் படிப்பறிவோ, விஷயங்களை ஒழுங்காகத் தெரிந்துகொள்வதில் முனைப்போ இல்லை. வயதான சொகுசு இடதுசாரிகளும் பாவம், நேருவியஸோஷலிஸ்ம் பக்கம் ‘தாராந்து பூட்டார்கள்.’

ஆனால்… இந்த இளைஞ தண்டக் கருமாந்திரங்கள் கொஞ்சமாவது ஹோம்வர்க் செய்யவேண்டாமா?

‘அதெல்லாம் முட்யாத்’ எனறால், குறைந்தபட்சம், ஸ்டேன்ஃபர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியை ஹேரியட் வைட்ஹெட் அவர்கள் (Harriet Whitehead) நம் அரைகுறைப் பெண்மணி இவலீன்ரீட் பற்றி எழுதியதையாவது படித்திருக்கலாம், அது எப்படிப் போனதென்றால் (நினைவிலிருந்து எழுதுகிறேன்) – சுழற்றிச் சுழற்றி, இரக்கமேயில்லாமல் சாட்டையடி… போலித்தனமான அதிகபட்சம் தண்டமான இவலீன்ரீட் கருத்தாக்கங்களை அற்புதமாகவும் தரவுகளுடனும் தோலுரித்திருப்பார்  அவர்.

ஆனால் இந்த புளகாங்கிதக் குஞ்சான முருகவேள், அதையும் செய்யவில்லை. அல்லது கேதி வைலி அவர்கள் தம் இளம்வயதில் (1973)  எழுதிய சிறு ஆவணத்தையாவது படித்திருக்கலாம்.

அந்த ஒரு சிறு எழவையும் செய்யவில்லை.

தேவையா? வரிக்கு வரி உளறல் – இவலீன் உளறிய அபத்தக் களஞ்சியம் போதாது என்று, ஊக்கபோனஸ்ஸாக, தன்னுடைய உளறலையும் உலவ விட்டிருக்கிறார், இந்த முருகவேள்.

இந்த அற்ப முருகவேள் ஆளின் உளறல்களையும் புளகாங்கிதத்துடன் உயர்த்திப் பிடிக்கிறார்கள், வேறு வழியில்லாத, போக்கற்ற அக்கால இடதுசாரிகள். படுகேவலம். (இப்படித்தான் இந்தக் குறிப்பு எழுத நேர்ந்த முகாந்திரம் ஏற்பட்டது)

டேய்! நீங்கள்ளாமாடா இந்தக் கழுதைங்களுக்கு வால் புடிக்கிறீங்க? வொங்க்ளுக்கெல்லாம் என்னடா ஆச்சு?? தெராவிடன்களோட சகவாசம் வொங்கள இப்டீ காயடிச்சிருச்சாடா? திமுக கிட்ட அதிகாரப் பிச்சை கேட்டுகேட்டே நீங்க்ளும் அவ்னுங்க மாரியே தற்குறியாய்ட்டீங்க்ளேடா!!

-0-0-0-0-

மார்க்ஸிஸ்ட்களைப் பற்றி உளறிக்கொட்ட, சர்வ நிச்சயமாக தோழர் முருகவேள் போன்ற தோழர் அரைகுறைகளுக்கு, உரிமையிருக்கிறது – ஆனால் சந்தடிசாக்கில் அநியாயமாக, எம் சாச்சா நேருவைப் பற்றியும் குறை சொல்லும்போதுதான் பிரச்சினையாகிவிடுகிறது…என்ன செய்ய, சொல்லுங்கள்?

அதனால்தான் இந்தப் பதிவு. (நமக்கு, நம் பாரதத்தில் பெரும் பிரச்சினைகள், இந்த அறிவிலித் துதிபாடிகள்; நேருவை அநியாயத்துக்கு, ஒருமசுறு தொடர்புமில்லாமல் தரவுகளே இல்லாமல் புகழ்வது/சிலாகிப்பது என்பது குடிசைத் தொழிலாகிக் கொண்டு வருகிறதை நினைத்தால்… …)

…என் பிலாக்கணம் ஒருபுறமிருக்க – இரக்கமோ கூச்சமோ இல்லாத தண்டக் கருமாந்திரனார் முருகவேளார், படுதெகிர்யமாக இப்படியொரு போடு போடுகிறார்.

” இந்தியாவிலும் இதே நிலைதான்.

நேரு காலத்தில் புதிய நகரங்கள் அமைக்கும் போது குடும்பத்தொழிலுக்கு என்று ஒரு அறை வைக்க வேண்டும் என்று வடிவமைக்கப்பட்டது. பின்பு அது கைவிடப்பட்டு மாடர்னிச கட்டடக் கலை அடிப்படையில் ஏழை மக்களுக்கு ஒற்றை அறை வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. “

அப்படியா என்ன? இம்மாதிரி அட்ச்சிவுடுவதற்கு ஒருதரவாவது கிடைக்குமா?

நேருகாலத்தில் புதிய நகரம் என ஒரேயொன்றுதான் வடிவமைக்கப்பட்டது – அதுதான் அந்த நகைச்சுவையான சண்டிகட் நகரம்.

மேற்கத்தியவிஷய மோகியான ஜவாஹர்லால் நேரு, முதலில் இருந்தே, இந்தியக் கூறுகள் ஒன்றையும், பாரம்பரியமான எதனையும் அது கொண்டிருக்கக் கூடாது எனத்தான் மிகக் கண்டிப்பாக இருந்தார். இது, அதன் வடிவமைப்பாளரான(!) ‘ல கார்புஸியெ’ அவர்களுக்கும் மிகவும் ஒத்து வந்தது. ஆகவே: அதன் வடிவமைப்பில் ஏழைபாழைகளுக்கு என வீடுகள் எனும் விஷயமே துளிக்கூட இல்லை…

சண்டிகட் பெயரில் இருக்கும் சாண்டி என்பது அதற்குப் பக்கத்திலிருந்த கிராம பாஞ்ச்குலாவின் பிரசித்தி பெற்ற ‘சாண்டி’ என்பதைத் தவிர, அந்த நகரத்துக்கும் பாரதப் பாரம்பரியத்துக்கும் ஒரு ஸ்நானப்ராப்தி கூட இல்லை; தொடர்பேயிருந்திருக்கவில்லை.

இந்த அழகில்… குடும்பத் தொழிலுக்காகத் தனியறையாம் மசுத்தைச் சிரைப்பாம்…போங்கடே!

கருக்குடும்பமாம் கூட்டுக்குடும்பமாம், என்ன திமிர்? அறிவிலிகளுக்கே உரிய முட்டாள் தெகிர்யம்… கடுப்பாக இருக்கிறது.

எது எப்படியோ… (இந்த நேருவிய சண்டிகட் தமாஷ் பற்றி இன்னொரு சமயம் விரிவாகவே எழுதவேண்டும் – இவை பற்றித் தமிழில் ஆவணப்படுத்தவேண்டும் – ஆனால் தமிழில் எழுதினால், நான் ஒருவன்தான் அதனையும் படித்து இறும்பூதடையவேண்டும்; ஆகவே, ஆங்கிலம்?)

-0-0-0-0-

…ஒருவேளை, தப்பித் தவறி, திமுக ஆட்சி வந்த பின்னர், கம்யூனிஸ்ட் லீலாவதியை (இவராவது நன்மை செய்ய முயன்றார், பாவம்) திராவிடர்கள் கழித்துக் கட்டியது போலவே இவர்களைப் போன்றவர்களுக்கும் – அற்ப அறிவிலிக் குஞ்சாமணிகளுக்கும் – நன்மைசெய்தால் தமிழில் மிச்சம்மீதி இருக்கும் அறிவுலகம் பிழைக்கும் என நினைக்கிறேன்.

வேறு வழியில்லை.நம் தமிழகத்தின் தலைவிதி அப்படி.


8 Responses to ““நேரு காலத்தில் புதிய நகரங்கள் அமைக்கும் போது குடும்பத்தொழிலுக்கு என்று ஒரு அறை வைக்க வேண்டும் என்று வடிவமைக்கப்பட்டது!””

 1. anon Says:

  //வயதான சொகுசு இடதுசாரிகளும் பாவம், நேருவியஸோஷலிஸ்ம் பக்கம் ‘தாராந்து பூட்டார்கள்.’

  patchirajan?


  • erm, Sir, No.

   Actually (I think) his first name is Ananthakrishnan and his appa’s name is Pakshirajan – NOT patchirajan.

   In any case, this has no reference to him; it is a bunch of other guys. I do not know anything about him now or am even interested – have got other worse things to do anyway.

   bfn.

 2. anon Says:

  then what about your peacock?


  • Look, ‘anon’ – now you are testing my patience. (just because I tend to be generally polite and am for friendly ribbing…)

   What about peacock? Whaddaya mean??

   When I checked BCAKN last, he was a good ol’ madhwa sanatani – not a Nehruvian-Socialist. Regardless of whether I agree with him or not, he is also a bright fellow in general and I do not think, he has the inclination to chase after category1 nincompoops like your freakin’ Comrade Era Murugavel.

   Look. I do NOT like this cryptic nonsense and fishing. So please FO.

 3. anon Says:

  :-( Read this please


  • Okay, chum. Understood now. Apologies for asking you to FO.

   (It hurts me, but he has the right to do whatever he wants to do, including not being consistent – as is also applicable to yours truly; however, I will be careful from now onwards, whoever/whatever the source is.

   In my defense(!), but he merely forwards the trash, saying: “A post worth reading. Something to think about” etc.

   Hence, I can’t really rule out the possibility of him being tongue-in-cheek, oh the hope!)

 4. Raj Chandra Says:

  பாருங்க…அந்தம்மா வெள்ளைக்கார அம்மணி…பொய் சொல்லமாட்டாங்க…அவ்வளவுதான் இந்த இந்திய அடிமையான  எனக்குத் (இந்த “எனக்கு” நானாகிய ராஜ் சந்திரா) தெரியும் :))


  • 🙏🏿

   ஸரீங்க. வொங்க ஊர்ல ‘ஃபேர் அண்ட் லவ்லீ’  சருமப்பசை, பல்க் டிஸ்கவுண்டில். ஆஃபரில் அப்டியே அள்ளிக்கறமேரீ கெடக்யுமா?

   அப்டீ கெட்ச்சா, எனக்கு  ஒரு மாஸ்த்துக்கு ஆவ்றாமேரீ ஒரு டன் அன்பளிப்பா கொடுக்றீங்க்ளா? (நீங்க்ளும் வாங்கி பூஸிக்குங்க ஸெரியா?)

   😭

   ணந்ரீ.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s