முக ஸ்டாலின்: “கங்கணா ரனௌத் அவர்களே வருக! நிலையான ஆட்சி தருக!!”

24/03/2021

மிகவும் படுபிஸியாக இருப்பதால், இளம் கங்கணா ரனௌத் அவர்கள் நடித்திருக்கும் ‘தலைவி’ படத்துக்கான முன்னோட்டத்தை முன்னோட்டங்களைப் பார்த்தேன் (ஹிந்தி + ஆங்கிலம்/தமிழ் ) – நான் பார்க்கப் பார்க்கவே,மேலதிகமாக லட்சக் கணக்கில் மக்கள் அலைமோதி இதனைப் பார்த்திருக்கிறார்கள்!

ஒரு ட்ரெய்லருக்கு இவ்ளொ பில்ட்அப்பா எனப் பார்த்தாலும், ஆச்சரியமாக இருக்கிறது.

ஜெயலலிதா இப்படியா கங்கணாவேடத்தில் குணசித்திர நடிகையாக இன்னமும் மிளிர்கிறார், எனவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!

…பார்க்க ஆரம்பித்தேன் – பார்த்துக்கொண்டே இருந்த ரெண்டுமூன்று நிமிடங்களிலேயே இன்னமும் லட்சம்பேர் அதே விடியொக்களின் மேல் விழுந்ததினால், என்னுடைய பாவப்பட்ட இணையத் தொடர்பு கொஞ்சம் திக்குமுக்காடித் திணறிவிட்டது, பாவம்… இருந்தாலும், இது வாழ்வா-திராவிடமா பிரச்சினையாதலால், விடாமுயற்சியுடன் தொடர்ந்தேன் – ஒருவழியாக, முழுமையாகப் பார்த்துக் கண்டுகளித்தேன்.

பிறகு இன்னமும் படுபிஸியாக, என் வீட்டிலேயே தனியாக ரூம்பு போட்டுக்கொண்டு, மேலதிகமாக யோசித்தேன் – இதன் தாக்கங்கள், பிற்காலத்தில் எப்படி உருவாகலாம், நம் திராவிடத் தமிழ் அரசியலை இன்னமும் பழையமாதிரியே ஒரு உருட்டு உருட்டலாம் என…

ஆகவே – எனக்கு நான்கு விஷயங்கள் நடக்கலாம் எனப் படுகிறது.

-0-0-0-0-0-

#1. திராவிட முக ஸ்டாலினுக்கு இதனால் பேதி எடுத்து, வடவ ஆரிய நச்சரவ பிஹாரி பார்ப்பன ப்ரஷாந்த்கிஷோர் அறிவுரைப் படி தன் இருகால்களையும் போர்க்காலரீதியில் உண்மையாகவே உடைத்துக்கொண்டு, முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டு (தன் தகப்பனுக்கும் ராசியான) தள்ளுவண்டியில் உலா வந்து ‘ஸிம்பதி’ வகைப் பரிதாப ஓட்டு வாங்க முயற்சிக்கலாம்.

(ஆனால், வாக்காளர்கள் அதிருப்தி அடைந்து, “…ங்கொய்யால டேய்! ஏண்டா பொம்ப்ளேபொற்க்கீ!  வெட்டியா ரெண்டு காலை மட்டும் வொட்ச்சிக்கினுகீரே, ரெண்டு கை மேல கீதே, மண்டே கீதேடா முண்டம்! அதுங்க்ளயும் வொட்ச்சிக்கினு வா! அப்பால பாக்கலாம்!” எனவும் அறிவுரை தரலாம். இது பெரும்பிரச்சினை!)

#2. அஇஅதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று, ஆட்சி ஏற்கும் விழாவுக்கு கங்கணா அவர்களை அழைத்து கௌரவிக்கலாம். முக ஸ்டாலின், தன் தந்தை காட்டிய வழியில், தமிழர்களை, ‘வாழைமட்டை, நன்றியற்றவர்கள், நாங்கள் கொடுத்தகாசுக்கு மேற்பட்டு வாங்கிக்கொண்டு விலைபோய்விட்டார்கள்…’ என வாழ்த்தலாம்…

#3. திமுக திராவிட மசுரிழையில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்து – தமிழகத்தை லெமூரியகாலத்துக்கு ஓட்டிச் சென்று, சட்டி பானை ஓட்டைஉடைசல்களுடன் (இங்கு உங்களுக்கு விட்தலே சிற்த்தே திருமாவளவளவன் அவர்கள் நினைவுக்கு வந்தால்

அதற்கு அவர் பொறுப்பல்லர்) பொட்டல்காடாக்கியபின்… + நம் சகதமிழர்களைத் தவிக்க விட்டுச் சென்றவுடன்… கங்கணா ரௌனத் அவர்கள், நம்மீது இரக்கம் கொண்டு தமிழகத்துக்கு வந்து  ‘பெரும்புரட்சித் தலைவியாகி’  அஇஅதிமுகவை வெற்றிப் பாதையில் இட்டுச் சென்று 2026-தேர்தல்களில் வென்று, கட்சியையும் தமிழகத்தையும் ஒருங்கே மேலெழும்பச் செய்யலாம்.

#4. ஆனால்;  #2 நடந்து, ஆக, முக ஸ்டாலின், ஆக, பேஸ்தடித்துக்கொண்டு நின்றால், அவருக்குத் தோன்றலாம்… “2026 வாக்கிலாவது தாம் துணைமுதல்வர் + தம் மகன் துணைத்துணை முதல்வர் என ஆக முடியுமா என முயற்சிக்கலாமா?” … அதற்காக, கங்கணா ரானத் அவர்களிடம், அவர் திராவிடத்தனமாக நிபந்தனையற்றுச் சரணாகதி அடைந்து, கங்கணா தம் கட்சியில் சேர்ந்தால், அவரையே முதல்வராக்கும் படிக்கு என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்து, அவர் காலில் விழுந்துபுரண்டு மன்றாடலாம்… ‘எத்தைத் தின்றால், பித்தம் தெளியும்’ வாதத்தை உரக்க உபயோகிக்கலாம்.

இதற்கும் – பெரும் எத்தன், தன் தகப்பன் கருணாநிதி  செய்ததை அப்படியே காப்பி-பேஸ்ட் செய்ய எத்தனிக்கலாம்…

ஆக. முக ஸ்டாலின்:

“கங்கணா ரனௌத் அவர்களே வருக! நிலையான ஆட்சி தருக!!”

(ஆனால் கங்கணா அவர்கள், அப்பதவியை ஏற்றுக்கொண்டு, முழு திமுக (அதாவது அதுவரை முழுவதும் கலையாமல், ஆனால் ஏகத்துக்கும் கலகலத்து நிற்பது என்றறிக) கட்சி ஏழவையும் கலைத்தும் விடலாம் – அப்படிப்பட்ட பராக்கிரமம் மிக்கவர் அவர்!)

-0-0-0-0-

எனக்கே இப்போது குழப்பமாக இருக்கிறது.

என்னவாகப் போகிறது, இந்தத் தேர்தல்?

(ஆனால் படுகேவலமான திராவிட/இடதுசாரி/காங்க்ரெஸ் அரசியலில் எதுவுமே சாத்தியம்தான்!)

One Response to “முக ஸ்டாலின்: “கங்கணா ரனௌத் அவர்களே வருக! நிலையான ஆட்சி தருக!!””

 1. Em Says:

  I watched the trailer too. Kangana has no physical resemblance to her but manages to convey the powerful presence of JJ.

  In spite of being in films, in my opinion, Jayalalitha was one of the few who did not indulge much in cringe-y theatrics like most politicians in Tamilnadu. She was non-whiny(is that a word ?), calm and collected most of time.
  (Disclaimer. I don’t know about her, She just seemed that way to me. I had seen her once for 2 minutes when she came to attend some meeting – I was a 8 year old then) .

  Btw, with Stalin’s proclivity to massacre Tamil with phrases like “Poonai Mel madhil and Thengai pulichadho” imagine what he will do to Kangana Ranaut’s name.
  He will probably call her Renganna Kanaut and then it will trend and everyone will call her by that name and she will have to live with that.

  Penn paavam vendaam aiyaa…


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s