தமிழகத் தேர்தல்கள்: நான் மதிக்கும், கொங்கு நாட்டிளைஞர் ஒருவரின் பார்வை

26/03/2021

ஐயா, எங்களது தொகுதி வாக்காளர்களின் எண்ணிக்கை சற்றேறக்குறைய 2.2 இலட்சம்.

நான் கட்சிக்காரர்களுடன் சென்று வாக்கு சேகரிப்பதில்லை. ஆனால் எனக்குத் தெரிந்தவர்கள்/மாணவர்களுடன் தொடர்ந்து பேசிவருகிறேன்.

இங்கே ‘தீராவிடச் சித்தாந்தக் குறளிவித்தைகள்’ விலை போகாது, பிரச்சார பீரங்கிகளேகூட தங்களைப் பக்திப்பழமாகக் காட்டிக்கொள்ளவே முயல்வார்கள். எம்ஜியார்/ஜெயலலிதா கட்சி/சின்னம், அண்ணா/கருணாநிதி கட்சி/சின்னம் என்ற அபிமானம் கொண்ட மூத்த தலைமுறையினர் உள்ளனர். ஆனால், சுடலையாரைத் தலைவராக ஏற்க பெரும்பாலான திமுக அனுதாபிகளே தயாரில்லை, அதிலும் அவரது மகர் தடால் தலைவர் விடலைநிதியை விரலை மிஞ்சிய வீக்கமாகவே பார்க்கிறார்கள்.

இரு பிரதானக் கட்சிளுக்கும் கிட்டத்தட்ட சமஅளவிளான வாக்கு வங்கி உண்டு. நடுநிலை/இளைய தலைமுறை வாக்காளர்களே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பார்கள். 400 முதல் 800 வரை (கட்சிக்கணக்கில் 1000/1500 எழுதிவிட்டு) வாய்க்கரிசி போடுவார்கள் என நினைக்கிறேன். போட்டி கடுமையாக இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.

கடன் தள்ளுபடி, அடிப்படை வசதிகள், எரிபொருள் விலை, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு/நீட் தேர்வு/இட ஒதுக்கீடு ஆகியவை இங்கே பேசுபொருளாக இருக்கும். கடந்த பாராளுமன்றத் தேர்தலில், நிறைவேற்றவே முடியாத பொய் வாக்குறுதிகளை அள்ளிவிட்டு திமுக வென்றது. ஆனால் அவற்றில் ஒன்றைக்கூட நிறைவேற்றாமல் போனதற்கும், சூரியனுக்குக் கீழே உள்ள இன்னபிற பிரச்சினைகள் அனைத்திற்கும் காரணமாக ‘மோடி’ என்ற ஒற்றைச்சொல்லையே திமுக கூட்டணி ஜபித்து வருகிறது.

அதுமட்டுமின்றி, சீமார், கமலகாசனார் ஆகியோரும் இரைச்சலை உருவாக்கி வருகிறார்கள். இணையத்தில் வளையவரும் இளைஞர்களிடையே இது ஓரளவிற்கான கெபல்ஸ் விளைவை உண்டாக்கியிருக்கிறது. தொடர்ந்து நடைபெற்றுவரும் மோடி/பாஜக வெறுப்பு பிரச்சாரம், ஒரே கட்சியை தொடர்ந்து ஆட்சியில் அமர்த்தக்கூடாது என்ற எண்ணம், திமுகவின் உண்மை முகம் தெரியாமல் உள்ளூர் வேட்பாளர்களைக் கொண்டு கட்சியை மதிப்பிடுதல் ஆகிய காரணிகள் திமுகவிற்கு சாதகமாக அமையலாம்.

இவையனைத்தையும் தாண்டி, திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முதலுக்கே மோசமாகிவிடும் என்பதை உணர்ந்து மக்கள் இந்த நாசகாரக் கும்பலை ஒழித்துக்கட்டுவார்கள் என்பதென் அனுமானம், பார்ப்போம் ஐயா.

-0-0-0-0-0-

11 Responses to “தமிழகத் தேர்தல்கள்: நான் மதிக்கும், கொங்கு நாட்டிளைஞர் ஒருவரின் பார்வை”

 1. nparamasivam1951 Says:

  திமுக வென்றால தமிழ்நாடு 10/15 ஆண்டுகள் பின் நோக்கி கொண்டு செல்லப்படும்.


  • ஐயா, சர்வ நிச்சயமாக…

   ஆனால் – வாக்குறுதிகளை வைத்துச் சொல்லப் போனால்,  அ இ அ தி முக-காரர்களும் சளைக்காமல் பின்னோக்கிக் கொண்டுசெல்வார்கள் எனத்தான் படுகிறது.

   ஆனால் நிலைமை போதுவாக கவலைக்கிடமாக இருக்குமேதவிர, திமுக+ பொறுக்கிகள் ஆட்சிபோல (சொந்தக்காரர்களுக்கு வாட்ஸ் அப் மெஸ்ஸேஜ் அனுப்பிவிடவேண்டிய நிலைமையில்) இருக்காது என நினைக்கிறேன்.

   மாற்று எங்கிருந்து வரும்?

   • தீராவிடக் கூவான் Says:

    தமிழகத்தின் பெரிய கட்சிகளில் ஒன்றாக திமுக இருப்பதும், அதனுடன் போட்டியிடும் நிலையில் அஇஅதிமுக இருப்பதும் துரதிர்ஷ்டம்தான் ஐயா. தமிழ் சினிமா கதாநாயகத் தரத்தில் தேர்தல் (அண்டபுளுகு) அறிக்கை விடுவதில் திமுக-தான் முன்னோடி என்றாலும், அதற்கு மாற்றாக உருவான அஇஅதிமுக-வும் அதை அடியொற்றி நடக்கும் நிலையிலிருப்பது பெருந்துயரமே.

    திமுக ஒரு ‘தீயசக்தி’ என அக்காலத்திலேயே மிகச் சரியாக அடையாளப்படுத்தினார் எம்ஜியார், அதைத் தொடர்ந்து நிரூபித்து வந்திருக்கிறது திமுக. தர்க்கரீதியாகப் பார்த்தால் திமுக துப்புரவாக ஒழிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சுடலையார் போன்ற ஒருவரை முதல்வர் வேட்பாளராக்கியதோடன்றி, விடலை உதைநிதியையும் களமிறக்கி தமிழகத்தின் தரம் எங்கிருக்கிறது எனக் காட்டி வருகிறது திமுக. இனியும் மக்கள் வாளாவிருந்தால், தமிழகத்தில் வாழவே முடியாத நிலை உண்டாகும்.

    திமுக ஏன் வேரடி மண்ணோடு களையப்பட வேண்டுமென்பதற்கான முதன்மைக் காரணங்களில் இந்தக் ‘கதாநாயகத் தேர்தல் அறிக்கை’ கயமையும் ஒன்று. ஐந்தாண்டு ஆட்சியில் ஆடும் கோரத்தாண்டவங்கள் அனைத்தையும் இலவசங்கள்/புளுகுகள் மலிந்த தேர்தல் அறிக்கை மூலம் திரையிட்டு மறைக்க முடியுமென்பதை நிறுவியது திமுக. விளைவாக, இலவசங்கள் இல்லாமல் தேர்தல் இல்லை என்ற நிலையில் இருக்கிறது தமிழகம்.

    இதுவரை திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதுண்டா? உதாரணமாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், கடன் தள்ளுபடி வாக்குறுதி மூலம் எண்ணற்றோரை கடனாளிகளாக்கி ஏகோபித்து வென்ற திமுக இன்றுவரை செய்ததென்ன? அவர்கள் அறிவித்த தள்ளுபடிகள் நடைமுறையில் சாத்தியம்தானா? சாத்தியம்தானென்றால் இதுவரை செயல்படுத்தாதது ஏன்? சாத்தியமில்லையென்றால், மக்களை மூடக்களாக்கிவரும் இதுபோன்ற புளுகர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம்தான் என்ன?

    கொள்ளைப்பணத்தைக் கொட்டி அடுத்தடுத்து படைத்த திரைக்காவியங்களில் சந்தானம் என்ற நகைச்சுவை நடிகன் மற்றும் இன்னபிற நடிகைகள் சிலருடன் ஒட்டிக்கொண்டு தனது வசீகர முகத்தை மக்கள் மனதில் பதித்த உதைநிதி (தனது தாத்தா/தந்தை வழியில்) தான் ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றார். ஆனால், கணநேரத்தில் கட்சியின் எதிர்காலமாகி, தாத்தா வயதிலிருக்கும் மூத்த தலைவர்களை தனது அடியாட்களாக்கி விட்டாரென்றால், வாய்கிழிய சமத்துவம் பேசும் திமுக-வில் நடப்பதென்ன?

    குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள், தொழிலதிபர்கள் மற்றும் இன்னபிற பினாமிகளின் பெயரில் இங்கே பதுக்கியவை போக வெளிநாடுகளில் பல லட்சம் கோடிகளைப் பதுக்கியிருக்கும் திமுக வேட்பாளர்கள் பிரமாண பத்திரத்தில் காட்டியிருக்கும் சொத்து மதிப்பு என்ன?

    இன்றைய தமிழகத்தின் கல்வித்தரம் எங்கிருக்கிறது? தேசிய/சர்வதேச அளவில் நமது மாணவர்கள் போட்டியிடமுடியாமல் திணறுவது எதனால்? கல்விக்கூடங்களின் தலைமைப் பதவிகள் உட்பட எங்கெங்கும் திமுக குண்டர்கள் அமர்த்தப்பட்டபின் கல்வித்தரம் பாதாளத்தில் வீழ்ந்தது தற்செயல்தானா?

    இதுவரை, திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருந்திருக்கிறது? அச்சமின்றித் தொழில் நடத்துவது சாத்தியமா? குறைந்தபட்சம்
    மக்களின் உயிருக்கோ உடைமைக்கோ திமுக ஆட்சியில் உத்தரவாதம் உண்டா?

    பெரும்பாலான தமிழ்த் திரைக்கதை கற்பனைகளைத் தாண்டிய கட்டுக்கதைகளை வில்லன்களை விஞ்சும் தொனியில் உண்மைபோலவே அவிழ்த்துவிடும் சீமார், தான் செய்வது இன்னதென்றறியாமல் தடுமாறும் நிஜப்போலி முற்போக்கு பஹூத்தறிவாளர் கமலகாசனார் ஆகியோர் அரசியல் மாற்றாக வரத் தகுதியானவர்களா?

    இப்படி இன்னும் எண்ணற்ற கேள்விகள் நம் முன்னே உள்ளன, அனைத்தையும் எழுத பல பதிவுகள் தேவைப்படும். வாக்களிக்கும் முன்னர், குறைந்தபட்சம் இந்த அடிப்படைக் கேள்விகளை நம்மை நாமே கேட்டுக்கொண்டால் யாருக்கு வாக்களிக்கவே கூடாது என்பது புலப்படும். தற்சமயம் தமிழகத்தின் அத்தியவசியத் தேவையது.

 2. ram Says:

  Please list accomplishments of Modiji in this and previous terms for Tamilnadu. Then we will talk further :D


  • “The minFraud Score service has identified IP address as likely to be higher risk. It’s possible that activity from this IP is fraudulent.”

   • ram Says:

    😂 ஒன்னும் இல்லை அதானே


    • இல்லை. நிறைய, பலப்பல இருக்கின்றன, நானே ஒன்றிரண்டை இப்பதிவுகளில் எழுதியிருக்கிறேன்.

     ஆனால், உங்களைப்போன்ற கண்டகண்ட தறுதலைக் கழுதைகளுடன் நேரத்தை வியர்த்தம் செய்யவிருப்பமில்லை, அவ்வளவுதான், நன்றி!

     • ram Says:

      (பலப்பல இருக்கின்றன.)

      அதை சொல்லுங்களேன் கேட்போம்.
      ஏன் திட்டறீங்க? No tension please :)

      • ram Says:

       (activity from this IP is fraudulent.)

       கேள்வி கேட்ட fraudulent :) :)
       என்ன சார் இருக்குறது புது இந்தியா போல :D

 3. RC Says:

  அன்பு ஐயா,
  என் தனிப்பட்ட அபிப்பிராயம்:(மதுரைக்கு கீழே)
  நாடார்,பிள்ளை,கோனார் ++ சமூக ஓட்டுக்கள் ரெட்டலைக்கு கடினம்.வேட்பாளர் தேர்வு,தினகர+தேவேந்திர பாதிப்பு.கொங்கு மண்டலம் காப்பாத்தினா உண்டு சார்.
  இதற்கு மேல் டம்ளர்எபக்ட் வேறுண்டு சிறியளவில்.
  எங்க தொகுதில நண்பனின் மனைவி போட்டி :-) அண்ணன் சீமார் சின்னத்தில்.
  இவரு வோட்டு சதவிகிதம் 4%லிருந்து 10% ஆகிடும் போல சார்.


  • ஐயா, நன்றி. (கலக்கமாக இருக்கிறது)

   இரு ‘விஷயம் தெரிந்த ஆசாமி’களுடன் இந்த வாரம் பேச வாய்ப்புக் கிடைத்தது – அந்த உரையாடல் சாராம்சத்தை எழுதி, நானும் என் பங்குக்கு கலவர நிலையை ஊட்டுகிறேன்.

   இந்தச் சீமார் பற்றி: ஹிட்லர், துருக்கியின் ஏர்டொவன் போன்றவர்கள் எப்படி வளர்ந்தார்கள் எனப் படித்திருக்கிறேன்; ஏறத்தாழ அவர்கள் வளர்ந்ததும் இதே நாம்தமிழர் பாணியில்தான். (முன்னொரு சமயம், ‘இந்த நாம் தமிழர்கள் மெதுவாக வளர்வார்கள், கிராமப் புறங்களில் வளர்ச்சியிருக்கும், ஆகவே அவர்களைக் குறைத்து மதிப்பிட முடியாது…’ என எழுதினாற்போல் நினைவு – இங்கா அல்லது வேறெங்கோ…)

   பார்க்கலாம். (எனக்குக் கடவுள் நம்பிக்கை மீண்டும் வந்துவிடும் போலவிருக்கிறதே!)


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s