தமிழகத் தேர்தல்கள் குறித்த நம் புரிதல்கள் – குறிப்புகள்

27/03/2021

1

தமிழகத்தில் ஒருவிதமாக முக்கியப் பொறுப்பு ஒன்றில் இருக்கும் – படுநேர்மையாளரும், தைரியசாலியும், ‘செய்து காட்டுபவரும்’ ஆன,  தொழில்முறையிலும் தனிப்பட்டவிதத்திலும் பரந்த நட்புவட்டத்தைக் கொண்ட அத்யந்த நண்பர் ஒருவருடன்  விலாவாரியாக ஒரு வளவளா.

சென்ற ஞாயிற்றுக் கிழமை அவரிடம் இருந்து திடுதிப்பென்று அழைப்பு வந்தபோது… it was such a pleasant surprise!

பொதுவாகவே, நான்,  சும்மாசும்மா யாருடனவாவது பேசிக்கொண்டிருப்பதை, வெட்டித் தொலைபேசி  உரையாடல்களை விரும்புவதில்லை – அவர்கள் யாராக இருந்தாலும் சரி; அவற்றை. முடிந்தவரை தவிர்ப்பேன். அப்படியே செய்யவேண்டுமென்றால், முன்னமே குறுஞ்செய்தி அப்படியிப்படி என அனுப்பிவிட்டுத்தான், அவர்களுக்கும் அவகாசம் இருக்கிறதா எனப் பார்த்துக்கொண்டுதான் செய்வேன்…

மேலும்: பெரும்பொறுப்புகளில் உள்ளவர்களை – எனக்கு ஓரளவுக்கு மிக நன்றாகவே அறிமுகம் இருந்தாலும், சும்மா ஃபோன் போட்டோ, மின்னஞ்சல் அனுப்பியோ அல்லது ஏதாவது பரிந்துரை கொடுத்து கெடுபிடி செய்தோ கலக்கம் கொடுக்கமாட்டேன், அவர்கள் பெயர்களைக் குறிப்பிடமாட்டேன், சங்கடத்தில் ஆழ்த்த மாட்டேன்.

எனக்குப் பெரும்பிரச்சினைகள் வந்தாலும் (தனிப்பட்ட முறையில் அல்ல, நான் ஈடுபாட்டில் இருந்த பள்ளிகள் தொடர்பாகவுமே கூட) அவர்களை அணுகாமல் நானாகவே தீர்த்துக்கொள்ளத்தான் விருப்பப் படுவேனே தவிர ‘எனக்கு யாரையெல்லாம் தெரியும், தெரியுமா’  (அல்லது ‘Tu jaanta nehin mera baap kaun hain’ – என் அப்பன் யார் தெரியுமா?) எனப் பேடித்தனமாகப் பேசமாட்டேன்; இதனால் எளிதில்  ‘பெரிய மனிதர்களால்’ தீரக்கூடிய பிரச்சினைகள் கூட, பெரிதாக ரூபமெடுத்து பிரச்சினை கொடுத்திருக்கின்றன;

இம்மாதிரி விஷயங்களுக்கு அவர்களை அணுகாமல் இருந்ததற்கு அவர்கள் கோபித்துக்கொண்டிருக்கிறார்கள்கூட – ஆனால் என்னைப் பொறுத்தவரை, இவையெல்லாம், இம்மாதிரித் தொடர்புகளெல்லாம், என் தகுதிக்கு மீறிக் கிடைத்திருக்கும் விஷயங்கள்/ஆயுதங்கள் – அவற்றை, எக்காரணம் கொண்டும் சுயகாரியங்களுக்காக, சுயலாபத்துக்காக அல்லது சிறுவிஷயங்களுக்காக உபயோகப் படுத்தி அவற்றைக் கேவலப் படுத்தமாட்டேன். (நான் திராவிடனல்லன் மேலும் இடதுசாரி-லிபரலுமல்லன் என்பதும், என்னை யாராவது அடித்தால், ‘அவன் என்னை அடிக்கிறான், மிஸ்’ எனப் பிறரிடம் அழுதுகொண்டே ஓடுவதும் பிடிக்காது என்பதும் எனக்கு வசதிதான்)

2

ஊக்க போனஸாக,இந்த  வியாழக்கிழமையன்று இன்னொரு பழைய அன்பருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் பழைய ஐஎன்டியுஸி ஆள்,  இருந்தாலும் நேர்மையாக இருந்த ராமானுஜம் போன்றவர், பழுத்த தலைவர். மூப்பனாருக்கும் நண்பர், ஆனால் கொஞ்சம் இளையவர்.

மூப்பனாரும் கருணாநிதியும் இணைந்த பைத்தியக் கார சந்தர்ப்பவாதக் கூட்டணியின்போது, ஆனால் 1996 லோக்சபா, தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பின்  – காங்க்ரெஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் கார்டையும் விட்டெறிந்தவர்.

ஏன் இந்தக் கூட்டணி மோசமான விஷயம்?

1. ஏனெனில் தங்களுடைய ஊழல்களைப் பரஸ்பரம் எதிர்க்காமல் (அதாவது, கருணாநிதி அளவுக்கு மாபெரும் அளவில் இல்லாவிட்டாலும், மூப்பனாரும் ஊழல்வாதியே! இருந்தாலும் பின்னவருக்கு விமோசனம் சாத்தியமாகவே இருந்தது), அதைப் பற்றி ஒரு பேச்சுகூடப் பேசாமல் – கமுக்கமாக அமைக்கப் பட்டது அது. ஜெயலலிதாவை எதிர்கொள்வதற்காக மட்டுமே அமைக்கப்பட்டதொன்று – ஆனால் அரசியல் என்று வந்தால் இது சகஜம் என எடுத்துக் கொள்ளலாம்.

2. கருணாநிதி மூப்பனாருக்கு எதிராக, அவர் பிரதமராக வந்திருக்கக் கூடிய காத்திரமான சந்தர்ப்பத்துக்கு எதிராகப் படுஅசிங்கமாகக் குழி பறித்ததை (ஒரு முறையல்ல, இருமுறை!) ‘மறந்து விட்டுத்’ தொடர்ந்தது அக்கூட்டணி. ( அதுவும், அந்த அயோக்கிய ப.சிதம்பரம் மூப்பனாருக்கு எதிராகவும், கருணாநிதிக்கு ஆதரவாகவும் இதில் உதவியதை நாம் மறக்கக் கூடாது. முக்கியமாக, இரண்டாம் முறை அந்த வாய்ப்பு மூப்பனாருக்குக் கிட்டியபோது – அதனை எதிர்த்து, மாறாக தேவகௌடாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதில் இந்தக் கதர்ப் பதரின் அயோக்கியம் அதிகம்!)

3. ஸ்டாலின்-கருணாநிதிகளின் வக்கிரமான காங்கிரஸ்தலைவர்களுக்கு எதிராகப் பேசிய ஆபாசக் குவியல்களைக் கண்டுகொள்ளாமல் அமைக்கப் பட்ட, வெற்றி பெற்று, கொஞ்ச நாள் ஒப்பேற்றப்பட்டுப் பின்னர் உடைந்த கூட்டணி அது.

4. இதனால் பலப்பட்டது திமுக தான்! இழி நிலைக்குத் தள்ளப்பட்டது மூப்பனாரின் தமாகா!

5. ஜெயலலிதாவும் திராவிடரே. ஆக, அவர் ஊழல்வாதியாகவும் திகழ்ந்தது ஆச்சரியமில்லை. ஆனால், ஊதிப்பெருக்கப்பட்ட ‘ஜெயலலிதா ஊழல்’ பரப்புரைதான் இக்கூட்டணிக்குக் காரணம்.

…சொல்லப்போனால், அந்தக் கூட்டணி(!)க்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்த சமயத்தில் ஓரிருமுறை அண்ணா அறிவாலயத்துக்கும், சில ஐஎன்டியுஸி  சார்பு நண்பர்களுடன் சென்றிருந்தேன். துக்ளக் ‘சோ’ அவர்கள், கருப்பையா மூப்பனாருக்குப் பிரத்யேகமாக 1) கருணாநிதியுடன் கூட்டுசேரவேண்டாம், அது உங்களை அதோகதியாக்கி விடும் 2) தனியாகவே நின்றாலே கணிசமாக வெல்லலாம், கட்சியையும் நீண்டகால நோக்கில் வளர்க்கலாம் என்று அறிவுரை சொன்னாலும், அதைக் கேட்காமல், மூப்பனார் அங்கு திமுக கருணாநிதியிடம் போய் விழுந்தார் என்பதையும் அறிவேன்…. (இதற்கு கருணாநிதியின் வாக்கு சாதுர்யமும், மயக்கும் பேச்சும் ஒரு காரணம்)

பின்னர், ஊதிப்பெருக்கப்பட்ட ‘ஜெயலலிதா ஊழல்’ பரப்புரையால், இந்த பிலிம்கார ரஜினிகாந்தும் சமனமில்லாமல் இந்த திமுக-தமாக கூட்டணிக்கு ஆதரவளித்ததால், இந்த திமுக குண்டர்கள் மறுபடியும் மேலெழும்பினார்கள் என்பது இன்னொரு கதை.

இந்த தேசியவாத நண்பரை அந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோது சந்தித்தேன்.

இவர் இப்போது அரசியலில் நேரடியாக இல்லையென்றாலும், பல அரசியல் தொடர்புகள் உடையவர். பல கட்சிகளின் உள் விவகாரங்களை அறிந்தவர். ஆகவே, அதிகமாகவே வெம்பியிருப்பவர்.

3

சரி. அரசியல் குறித்தும் என்னென்னவோ பேசினோம்;  நான் சிலகாலம் முன்னர் படித்த கீழ்கண்ட புத்தகத்தில் இருந்து பாரதத்துக்கு என்னென்ன ஒத்துவரும் எனவும் பேசினேன்.

(முதல் ஆசாமியுடன்; அவர் பரிந்துரையின் மீதுதான் இதனைப் படித்தேன் – அதனுடன் எனக்கு முழுவதும் ஒப்புதலில்லை என்றாலும், உலகத்தின் மாபெரும் ஜனநாயகமும்,  கலவரங்களற்ற அரசு மாற்றங்களும் ஏற்படும் நம் பாரதத்தைக் குறித்து இம்மாதிரி திடகாத்திரமான புத்தகங்கள் வரவில்லை என்பது சோகம்தான்!

இன்னமும் சில புத்தகங்கள்/ஆராய்ச்சிகள் குறித்துப் பேசினோம், முடிந்தால் அவை குறித்த விவரங்களையும் கொடுக்கிறேன்)

…ஆனால் அவர்களுக்கு இருக்கும் அரசியல். நிகழ்கால நடப்பு விஷயங்கள் குறித்த அறிவு எனக்கில்லை – பொதுவாகவே எனக்கு, நிகழும் விஷயங்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் ஆர்வம் பெரிதாக இல்லை. வீட்டில் தொலைக்காட்சி இல்லை, தினசரியும் வாங்குவதில்லை என்பவையும் இதற்கு காரணங்கள் என்றாலும், நான் இப்படித்தான்.இப்போது ட்விட்டரில் இருந்தாலும், உடனுக்குடன் சுடச்சுடவென்றெல்லாம் ஒரு மசுத்தையும் தெரிந்துகொள்வதில்லை.

ஆனால். எனக்குப் பிடித்த துறைகள் எனச் சில இருக்கின்றன – அவற்றில் நான் பரவாயில்லை. ஆனால் அதிலும் ஏகத்துக்கும் எனக்கு சமகால ஞானப் பற்றாக்குறை. இதைப் பெருமையாகச் சொல்லவில்லை.

எடுத்துக்காட்டாக: என்னுடைய பலகால ஹீரோக்களில் ஒருவர் ரோஜர் ஸ்க்ரூடன், இவர் ஒருமாதிரி கன்ஸர்வேடிவ் சிந்தனையாளர், தத்துவவியலாளர்++. ஏறத்தாழ இவருடைய அனைத்துப் புத்தகங்களையும் ஒருமாதிரி படித்திருக்கிறேன், அறிந்தும் கொண்டிருக்கிறேன்.

இருந்தாலும்… கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன்னால் இவர் இறந்துபோய் விட்டார், ஆனால் இந்த விஷயத்தை நான் தெரிந்துகொண்டது சென்றவாரம்தான் – அதுவும் என் மனைவிக்கு அவர் கட்டுரை ஒன்றைப் பரிந்துரை செய்யும்போதுதான் அறிந்துகொண்டேன்.

2004ல் சுனாமியில் பாரதம் பாதிக்கப் பட்டபோதும் நான் அதனைப் பற்றிச் சுமார் ஒரு வாரத்துக்குப் பின்னர் தாம் கேள்விப்பட்டேன்.

(இதனை நான் ஒரு நண்பரிடம் அகஸ்மாத்தாகச் சொன்னபோது, அவர் அதிர்ந்துபோய், “டேய்! வொனக்கு விட்டேற்றித்தனம் தாஸ்தீ!” – நான் பதிலுக்கு அவரிடம் கேட்டேன்: “சரி, உனக்கு அது நடந்த அடுத்த மணி நேரம் அதுகுறித்துத் தெரிந்துவிட்டது, நீ அதற்காக என்ன செய்தாய்? எவ்வளவு பேர் இறந்தார்கள் எனப் புள்ளிவிவரம் கற்றுக்கொண்டிருந்தா ய்; எனக்கு இப்படிப் பட்ட விஷயஞானங்களில் நம்பிக்கை இல்லை. காரியங்களை காத்திரமாகச் செய், சும்மனாச்சிக்கும் பேசாதே!”)

-0-0-0-0-0-

இன்றுகாலை ஒரு நண்பர், இந்த ஸ்ரீநாத் ராகவன் எனும் (அஷோகா பல்கலைக் கழக) தண்டக் கருமாந்திரம் ஒன்று உளறிக்கொட்டியதைக் குறிப்பிட்டு, ஏனிப்படியாகிறது எனக் கேட்டிருந்தார்.

என்ன சொல்வது சொல்லுங்கள், ‘கெடுவான் கேடு நினைப்பான்’ + ‘படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் – போவான்,போவான், ஐயோவென்று போவான்’ போன்றவற்றைத் தவிர…


இதுவும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஆனால் இந்த ஸ்ரீநாத் தண்டத்தின் அரைகுறைப் புத்தகங்களையும், பாரத எதிர்ப்பு நிலையையும் நன்றாகவே அறிந்துகொண்டிருக்கிறேன்.  (இத்தனைக்கும் இந்த ஆள், இந்திய ராணுவத்தில் சிலகாலம் ஒப்பேற்றியிருப்பவர்)

ஆனால்; இவர் இங்கிலாந்து போய் மேற்படிப்பு படிக்க ‘உதவி’ செய்தது – இன்லாக்ஸ் ஃபவுண்டேஷன். நம்மில் எவ்வளவுபேருக்கு இம்மாதிரி விஷயங்களுடன் பரிச்சயமும் அவை குறித்த நினைவும் இருக்கும் எனத் தெரியவில்லை; ஆனால் இம்மாதிரி, எனக்குத் தெரிந்தே, ஏழெட்டு அமைப்புகள் இந்தியாவில் இருக்கின்றன. அவற்றின் மூலமாக, லிபரல்-இடதுசாரி இளைஞர்களுக்கு – அவர்கள் பணம்படைத்த குடும்பத்தினர்களாகவே இருந்தாலும்,  ஏகத்துக்கும் உதவிப் பணம் கிடைக்கும். இவற்றின் வழி நிதி கிடைக்கவேண்டுமென்றால் – நமக்கு அதற்கேற்ற அரசியல்-அதிகாரவர்க்கப் பின்புலம், கருத்தியல் வலைப்பின்னல் (ideological networks, ‘I will scratch your back, you scratch mine’ + ‘I will cover your Ass, and you cover mine’ ) போன்ற கல்விக்கு அப்பாற்பட்ட விஷயங்களும் இருக்கவேண்டும்; இதன் காரணமாக, பெரும்பாலும் அதிகாரவர்க்க குடும்பங்கள், பாரம்பரியப் ‘பெருமை’ கொண்ட குடும்பங்கள், வலைப்பின்னல்களை வைத்தே காரியம் முடித்துக்கொள்ளும் பிரக்ருதிகள் தாம் இவ்வமைப்புகளிடமிருந்து நிதி பெற முடியும்.

‘நாய் விற்ற காசு குரைக்கும்’ என்பதற்கு ஏற்ப, இப்படிக் கல்வி நிதி கிடைக்கப்பெற்ற ஆசாமிகள், பெரும்பாலும் கருத்துலக ரீதி அயோக்கியர்களாகவும், பாரதவெறுப்பாளர்களாகவும்தான் இருப்பர். இந்தத் திராபைகள் அப்படி இல்லாமலிருந்தால்தான் ஆச்சரியம். (இம்மாதிரி விஷயங்களில், எனக்குத் தெரிந்த சுமார் 50க்கும் மேற்பட்ட எடுத்துக்காட்டுகளில் ஒன்றிரண்டு மட்டுமே ஒப்புக் கொள்ளும்படிக்கு இருக்கின்றனர்!)

இன்லாக்ஸ் காரக் குடுமி,  அதுவும் அஷோகா பல்கலைக்கழக அதிசராசரி டம்மி, சும்மா ஆடுமா, சொல்லுங்கள்? தாம் உளறிக்கொட்டி மாட்டிக்கொண்ட பின்னரும் குற்றத்தை ஒப்புக்கொள்ளுமா? தான் ஆசிரியத் தொழிலுக்கும் அருகதையற்றவன் என்பதைத்தான் உணருமா? 

ஏன் அப்படியெல்லாம் நேர்மையாக, கூச்சத்தோடு எல்லாம் இருக்கவேண்டும், சொல்லுங்கள்?

வேண்டிய அளவு ஆதரவு, இடதுசாரி-லிபரல் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும்போது… என்ன பிரச்சினை?

எல்லாம் இடதுசாரியப் பல்லிளிக்கும் அறிவுஜீவியம் டோய்!

-0-0-0-0-

சரி. என் இரண்டு நண்பர்களுடன் (தனித்தனியாக) உரையாடிய விஷயத்துக்கு வருகிறேன்.

அவ்வுரையாடல்களில் வரவிருக்கும் தமிழகச் சட்டசபைத் தேர்தல்கள் குறித்தும், நம் வாக்காளப் பெருமக்கள் குறித்தும், பொருளாதாரம் + கல்வியின் நிலை குறித்தும் கொஞ்சம் இருந்ததால் அவை பிறருக்கும் உதவியாக இருக்கும் என்பதால், அவற்றின்  சாராம்சத்தை மட்டும், தொகுத்து அடுத்த பதிவில் கொடுக்கிறேன்.

இவற்றில் பலவற்றுடன் உங்களுக்கு அறிமுகம் இருக்கலாம், சில புதியனவாக இருக்கலாம்… ஆக, கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொள்ளவும். (இருவரும் தமிழகத்தின், பாரதத்தின் மேன்மையையும் இறையாண்மையையும் விரும்புபவர்கள் என்பதும் எனக்குப் பிடித்தமான விஷயம் என்பதைப் பதிவு செய்யவேண்டும்)

இனி, அடுத்த பதிவில் பார்க்கலாம்.

நன்றி.

—>>>

7 Responses to “தமிழகத் தேர்தல்கள் குறித்த நம் புரிதல்கள் – குறிப்புகள்”


 1. An excellent thread debunking that fake ‘scholar’ Srinath Raghavan, by Kanchanda.

 2. பொன்.முத்துக்குமார் Says:

  // கருணாநிதி மூப்பனாருக்கு எதிராக, அவர் பிரதமராக வந்திருக்கக் கூடிய காத்திரமான சந்தர்ப்பத்துக்கு எதிராகப் படுஅசிங்கமாகக் குழி பறித்ததை (ஒரு முறையல்ல, இருமுறை!) ‘மறந்து விட்டுத்’ தொடர்ந்தது அக்கூட்டணி. ( அதுவும், அந்த அயோக்கிய ப.சிதம்பரம் மூப்பனாருக்கு எதிராகவும், கருணாநிதிக்கு ஆதரவாகவும் இதில் உதவியதை நாம் மறக்கக் கூடாது. முக்கியமாக, இரண்டாம் முறை அந்த வாய்ப்பு மூப்பனாருக்குக் கிட்டியபோது – அதனை எதிர்த்து, மாறாக தேவகௌடாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதில் இந்தக் கதர்ப் பதரின் அயோக்கியம் அதிகம்!) //

  மூப்பனாருக்கு எதிராக மு.க செயல்பட்டார் என்பதை அப்போதே off the record-ஆகவே கேள்விப்பட்டிருக்கிறேன், from the horse’s mouth; well not exactly, but kind of :)

  ஆனால் ப.சி-யும் இதற்கு உடந்தை என்பது அதிர்ச்சியைத்தருகிறது. ஏன் அவர் ஆசைப்பட்டாராமா பிரதமராவதற்கு ?

  • ram Says:

   முத்துக்குமார் அவர்களே.
   Author will cook more vadas just like his leader cooking vadas.

   Chow informing moopanar to not join DMK alliance itself is a farce :D
   Chow is the one who acted as broker in forming the alliance. Simple internet search will show that

   If author can cook vadas like this, he will cook more vadas saying chidambaram acted against moopanar and this is coming from reliable source :D

   If you ask question he will never answer it.
   He will never ever tell anything about that reliable source as it is another vada.
   See how much of buildup and thereby authenticity he brings to that reliable source :D


   • See, I am not answering your random questions because you are a nincompoop lazy bozo – who googles and attains nirvana.

    You do not have any idea whatsoever apart from probably whatsapp forwards. No other source of information. No knowledge. No experience whatsoever. Only bravado and the arrogance that comes with halfbakership.

    But, I will leave your comments as it is. This is because all said and done, I consider them harmless stupidities. (and I do not normally respond to anonymous cowards)

    Do your homework first and then get back to me.

 3. Kannan Says:

  அந்தக்காலத்தில் துக்ளக்கில் வந்த கார்டூன் ஒன்று

  மூப்பனார் (அடக்கத்துடன்) : எனக்கு பிரதமர் ஆக ஆசையில்லை.

  பக்கத்தில் கருணாநிதி: அதத்தான் நானும் சொல்றேன்.

  A fine example of Cho’s wacky humor :)


 4. […] என்னுடைய மார்ச்2021 பதிவு ஒன்றில்: தமிழகத் தேர்தல்கள் குறித்த நம் புரித… […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s