பச்சைத் தீராவிட திமுக மரியானோ அண்டோ மாஸ்கெரானாஸ் ‘குரு ப்ரூனோ’ வுக்கு வரதட்சிணை ‘தற்கொலை’ கொடூரத்துக்காகச் சிறைத்தண்டனை – குறிப்புகள்

31/03/2021

இம்மாதிரி அக்மார்க் அயோக்கிய திமுகவினரையா திரும்ப ஆளவிடுவது?

இதன் காரணமாகவும் திமுக கூட்டணி தோற்கடிக்கப் பட்டு, பின்னர் ஒழிக்கப் படவும் வேண்டும்.

யார் இந்த புருனோ அல்லது டாக்குட்டர் ப்ரூனோ அல்லது ‘குரு ப்ரூனோ?’

I.

பொதுவாகவே நான் தனிப்பட்ட (=அரசியல் / அலக்கியம் சாராத) உருட்டல் ஆசாமிகள் பற்றி எழுதமாட்டேன், அதற்கு நேரமும் வாய்க்காது; ஆனால் இந்த ‘டாக்டர்’ மரியானோ அண்டோ ப்ரூனோ மாஸ்கெரானாஸ் நபர் குறித்து எழுதியாக வேண்டும். ஏனெனில்:

1. அவருடைய பாவப்பட்ட மனைவியாக இருந்து, சித்திரவதைகளும் செய்யப்பட்டுத்  ‘தற்கொலை’ செய்து கொண்ட டாக்டர் அமலி விக்டோரியா அவர்களின் சமூகசேவைகள் குறித்து ஏறத்தாழ 2009ல் இருந்து அறிந்திருக்கிறேன்.

விழுப்புரம் பகுதியில் 2011 வாக்கில் பள்ளிப் பணியில் இருந்தபோது, மனோதத்துவரீதியாக பாதிக்கப்பட்ட ஏழாங்க்ளாஸ் சிறுமியை (வேறென்ன, திமுக குடிகார அப்பன் ஒருவனே, தன் சொந்த மகளைப் புணர்ந்த கதைதான்) எங்கு கூட்டிச் செல்லலாம் என நினைத்தபோது இவர் பெயர் மறுபடியும் பரிந்துரைக்கப் பட்டது.

…மிகவும் ஆதூரமானவர், குழந்தைகள் மனோதத்துவத்தில் விற்பன்னர் என்றெல்லாம் சொன்னார்கள் – ஆனால், நேர அவகாசம் இல்லாத காரணத்தால் (சென்னை போய்வர வேண்டுமென்றால் ஒரு முழு நாளையும் அதற்கு ஒதுக்க வேண்டும், பயணஅலுப்பும் தேவையற்றது), நான் புதுச்சேரியிலேயே ஒரு அரவிந்த ஆஸ்ரம மருத்துவர் ஒருவரிடம் காட்டி, பதினைந்து மாதங்களில், தரமான தெரபிக்குப் பின்னர், ஒருமாதிரி அந்தச் சிறுமி சாதாரண நிலைமைக்கு வந்தாள், பாவம். (ஆகவே, டாக்டர் அமலி அவர்களை நான் நேரில் பார்த்ததில்லை)

2. டாக்டர் அமலி ‘தற்கொலை’ சமயம் நடந்த ‘அமுக்குதல்களையும்’ அது தொடர்பான கயமைகளையும் அறிவேன்.

சொல்லப்போனால், எனக்கு டாக்டர் அமலி அவர்களின் அறிமுகங்கள் வழியாக, அந்தத் தொடர்பாகத்தான் சுமார் 2015 வாக்கில் இந்த ‘குரு ப்ரூனோ’ மாய்மாலங்களைப் பற்றியோ ஏன், அவரையோ கேள்விப்பட்டேனே ஒழிய – எனக்குச்  சில நாட்கள் முன்னர்கூட, அவர் பெயர் நினைவில் இருந்திருக்கவில்லை. எவ்வளவோ அயோக்கியர்கள் இருக்கிறார்கள், மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி எனும் மனோபாவம் வேறு…

மூன்று நாட்கள் முன்பு தினகரன் செய்தியைப் பார்த்தபின்னர்தான், விஷயங்களை இணைத்துக்கொண்டேன். ‘குரு ப்ரூனோ’வின் ட்விட்டர் பக்கத்தையும் ஃபேஸ்புக் பக்கத்தையும் தேடிப்போய்ப் பார்த்தேன். அப்பேர்க்கொத்த மருத்துவ ஞான, அறச்சீற்றப் பொழிவுகள் – கொஞ்சம் திக்குமுக்காடிப் போய்விட்டேன் – மேலும் இந்த ரெண்டு ப்ரூனோக்களும் ஒருவர்தாமா என்றெல்லாம் சந்தேகம் – இதனை, நான் மதிக்கும் நண்பர்கள் இருவரிடம் சரிபார்த்துக்கொண்டேன்.

3. ‘குரு ப்ரூனோ’ – தேவைக்கு அதிகமாக ‘நல்லவர்’ வேடம் போட்டு, ஓவராக ஸீன் போட்டு, உத்தமராக வளைய வந்தவர் – என்னுடைய சிலபல  அண்மையகால நண்பர்களுக்கு நெருங்கியவரும்கூட. “அவ்ரு ற்ற்றொம்ப நல்லவரு.”   + “நேர்ப் பேச்சுல இனிமையானவ்ரு!” + “டாக்டர் தொழிலில் சுத்தம், திறமையானவர்!” + “உதவி செய்யற சுபாவம்.”

இருக்கலாம். ஆனால், படிப்பாளிகளாகவும் ஞானவான்களாகவும் தம்மைக் கருதிக்கொள்ளும் நம் அப்பாவி அரைகுறைகளுக்கும் அரைவேக்காட்டு தண்டக் கருமாந்திரங்களுக்கும் – வெகு சீக்கிரமாகவும் சொற்ப நேரத்திலும் புல்லரித்துக்கொள்ளும் தன்மை அதிகம். வேறென்ன சொல்ல! பொறுக்கிகளைப் பொறுக்கிகளாக எடைபோடத் தெரியாத அப்பாவிகள்!

…ஆனால் மாவோ கூடக் கவிதை கிவிதை என எழுதியிருக்கிறார்; வின்ஸ்டன் சர்ச்சில் ஏகத்துக்கும் வரலாறுகளை எழுதித் தள்ளியிருக்கிறார். ஹிட்லர் காலத்தில் ஜெர்மானிய க்றிஸ்தவர்கள் சுபிட்சத்திலும், பொருளாதார வளர்ச்சிப் பாதையிலும்தான் இருந்தார்கள். மேலும்…

+ ஆமாண்டா, வொங்க திராவிட திமுக முக ஸ்டாலின், 1970-80களில் கண்டமேனிக்கும் தமிழ்ப்பெண்களைக் கற்பழிக்கவில்லை. அவரும் உத்தமர்தான்; மாஃபியாத் தனமாக கொலைகளுக்கு உத்தரவிடவில்லை, ஜீவகாருண்யம் மிக்கவர். படு நேர்மை + தெகிர்யம்; கையும் பயங்கர படுசுத்தம், ஊழல் என்கிற பேச்சே இல்லை; பரந்த படிப்பறிவு, ஞானம், பேச்சோ இனிமை, பொதுவாழ்வில் தூய்மை…

…போங்கடா அரைவேக்காடுங்களா!

ஏனெனில் – இந்த ‘குரு ப்ரூனோ’  வெறும் ஒரு திராவிடச்சார்பு உடையவர் – ஆகவே அதற்கேற்ற முக்கியமான கயமைகளையும் கொண்டவர் என்பதை நான், என் சிலபல அறிமுகங்களின் வழியாக அறிவேன். மேலதிகமாக 2014ல் அந்தத் ‘தற்கொலை’ நடந்தவுடன் திமுக கட்சி சார்புடன் போலீஸ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து நெளிவுசுளிவுடன் நடத்தப்பட்ட முதற்கட்ட ‘வழக்கு’ ஏரக்கட்டி முடிக்கப்பட்டதை அறிவேன்.

உள்ளே  ஆன்மா அழுகிப் போய்ப் படுமோசமான ஈனப்பிறவிகளாக இருக்கும்போதும், பொதுவாழ்வில், வெளியில் சத்தியசந்தர்கள், பெண்ணியவாதிகள், பொதுச்சேவை செய்பவர்கள், அறிவியல்பூர்வமான-மனிதநேயச் செயல்பாடுகளை விரும்புபவர்கள் போலப் பலவாறும் நாடகம் போடும், தொழில்முறைக் கலைஞர் பலரை நான் அறிவேன் – படுமோசமான ஜாதியவாதிகளாக, இஸ்லாமிய ஜிஹாதிகளாக, இவாஞ்செலிக்கல் இழிபிறவிகளாக இருப்பதைத் தெரிந்து தெளிந்திருக்கிறேன். அம்மாதிரி அற்பப் பெருந்தகைகளில் ஒருவர்தாம் இவர்.

எவ்வளவுதான் பெத்தபடிப்புப் படித்திருந்தாலும், பெரிய பதவியில் இருந்தாலும், ‘பொது சேவை’ செய்வதாகப் பிலுக்கிக் கொண்டாலும் எப்படியாவது இந்த அயோக்கியத் திராவிடம் இளித்துவிடும். இதற்குப் பெரும்பாலும் விதிவிலக்குகளே இல்லை.

என்னைப் பொறுத்தவரை, இந்த ‘குரு ப்ரூனோ’ டாக்டர் ஜெகில் + மிஸ்டர் ஹைட் இரட்டைவேட எதிர்புதிர் கதாநாயகர்தாம்.

https://www.gutenberg.org/files/43/43-h/43-h.htm

…ஆனால் திமுகவில் இதெல்லாம் சகஜமப்பா.

4. மூன்று நாட்கள் முன்பு எனக்குப் படிக்கக் கிடைத்த தினசரிச் செய்தி எனக்கு மகிழ்ச்சி கொடுத்தது. டாக்டர் அமலி அவர்களுக்குக் கொஞ்சமேனும் நீதி கிடைத்தது எனும் சந்தோஷம் அமைதி கொடுப்பது. (ஆனால், இதற்கும் அப்பீல் எனப் போவார்கள், பாவிகள் – ஆக, முடிவாக என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

5. அதே சமயம் – இம்மாதிரி வரதட்சிணைக் கொடுமை கேஸ்கள் அனைத்தும் சரியென்று சொல்லவரவில்லை. இவற்றில் பல ஜோடனைகள் + பணலாபத்துக்காகவோ அல்லது பைத்தியம் பிடித்து வெறி வந்ததனாலேயோ செய்யப்படுபவை. என் சொந்தங்களிலேயே திருமணமான ஆண்களும் அவர்கள் குடும்பங்களும், பெண்ணால்/பெண்வீட்டுகாரர்களால் கொடுமைப் படுத்தப் பட்டதும் நடந்திருக்கிறது. அதற்கு எதிர்மாறாகவும் பல துக்ககரமான விஷயங்களையும் கேள்விப் பட்டிருக்கிறேன்.

6. ஆனால், பெண் கொலைகள் (மன்னிக்கவும், ‘தற்கொலை’) அப்படியல்ல – அவை பெண்முதல்வாத – ஃபெமினிஸ்ட் வெறிகளினால் அல்லது எக்ஸ்டார்ஷன் வகை மிரட்டிப் பண அபகரிப்பு செய்வதற்காக ஏற்படுபவை அல்ல.

மாறாக, இந்த ‘குரு ப்ரூனோ’ குடும்ப இழிபிறவிகள் தொடர்ந்து நீதி தேவதையை ஏமாற்ற முயன்றிருக்கின்றனர். ஜோடனைகள் செய்திருக்கின்றனர்.

ஆனால். அப்படி இருந்தாலும், அரசல் புரசலாகக் கேள்விப்பட்ட விஷயங்களை வைத்து (இவையெல்லாம் நேரடியாகக் கிடைத்த விஷயங்கள்தாம், ஆனால் தனிப்பட்ட ரீதியில் சரிபார்க்கமுடியாதவை) நான் இதனை எழுதவில்லை.

ஏனெனில் அப்படிச் செய்தால் அது தேவையற்ற தனி நபர் தாக்குதலாகிவிடும். நியாயமுமல்ல. அதில் எனக்கு ஆர்வமில்லை என்றாலும், ‘இம்மாதிரிப் பொறுக்கித்தன விஷயங்கள், பேடித் திராவிடத்தில் சகஜமப்பா‘ எனப் பொதுவாக விவாதத்தை விரிக்கிறேன். அவ்வளவுதான்.

அதாவது: இதன் காரணமாக, இழிலும்பன்களைப் பற்றிக் கேள்விப்பட்ட எல்லா கோர/கொடூர விஷயங்களையும் எழுதாமல், தினசரிகளில் வந்தவைகளுக்கு மட்டும் (= தினகரன் (27th March, 2021), த ஹிந்து(28th March, 2021), டைம்ஸ் ஆஃப் இந்தியா (5th Dec 2014) செய்திகள்) ஒருமாதிரி இடஞ்சுட்டிப் பொருள் விளக்கிச் சுருக்கமாக இப்பதிவை எழுதுகிறேன்.

II.

டாக்டர் ‘குரு ப்ரூனோ’ + டாக்டர் அமலி விக்டோரியா திருமணம் 2005ல் நடந்தது.

“இதனையடுத்து மாமியார், மாமனார், கணவருடன் அமலி வாழ்ந்து வந்துள்ளார். திருமணமாகி ஒரு வருடம் வரை தம்பதிக்கு குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால், மாமனார், மாமியார் மற்றும் கணவர் ஆகிய 3 பேரும் அமலியை குழந்தை இல்லை என்று கூறி கொடுமை செய்து, நீ செத்துபோ என்று திட்டியுள்ளனர்.” (தினகரன்)

“இதனை தொடர்ந்து 2007ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர், அமலி தாய் வீட்டிற்கு சென்று மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்துள்ளார்.” (தினகரன்) என் நண்பர்கள் கருத்து என்னவென்றால், அமலி திரும்பிப் போயிருக்கக்கூடாது என்பதுதான்… சொல்லப்போனால் என் சொந்தத்தில், திருமணமாகிய ஒரு பெண் ஒரே வாரத்தில் படுமோசமாகக் கொடுமைப் பட்டுத் திரும்பிவந்தபோது, நான் அவளுடைய  புத்திபேதலித்துப்போன பெற்றோர்களிடம், ‘தயை செய்து திருப்பி அனுப்பிவிடாதீர்கள்’  தேவையற்ற சமரசம் வேண்டா, இது ஒத்தே வராது எனக் கெஞ்சிக்கேட்டுக்கொண்டு, பின்னர் அது போலீஸ் கேஸாகி, விவாகரத்திலும் முடிந்தது; அந்தப் பெண் இப்போது மறுமணம் செய்துகொண்டு சௌக்கியமாக இருக்கிறாள்; ஆனால் பாவம், இந்த டாக்டர் அமலிக்குத் தேவையாகவிருந்த ஆதரவு கிடைக்கவில்லை எனத் தோன்றுகிறது… பாவம்.

“அப்போது, அவரின் தாய் என் மகளை கஷ்டப்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு மாமியார், நீ அதெல்லாம் சொல்லக்கூடாது என்று திட்டியுள்ளார். சில நாட்களில், உடல்நிலை சரியில்லாத போது வேலை செய்ய சொல்லியும், அமலி பெயரில் உள்ள சொத்துகளை தங்கள் பெயரில் எழுதி வைக்க சொல்லியும் துன்புறுத்தி, தாக்கியுள்ளனர்.” (தினகரன்)

“இதனால், மன உளைச்சலுக்கு ஆளான டாக்டர் அமலி கடந்த 5.11.2014 அன்று வேலையில் இருந்து வந்த பிறகு, பாத்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.” (தினகரன்)

“On November 5, 2014, she was found dead in the bathroom of their home in Ayanavaram, where she lived with her husband and his parents. The police initially treated her death as being under suspicious circumstances, but the family claimed she had died due to illness. “(த ஹிந்து)  டாக்டர் அமலி  தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் – ஆனால் முதலில், இந்த குருப்ரூனோ குடும்பம், ‘அவர் உடல் நிலை சரியாக இல்லாமல் இருந்ததால்தான் இறந்திருக்கிறார்’ எனத் திரிதிரி எனத் திரிக்கிறது.

பிறகு ‘சந்தேகாஸ்பதமான மரணம்’ = CrPC Section 174 (unnatural death) என்கிற வகையில் விசாரித்தோம் எனப் பெயர் பண்ணி விட்டு, பின்னர் கைகழுவிட்டுவிட்டு ஒரு மாதத்துக்குள்ளாகவே அயனாவரம் காவல் நிலையம், தம் கேஸை மூடுகிறது.

(இந்த  அநியாய விஷயத்துக்குக் காரணம், ‘குரு ப்ரூனோ’வின்  அரசியல்/திமுக தொடர்புகளும் அவர்கள் மூலமாக காவல் நிலையத்துக்கு வந்த அழுத்தமும்… ஜோடிக்கப்பட்ட போஸ்ட்மார்ட்டெம் ரிப்போர்ட்/ப்ரேதவிசாரணை அறிக்கையும்; இதெல்லாம் எனக்கு 2015லேயே தெரியும்)

இந்தச் சமயத்தில், ‘தற்கொலை’ நடந்த ஒரு மாதத்துக்குள் , டாக்டர் அமலி அவர்களின் சகோதரி  விஜய் விக்டோரியா அவர்கள் தங்கள் பங்கிற்கு அழுத்தம் கொணர்ந்தார்.

நகைப்புக் கிடமான போலீஸின் முதல்முறை மூடலை, ‘அமலி மாலை மூன்று மணிக்கு வீட்டுக்குத் திரும்பி வந்தார், அப்படியே வீழ்ந்து இறந்துவிட்டார்’ என்ற அயோக்கியக் கதையாடலைக் கேள்வி கேட்கிறார்.

அது மட்டுமல்ல.

‘குரு ப்ரூனோ’ அழுத்தங்களைக் கொண்டுவரக் கூடியவர், அந்தப் பழைய போஸ்ட் மார்ட்டெம் அறிக்கையை நம்பமாட்டேன் என்கிறார்…

எப்படி ஒருமாதத்துக்குள்ளேயே கேஸை முடித்தீர்கள், மறுபடியும் கேஸைச் சரியாக விசாரித்து நடத்துங்கள் என்கிறார்…

பின்னர் மறுபடியும், போலீஸ் இதனைக் கையிலெடுக்கிறது.

இதற்குத்தான் இப்போது ஒருமாதிரி நீதி கிடைத்திருக்கிறது. (Snippets from ToI)

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் – ‘த ஹிந்து’ + ‘தினகரன்’ தினசரிகள், இம்மாதிரி முதல்முறை அசிங்கமாக இந்த வழக்கு மூடப்பட்டதைப் பற்றி ஒரு மூச்சும் விடவில்லை. எனக்கு இந்த விஷயம் நினைவில் இருந்ததால், தேடிப் பிடித்தேன்…

“Mariano Anto Bruno and Amali Victoria completed their MBBS degrees and married in 2005. From the third month of the marriage, she was frequently harassed for dowry, the prosecution said.” (த ஹிந்து) – திருமணமான மூன்றாம் மாதத்திலிருந்தே வரதட்சிணைக் கொடுமை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

“She gave a birth a baby boy in 2007. She obtained an MD in psychiatry and got gold medal from the Governor. After getting the gold medal, the accused harassed her more, the prosecution said. “(த ஹிந்து) எம்பிபிஎஸ் முடித்தவுடன் திருமணம் செய்துகொண்டார் அமலி, பின்னர் எம்டி படிப்பும் படித்து, தங்கப் பதக்கமும் வாங்கினார். இதற்குப் பிறகு, கணவனின் துன்புறுத்தல் அதிகமானது என அரசு தரப்பு வக்கீல் சொன்னார். (இந்த விஷயம், ‘தனக்குக் கிடைக்காத பதக்கம், மனைவிக்குக் கிடைத்துவிட்டதே’ என்கிற பொறாமையால் மேலதிகச் சித்திரவதை செய்யும் குணம் பற்றி என் அறிமுகங்கள்  ஏற்கனவே, 2015ல் கூறியிருந்தனர் – இவர்கள் அமலி அவர்களின் படிப்புகாலத் தோழர்கள்)

“She got a job in the Vellore Government Hospital and at the time, was weak after undergoing an abortion. She was advised to rest for three weeks but her in-laws continued making her perform household chores, the prosecution said.” (த ஹிந்து) குறைப்பிரசவத்துக்குப் பின் பலஹீனமாக இருந்த டாக்டர் அமலியைத் தொடர்ந்து வீட்டுவேலைகளையும் செய்ய கெடுபிடி செய்தனர், ‘குரு ப்ரூனோ’வும் அவர் குடும்பத்தினரும்.

“The police charged Mario Anto Bruno, his father John Bricks Mascarenhas, and mother Alphonsal for offences under the Section 498A (Husband or relative of husband of a woman subjecting her to cruelty) and 306 (abetment of suicide) of the Indian Penal Code. During the trial, special public prosecutor Lekha said there was sufficient evidence to prove that the deceased was continuously harassed by the accused. (த ஹிந்து)” ‘தற்கொலை’ செய்துகொண்டதற்கு தண்டனை பெற்றவர்கள் அரங்கேற்றிய சித்திரவதைகளே காரணம்.

“They were sentenced to seven-year rigorous imprisonment for abetment of suicide…. …Mahila Court Judge M. Rajalakshmi said the prosecution had proved charges against Mario Anto Bruno and his mother Alphonsal. It is also proved that the act of both only abetted the deceased to commit suicide. John Bricks Mascarenhas was acquitted since the charges against him were not proven. The court also imposed a total fine of ₹60,000 on the duo. “(த ஹிந்து) – குற்றங்கள் நிரூபிக்கப் பட்டதால், குற்றவாளிகள் ‘குரு ப்ரூனோ’ + அவர் தாய், அல்ஃபோன்ஸல் இருவருக்கும் ஏழாண்டு கடுங்காவல் தண்டனை + ரூ60,000/- அபராதம், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், ‘குரு ப்ரூனோ’வின் தந்தை விடுதலை.

III.

2014 டிஸெம்பரில் ஆரம்பித்த கதை, இப்போது 2021ல் முடிந்திருக்கிறது. (மேல் முறையீடு நடக்கலாம், திமுக வழி திராவிடச் சமூக நீதியும் ‘வாங்கப்பட்டு, ‘இவர்கள் விடுதலையும் செய்யப்படலாம்)

நீதி:

திமுக கும்பல் மறுபடி வந்தால்… பேய் அரசு செய்தால், பிணம் தின்னும் அல்லக்கைகள்…. ஜாக்கிரதை!

(ஆனால், 2007ல் பிறந்த அந்தப் பிள்ளையை நினைத்தால் சங்கடமாக இருக்கிறது, என்ன செய்ய…)

10 Responses to “பச்சைத் தீராவிட திமுக மரியானோ அண்டோ மாஸ்கெரானாஸ் ‘குரு ப்ரூனோ’ வுக்கு வரதட்சிணை ‘தற்கொலை’ கொடூரத்துக்காகச் சிறைத்தண்டனை – குறிப்புகள்”

 1. nparamasivam1951 Says:

  அந்தக் குழந்தை தாய் அவர் பாட்டி வீட்டில் செல்லமாக வளர நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்.
  திமுக கும்பல் வருவதை ஆ.ராசாவும் கருப்பர் கூட்டமும் அடைத்து விட்டார்கள்,

 2. Vijay Says:

  I had seen some of his twitter feed and was of the opinion that GH is lucky to have someone so committed.
  Shocking to say the least and how these scum wear a personable image as a mask and perpetrate high crimes. Condolences to Dr. Amali’s family and hope justice is upheld not only in the present but also in the future.


  • Sir, thanks for sharing your angst and expressing your feelings – and would make use of this response to clarify a bunch of things.

   Luckily I did the mapping that, ‘that scum husband’ that I knew of many years ago is ‘this guru bruno’ only a few days back; also I do not follow much on Social Media or on any Media for that matter.

   So, I do not have any biases of having been swayed by his ‘affable persona’ or ‘forward looking’ tweets and random acts of ‘good samaritanship’ if any. I have never met the doc(!) ‘guru bruno’ in person. Never took his help or advice. Never helped him or anything. Never read him before. So, I do not have any kind of +ve biases towards him – but yes, I have a -ve bias; have known his scumbagginess from 2015, post the first case closure.

   Having said all that, I would say – even committing an occasional evil-deed is okay. We err, but we recover – because we have our ethics-compass. We learn, we have a sense of shame. We are normal folks – we are NOT beasts.

   But.

   1. Consistently doing a series of terrible crimes is not okay.

   2. Posturing as if one is Harishchandra is NOT okay.

   3. Fudging records/facts is NOT okay. Bringing political pressure to whitewash one’s crimes is NOT okay. A person who fudges medical records is UNFIT to practice as a medical help – whatever be his pedigree.

   4. Jealousy and ‘enabling’ some one to commit suicide are NOT okay. Uncalled-for greed is NOT okay.

   5. A few days ago, on 28th March, I was talking to this good old physician acquaintance of mine, who suggested that ‘may be the parents of ‘guru bruno’ were responsible for the crimes – and that he could be actually innocent – and that he didn’t have it in him to go against parents’ (vicious) wishes etc etc.

   My points are that:

   5.1 It is not true and facts/investigations say otherwise; he has been culpable, definitely so. (I am not quoting from personal conversations here – court records, evidence examinations say so)

   5.2 If it were true, that he was being a “momma’s boy” – then it is hilarious that, this ‘guru bruno,’ the spineless critter, calls himself a ‘SPINE SURGEON!’

   However, I am really sorry that this myth got busted – also, if someone has any definite/concrete to the contrary – proving the ‘innocence’ of ‘guru bruno’ – I am willing to correct everything. Also, they can go to court too – amicus curiae and all that.

   Please note that, I have withheld many a personal anecdote, primarily because I can’t defend them – they are anecdotal – and though they come from unassailable sources, they would feel queasy about identifying themselves.

   I have ONLY used public, reported materials – ONLY newspaper reports and the Judgement.

   END

 3. Vijay Says:

  Dear Ram,
  I do not know this person (either personally or in SM) and just like you, had no prior info into this sordid matter relating to this individual. However, I have come across a couple of his tweets highlighting info on GH, which I thought were helpful and from my view point I was neutral..don’t have anything for or against this gent.

  Without your post, I would not know anything at all and I am still coming to terms with your mapping. Your mapping also unlocked the context of this post by JeyMo a couple of days back highlighting Gnani’s musings on this (which I was unaware also).
  https://www.jeyamohan.in/145194/
  Thank you


  • Sir, thanks much. I did not accuse you of anything – even if you had prior knowledge & association about/with the scum, it is not a great negative thing. Even then, you would have perhaps seen the Dr Jeykyll side, may be. I have at least a couple of good/respectable friends who were/are very close to him – but they are not the sources for my info. At all. I think they will continue to be my friends, FYI. :-)

   Having said that, thanks for that jeyamohan link. In fact, I have a bit more information – but they are not public, so cannot be shared.

   What Jeyamohan says is by and large correct.

   However, I can’t forget the other fact that the same-same Jeyamohan had written nasty, uncalled-for things about Gnani, by way of unnecessary slander.

   I don’t understand Jeyamohan when he does such things, rather repeatedly.

   But unlike ‘Guru Bruno’ he has not cheerlead anyone to ‘Suicide,’ so far – for which I am very thankful to him.


 4. […] ஆனால் நம் சோரம்போன ஊடகப்பேடிகள் இதுகுறித்து எந்தவிதமான இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ம் எழவையும் செய்யமாட்டார்கள் என்பதால்… (முன்கதைச் சுருக்கம்) […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s