திராவிடத் தீராவிடலை முக ஸ்டாலின் மாறவேயில்லை! இனி மாறவும் வாய்ப்பேயில்லை!!

02/04/2021

திராவிட முக ஸ்டாலின், இளம் வயதில் விடலையாகத் திரிந்து ஊர்மேய்ந்ததெல்லாம், பின்கோட் பின்கோடாகச் சென்று பாவப்பட்ட இளம்பெண்களுக்கெல்லாம்  கதிகலங்க பாலியல்ரீதி தொந்திரவு கொடுத்ததையெல்லாம், அந்தக் கோரங்களெல்லாம் விலாவாரியாக அமெரிக்கத் தூதரகம் வரை சென்று சந்தி சிரித்த விஷயம் பற்றியெல்லாம் நாம் அறிந்திருக்கிறோம்.

அறியாதவர்கள் படிக்க: BREAKING NEWS! MK Stalin of DMK to file a Defamation Suit against USA! 15/03/2021

இப்போதாவது இது சரியாகியிருக்கும் என்றால்… இப்போதும் மேலதிக வக்கிரம் பெற்று உக்கிரம்தான் அடைந்திருக்கிறது…

…கிழவயது கிட்டத்தட்ட 70 ஆகிவிட்ட நிலையிலும், இந்த ஜன்மம் ஆடும் ஆட்டம் அதிகமாகவே இருக்கிறது…

ஏகத்துக்கு அசடு வழிவதும், ஜொள்விடுவதும்… இதெல்லாமா – முதிர்ச்சியற்ற தற்குறி விடலையெல்லாமா, முதலையமைச்சராக ஆட ஆகாத்தியம் செய்கிறது?

கீழ்கண்ட இந்தச் சிறு விடியொவைப் பார்த்த எனக்கே கூச்சமாக இருக்கிறது – இது சிலகாலம் முன்பு குப்புச்சி பாளையம் (கரூர்- அந்தப் பச்சோந்தி செந்தில் பாலாஜி கருமாந்திரத்தின் தொகுதி – அதே ஆள் பிரியாணிப் பொட்டலம் கொடுத்துச் சேகரித்த கூட்டம்) வட்டாரத்தில் கொடுக்கப்பட்ட, ஸ்டாலினின் தன்னிலை வாக்குமூலத்தின் ஒரு பகுதி.

ஐம்பத்தாறு வினாடிகள் மட்டுமே ஓடும் இதனைப் பார்த்துப் பீதியடையவும்… (நீங்கள் திமுக திராவிடராக இல்லாத பட்சத்தில் அசிங்க உணர்ச்சியில் பரிதவிக்கவும்… கூனிக் குறுகவும்…)

https://video.twimg.com/ext_tw_video/1347607017368612866/pu/vid/624×240/CGGV87hmxLwkL-td.mp4?tag=10

(மேற்கண்ட சுட்டி வேலை செய்யவில்லையென்றால், என் ஃபோல்டரில் இது இருக்கிறது)

நன்றி: https://votefordmk.github.io/

இது மகளிர் கிராமசபை கூட்டங்ற பேர்ல நடந்தாலும்… சுத்திக்கிட்டே இருந்தா… வொங்களயெல்லாம் பாத்துக்கிட்டே இருக்கணும்போல இர்க்கு.வொங்க மொகத்தப் பாத்தா…

…பாத்துக்கிட்டே இர்க்கணும்போல இருக்குது… எனக்கு இப்போ என்ன தோணுதுன்னா… என் மனசுல இப்ப என்ன தோணுதுன்னா, நான் வொங்க கிட்ட வெளிப்படையா சொல்றேன்… நீங்க நம்புவீங்கன்னு நெனெக்கறேன், நம்பணும்.

வொண்ணுமே பேசாம இப்டியே நின்னுக்கிட்டு வொங்க மொகத்தையெல்லாம் பாத்துக்கிட்டே இர்க்கணும் போல ஒரு ஆசை எனக்கு வந்திரிச்சி.

ஒரு கல்லுல ஒரு மாங்கா இல்ல, பல மாங்கா அட்ச்சிட்டாரு இப்போ… நான் மாங்கான்னு சொல்றத வேறெ ஏதாவது நெனெச்சிக்காதீங்க…

காமாந்தகனுக்கு – பெண் குழந்தையென்ன, குமரியென்ன, இளம்பெண்ணென்ன மூதாட்டியென்ன, தாயென்ன மகளென்ன சகோதரியென்ன… ஒரு வித்தியாசமும் பாராமல், அனைவரின் முகங்களையும்(!) மாங்காய்களையும் (!!) பார்த்துக்கொண்டே இருந்தால்… தமிழகம் ஆட்டாமேடிக்காகக் சுபிட்சம் ஆகிவிடுமே!

ஆனால். இந்த விடலை விசிலடிச்சான் குஞ்சப்பர்கள் ஆட்சி அமைத்தால் – ‘தமிழ்மாங்கா செம்மாங்கா‘ மாநாடு ஒன்றையும், தங்கள் பெண்ணியக்(!) கவிஞர்(!!) தலைமையில் நடத்தியே விடுவார்கள்தாம்!

டேய்! இப்படியாடா, பொழுதன்னிக்கும் இரட்டையர்த்த உளறல்களை உதிர்த்துக்கொண்டு, வெறிபிடித்த காமாந்தகர்களாக இருப்பீங்க நீங்க, அற்ப திராவிட திமுக வொடன்பெறப்புங்க்ளா?

-0-0-0-0-

இவர்களுடைய மனைவிகள் இவர்களை எப்படி மதிக்கிறார்கள்? பிள்ளைகள்?? பேரக் குழந்தைகள்??

பெண்ணியவாதிக் கவிங்கர் கனிமொழி?

இந்த விடலைப்பேடிகளின் தாயார் இதையெல்லாம் தயாளு குணத்துடன் பார்த்துக்கொண்டிருப்பாரா?

பக்கத்து வீட்டினர்? பிற உறவினர்கள்?

சாக்கடை மனிதர்கள். கீழ்த்தரமான சாக்கடைக் குடும்பங்கள். வேறென்ன சொல்ல.

இந்தப் பொறுக்கிகள் மறுபடியும் ஆளவந்தால், உண்மையாகவே ஒரு ‘தோள்சீலைப் போராட்டம்’ ஒன்றை தமிழகப் பெண்கள் கையெடுக்கவேண்டி வரும்.

ஏனெனில் பாவிகள், தமிழகத்தையும் பாரதத்தையும் வேண்டுமளவு கற்பழித்து ஆட்டையப் போட்டதற்கு அப்பாற்பட்டு, தமிழகப் பெண்களையும் பதம் பார்க்க ஆரம்பித்துவிடுவர்…

ஆகவே. நமக்குத் தேவை ஜாக்கிரதையுணர்ச்சி.

பொம்பளைப் பொறுக்கி, திராவிட திமுக ஒழிக்கப் படவேண்டும்!

3 Responses to “திராவிடத் தீராவிடலை முக ஸ்டாலின் மாறவேயில்லை! இனி மாறவும் வாய்ப்பேயில்லை!!”

 1. SRN Says:

  திமுக தலைவரையே மாற சொல்ற அளவுக்கு தைரியமானவரா இருக்கீங்களே சார், நீங்க தமிழ்நாட்லதான் இருக்கீங்களா? ஆட்டோ அனுப்பிருப்பாங்களே, எப்படி விட்டு வெச்சாங்க?

  ஸ்டாலின் ஏன் மாறணும்? அதுக்கான தேவை இருக்கா? இன்னிக்கு திமுககாரங்களுக்கு கலங்கரை விளக்கமே கருணாநிதி குடும்பம்தான். மக்களுக்கு அந்த குடும்பத்தோட உண்மையான வரலாறுல லட்சத்துல ஒரு பங்கு தெரிஞ்சிருந்தா கூட அப்படி ஒரு கட்சியே இல்லாம செஞ்சிருக்கணும். ஆனா இப்போ பேராண்டியே தலைவனா வந்துட்டான். அந்த கட்சி மட்டும் கருணாநிதி குடும்ப சொத்தா ஆனதோட இல்லாம, இப்போ தமிழ்நாடே மொத்தமா வேணும்னு கேக்கறானுங்க.

  கேவலமா பேசிப்பேசியே காமராஜர் மாதிரி தலைவரை தோக்கடிச்சதுல ஆரம்பிச்சது திமுக. அண்ணாவுக்கு அடுத்து கட்சியில இருந்த முக்கியமான தலைவர் எல்லாரையுமே தந்திரமா ஓரங்கட்டி, எம்ஜிஆர் உதவியோட பதவியில உட்கார்ந்த ஆள் கருணாநிதி. அப்புறமா எம்ஜியாரையே கட்சியவிட்டு ஓரங்கட்டி, தன்னோட பசங்க எல்லாருக்கும் ட்ரெய்னிங் குடுத்ததுல இருந்து வாரிசு அரசியல் ஆரம்பிச்சது. அதுக்கப்புறம் அந்த குடும்பம் மட்டுமே பண்ணுன கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அராஜகம் எல்லாத்தையும் ஒவ்வொன்னா சொன்னா பலநாள் தேவைப்படும்.

  இதுல எல்லா விஷயமும் மக்களுக்கு தெரியலன்னாலும் எதுவுமேவா தெரியாது? இல்ல தெரிஞ்சும் தெரியாத மாதிரியே இருக்காங்களா? காரணம் எதுவா இருந்தாலும், மக்களை முட்டாளாக்கறது ஈஸினு திமுக நம்பறவரைக்கும் அவங்க மாறவே போறதில்ல. நம்ம மக்கள் இன்னும் அந்த நம்பிக்கைய திமுகவுக்கு குடுத்துட்டுதான் இருக்காங்க, அப்புறம் எதுக்கு ஸ்டாலின் திருந்தனும்?

  திமுக கொள்ளையடிச்ச பணத்துல மீடியா மொத்தத்தையும் வாங்கிருக்கு, 24 மணிநேரமும் எந்தப்பக்கம் திரும்பினாலும் திமுகவுக்கு ஆதரவான மூளைச்சலவை நடக்குது, அதுலயே மக்கள் ஊறிட்டதால மழுங்கிப்போன மக்கள் திமுகவை இன்னமும் ஒரு கட்சியா பாக்கறாங்கனு சொல்றதை ஓரளவுக்குதான் ஒத்துக்க முடியும். நம்மளச்சுத்தி எது நடந்தாலும், சுயமா யோசிச்சு மனசாட்சிப்படி முடிவெடுக்க எல்லாராலயும் முடியும். அப்படி இல்லாம கண்டதே காட்சி, கொண்டதே கோலம்னு இருந்தா மட்டும்தான் திமுக மாதிரி ஒரு கட்சி இங்க இருக்கறத நியாயப்படுத்த முடியும். இனியும் அது தொடர்ந்தா தமிழ்நாட்டைக் காப்பாத்தறது கஷ்டம்தான்.


  • கம்மினாட்டி கம்மல் வந்து இன்னொரு இறைதூதராக அவதாரம் எடுத்து நம்மைக் காப்பாற்றுவார்.

   பாவிகளே! ஸ்தோத்தரியுங்கள்!! இல்லாவிடில் கழுத்துசீவல் காத்திருக்கிறது.

   ஆமென். மாஷால்லாஹ்.

   • SRN Says:

    தேவேன! எம்மை இரட்சியும்!! அல்லேலூயா!!!

    ஏக இறைவனே! கொஞ்சகாலத்துக்கு என் கழுத்தை விட்டுவைய்யும்!! அல்ஹம்துலில்லாஹ்!!!

    பின் குறிப்பு:
    இனிமே தமிழ்நாட்ல உசுரோட இருக்கணும்னா இந்த வசனமெல்லாம் சொல்லியாவணுமாம், திமுக கூட்டணில சொல்லிருக்காங்க, ப்ராக்டீஸ் பண்ணிக்குங்க மக்களே!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s