கழக அறிக்கை: திமுக ஆட்சியில் வரவிருக்கும் இன்னுமொரு புரட்சி -> பே-திமுக இலவச கார்ட் திட்டம்

03/04/2021

திமுக கூட்டணியின் – சுருட்டுலா வர்த்தகப் பொறுக்கியாட்சியின் இன்னொரு தொலை நோக்குத் திட்டம், பராக்!

இதுதொடர்பான, நாளை வெளியிடப்படப்போகும், திமுக குடும்ப அதிபதி முக ஸ்டாலின் அளிக்கும், அண்ணா அறிவாலய அறிக்கை கீழே முந்திக் கொடுக்கப் படுகிறது…

எங்கள் பெருமிதிப்புக்குரிய வக்காளிப் பெருமக்களே!

எங்களைத் தேர்ந்தெடுக்கப்போவதற்கு வாழ்த்துகள்.

இதுவரை திராவிட திமுக உடன்பருப்புகள், கடைகடையாக ஏறி இறங்கி, குடித்த + வயிறுபுடைக்க உண்டவைகளுக்கெல்லாம், அவர்கள் எடுத்துப்போகும் கடப்பைக் கற்களுக்கும் தெருவோர ஜல்லிக்கும் அவர்கள் பணமே கொடுக்கவில்லை எனும் வருத்தம் தமிழகமெங்கும் நிலவி வருவதை திராவிட முன்னேற்றக் கழகம் கவனித்து ஆவன செய்யவிருக்கிறது.

இதுவரை இம்மாதிரி, எம் உடன்பிறப்புகள் திராவிடத் தமிழ்ச் சமூகத்துக்கு செய்துகொண்டிருக்கும் அளப்பரிய மகத்தான சேவைகளுக்கு, எம் இனிய தமிழ்த் திராவிட மக்கள் எவ்வாறு கைம்மாறு செய்யமுடியும் என வேதனையில் வெந்துகொண்டிருப்பது எங்களுக்குத் தெரியாதது அல்ல.

மேலும் அன்றே என் தலைவர் கலைஞர் கருணா நிதி எழுதிய திருக்குறளில் சொல்லியிருப்பதுபோல…

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் கோண
வெச்சிச் செஞ்சிவிடல்”

ஆகவே. எங்கள் ஆட்சி அமைந்தவுடன்– எங்கள் ஆட்சி இதுவரை அமையவிடாமல் ஓட்டளித்த அனைவருக்கும் வெச்சிச் செய்யப்படும். இப்போது ஓட்டளித்ததால்தான் நாங்கள் உங்கள் வீட்டில் புகுந்து அடிக்கப் போவதில்லை, மறப்போம், மன்னிப்போம்!

ஆக இந்த நற்செய்தி! பே-திமுக கார்ட் ஒன்று இலவசமாக அனைத்துக் குடிமக்களுக்கும், முக்கியமாக எங்கள் வாக்காளர்களுக்கும் அளிக்கப்படும்.

இந்த டிஜிடல் பே-திமுக கார்டின் சிறப்பம்சங்களை, உங்களுக்குக் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்:

 • இந்தக் கார்ட் உங்கள் வீடுதேடி, உங்களைத் தேடி வரும். அதுவும் இலவசமாகவே வரும்.
 • இனிமேல் நீங்கள் நேரடியாக, அவ்வப்போது உங்களைத் தேடிவரும் கழக உடன்பிறப்புகளுக்கு வாய்க்கரிசி போட்டு ஆவன செய்யவேண்டிய அவசியமேயில்லை!
 • நீங்கள் என்ன தொழில் செய்பவராக இருந்தாலும் சரி – சாலையோர காய்கறிக் கடைவைத்திருப்பவரா, இட்லிசெய்து விற்பவரா, பெரும் கடைகண்ணிகளும் தொழிற்சாலைகளும் வைத்திருப்பவரா – இல்லை உங்களுக்குப் பென்ஷன் வருகிறதா, அல்லது மாதச் சம்பளம் சுளையாக வாங்குகிறீர்களா – நீங்கள் யாராக இருந்தாலும் சரி செய்யவேண்டியது என்னவென்றால், உங்கள் சக்திக்குக் கொஞ்சம் அதிகமாகவே ஒரு % சதவீதம், எங்களுக்குக் கப்பம் கட்டவேண்டியதுதான்.
 • உங்கள் ஆரோக்கியத்தையும் நல்வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு – கப்பத்திற்கான ஸ்லேப்களை, மாதாமாதம் நீங்கள் எவ்வளவு திமுக களப்பணியாளர்களுக்கும் எங்கள் தலைவர்களுக்கும் தரவேண்டும் என்பதன் விவரங்களை, நீங்கள் https://www.dmk.in/PayDMK/CurrentSlabsForPayment/RateCard2021.pdf தளத்திற்குச் சென்று ரேட்கார்டில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
 • இந்த நிதிக்குவையானது, ஒழுங்கான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு நிர்வகிக்கப்படும்; அந்தந்தப் பகுதியின் களப்பணியாளர்களுக்கும், வட்ட, மாவட்டச் செயலாளர்களுக்கும், பொதுக்குழுவினருக்கும், கட்சித் தலைமைக்கும் அவரவர் பொறுப்புணர்ச்சிக்கும் சமூகசேவை செய்யும் திறனுக்கும் ஏற்ப நிதி பகிர்ந்தளிக்கப் படும்.
 • நீங்கள் நிலம் வாங்க விற்க, வீடுவாங்க விற்க என்பதிலிருந்து, சான்றிதழ்கள் பெறுவது வரை % கப்பங்களை நேரடியாக, இணையம் மூலமாக பே-திமுக கார்ட் வைத்துக்கொண்டுக் கட்டலாம்.
 • மேற்கல்வி குறித்த ஏக்கம் இருக்கும் இருக்கும் இளைஞர்கள், இளைஞிகள் அவர்களுக்குப் பிடித்த கல்வியின் தேர்வுச் சான்றிதழ்களை அதிகாரபூர்வமாகப் பெறவும், ஒரு % பே-திமுக கார்ட் மூலமாகச் செலுத்தினால் போதும்!

(இப்படியே நிறைய இருக்கின்றன, ஆனால் – ஆட்சியமைத்தபின் அவ்விவரங்கள் கொடுக்கப் படும்.)

முடிவாக – திமுகவின் வெளிப்படைத் தன்மை மிக்க இந்த நூதன டிஜிட்டல் திட்டத்தை ஆதரிப்பீர்..

எங்களுக்கு வாக்களிப்பீர்…

அன்புடன்,

மு.க.ஸ்டாலின்.

-0-0-0-0-0-

பின்குறிப்பு: இது, வெறும் நகைச்சுவைக்காக இடப்பட்ட பதிவு அல்ல. அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த திமுக திராவிட அயோக்கியர்கள் இதன் ஒருமாதிரியான வடிவத்தைச் செயல்படுத்தாமல் விடமாட்டார்கள்!

இந்தப் பேய்-திமுகவின் சுபாவம் அப்படி – பொய்மை, கற்பழிப்பு,  கொள்ளை போன்றவற்றைத் தவிரப் பிறிதொன்றையும் அறியாதது அது… இதனைத் தொடரவிட்டால், பலப்பல ரத்தக்காட்டேரிப் பிசாசுகளை நம் தமிழகத்திலும் பாரதத்திலும் உலாவவிட்டு நம் ரத்தத்தைத் குடிக்கும் என்பதில் ஐயமேயில்லை.

ஆகவே – இன்றில்லாவிட்டால் நாளை, அதனை ஒட்ட நறுக்கி ஓரங்கட்டுவதுதான் நம் ஒரே குறிக்கோளாக இருக்கமுடியும்.

ஆமென். இன்ஷாஅல்லாஹ்.


2 Responses to “கழக அறிக்கை: திமுக ஆட்சியில் வரவிருக்கும் இன்னுமொரு புரட்சி -> பே-திமுக இலவச கார்ட் திட்டம்”

 1. nparamasivam1951 Says:

  முடிவெடுத்தால் உடன் நிறைவேற்ற வேண்டும். இன்றில்லாவிட்டால்….. என்பதே எனக்குப் பிடிக்காத வார்த்தை.
  6ம் தேதி முடிவு கட்டுகிறோம். ஆமென்.
  இன்ஷா அல்லா.
  புது யுகம் காண்போம். வீர வேல்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s