திராவிடஉதிரி இளவரசன் உதயநிதி ஸ்டாலின், திருட்டுப் பணத்தை வைத்து கள்ளக் கடத்தல் செய்து வெளி நாட்டுக் காரை ‘இறக்குமதி’ செய்ததற்கு அப்பால், அப்படி உழைத்து ‘வாங்கிய’ தன் ஜெனரல் மோட்டர்ஸ்  ஹம்மர் ஹெச்3 காரை மாயமந்திரம் செய்து மெர்ஸிடிஸ் பென்ஸாகவும் மாற்றி, பின்னர் மறுபடியும் ஹம்மராக்கியது எப்படி?

05/04/2021

திமுக திராவிட ஸ்டாலின் உதயநிதி = ஊழல்நிதி = திருட்டுநிதி = ‘மாட்டிக்கொண்டதும் ஸரெண்டர் நிதி.’  = உதிரிநிதி.

இம்மாதிரி விடலைப் பொறுக்கிகள் தாம் திமுக-வின் எதிர்காலம் என்றால், அது நாசமாகத்தான் போகும்; ஆகவே, அதுவும் நல்லதற்குத்தான்.

-0-0-0-0-0-

இந்த இறக்குமதியைப் பற்றி ஒரிருமுறை கொஞ்சம் எழுதியிருக்கிறேன்: திமுக ஸ்டாலின் ஊழல்கள், அற்பத்தனங்கள்: சில குறிப்புகள் 11/03/2019.

…இருந்தாலும், அனைத்துக் குறிப்புகளையும் உபயோகிக்கவில்லை.  

மேலும் டிஆர் பாலு, அழகிரியின் பையர் துரைதயாநிதி இதே போல திருட்டுக் கார்களை வாங்கினார்கள்.

ஸ்டாலினின் ‘அந்தரங்கச் செயலாளரும்’ நண்பரும் பெருமிதிப்புக்குரிய பினாமியுமான ராஜாசங்கர் இரண்டுகார்களை இதே முறையில் வாங்கினார்கள். இதெல்லாம் வெளியே வரவேயில்லை.

(ஆனால், உதயநிதியின் இந்தக் கார்குறித்த ஊழல்கள் பற்றிய ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றன, பிறர் தொடர்பாக இல்லை – பெயர்களும் கார்கள் எண்ணிக்கைகள் மட்டும் இருக்கின்றன – டிஆர்ஐ/சிபிஐ ஆசாமி  அன்பர்களிடம் கேட்டால் கிடைக்கும் – ஆனால் போரடிக்கிறது; மேலும் ஒரு பானை ஊழலுக்கு ஒரு சோறு ஊழல் போதுமே!)

-0-0-0-0-

1. உழைத்துச் சம்பாதிக்கத் துப்பில்லாமல், ஆனால் அப்பனின் திருட்டுப் பணம் அமோகமாகக் கையிலிருந்தால் – ஜிங்பேங் மேல் நாட்டு உயர்சாதிக் கார்களை படு ஷோக்காக ஓட்ட அரிப்பு ஏற்பட்டால்… என்ன செய்வது?

ஹவாலா பண அன்னியச் செலாவணி மோசடி மூலமாக வெளி நாட்டில் (இந்தக் கேஸில், அமெரிக்கா) அட்ஜஸ்ட் செய்து – புத்தம் புதிய காரை, ‘உபயோகித்த கார்’ (ஸெகண்ட் ஹேண்ட் கார்) எனச் சான்றிதழ் வாங்கி, யாராவது பராக்கிரமம் மிக்க மாமா மூலமாக (இந்தக் கேஸில், அலெக்ஸ் செல்லக்கெட்டு ஜோஸஃப், மலையாள மாமோய் – ஆனால் ஹைதராபாத்தில் ‘தொழில்’ செய்தவர்)  இறக்குமதி செய்து கமுக்கமாகப் பெற்றுக் கொள்வது.

ஏன் இந்த ‘ஸெகண்ட் ஹேண்ட்’ என்றால்,  புத்தம் புதிய வாகனத்தை வாங்கி இறக்குமதி செய்ய வேண்டுமென்றால் 200% ஆயத் தீர்வை (எக்ஸைஸ் வரி) கட்டவேண்டும். ஆனால் ‘உபயோகித்த கார்’ என்றால், ஒன்றும் கட்டவேண்டாம்.

இந்த ஹம்மர் ஹெச்3 காரின் அடிப்படை விலை 80 லட்சம் ரூபாய் என்றால், ‘ஃபுல்லி லோடட்’ கார், குறைந்த பட்சம் சுமார் ரூ 1.4 கோடி வரை போகும்; மேற்கண்ட உதய்ணா போஸ் கொடுக்கும் காரின் 2008 வாக்கு மதிப்பு, குறைந்த பட்சம் ரூ 1.5 கோடி அளவில் இருந்திருக்கவேண்டும்; ஆக இந்த திமுக உதயநிதியின் இந்தவொரு அயோக்கியத்தனம் மூலமாகவே நம் அரசுக்கு ரூ 3 கோடி நஷ்டம்.

2. சரி, இந்த ‘இறக்குமதி’ எப்படிச் செய்யப்பட்டது?

முதலில், கார் ஆர்வலரிடம் (இந்தக் கேஸில் உதயநிதி) கணக்கில் வராத, திருட்டுப் பணத்தைப் பெற்றுக்கொள்வது. ஹவாலா மூலம் அதனை மத்தியதரைக் கடல் நாடுகளுக்கு அனுப்புவது. அல்லது, ஏற்கனவே அந்த ஆர்வலரால் வெளி நாடுகளில் பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் ஹவாலா வழி பெரும் ஊழல் பணத்தைப் (இந்தக் கேஸில் அலெக்ஸ் ஜோஸஃப்) பெற்றுக்கொள்வது.

மத்திய தரைக்கடல் நாடுகளில் கீழ்மட்ட வேலைகள் செய்யும் தோதுப்பட்ட, பாவப்பட்ட அறியா (இந்திய) ஆசாமிகளைப் பிடிப்பது. அவர்களுக்குக் கொஞ்சம் ரொக்கம் கொடுத்து அவர்கள் மூலமாக அந்த ஹவாலா பணத்தை அமெரிக்கா அனுப்பி, விருப்பப்பட்ட காரை அந்த அறியா ஆசாமியுடைய பெயரில் இறக்குமதி செய்வது.

இந்தக் கேஸில் அந்த அறியா ஆசாமி, ஒரு கேரளாக்கார முஸ்லீம்.

3. பின் அந்தக் காரை மத்தியதரைக்கடல் நாட்டிலிருந்து (அல்லது இந்தக் கேஸில் நேரடியாகவே) நம் நாட்டுக்கு ‘உபயோகித்த காராக’ புதுக்கருக்கு மறையாமல் இறக்குமதி செய்வது. இம்மாதிரி எந்தக் கேஸிலும், அந்த அறியா ஆசாமி, இந்தக் காரைப் பார்த்திருக்கக் கூட மாட்டார்.

4. இப்படி ‘இறக்குமதி’ செய்யப்பட்டு அதன் மதிப்பு கிதிப்பு எல்லாம் அட்ஜஸ்ட் செய்யப்பட்ட கார், இந்தியாவில் அந்த கார் ஆர்வலர் பெயரில் அல்லது பினாமியின் பெயரில் (அல்லது இந்தக் கேஸில் அவர் சாந்திருக்கும் நிறுவனத்தின் பெயரில் – ரெட் ஜெயண்ட் மூவீஸ்) ஆவணப் படுத்தப் படும்.

பல கேஸ்களில், அந்தப் பழைய அறியாஆசாமியே தன் காரை இறக்குமதி செய்வதாகவும் ஐதீகங்களை உருவாக்கலாம்.

இத்துடன், அலெக்ஸ் ஜோஸஃப் போன்ற மாமாக்களின் பங்கு முடிகிறது.

5. இதற்குப் பிறகும் இந்த உதயநிதி படு அசிங்கமாகவும் கஞ்சத்தனமாகவும் ஊழல் (இந்த அயோக்கியக் குடும்பத்தினரின் ரத்தத்திலேயே ஊறியிருப்பதுதான் இது) செய்தார்.

அது எப்படியென்றால், இங்கு (ஆயுள்கால எம்வி வரி+) வரியெல்லாம் கட்டவேண்டும் அல்லவா? ஆகவே அதனையும் குறைப்பதற்காக, இந்த ஜெனரல் மோட்டார்ஸ் படுசொகுசுக் காரையே, ஒரு மெர்ஸிடிஸ் பென்ஸ் காராக மாற்றி – பலப்பல லட்சம் வரி கட்டவேண்டிய இடத்தில், வெறும் ரூ ~2.50 லட்சம் மட்டுமே கட்டினார். இரண்டு(!) கார்களுக்கும் ஒரே ரெஜிஸ்ட்ரேஷன் எண் வேறு!

படு கேவலர்கள். ஆக இந்த உதிரி, தன் ஹம்மர் காரை, 2008லிருந்து ஒரு பென்ஸ் காராகவே ஒட்டிக்கொண்டிருந்தது. இது மாயாவாதம் இல்லாமல் வேறென்னவாம்?

6. ஆனால், அலெக்ஸ் ஜோஸஃப் அரசுப் புலனாய்வு நிறுவனங்களிடம் ஏற்கனவே பிடிபட்டிருந்தார். நிறைய விஷயங்களைக் கக்கினார்.

21 மார்ச் 2013 அன்று ஸ்டாலின் அழகிரிகளின் வீடுகளில் ரெய்ட் நடந்தது; பலப்பல ஊழல்கள் குறித்த ஆவணங்கள் பிடிபட்டன; அதில் இந்த ஹம்மர் (->பென்ஸ்) கார் விஷயமும் ஒன்று.

அயோக்கியக் கருணாநிதிகள் – ஊழல்கள் சந்தி சிரித்தாலும் – இந்த விஷயங்களை அமுக்கி மூடவே தொடர்ந்து முயற்சித்தார்கள் – ‘காம்ப்ரமைஸ்’ செய்ய முயன்றார்கள், அதன் ஒரு விளைவாக,17 மே 2013 அன்று பம்மிக்கொண்டே சென்ற உதயநிதி, தன் ஊழல்சொத்தான ஹம்மர் வண்டியைப் புலனாய்வு (சிபிஐ) நிறுவனத்திடம் ஒப்படைத்தார்.

ஆனால், ஆச்சரியத்தக்க விதத்தில் 18 அன்று, இதே வண்டி, உதயஉதிரிநிதியிடம் திருப்பித் தரப்பட்டது! எல்லாம் திமுக-வின் திராவிட  ‘நிதி உரையாடலின்’ விளைவுதான். வேறென்ன சொல்ல!

7. இரண்டு சுவாரசியமான விஷயங்கள்:

1: சிபிஐ/டிஆர்ஐ கடும் முயற்சிக்குப் பின் கடத்தல்+ஊழல் மன்னன் அலெக்ஸ் ஜோஸஃப்புக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தது; ஆனால் அரசியல் + கேரளஊழல் + அதிகாரிகளின் மெத்தனம் – பணம் பாதாளம் வரை என்ன அதற்குக் கீழாகவும் பாயும்; ஆகவே மார்ச் 30, 2012ல் கேரள உயர்நீதி மன்றத்தால் ‘அவர் மீது போலி வழக்குப் போடப்பட்டிருப்பதாகச்’ சொல்லி விடுதலை(!) செய்யப்பட்டார். அடுத்த நிமிடம் எங்கே போனார் என்றே தெரியவில்லை.

படுகேவலம்.

2: அதே ஹம்மரா அல்லது மெர்ஸிடிஸ் பென்ஸா என அறியமுடியாத ஒரு நபும்ஸக வண்டியை இன்னமும் இதே உதிரிநிதி ஓட்டிக்கொண்டிருக்கிறது.

சுபம்.

இந்த அயோக்கிய அலெக்ஸ் ஜோஸஃப் குறித்த ஒரு பழைய தெஹெல்கா கட்டுரை. (இதில் கொஞ்சம் மானேதேனே இருக்கிறது, ஆனால் பொதுவாகப் பரவாயில்லைதான்.)

-0-0-0-0-0-0-

இந்த அயோக்கியர்களா, மீண்டும் ஆட்சிக் கனவுகள் காண்பது?

அராஜகத் திராவிடத் திமுக கொள்ளைக்காரர்களிடம் துட்டு வாங்கிக் கொண்டு சோரம் போய்விடுமோ தமிழகம்?

பார்க்கலாம்.

11 Responses to “திராவிடஉதிரி இளவரசன் உதயநிதி ஸ்டாலின், திருட்டுப் பணத்தை வைத்து கள்ளக் கடத்தல் செய்து வெளி நாட்டுக் காரை ‘இறக்குமதி’ செய்ததற்கு அப்பால், அப்படி உழைத்து ‘வாங்கிய’ தன் ஜெனரல் மோட்டர்ஸ்  ஹம்மர் ஹெச்3 காரை மாயமந்திரம் செய்து மெர்ஸிடிஸ் பென்ஸாகவும் மாற்றி, பின்னர் மறுபடியும் ஹம்மராக்கியது எப்படி?”

 1. nparamasivam1951 Says:

  யாரைத் தான் நம்புவதோ தெரியவில்லையே! சிபிஐம் இப்படி்செய்தால் எப்படி?


  • yatha rajah, thatha bureaucracy.

   (but the well entrenched congress-bureaucracy and politico LeLis in various councils/groups within Govt are a different ball game and the whole thing needs to be purged)

 2. seethayv Says:

  Have known this case. But what is the point
  /
  TTV ‘s car case, Natarajan’s car case …All these cost so much loss for the government.Instead charge them fine and be done with it .

  Rahul Gandhi’s citizenship , TTv being a singapore citizen /Permanent resident nothing seems to stick

  All of these people are like Teflon.

  Savukku Sankat says there is an Audio between Jaffer sait and Kanimozhi reflecting corruption.But so what is all it seems.

  Vijayabhaskar the most unhealthy health minister was caught .Nothing happned.

  Depressed really.


  • Dear Seethayv,

   Of course there is some cause for depression. But.

   Please look at it this way. Sorta.

   1. Situation for democracy (or demoncracy as the case may be) here is much better than a Lebanon or an Iran or a Japan or even an USA.

   2. This election is likely to see the beginning of the end/eclipse of one of the Dravidian parties. Hopefully. This will be a gain – but temporarily there would be a huge set back.

   3. This demise may provide a gap and pave way for an emergence of a suitable, alternative. (May be BJP, what with its crop of youthful leaders).

   4. Without a tangible force to oppose (DMK and AIADMK have a symbiotic relationship in this respect) the other Dravidian party would also bite the dust, eventually. Hopefully.

   5. Newer parties like mine will emerge and eventually stake claim to form the government.

   6. Sorry.

   But though I do not have a whole lot of respect for the ‘engg’ of APJ AK, I like to dream too.

   In the mean time, the major existential question of as to what should I cook for lunch looms large in the horizon.

   bfn.

 3. தீராவிட ஊப்பி Says:

  இந்தியாவில் யாரிடமும் இல்லாத உயர்ரக வெளிநாட்டுக் கார்களை இறக்குமதி செய்வது எங்கள் தீராவிடலை உதைநிதியின் பொழுதுபோக்குகளில் ஒன்று. அதற்காக பெருமைப்படுவதை விடுத்து கேள்வி கேட்போரை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அம்பானி அடானிகளிடம் இல்லாத கார் எங்கள் பால்டாயில் பாலகனிடம் இருப்பதை எண்ணி நாங்கள் இறும்பூதடைவதைப் பொறுக்காமல் ஆரியசக்திகள் அவதுறுகளைப் பரப்புகின்றன.

  குடியிருக்க வீடில்லாத சுடலையாரின் தவப்புதல்வனுக்கு கோடிகள் மதிப்பிலான கார்கள் வாங்க பணம் எங்கிருந்து வந்தது எனக் கேட்கிறார்கள். விடலை உதைநிதியை அறியாதவர்களே இப்படிக் கேட்கமுடியும். வேலையோ, தோழிலோ செய்யாமல் மார்கழி மாதப்பிராணியாக அலைந்துகொண்டே 20 கோடிகள் மதிப்பிலான வீட்டை வாங்கி, தனது பெற்றோரை ‘இலவசமாகக் குடியிருக்க’ ஒப்பந்தமிட்டவர் அவர், அந்த வீட்டையும் நேரடியாக வாங்காமல் போலிநிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதன் மூலம் பல தகிடுதத்தங்கள் செய்து தான் ஒரு தீராவிடக் குஞ்சென்று நிறுவியவர்.

  உலகச் செல்வந்தர்களுக்கு சவால்விடும் கொள்ளைப்பணம் கலைங்கர் குடும்பத்தினரிடம் இருப்பது ஊரறிந்த ரகசியம். அதனாலேயே அவர்களைப் ‘பெரிய இடமாக’ மக்கள் அங்கீகரித்துவிட்டனர். இருப்பினும் அவர்கள் சொத்துக்கணக்காகக் காட்டுவதென்னவோ சிலகோடிகளை(விடலையின் பாக்கெட்மணி) மட்டுமே, இதுவரை யாராவது அதை நிரூபிக்க முடிந்ததா? ஆக, உண்மையை ஒன்றுமில்லாமலாக்கும் திறன் எங்கள் தீராவிடலையிடம் கொட்டிக் கிடக்கிறது.

  கலைங்கர் காட்டிய வழியில் திரையில் தோன்றி நவரசங்களையும் பிழிந்தெடுத்து அவர் கொடுத்த காக்டெய்ல் போதையிலிருந்து இன்னும் நமது மக்கள் மீளவேயில்லை, அவர் போகுமிடமேல்லாம் ‘ஐ லவ் யூ’ சொல்லக் காத்திருக்கும் காக்காய்க் கூட்டத்தைக் கண்டாலே அது விளங்கும்.

  கலைங்கர் குடும்ப வழக்கப்படி, அவர்தான் அடுத்த முதல்வர் எனப்பலர் நினைக்கின்றனர். ஆனால், குறிகளே குறியாய் இருக்கும் விடலைநிதியின் திட்டமே வேறு. தனது பொறுக்கித்தனத்துக்காக சிறை சென்ற சுடலையார் மிசா தியாகிப்பட்டு அரசியல் வாரிசானார், இன்றும் முதல்வர் நாற்காலி பகல்கனவாகவே உள்ளது. மாறாக, நமது பால்டாயில் நாயகனோ அரசியலுக்காக நான் சினிமாவில் நுழையவில்லை எனச் சொல்லிமுடிக்கும் முன்பாகவே தந்தை வகித்த முக்கிய பதவியில் அமர்ந்தார், கட்சியின் மூத்த முதலைகள் அனைத்தையும் தன்பின்னலையும் குக்கத்துப் பிள்ளைகளாக்கினார். பிரச்சார வசனகர்த்தாக்களின் உதவியுடன் பாரதப் பிரதமரைத் தாக்கினார்.
  இப்போது புரிகிறதா அவரது குறி எதில் இருக்கிறதென்று? (விளக்குகளுடன் வளையவரும் தீராவிட மாமாவிடலைகள் அமைதிகாக்கவும்)

  சமீபத்தில் ஒலக எழுத்தாளர் ஒருவர் தனது தேர்தல் கணிப்பைக் கூறியுள்ளார், சுடலையின் கனவை விஞ்சும் கணிப்பது, பிராமணர்கள் கசப்புடன் அதை வழிமொழிவதாகச் சொல்கிறார் வேறு. ஆயிரம் கோடிகள் கொட்டி வாங்கிய ஊடக/அறிவுஜீவிய/இணைய/விளம்பரக் கூலிகளைவிட உரக்கக் கூவுகிறார் அன்பர். நாட்டை ஆள்வதற்கு நேர்மையோ, திறமையோ, சேவை மனப்பான்மையோ தேவையே இல்லையாம், ‘விடலை’ கள்தான் தேவையாம். இதுவரை தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள் எவரையும்விட சுடலையார் சிறந்த முதல்வராக ஜொலிப்பாராம். இதே ரீதியில் தொடர்ந்து பொழிகிறார் அவர். இதிலிருந்து விடலைநிதியின் எதிர்காலத் திட்டத்தை உங்களால் கணிக்க முடிகிறதா? யோசியுங்கள். (எங்கள் பகுதி வாக்காளர் ஊக்கத்தொகை: 500-700)


  • ஐயா, எதையும் கணிக்க முடியவில்லை – நான் பூங்குன்றனாரும் அல்லன். என்ன செய்ய.

   எல்லாம் சரி…

   1. ஓட்டுப் போட்டீர்களா?

   2. யார் அந்த வொலகப் புகல் பெட்ற எள்த்தாலர்?

   3. ‘பால்டாயில் நாயகனா’ அல்லது பாலகனா?  :-)

   4. இன்று நினைவுக்கு வருகிறது; சுமார் மூன்று+ ஆண்டுகளுக்கு முன், ஒரு சென்னை->மும்பய் பயணத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர், ஒரு கோடம்பாக்கம் நடிகையின் (இவர் வடக்கத்திக்காரர், பாருள் அல்லது காஜல் அல்லது பாயல் அல்லது ஸோனல் போன்ற பெயர் என நினைவு) உதவியாளர்/அஸிஸ்டென்ட். ஏதோ அனாமத்தாகப் புத்தகம் வாசித்துக்கொண்டிருந்த என்னைப் பிடித்துத் தமிழ் சினிமா பற்றிக் கொஞ்சம் பேசினார், சொல்லப்போனால் கொட்டிவிட்டார் – நான் ஙே.

   அவர் சொன்னதன் சாராம்சம்: இந்த நடிகையும் உதிரிநிதியும் ஏதோவொரு படத்தில் சேர்ந்து நடித்தபோது – இளம்ஸ்டாலின் அவர்களின் பாலியல் ரீதியான தொந்திரவைத் தாங்கவே முடியவில்லை என்பதால்,  அவர் தமிழ் சினிமாவுக்கே முழுக்கு போட்டுவிட்டு, ஒப்பந்தங்களையெல்லாம் கேன்ஸல் செய்துவிட்டார் என்பதுதான்.

   ஹிந்தி, தெலுகு, கன்னட திரைப்பட உலகில் கூட இவ்வளவு மோசமில்லை – பகிரங்கமாகத் தொந்திரவு தரமாட்டார்கள் – ஒப்புதல் இருந்தால் தொடர்வார்கள் என்றார்.

   ஏன் உங்கள் ஊர் இவ்வளவு மோசமாக இருக்கிறது என்று கேட்டார் – ஆனால், நானா திராவிடப் பொறுக்கிகளின் பிரதிநிதி?

   எனக்கு இந்த எழவுகள் பற்றியெல்லாம் அவ்வளவு தெரியாது. ஆனால் இந்த உதய நிதி விஷயம் புரிந்துகொள்ளக் கூடியதே. திராவிடக் குஞ்சுக்குத் தெரிந்ததே ஆட்டம் போடுவதுதான்.

   பார்க்கலாம், உலகம் எப்படி விரிகிறது என்று…

 4. Array Says:

  ஐயா, கவலை வேண்டேல், இதைக் கணிப்பது சிரமமே. ஆனால் விடலைநிதி தடாலடியாக தலைவரான வேகத்தையும் அதற்கு ஏகோபித்து ஒத்து ஊதப்படும் தோரணையையும் சற்று கூர்ந்து கவனித்தால் இது புலப்படும். (உங்களுக்கு மட்டும் ரகசியமாகச் சொல்கிறேன், நேரடியாகப் பிரதமராக நினைக்கிறார் விடலைநிதி. சீக்கிரமே செவ்வாய் கிரகத்தையும் அதையடுத்து இன்னபிற கிரகங்களையும் ஆக்கிரமிக்கும் நோக்கில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை ‘வாங்கும்’ திட்டமும் உள்ளதாம்).
  1.வாக்களித்துவிட்டேன் ஐயா, 7.05 க்கு வாக்குச்சாவடியில் இருந்தேன்.
  2. இதென்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? தமிழகத்தில் ஒரே ஒரு ஒலக எள்த்தாலர்தான் இருக்கிறார். பின்புற முன்புற நவீனத்துவம், பிறழ்வெழுத்து, புக்கர் பரிசு, நோ பல் பரிசு, லத்தி அமெரிக்கா, பிரான்சு, 80 வயதிலும் 5 வயது கழுதையின் வீரியத்துடன் வாழ்வதுகோண்டே முற்றும் துறந்த முனிவனாகவும் இருப்பதெப்படி என எதுவும் தெரியாமல் இருக்கிறீர்களே?! உங்களுக்கு விமோசனமில்லை.
  3. தீராவிடர்களின் அடிப்படைத் தகுதிகளில் நொடிக்கு நூறு அவதாரமெடுப்பதும் ஒன்று, ஆக, தேவைக்கேற்றார் போல் அவர் பாலகனாகவோ பலான நாயகனாகவோ இன்னபிற ஜந்துவாகவோ உருமாறுவார்.
  4. இவையெல்லாம் நிரந்தர மைனர்குஞ்சுகளான தீராவிடலைகளின் க்ரீடத்தை அலங்கரிக்கும் சிறுமணிகள்தாமே, இதிலென்ன ஆச்சர்யம் சொல்லுங்கள்?

 5. seethayv Says:

  I could not go to vote because i have two elderly parents .Corona has restricted all our family members movements coz of parents.

  But in Tiruvannamalai it seems like already Velu has been elected . Corruption is so normalised , my neighbour a poor farmer yelled across the boundary today , மேடம்்வேலு தாமரைல நின்னவனுக்கு 10கோடி் குடுத்து ஒதிக்ட்டாப்ல. Part of it may be true anyway.

  You have party?


  • !

   (the fact is that, having known my dear tn from bloody up close, I won’t rule anything out.)

   …that this scum velu (an ex-bus-conductor in a private transport com who became the ko.pa.se of T.Rajendhar (a clown tamil fillum director) and then dawdled with Rajani and then long back joined DMK) could scale such heights gives me hope that,’hard work pays’ at least in my tamilnadu, ha!

   given everything, I am always sanguine.

   ho hum, and a bottle of rum. what else.

 6. seethayv Says:

  I read the thehelka article.It is funny how people in ‘top creamy layer’ are roughly the same. BJP bigwig’s daughter, DMK ,Sreenivasan almost all top people were Alex Joseph’s customers.

  I often have felt the தொண்டர் படை of all parties fight so hard for the parties sake but the leaders are like, ‘You scratch my back ,i shall scratch yours, but let us keep up appearances of scratching each other’s face’.

  I couldn’t believe when I heard Velu got permission for Medical College. So BJP,or Congress doesnt matter ,it works anyway.

  The local response when I was open about my view was ‘என்ன அம்மா அவுரு இன்சினியிரிங் காலெஜில பணம் போட்டு நஷ்டப்பட்டிடாரில்ல ,பின்ன என்ன செய்ய்றது”


  • Good that you read it; normally only about 5% of the webpage readers bother with references. Anyway. I need to give some clarifications.

   1. About Velu and Med college permission: I kinda know how these ‘approvals’ and ‘clearances’ worked. I have written about this scumbag’s colleges. Now it is very difficult to fake everything and get licenses.

   Earlier it had a lot to do with entrenched LeLi/Congress interests in the many depts and wings of HRD; things are now getting weeded out. I can assure you. Good intentions are there in the highest echelons of power, though not necessarily in admin layers. It is a long battle.

   2. About the BJP comment of yours. It is not that ALL in BJP are stellar, but I would say that a very, very significant number of folks ARE. Many of them have had field/service backgrounds. Those that joined the party for political reasons were primarily responsible for the misdeeds. YMMV. There are always some exceptions.

   “The daughter of a very senior BJP politician” – I know who this is, but he is NOT with the party anymore, because he was sidelined post 2003-4. His corruption came to the fore. (earlier to 1999 or so, he was actually in the Congress)

   Yashwant Sinha was good as long as he was with Chandrasekhar. I have even organized (along with a few others) a meeting in which he spoke in 1988 before he was part of Chandrasekhar govt even. He was a good, articulate leader from Bihar.

   But, during the second half of ABV govt, he became scummy. So he was COMPLETELY ignored from 2004 or so. He eventually joined some other party, I think.

   All I am saying is there have been a few aberrations. But they DID happen. We need to have a sense of balance, I suppose.

   About thondar padai/sirangu etc… I would say, Darwin would come to the rescue.

   Let us wish ourselves good luck, wot?


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s