பட்சிராஜன் அனந்தக்ருஷ்ணன் (PAK) Vs அரவிந்தன் கண்ணையன் (AK47): மஹாபோரத அக்கப்போரும் என்ஆர்ஐ கோமாளிகளும்

08/04/2021

ஸப்பாஷ், ஸர்யான போட்டீ!

மஹாமஹோ பிஎஸ் வீரப்பா அவர்களுக்கு நன்றியுடன் – இந்தப் பதிவு, படுபீதியும் கடும் இறும்பூதும் அளிக்கும் Pak-AK47 டுப்பாக்கிச் சண்டை குறித்தது.

நான் என்னதான் கிண்டல் செய்தாலும் – படிப்பிலும் அனுபவத்திலும் தேசபக்தியிலும் ‘மதச் சார்பின்மை’பூதத்திலும் பிஏகே அவர்கள்  இந்த தண்டக் கருமாந்திர ஏகே47-ஐ விடப் பலப்பல மடங்கு உயர்ந்தவர்தாம்.

ஆனால் பாவம், பெரியவரைக் கர்மா துரத்துகிறது; தெளிவாக எதைச் சொன்னாலும் புரிந்துகொள்ளமுடியாத மூர்க்க மனப்பான்மை மிக்க மூடர்களுடன், அரைவேக்காட்டான்களுடன், எவ்வளவு விளக்கினாலும் அறிந்துகொள்ளமாட்டேன் என அடம்பிடிக்கும் அறிவிலிகளுடன் பொருத வேண்டியிருக்கிறது.

தேவையா

இந்த ஏகே47 அறிவிலி மூர்க்கர்கள் அட்ச்சிவுடும் பாங்கு மிக்கவர்கள் என்பது இன்னொரு விஷயம். பலப்பல எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக, கும்பமேளா குறித்து, வெட்கங்கெட்டு ஏகே47 அசிங்கமாக அட்ச்சிவுட்டதை அவர் இதுவரை சரிசெய்யவில்லை. (பழைய திரித்தல்/உளறல்களைச் சரிசெய்துகொண்டிருந்து நேரத்தைச் செலவழித்தால், புதிதுபுதிதாக கலர்கலராக, துறைதுறையாக உளறமுடியாதே ஐயன்மீர்!)

(அதே சமயம் பெரியவர் பிஏகே அவர்களுக்கு – சிலபல பிறரிடம் , தமக்கு ஒத்துவராதவர்களிடம் பொறுமையின்மையைக் காட்ட முடிகிறது – அவர்களை பிராம்மணப் பொறுக்கிகள் எனத் திட்ட முடிகிறது ; ஆனால் சக நேரூவியஸோஷலிஸ பக்கவாத வாதிகளிடம்,  அவர்கள் உளறிக்கொட்டினாலும், வெறியர்களாக இருந்தாலும், ஏன் அடிமுட்டாட்களாக இருந்தாலும்…  பெரும் பொறுமையைக் காட்டவேண்டி வருகிறது – இதென்ன விபரீதம்!

ஈதென்ன சோகம்!! ஆனால் பெரியவர் பிஏகே, இடஒதுக்கீடுகளில் நம்பிக்கை உடையவர் – பிற மதத்தினரிடமும் பிற ஜாதிகளிடமும் அச்சந்தர்ப்பவசமாகக் கூடக் கோபம் கொள்வதில்லை, அப்படிச் சுணங்கினாலும் வெறுத்துப் போனாலும் அந்த பிற ஜாதி-மத விவரங்களைக் குறிப்பிட்டுத் திட்டுவதில்லை…  X-பொறுக்கீ எனப் பேரன்புடன் விளிப்பதில்லை! பெருந்தன்மை மிக்கவர் அவர்!)

இப்படிப்பட்ட கல்யாணகுணங்களைப் பெற்றவராக, நிகரிலாச் சான்றோராக இருந்தாலும் சொல்வேன்…

எம் பெரியவர் பாவம் செய்தவர்தாம், என்ன செய்ய.

PAKவுக்கும் சரி, AK47வுக்கும் சரி. பாரதம் குறித்தோ பங்க்ளாதேஷ் குறித்தோ முக்கியமாக ரோஹிங்க்யாக்கள் குறித்தோ ஏகத்தும் கவலைப் பட வேண்டிய அத்தியாவசியம் இருக்கிறது.

ஏனெனில் அவர்களுடைய ஆத்மார்த்தமான சமூகசேவை, இந்தியாவுக்கு மட்டுமல்ல – உலகத்துக்கே தேவை! அவர்கள் வென்றெடுப்பதற்கு – புதியதோர் உலகம் என்ன, புத்சுபுத்சா பலப்பல பேரண்டங்களே இருக்கின்றனவே!

… உலகம் முழுவதும் அப்பாவி இஸ்லாமியர்களை இவ்வளவு கொடுமைப் படுத்துகிறார்களே + இந்தியா மேற்கத்திய நாடுகளிடமிருந்து சிறுபான்மையினரைப் பாதுகாக்க பாடம்  கற்றுக் கொள்ள வேண்டாமா (அதாவது யூதர்களை க்றிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் ஒருங்கிணைந்து ஒழித்துக்கட்டியதுபோல, பேகன் மதங்களை த்வம்சம் செய்ததுபோல, தொடர்ந்து ரோமா/ஜிப்ஸீக்களைக் கொடுமைப் படுத்துவதுபோல?) + இஸ்லாமிய நாடுகளில் ஹிந்துக்கள் கொடூரக் கொடுமைகளுக்கு உள்ளாகும்போது, இந்திய மதச்சார்பின்மைத் திலகங்களுக்கு தர்மசங்கடமாகிவிடுகிறதே +  இதனால் தான் ஹிந்துத்துவா வளர்கிறதே, ஐயகோ

மேலும், அவர்களுக்கு உலகத்தையே மதச்சார்பின்மையுடன் மிளிர வைக்கவேண்டிய மஹாமஹோ கடமை இருக்கிறது.

களத்தில் இறங்காமல், அலுங்காமல் நலுங்காமல் – சொக்காயின் இஸ்திரி மடிப்பு கசங்காமல் அமெரிக்கையுடன் அமெரிக்காவிலும் இன்னபிற பிரதேசங்களிலும் உட்கார்ந்துகொண்டு டீவி பார்த்து  இணையத்தில் இழைந்து  ‘த ஹிந்து’ ஈபேப்பர் படித்து ஒழிந்த நேரத்தில் உலகம் உய்யவும் மானுடம் வெல்லவும், ஃபேஸ்புக் போன்ற உன்னத தளங்களில் வியர்வை சிந்த உழைத்துப் பாடுபட்டு… ய்யே அப்பா! பாவம், ஏகத்துக்கும் கசிந்துருகும், அயர்வில்லாமல் பாடுபடும், இந்தத் தொலைதூரப் பொழுதுபோக்கிகளின் பாடு கஷ்டம் தான்…

அதுவும் தங்கள் உயிரைத் திரணமாக மதித்து, ரத்தக் களறிக்குட்பட்ட நிலைமையிலும் மெய் நோக்காமல் (யோவ்! இதனைச் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள் – இங்கே மெய் என்பது மெய்யாகவே உண்மையில்லை, அது உடலைக் குறிப்பிடுகிறது!), கண் துஞ்சாமல், அஹிம்ஸையை போதித்து, ஏகோபித்து ஊராருக்கு உபதேசம் செய்யும் பாங்கும், சமூகப் பணியும் நானாவித புரட்சிகளும் இருக்கின்றனவே…

தாங்கள், அதிகபட்சம், பொட்டிதட்டும் தட்டச்சுக் குமாஸ்தாவாக அல்லது பெஞ்ச் தேய்க்கும் ‘மாதாமாதம் டாணென்ற சம்பள’ கவர்ன்மெண்ட் உத்யோகஸ்தர்களாக இருந்தாலும், பரந்த மனப்பான்மையுடன் உலகளாவிய சமதர்மப் பூங்கா சமைப்பதற்கு உரத்த குரல் எழுப்பும் பாங்கிருக்கிறதே…

இத்தனைக்கும்…

இவர்களில் ஒருவர் ஏகே47 – இப்போது இந்தியரே அல்லர்; இந்தியக் குடியுரிமையைக் கருணையுடன் உதறித் தூக்கி எறிந்துவிட்டு – அமெரிக்கச் சட்டதிட்டங்களுக்குட்பட்டு அமெரிக்கப் பிரஜையாகவே இருப்பேன் என எழுதிக்கொடுத்துவிட்டு சுதந்திரதேவிசிலையின் கையில் அடித்துச் சத்தியம் செய்திருப்பவர்.

அமெரிக்காவின் நடமாடும் மஹாத்மா காந்தி. நடமாடாத சமயங்களில் நேரூவியர். கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்த சமயத்தில் கலர்கலரா-சட்டை கருத்துக் கருந்தேள் கண்ணாயிரம்.

“பூப்பூவா பறந்துபோகும் பட்டுப்பூச்சி அக்கா, நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா” – காணக் கண்கோடி வேண்டும்.

இம்மாதிரி கனகம்பீர என்ஆர்ஐ-களுடன் (சிலபல ஜொலிக்கும் விதிவிலக்குகளை விலக்கிவிட்டால்) எனக்கு ஏன்  மாளாக் காதல் என்றால்:

டேய்! இந்தியா பிடிக்கவில்லை, அது ஒத்துவரவில்லை, அமெரிக்கச் சூழல் பிடித்திருக்கிறது (அது உங்களையே உள்ளே அனுமதித்திருக்கிறதே!), அமெரிக்க டாலர் இன்னமும் பச்சை என்றுதானேடா இந்தியக் குடியுரிமையை உதறிவிட்டு ஆங்கே பொலிந்து கொண்டிருக்கிறீர்கள்?  பின் என்ன மசுத்துக்கு ‘இந்தியாவை முன்னேற்ற அறிவுரை’ மேட்டிமைத்தன மசுறு எல்லாம்? 

பொய்பொய்யாக உங்கள் ஹெச்1பி, க்ரீன்கார்ட், குடியுரிமை விண்ணப்படிவங்களில், “என் சேவையானது எஸ்ராமகிருஷ்ணன் டவுன்லோட் போலத் தனித்துவமானது; என் அறிவால் + பராக்கிரமத்தால் உங்கள் யுஎஸ்ஏ-வுக்குக் கோடானுகோடி நன்மை” என நீங்கள் வெட்கங்கெட்டு எழுதியதை, நீங்களே நம்பிவிடுவீர்களா என்ன?  உங்கள் “எழுத்தாளர் பைரவன் சேவை, அந்த நாட்டுக்குத் தேவை” என்பதெல்லாம் ஒருமாதிரி நகைச்சுவை என்று அறியமாட்டீர்களா என்ன?

ஏன், போயும்போயும் நீங்கள் வெறுத்துதறிய இந்தியாவின் மீது உங்கள் மேலான நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறீர்கள்? அமெரிக்காவை மேலும் உய்உய் என உய்விக்க ஆவன செய்யவேண்டியதுதானே!

மாறாக, இந்தியா மீது அவ்ளோ கரிசனம் இருந்தால், அங்கே பிடுங்கிக்கொண்டிருக்கும் மசுரை, இந்தியாவிலேயே பிளந்துகொண்டு, அறிவுரை அளித்து, அதற்கு மேற்பட்டு அவ்வறிவுரைகள் படியே ஓழுகினால் என்ன?

இன்னொருவர் பிஏகே, தில்லிவாசி என நினைக்கிறேன்; டெம்பரவரி என்ஆர்ஐ (ஃபேஸ்புக் தகவல்). இவருக்கும் இதே பெருவியாதி. நேரூவியஸோஷலிஸம். ஊக்கபோனஸ்ஸாக பௌத்தம். கருமம். கிச்சாமி. மற்றபடி அவர், இந்திய அரசிடம், ‘வாழ்நாள் குமாஸ்தாத்துவா விருது’ பெற்று பணிமூப்பு பெற்ற பெருந்தகை.

ஆனால் அவரை இப்படியே ற்றொம்ப விமர்சனம் செய்தால், ‘பார்ப்பனப் பொறுக்கி’ என அன்பே வடிவாக அவர் தம் தந்தையாரை விளித்திருக்கக்கூடுவது போல, என்னையும் விளித்துவிட்டால் என்ன செய்வது எனப் பயமாகவும் இருக்கிறது. (அத்தொட்டு, பெரீவருக்கு ஸலாம் வெச்சிக்கினே பம்முறேன்பா!)

ஆகவே. ஸப்பாஷ், ஸர்யான போட்டீ!

“சாதுர்யம் பேசாதடீ! என் சலங்கைக்கு பதில் சொல்லடீ!!”

(கருத்துப்படம் – இடதுசாரி: பட்சிராஜன் அனந்தக்ருஷ்ணன் ; வலதுசாரி: அரவிந்தன் கண்ணையன் – ஆவேசப் போட்டி நடனம்! முழு நடனத்தையும் கண்டுகளிக்க: https://www.youtube.com/watch?v=x2QZeL69DiI)

ஆனால், சில சமயங்களில் சொகுசுச்சேரில் இம்மாதிரி ஆசாமிகள் இப்படியே நெடுநேரம் உட்கார்ந்து அத்தியாவசியமான சமூகசேவை செய்துகொண்டிருக்கும் போது…

…கொஞ்சம் இரத்தம் கட்டிக்கொண்டு விடும், பாவம். ஆக… கொஞ்சம் அப்படியிப்படி என நகர்ந்து… ஒருமாதிரி ஒரு பக்கப் பின்புறத்தை மட்டும் தூக்கி – நாமெல்லாம் மனிதர்கள்தாமே – செயலூக்கத்துடனான நுண்ணுணர்ச்சியுடன் நுணுக்கமாக நுனியிலிருந்து… டர்ர்ர்ர்ர்ர்ரென்று விட்டால்… …

…ஆ! அவர்களுடைய மேலான, இன்னுமொரு மனிதவுரிமை + சமூகநீதி + மதச்சார்பின்மை +++  ஃபேஸ்புக் பதிவு/கமெண்ட் ரெடி!!!

நீங்க ரெடியா??

-0-0-0-0-0-

சில மாதங்கள் முன் ஒத்திசைவு பக்கம் (பெரும்பாலும் வரவிருந்த தேர்தலையொட்டி) என ஒரு ஃபேஸ்புக் ‘இருத்தலியல் பிரச்சினை’ (உபயம்: அத்யந்த நண்பர் ஒருவர், பாவம்) ஆரம்பித்தது. பின்னர் நானும் அங்கு ஒருமாதிரி அங்கத்தினன் ஆனேன். முடிந்தவரை ஃபேஸ்புக் சேவை செய்துவிட்டு, 2021 தேர்தல் முடிந்தபின் ஏறக்கட்டி விடலாம் என ஒரு திட்டம்.

ஆக நேற்றுகாலையில் சில ‘படித்து இன்புறவேண்டிய’ ஃபேஸ்புக் பக்கங்களையும் சில (நிஜ வாழ்க்கை நண்பர்களின் பக்கங்களையும் – இன்னும், நான் மதிக்கும் சிலரையும்) புரட்டிப் பார்க்கலாம்… என ஒரு விபரீதக் கடைசி ஆசை.

-0-0-0-0-0-

சுமார் மூன்று மணி நேரம் (சுளையாக!) செலவழித்து மேலோட்டமாகப் படித்தேன். அதில் நம் பிதாமக பத்மினி- பிஏகே + வைஜெயந்திமாலா- ஏகே47 தொடர்பாக இருப்பனவை பற்றி மட்டும், கீழே!

இதில் இவர்களுக்கிருக்கும் கரிசனம் (ஆனால் வெளியே அப்படிப் பகிரங்கமாகச் சொல்லமுடியாது, பாவம்!) என்னவென்றால், (ஆஃப்கனிஸ்தான், பர்மா, பாகிஸ்தான்) பங்க்ளாதேஷ் போன்ற அண்டைய நாடுகளில் அரங்கேற்றப்படும் ஹிந்துகொலைகள் மட்டும் வெளியே தெரியாமல் இருந்தால், பாரதத்திலும் அப்படிச் செய்யப் படும்போது அதனையும் கண்டுகொள்ளாமல், நாமெல்லாம் மதச்சார்பின்மை மினுக்க பட்டொளிவீசிப் பறக்க, அவுசாரித்தனமாக இருக்கமுடியுமே என்பது.

மேலும், இப்படி விஷயங்கள் தெரியவந்தால், நாம் மதச்சார்பின்மை பேசுவது நமக்குக் கொஞ்சம் சங்கடமாகிவிடுமே என்பதும்தான்…

(தொடர்கின்றன பிஏகே – ஏகே47 த்வந்த யுத்தம், தட்டாமாலை சுற்றல், நகைச்சுவை…

… ஏகே47 துப்பாக்கியின் புரிந்துகொள்ள இயலாமை, புரிந்துகொண்டாலும்(!) திரிப்பது, போலித்தனமாக ஆனால் நேரடியாகவே பொய்க் குற்றச்சாட்டை வைத்து அமெரிக்க அறச்சீற்றத்தில் பேயாட்டம் ஆடுவது… வழக்கமே போலப் புளுகுவது… இன்னபிற)

அழிச்சாட்டிய ஏகே47 புளுகுமூட்டையைச் சுமக்கவேண்டும், வேலைவெட்டியற்று அதனுடன் பொருதவேண்டும் என்பது பிஏகே-வின் பழவினைப்பயன், வேறென்ன சொல்ல.

பிஏகே கருணையே இல்லாமல் அடிப்பதைத் தாங்கமுடியாமல் குய்யோமுறையோ என்று இன்னொரு (இதுவும் அரைவேக்காடாகத்தான் இருக்கவேண்டும்) ஜந்து ‘சுதர்ஷன் லதா பார்த்தசாரதி’ விடம் முறையீடு வைக்கிறது, இந்த ஏகே47 டுப்பாக்கி.

ஆனால் – கடைசியில் எல்லோரும் ராசியாகி தேசியகீதம் (அமெரிக்காவுடையது) இசைக்க, இனிதே அப்பதிவும் உரையாடல்கள் களேபரமும் முடிவடைந்தன… (இருந்தாலும் பிஏகே, டுப்பாக்கி ஏகே47-விடம் சொல்கிறார் ” டேய்! எனக்கு இந்தியால வாழணும், வொனக்கு அப்படியில்ல… பின்ன என்ன மசுத்துக்கு  சொகுசா இங்க வொளறிக் கொட்றே?” என ஒருமாதிரிச் சங்கேத பாஷையில் சங்கூதுகிறார் பாவம்.”Of course, I will have to. I am living here in India. It is my problem and not yours.”

தாங்கவே முடியவில்லை, இவர்களுடைய நகைச்சுவை உணர்ச்சி, என்னமா சான்றோர் தனமாக உரையாடுகிறார்கள்.. வாளேந்திப் போரிட்டு உலகத்தை ரட்ச்சிக்கிறார்கள்… வாய் ஓயாமல் பேசிப்பேசியே ஏசிஏசியே  கர்த்துகர்த்தாக உதிர்த்தே… புதிய விடியலை நோக்கிப் புரட்சிபூபாளம் பாடுகிறார்கள், கேனையர்கள்.

மெய்யாலுமே எனக்குப் பெருமையாக இருக்கிறது… இவர்களைப் பற்றியெல்லாம் அறிந்துகொள்வதற்கு, அமோக அறச்சீற்ற வெளிப்பாடுகளில் குளிப்பதற்கு ஒருவன் கொடுத்து வைத்திருக்க வேண்டும்தானே?

இதற்குமேலும் அதே பிஏகே பதிவுக்குச் சிலபலர் ஹிந்துத்துவா வெறி, மதச்சார்பின்மை அது இது என நடமாடியிருக்கிறார்கள் – ஆனால் இந்தப் பிற லூசுகள் லூஸ்ல வுடப்படுகிறார்கள்…

-0-0-0-0-0-

இந்தக் கேளிக்கைகளில் பங்குபெறாமல், ஏன் அவற்றைப் படிக்கக்கூட விருப்பமில்லாமல், பற்றிக் கேள்விப்படக்கூடச் சக்தியில்லாமல் ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறப்போகிறேனோ என்று தவிப்பாகவே இருக்கிறது. என்ன செய்ய…

(என்னுடைய நகைச்சுவை உணர்ச்சி, வாய்விட்டு என்னைப் பார்த்தே சிரிப்பாகச் சிரிக்கும் பண்பு போன்ற விஷயங்கள் குறைந்து கொண்டே வருகின்றன என்பது உண்மை)

13 Responses to “பட்சிராஜன் அனந்தக்ருஷ்ணன் (PAK) Vs அரவிந்தன் கண்ணையன் (AK47): மஹாபோரத அக்கப்போரும் என்ஆர்ஐ கோமாளிகளும்”


 1. Link to the pithy post of PAK followed by a scholarly discussion between him and an assortment of mostly nincompoops lead by the one and only AK47 – that launched a thousand words… :-(

 2. A Friend Says:

  Highly disrespectful and juvenile. I did not expect this again. Mr Pakshirajan is a decent man.

  // I am sad.


  • Sir, ‘a friend’ – I think you are talking about the immaturity of Aravindan Kannaiyan. You know him better. I don’t and I’d rather NOT.

   However I do not know PAK personally or anything. I have not met him. But I will go by your reco – that he is a decent man. May be. Definitely when you toss a cent at him and immediately grab it back. Thanks.

   Hope AK47 realizes his follies and focuses instead on liberating North Korea from Communists and South Korea from the Evangelicals. Please tell him not to make a complete ass of himself in public. It hurts his ‘Living Gandhi of North America’ image. Honestly.

   Amen.

 3. ganesh Says:

  PAK comes across as a textbook sociopath (AK47 and other secoolarists too). ‘I am worried about my secular label. That is my only worry all.the.time. Who cares about who kills who. But, but, but also I have to pretend to care about the hooman rights. It’s very confusing’

  This is like watching monkeys throwing shit at each other. We all know how this is going to end for PAK (and for Kaamaalakasan). Their only label is going to be ‘Pappan’.


  • I agree, but there is an important thing/parameter that is making PAK root for PAKstan.

   When Summer begins in right earnest, as it is happening now, at least in India – brains (or whatever is left of them for these despicable LeLis) tend to melt and become even more fluid. Add to it, the fever of humanrights distemper. And a very safe, air-conditioned environment. It is fun, no?

   Also, please allow ‘old farts’ their airspace.

 4. dagalti Says:

  /அவர் இதுவரை சரிசெய்யவில்லை/

  With your tone and choice of words in said the post, did you seriously expect a rejoinder/rebuttal ?

  I am not suggesting the only reason it has not been responded to.
  Nor am I attempting to police the tone of what you write in your blog.

  But it is not reasonable to expect everyone to sift through your barbs and sleights (highly readable as they may be for the ஏழரையோம்!) and sift out the points to respond to.

  Given this, to claim to have had the last word, is kinda akin to your செல்ல திராவிட ideologues (!) who hurl exasperatingly puerile+vulgar stuff and make a meal out of the fact that it was not responded to.

  To clarify, analogy applies not to the robustness of the content in the arguments but to the apriori expectation of good-faith to engage with the strongly worded material.

  அறிவுரை தொடக்கம்:

  Prima facie good faith-துடன் மாற்றுத்தரப்பு engage செய்யக்கூடிய த்வனி உள்ள இடுகைகள், 1:10 என்ற விகிதாசாரத்திலாவது தேவரீர் எழுதினால், அதற்கு எதிர்வாதம் வர வாய்ப்புண்டு. அவ்வாதத்தின் உள்ளீடு/ பதில் வராமை பற்றி அப்போது பரிசீலிக்கலாம்.

  இல்லையேல், எம்மனோர் களிக்க, புறத்தார் விலக்க கோரிக்கையற்று கிடக்குதண்ணே பலா.

  அறிவுரை முற்றிற்று


  • Sir, Thanks for the well-meaning advice. Not that I needed it though, because I know what you are trying to convey, myself. But, this is a good reminder, none the less.

   In many cases I actually write to the persons concerned to elicit a response – I had even written politely to J a few times IIRC, pointing out some stuff etc – but alas. (in the case of AK47, there were a few cases earlier wherein my tone was not even acerbic – but the fact is that I never wrote to this gent, because I did not have any respect for the gent, even then).

   Honestly. Am not justifying myself. I do not expect any response from the likes of AK47 either. OTOH the language that the duo use to castigate/calumny their ‘opposite ideologies & their protagonists’ is terrible. Not many folks seem to take them to task. If at all there are folks in the know, or aware of the disinfo from the cabals, they are complicit by their criminal silence.

   Also, I have been observing the goings on the ‘tamil public intellectual industry’ for some 4 decades now. It is one of the worst scummish cabals since the lemurian times. So. I do not have patience anymore.

   You call that ‘மாற்றுத்தரப்பு’ – I think that qualifies to be the worst castigation of the mediocre, semi-literate at best, cabal.

   It is not that I do not agree with your take on the need for ‘politely engaging with the otherside, with prima facie good faith and NO ad hominem.’

   Early 1990s. I have written to EPW, Social Scientist, Mainstream and heck, even Seminar – many a time, rebutting many things (written by MSS Pandian, SV Rajadurai, V Geetha, Romila Thapar, Irfan Habib, DN Jha, Sundar Gurukkal, Jean Dreze et al) politely and in a scholarly way with evidence. Really carefully worded ones. (yes, I am capable of very sweet polite nonsense!)

   In fact I have even written to ‘The Hindu’ and ‘Tamil Hindu’ tabloids – last few times I wrote to them was about a rumour spread by a New College (chennai) professor(!) about some random roman/greek times – and then, about a stupid article on the history of IT in TN, by that scumbag IAS officer, who is now with TN archaeo dept, whose name I forget. Ravichandran?? (later I blogged about these two issues too)

   I must admit that, for some reason or the other (not that I know of them) most of them never saw the light of the day. Could be because I lacked / lack ‘credentials.’ Or so I thought.

   Then later, I talked to someone in EPW (in 2003 or thereabouts) and then I realized that, at least regarding two submittals of mine, they were uncomfortable rocking their existing relationships with the LeLi cabals. Anyway.

   Finally. Do I even expect the scumbags to change. No. Do I expect myself to change? Not either.

   I have actually given up on the Tamil Public Intellectuals. Inglourious Bastards.

   • dagalti Says:

    Thank You for indulging me with such a detailed response.
    Even without it, we did guess your bitterness – if I may be unnecessarily familiar and use this word – is after ages of trying to civilly engage.

    As I said, I was not at all trying to tone-police. Only saying ‘he hasn’t responded’ struck me as odd. That is all.

    /Sundar Gurukkal/
    Haven’t heard of him. Will look up.

    / Ravichandran??/
    Udhayachandran IAS.
    In a recent soundbyte on an article on keezhadi, he has asserted that (keezhadi) “gives you a complete picture of a vibrant society that thrived in the area”

    Complete picture-aam :-)
    Head of TN Archaeology.


    • erm, am not bitter anymore; because, it is in the buddha-nature of the eco-system. (apologies for using that cliche, but it exists)

     there are many more in that KD list. and much, much more suspects too.

     thanks for reminding me of that rogue IAS officer. have written a few times about his cockandbullery, still I forget the names of such valiant heroes. (actually it is a defense mechanism that I have trained myself for)

 5. Vel Says:

  //ஏகே47 துப்பாக்கியின் புரிந்துகொள்ள இயலாமை, புரிந்துகொண்டாலும்(!) திரிப்பது, போலித்தனமாக ஆனால் நேரடியாகவே பொய்க் குற்றச்சாட்டை வைத்து அமெரிக்க அறச்சீற்றத்தில் பேயாட்டம் ஆடுவது…//

  நானும் முதலில் இவர் உண்மையை திரிப்பவர் என்று நினைத்து கொண்டு இருந்தேன், ஆனால் இப்பொழுது அவர் ஒரு படித்த முட்டாள் என்றுதான் தோன்றுகிறது. இந்த AKவுக்கு ஒரு கருத்தை புரிந்து உணர்ந்து கொள்ளும் அளவுக்கு மூளை இல்லை என்றே நினைக்கிறேன்.

  “நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
  உண்மை யறிவே மிகும்”

  இந்த குறள் AK-47னிற்கு முழுவதும் பொருந்தும்.


  • +1.

   ஆனால் நீங்கள் கொஞ்சம் டேஞ்சர்; உங்களிடம் கவனமாக இருக்கவேண்டும்.

   மாட்டிக்கொள்ளவே கூடாது.

 6. Em Says:

  PAK is upset because he cannot turn a blind eye to the fact that minorities are unsafe in India’s neighbouring countries when a US representative posts about it. His despair is understandable. How can he talk about secularism, Hindutva and minorities in danger(who are so scared that they threaten to behead a monk).

  AK thinks everything is hunky-dory in Amreeka now due to Biden Thaatha – Kamala Chithi and is upset because pesky PAK is raining in his parade. What happened to BLM movement? I guess there is no more racism in Amreeka.

  He says “Indian Muslims do not have to answer for anything any Muslim does anywhere” but Hindutva is homegrown fundamentalism.

  This is like telling the restaurant that there is a cockroach in your food and they respond “But the next table has icecream”.
  Whaaaat?

  Tulsi is a brave, honest politician but also says Jai Shree Ram and Jai Shree Krishna. So of course AK will call her names. Btw, “Paditha Muttaal” is spot-on.

  NRIs are afflicted by the same problem converts have with Hinduism. They keep talking on and on about something they have let go/left. I think it is more to convince themselves than others.

  Me after reading their(PAK-AK) exchange “None of this makes any sense. My head hurts. Ah, now I remember why I don’t go to Facebook”.


  • +1. Good one, captures the attribs of scum in a gist; my only objection is that AK-47 is not even a padiththa as in padiththa muttaal. But then he is an expert on Gandhi and gives discourses. And also advises Biden on Foreign policies and on managing money supply. Manages and teaches lessons to PAK.

   India’s loss. Definitely. :-(


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s