எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்குப் புதிய பதவி, வாழ்த்துகள்! 💐 (ஊக்கபோனஸ்: மனுஷ்யபுத்திரனுக்கும்! 💐)

29/07/2021

முன்னதாக – விடியலை விடிவதற்கு முன்பே துடிப்புடன் துளிர்க்கவைக்கும் கழக ஆட்சியில் ஆன்றோர்களும் சான்றோர்களும், அதாவது, திராவிட உடன்பிறப்புகளும் தொடர்ந்து வசதி வேலை வாய்ப்புகள் பெற்று வருகிறார்கள் என்பது தெரிந்ததே.

அம்மாதிரி ‘ஸ்டாலின் தான் வந்த்ட்டாரு, நல்லாச்சியத் தந்த்ட்டாரு’களின் ஒருபகுதியாக, கடந்த நேற்று, முன்னதாக, பிரபல தமிழ் எழுத்தாளரும் விருதுகள் பலவற்றை வென்றவருமான உலகப் புகழ்பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், தமிழக அரசின் ‘செம்மொழிபெயர்ப்பு வாரிய’த்தின் தலைவராக நியமிக்கப் பட்டிருக்கிறார். அவருக்கு என் உளம்கனிந்த வாழ்த்துகள்.

இன்று அவர் பதவி ஏற்றுக் கொள்கிறார்;  இதனைத் தொடர்ந்து அவர் வழிகாட்டலில் செம்மொழிபெயர்ப்புகள் செம்மையாகச் செழுமைப் படுத்தப்பட்டு வருகின்றன.

(சாம்பிளுக்கு, கீழே, தமிழ் நாடு வீட்டு வசதிவாரிய சுற்றுச்சூழல்  குட்டிச்சுவர் ஓவியங்கள்)

இனி சுபிட்சம் தான். நன்றி.

கடைசியாக வந்த, உடைந்தேவிட்ட செய்தி…

முன்னதாக, பதவிக்கு ஏங்கிப் பரிதவித்துப் புலம்பிக் குலவையிட்டுக்கொண்டிருக்கும் மனுஷ்யபுத்திரனின் அழுகைப் பிலாக்கணம் பற்றி அவர் மூலமாகவே நாம் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம்…

தமிழ்வரி செவ்வரிகளின் கைகளையும் கால்களையும் மனம்போன போக்கில் உடைத்து உடைத்து உருவாக்கப்படும் மாற்றுத் திறனாளக் கவிதைகளை, மாற்றுத் தமிழில் தொடர்ந்து எழுதிவரும் மாற்றுத் திறனாள மனுஷ்யபுத்திரனுக்கும் பொசிவதற்காக, ஒரு வாரியம் அமைக்கப்பட்டு (‘மாற்றுச்செம்மை மாற்றுத்தமிழ்மை மாற்றுவாரியம்’) அதன் மாற்றுத் திறனாளத் தலைவராக அமர்த்தப்பட்டு, கழக ஆட்சியால் அவர் மாற்றுஅழகு பார்க்கப் படப் போகிறார்.

இதன் மூலமாக, தலைமுடி ஏகத்துக்கும் வாங்கப்பட்டு, இருப்பதும் நரைத்து வாடும் தமிழாண்கள் செவ்வாண்களுக்கு இலவச டோப்பாக்களும் (மாற்றுத் தமிழ்மசுர்கள்) அதற்கு அடித்துக்கொள்ள செம்மைகருமை சாயங்களும் அளிக்கப்படவிருக்கின்றன.

மாளாமகிழ்ச்சியுடன் இன்றுகாலை ஃபேஸ்புக்கில் மாற்றுப்புத்திரன் இட்ட பதிவு:

…இன்னமும் என்னென்ன மாற்றுக்கொடுமைகளை எல்லாம் நாம் எதிர்கொள்ள நேரிடும் என்பதை நினைத்தால்…

:-(

9 Responses to “எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்குப் புதிய பதவி, வாழ்த்துகள்! 💐 (ஊக்கபோனஸ்: மனுஷ்யபுத்திரனுக்கும்! 💐)”

 1. K.Muthuramskrishnan Says:

  உண்மையென்று நம்பி அனுப்பப் போறாங்க வாழ்த்துக்களை.


  • யோவ்! இந்தப் பதிவில் வந்திருப்பது உண்மையில்லை என்று யாராவது சொன்னாங்களா?

   (பிடிஆர் தியாகராஜன் மெட்டு)

 2. dagalti Says:

  Hilarious!

  Dry arid வறண்ட வறண்ட is the dead giveaway.
  கூகிள் மொழிமாற்றியை வெறித்தனமாக பாவித்திருக்கிறார்கள்.

  ஆனாலும் அந்த கருப்பட்டி தான் புரியவில்லை.


  • “Translating is always about making sacrifices; however, nothing essential should be sacrificed.”
   –Enrique Diez-Canedo

   So, meaning making is not essential is Dravidianism. Ta da.

   //ஆனாலும் அந்த கருப்பட்டி தான் புரியவில்லை.

   ஸல்பேட்டா பஸ்ங்க, blackbuckண்றத கர்ப்பு – ஆனாக்க அந்த படத்ல அந்த சிக்கனுக்கு அந்தகளர்ல பட்டிமேறி ஒரு பட்டைக்கோடுகீது மேரி தெர்யுது. அத்தொட்டு கர்ப்புப் பட்டி அப்டீன்னிட்டு பிர்ச்சி தொவுத்து அப்பால இனிப்ப சேத்து இப்டீ கர்ப்டீ செஞ்சிட்டாங்க போல. இதயே பொம்பள மான் அப்டீன்னிட்டு ஃபிகர் செஞ்சிர்ந்தாங்கனாக்க கர்ப்பிணீ ன்னிட்டு அட்ச்சிவுட்ருப்பானுவ.

   FRIN அப்டீன்னிட்டு லூஸ்ல வுடுங்க… பெர்ஸ்ஸா மீனிங்கீனிங்க்னிட்டு பாத்தா வேலக்காவாது.

 3. ஹோமோஆமாவாசாறு Says:

  உறக்கமிலா இரவுகளில் சகியே
  உன் நினைவு
  கொடுங்கனவாய்த் துரத்துகிறது
  பத்தி பத்தியாய் அட்ச்சுவுட்டு
  முற்போக்கு அலக்கிய
  வாதியாகிறேன் நான்

  வனாந்திரத்தில் எங்கோ
  ஊளையிடுகிறது
  வாதம் கொண்ட விலங்கு
  உரக்க ஓலமிட்டே
  விவாதங்களை விதண்டா
  வாதங்களாக்குகிறேன் நான்

  உடலின் இரத்தம் சுண்டச் சுண்ட
  பலமாய் முட்டுக் கொடுத்தாலும்
  பலனேதும் இல்லெயெனக் கழிவிரக்கக்
  கவிபாடி கண்திறந்து பார்க்கையிலே
  கலயத்தில் கிடக்கிறது
  பிச்சை விடியலின் பிச்சை!

  இதனை ஆன்டுகள் இடைவிடாத இலகிய பனியாறிய பின்பு இபடி ஒரு அங்கிகாரம(robealkali) கிடைதிருபது மனதிற்கு மிக நெகிழசியாக இறுகுகிறது, நனறி.

  இந்த சொரணையற்ற ஃபிலிஸ்டைன் சமூகத்தைப் பற்றி இடைவிடாமல் அடியேன் எழுதி வருகிறேன். அதனாலேயே அரசாங்கம் பல சலுகைகளை அறிவித்தது. ஆனால், அதற்காக முதன்முதலில் குரல் கொடுத்தவன் நான்தானே அய்யா? என்னை மட்டும் ஏன் தொடர்ந்து புறக்கணிக்கிறீர்கள்? இன்னும் 2000 ஆண்டுகள் ஆனாலும் இந்தச் சமூகம் உருப்படாது.


  • யோவ்! 🤣👌

   யெவ்ளோபேர்டா இப்டீ கெள்ம்பிகீறீங்கோ!

   ஐயா, உங்களுக்குப் போர்க்கால ரீதியில் நக்கல்மாமணி பட்டம் பார்ஸேல் செய்யப் படுகிறது என்பதைச் சொல்லிக்கொள்ளும் வேளையில்…

   …உங்கள் முதல்கவிதைத் தொகுப்பைப் படிக்க மிக ஆவலாக இருக்கிறேன்.

   • ஹோமோஆமாவாசாறு Says:

    மிக்க நன்றி ஐயா! மிக விரைவில் கவுஜை தொகுப்பு சுழிமயிர்மை பதிப்பகத்திலிருந்து வெளிவர இருக்கிறது.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s