சங்ககாலத்தைச் சமைப்பது எப்படி – தமிழ்/திராவிடக் குடிசைத் தொழிற்குறிப்புகள்

05/12/2021

வாய்க்கு வந்தபடி அட்ச்சிவுடுவதில் நம் தமிழன், தன்னிகரற்ற தற்குறி.

அவன் எந்தவூருக்குப் புலம்பெயன்று கதைத்துக்கொண்டிருந்தாலும் அவன் அப்படித்தான்.

ஒரு சிறு எடுத்துக்காட்டாக பேராசிரியர் தேவபூபதி நடராஜா அவர்களின் 1992-3வாக்கில் வெளிவந்த பிஹெச்டி ஆய்வறிக்கையை (மலாயா பல்கலைக்கழகம்) எடுத்துக் கொள்வோம். இது ஒரு புத்தகமாக 1994ல், வாராணஸீயின் மோதிலால்பனார்ஸிதாஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

பொதுவாக இந்த மோதிலால்பனார்ஸிதாஸ் தரமான பாரதீய புத்தகங்களையும் ஆய்வுகளையும் பதிப்பிப்பது.

இருந்தாலும், தமிழைக் குறித்து அப்பதிப்பகத்துக்கு அறிவுரை/பரிந்துரை தரும் சான்றோர்கள் பக்கா திராவிடர்கள் (=மகத்தான அரைகுறைச் சில்லுண்டிகள்) எனத்தான் நினைக்கத் தோன்றுகிறது. இல்லையேல் இப்படிப் படுமோசமான, ஆதாரமேயற்ற புளுகுகளை ஏன் அந்த மஹாமஹோ பதிப்பகம் பதிப்பிக்கவேண்டும்?

பாவிகளே!

எழுதி ஆவணப்படுத்தப்பட்ட ‘தமிழ் இலக்கியம்’ எனவொன்று பொதுயுகத்துக்கு முன் 200 ஆண்டுகளில் இருந்ததாக ஒரு ருசுவாவது, ஒரேயொரு காத்திரமான தரவாவது இருக்கிறதா?

மாறாக. அதற்குப் பின்னரும் பல நூற்றாண்டுகளுக்கு (சுமார் பொதுயுகம்600 வரையாவது)  அப்படி இருந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை. புனைசுருட்டுப் பஜனை செய்வதற்குத் தோதாக, ‘வாய்மொழி இலக்கியம்’ அல்லது எழுதாக்கிளவி  (அல்லது ப்ளடி ஓலைப்படாப் பிரமாணம் என்றெல்லாம்) தமிழில் இருந்ததாகப் பெரிய சான்றோ, ஏன், திரிக்கப்பட்ட வரலாறோ சிறிய சான்றோ கூட இல்லை.

நமக்குக் கூசாமல் பொய்சொல்வதில்தான் ஆர்வம். ஊதிவூதிப் பெருக்கிச் சுண்டைக்காய்களை (அதுவும் மானசீகம்தான்) பூசணிக்காய்களாக்கி அவற்றையும் சோற்றில் மறைத்து, வரலாறுகளைப் பரிமாறுவதுதான் நம் திராவிடத் தமிழ் வழக்கம்.

-0-0-0-0-

பத்துபதினொன்று வருடங்களுக்கு முன், ஒரு புளகாங்கித அன்பர், இப்புத்தகத்தை எனக்கு அனுப்பி “தமிழின் தொன்மையைப் பற்றிக் காத்திரமாக விளக்கி இருக்கும் இப்புத்தகத்தைக் குறித்து எழுதுங்களேன்!”

ப்ளடி, எழுதிவிட்டேன். கொஞ்சம் பத்துவருடம்போலத் தாமதமாகிவிட்டதற்கு மன்னிக்கவும்.

அன்பரே!

உங்கள் அன்பர் தேவபூபதியார் நடராசனாருக்கு, அநியாயத்துக்கு நகைச்சுவை உணர்ச்சி அபரிமிதமாகப் பொங்கி வழிகிறது.

அயோத்திதாச பண்டிதர், தேவநேயப் பாவாணர் இத்தியாதிகள் அளவுக்கு இல்லாவிட்டாலும், தன்னளவில் தனித்துவமாகச் சரடுவிட்டிருக்கிறார்; ஆனால் பாவம், அவரைச் சொல்லியும் குற்றமில்லை – ஏனெனில் அவருக்கும் முந்தைய பலப்பல சரடாளர்களின் சரடுகளைத் தொடர்ந்து அவர்கள் காலடியில் சரண்டராகித்தான் எழுதியிருக்கிறார்.

சிலப்பதிகாரத்தை வைத்து சங்ககால நிர்ணயம், சங்ககால(!) இலக்கியத்தை வைத்து சிலப்பதிகாரம் நிர்ணயம்.

அதேபோல திடுதிப்பென்று சங்ககாலம் பொதுயுகமுன் 200 ஆண்டுகள் தாண்டிப் போய்விடுகிறது. இததனைக்கும் நமக்கு அதிகபட்ச அதியுன்னதத் தரவுகளாகக் கிடைத்துள்ளவை சட்டித்துண்டுகளில் இருக்கும் கோழிக்கிறுக்கல்களும் தப்பும்தவறுமான ‘தமிழ்’வகையறாவும்தான்.

இதற்கும் மேலேபோய், ஸம்ஸ்க்ருத இலக்கியத்தில் இன்னின்ன மட்டும் இருந்தன, தமிழிலக்கியத்தில் இருக்கும் இன்னின்ன உணர்ச்சிகள், கருதுகோட்கள் ஸம்ஸ்க்ருதத்தில் இல்லை என ‘நிறுவுவது’ வேறு! பேராசிரியருக்கு இது தேவையா?

மேற்கண்டதின் ஒரு பகுதியின் ‘ஒருமாதிரி’ மொழிபெயர்ப்பு:

“…சங்ககாலத்தில் மக்கட்தொகை குறைவு + போர்களும் நடந்தன. ஆனால் சங்கப் புலவர்கள் சுமார் 552 பேர்! இவர்களும் தலைமுறைக்கு எனப் பார்த்தால், சங்ககாலத் தரமென்று பார்த்தால் சிறிய எண்ணிக்கையில் இருக்கவேண்டும். ஆகவே சங்ககாலம் பல நூற்றாண்டுகளாக நீடித்திருக்கவேண்டும். …”

[பொதுயுகம் முன் 200 ஆண்டிலிருந்து பொதுயுகம் 500 வரை – 500 ஆண்டுகளுக்கு என்ன, புத்தகத்தலைப்பு சொல்வதுபோல, சுமார் 700 ஆண்டுகளுக்குச் சங்ககாலம் ஓடியிருக்கிறது]”

அதாவது தலைமுறை என முப்பது வருடங்களைக் கணக்கில் கொண்டால், 700/30 = சுமார் 24 தலைமுறைகள்.

அதாவது, தலைமுறைக்கு 552/24 = 23 சங்ககாலப் புலவர்கள்.

இப்போது ப்ளேட்டைத் திருப்புவோம். (அதாவது நம் வழி திராவிடத்தமிழ் வரலாற்றறிவைப் போலவே! அதேஅதே சபாபதே!)

ஒரு தலைமுறைக்குச் சுமார் 23 புலவர்கள் சங்ககாலத்தில் இருந்திருக்கின்றனர் என்பது தெளிவு.

ஒருதலைமுறைக்கான ஆண்டுகளை (சுமார் 30) கருத்தில் கொண்டால் – 30 X 23 = 690 ஆண்டுகள்.

ஆகவே சுமார் 700 ஆண்டுகள் சங்ககாலம் நீ(ட்)டித்திருக்கிறது. (அதாவது நம்ப கடெச்சங்கமுங்க!)

இப்போது, கீழடி இகழ்வாராய்ச்சிமூலமாக சங்ககாலம் என்பது பொதுயுகம் 600 ஆண்டுகளுக்கு முன்னம் என வைத்துக்கொள்ளலாம். அப்படியே சங்ககாலத்தை பொதுயுகம்முன் 600 – பொதுயுகம் 100 வரை என நிர்ணயித்தால் ஆயிற்று!

‘2600 ஆண்டுகளுக்கு முன் சங்ககாலம்’ என ஒரு புதியவுருட்டு செம்முருட்டு உருட்டலாம். நன்றி.

மேலும் இந்தச் செம்முருட்டை செம்புருட்டு என மாற்றி, ஒருமாதிரி ‘தமிழகத்தில் செம்புக்காலம்’ என நிறுவி(!) – பின் இதனுடன் செம்பியம்மாதேவியை இணைத்தால் – சோழர்கள் 5000 ஆண்டுகளுக்கு முந்தையவர்கள் எனவெல்லாம்…

ப்ளடி! யின்னாங்கடா! * &% $@ ! பொறம்போக்குங்க்ளா…

-0-

உண்மையென்னவென்றால், நம் சங்க இலக்கியம் என்பதில் (அதன் காலத்தை லூஸ்லவுடவும்; அதன் நிர்ணயம் முழுவதும் பொய்மட்டுமே – மாறாக அதில் கூறப்பட்டிருக்கும் புனைவுச் செய்திகளையும் கருதுகோட்களையும் மட்டும் எடுத்துக்கொள்ளவும்) ஏகத்துக்கும் ஸம்ஸ்க்ருத, ப்ராக்ருத கருத்தாக்கங்களிலிருந்தும் சட்டகங்களிலிருந்தும் கடன்வாங்கல் இருந்திருக்கிறது.

இதனைப் புனைசுருட்டாக அக்காலத் தமிழ்ப் புலவர்கள் செய்யவில்லை. ஆத்மார்த்தமாக இவற்றைக் கடன்வாங்கி, பின்னர் உள்வாங்கி, அழகான தமிழில் வடித்திருக்கிறார்கள். தமிழ் என்பதன் சங்ககாலம் (இது பொதுயுகத்தில் மட்டுமே நிகழ்ந்திருக்கவேண்டும்), பாரதப் பேரொழுக்கின் ஒரு முக்கிய அங்கமாகத் தொடர்ந்து, கலாச்சாரப் பரிமாற்றங்களும் மேம்படுத்தல்களும் நடந்திருக்கின்றன.

இவற்றுக்காக, நாம் பெருமைப் படவேண்டும்.

மாறாக – வெறுமனே கஞ்சா அடித்துவிட்டுக் கற்பனைக்கழுதைகளின் மீதேறி சங்ககாலத்துப் பிரமைச் சவாரிக்குச் செல்லக் கூடாது.

ஆனால்.

எய்த கருத்துகலக திராவிட மிஷநரி நபும்ஸகக் கரையான்கள் இருக்கும்போது, உங்கள் அம்புவாணரை நோவானேன், சரியா?

என்னுடைய பெரும்பிரச்சினை என்னவென்றால், இப்புத்தக அட்டையை மட்டும் வைத்துக்கொண்டு, அகநானூற்றுக் காலத்தில், இப்படியெல்லாம் இருந்தன என ஒரு கும்பல் கிளம்பிவிடுமே எனவும் பயமாக இருக்கிறது:

அ. ஆண்களும் பெண்களும் நீல நிறக் கோடுகளுடைத்த மேலாடைகளை அணிந்திருந்தனர்.

ஆ. பெண்கள், தங்கள் முலைக்காம்புகளை மட்டும் மறைக்கும் அதிநவீன மார்க்கச்சைகளை அணிந்திருந்தனர். திராவிட இளம்பெண்களின் இடதுகாதுமடல்கள் வட்டம்வட்டமாக இருந்தன.

இ. ஆண்களுக்கு மாரில் முடியில்லை. அக்குள் முடியை மழிக்கும் பழக்கம் சங்ககாலத்தில் இருந்தது. பெண்களுக்கும் இருந்திருக்கலாம், தரவில் சரியாகத் தெரியவில்லை.

ஈ. ஆண்கள் சதா கிறங்கிய நிலையில், பெண்டிருக்குத் தடவிக் கொடுத்துக்கொண்டிருப்பதில் படுபிஸியாக இருந்தனர்.

உ. சங்ககால அறிவியற் குறிப்புகளின் படி, ஒரு கொக்குக்கு இரண்டு மான்கள்வீதம் தமிழகத்தில் இருந்தன.

ஊ. மான்களுக்கு ஒரு பக்கத்தில் மட்டும் கறும் புள்ளிகள் இருந்தன. இன்னொரு பக்கம் செம்புள்ளிகள். ஏனெனில் அவை திராவிடமான்கள்.

எ. கொக்கு என்பது கொக்கோகத்தின், தலைவன்-தலைவி காமவியல் கண்றாவிகளின் குறியீடு. கொக்குக்கு நீட்டிக் கொண்டிருப்பது அதன் காலல்ல.

ஏ. சங்ககாலக் கொக்குகளுக்கு மூக்கைத் திறக்கமுடியாது. ஏனெனில், கூர்ந்துபார்த்தால், மேல்மூக்கு-கீழ்மூக்கு பிரிவினை இல்லாதது வெள்ளிடைமலை. ஆரியர்களுக்குப் பின்வந்தவைதான் பிரிவினைவாதங்கள்.

ஐ. சங்ககாலத்தில் இருசாதிகள் மட்டுமே இருந்தனர். ஆண்சாதி + பெண்சாதி. ஊக்கபோனஸ்ஸாக மான்சாதி, கொக்குசாதி.

திராவிடச் சமுதாயம் அதி உன்னதம்.

ஒ. …

ஓ!

ஓ!!!

ஆராய்ச்சி செய்துசெய்து, ப்ளடி, எனக்கே அயர்வாகிவிட்டது.

நன்றி.

-0-0-0-0-

டிங்….

நெக்ஸ்ட்.

அடுத்த சங்ககால மகாத்மியம் புத்தகத்தை அனுப்புங்கடா, ப்ளடி அரெகொறெங்க்ளா…

12 Responses to “சங்ககாலத்தைச் சமைப்பது எப்படி – தமிழ்/திராவிடக் குடிசைத் தொழிற்குறிப்புகள்”

 1. anonymous116 Says:

  பூணூல் தெரியறது, பாப்பார வெறிய மறைச்சுக்கோங்கோ அபிஷ்டு அபிஷ்டு


  • பேஷ் பேஷ்! ற்றொம்ப நன்னா சொல்லிட்டேள் போங்கோ! ஜமாய்க்கிறீர், அனானிமஸ்வாள்! ஆத்துக்காரிய விட்டு த்ருஷ்டி சுத்திப்போடச்சொல்லும் ஓய்!

   காத்திரமான தரவுகளுடன் கூடிய இனியவாழ்த்துக்கு நன்றி, ஐயன்மீர்!

   சங்ககாலம் 5000 பிஸிஇ முதல் ஆரம்பித்தது, தொல்காப்பியம் 500 பிஸிஇ-யில் எழுதப் பட்டது. உலகின் ஆதிமொழி பகவன்மொழி எல்லாம் தமிழ், சந்துசமவெளி நாகரிகமும் திராவிடமே, தமிழ்மொழி 20000 ஆண்டு தொன்மையுடைத்தது, லெமூரியாவின் ஆதியோதிஆதிதிராவிடர் உட்பட, அனைத்தையும் ஒப்புக்கொண்டு விட்டேன். மீண்டும் நன்றி.

 2. Ramesh Narayanan Says:

  அந்தச் சங்க காலப் பறவையின் கொக்கோகக் குறி, ப்ளடி, கொக்கி போல இருத்தலால்தானே அதை கொக்கு, கொக்கென்றழைத்தான், நம் தீராவிட செம்புக்கோன்


  • 🤣 யோவ் கொங்கணவா! கொக்கி போட்டுப் பெண்கொக்கை இழுக்கும் ஆண்கொக்கை இப்படியா கேலி செய்து கொக்கரிப்பாய்? மற்றபடி, ரெண்டு செம்புக்கோன் ஐஸ் வாங்கி உடனடியாகப் பார்ஸேல் செய்யவும்.

   இப்போது தோன்றுகிறது – அந்த கொக்கு ஒரு கொக்கென் போதைவஸ்து ஸப்ளை செய்யும் குருவியோ? ஒருவேளை அதனால்தான்  அந்த ஆடவன் கிறங்கியிருக்கிறானோ? ஆகவே, உலகின் முதல் போதை, திராவிடபோதை என்றறிவாய்.


 3. சமஸ்கிருதக் காதல் பற்றி என்ன சொல்லியிருக்கார் என்று சொல்லாமல் முடித்துவிட்டீர்களே.

  பொருளிலக்கணம் நமக்கே நமக்கானது தானே? ப்ளீஸ் ப்ளீஸ், உறுதிசெய்க.

  பற்பல ஆசிரியர்கள் 23 தலைமுறைகளாக மேஜையை குத்தி முழங்கு முழங்கென்று முழங்கியிருக்கிறார்கள்

  நீங்கள் அதிலும் கைவைத்துவிடுவீர்களோ என்று கலக்கமாக இருக்கிறது.


  • என்னிடம்போய் ஏன், நான் ஏதோவொரு பெரும்பண்டிதன் (உங்கள் சாச்சா நேருபோல) என நினைத்துக்கொண்டு கேள்விகேட்கிறீர்கள் எனச் சந்தேகமாக இருக்கிறது, இருந்தாலும்… நீங்கள் நக்கலாகவே கேள்விக்கிறீர்கள் என ஜுஜாதாத்தனமாகப் பட்டாலும்:

   சமஸ்கிருதக் காதல்:

   ஏதோ அரைகுறையாகச் சொல்லியிருக்கிறார். உயர்ஜாதிப் பெண்கள்தாம் ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் இலக்கியங்களில் (காப்பியவகை) குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள் என்பதுபோல + பிராஹ்மணப்பெண்கள் பொதுவாக ஹீரோயினிகளாக இல்லையென்றும் (இது சரிதான்); ஆனால் பொதுவாக ஒன்றும் சுகமில்லை.  சாருதத்தம் பற்றிக் கொஞ்சம் இருக்கிறது+ என நினைவு. ஒரேயொரு முறைதான் முக்தக வார்த்தையையே உபயோகித்திருக்கிறார், தமிழில் அகப்பொருள் பற்றி நீட்டி முழக்கியதில் அதன் ப்ராக்ருத/ ஸம்ஸ்க்ருதக் காரணகாரியங்களைப் பற்றி ஒன்றுமே, துளிக்கூடச் சொல்லவில்லை. (ஒரு பிஹெச்டி தீஸிஸ் எழவுக்கு எந்த விதத்திலும் ஆழம் முக்கியமில்லை – அதாவது, அது தமிழுடன் தொடர்வுகொண்டதாய் இருந்தால்- என்பதை அவர் மறுபடியும் தெளிவுபடுத்தியிருக்கிறார், அவ்வளவுதான்; நான் அப்புத்தக எழவைப் படித்ததற்குக் காரணமே அன்பர் ஒருவர்தாம் – தன்னிச்சையாக நான் அச்செயலைச் செய்திருக்கமாட்டேன்.)

   பொருளிலக்கணம் நமக்கே நமக்கானது தானே:

   இல்லை. மன்னிக்கவும். நமக்கு நாமே அப்படிச் சொல்லிக்கொண்டிருந்தால் போதுமா, சொல்லுங்கள்?

   நாம் பிரதியெடுத்திருக்கிறோம், கொஞ்சம் அட்ஜஸ்ட்டும் செய்து நமக்கேற்ற மானேதேனே சேர்த்திருக்கிறோம், அவ்வளவுதான்.

   (உங்களுக்குப் பதில் சொல்வதற்கு, அதாவது திட்டுரிமையை நிலை நாட்டப் பயமாக இருக்கிறது; டிவிட்டரில் உணர்ச்சிவசப்பட்டுவிட்டதுபோல, ஏதாவது ‘திட்டுகிறேன்’ நொட்டுகிறேன் என வேர்ட்ப்ரெஸ் காரர்களிடம் பிராது வைத்து என் கணக்கை முடக்கக்கூடச் செய்வீர்கள் எனத்தான், ஏனெனில் உங்கள் சாச்சா நேரு அப்படிப் பலமுறை கருத்துரிமைக்குக் கடிவாளம் போட்டு ஹிம்ஸை செய்திருக்கிறாரன்றோ?)


   • நன்றி.
    புஸ்தகத்தை படிக்கப்போவதில்லை என்பதால் மீதமுள்ள தகவல்களையும் கறந்துவிடலாம் என்பதற்காகக் கேட்டேன்.

    /நமக்கு நாமே அப்படிச் சொல்லிக்கொண்டிருந்தால் போதுமா, சொல்லுங்கள்?/
    போதவே போதாது, அதனால் தான் கேட்டேன்.
    ‘நமக்கே நமக்கானதாக’ இருக்க வாய்ப்பில்லை என்பதே என் யூகமும், ஆனால் ஊர்ஜிதப்படுத்தும் தரவுகள் அறியேன். அதனால் உங்களை கூகிளாக்கினேன்.

    /நாட்டப் பயமாக இருக்கிறது/
    ஐயா இது உங்கள் இடம்.
    அது பொது இடம்.

    அங்கு நீங்கள் அன்னாரை தனியாக @இட்டுத் திட்டினால், அது உங்கள் பாடு.

    என்னை அட்டிட்டு அன்னாரை திட்டினாலாவது கள்ளமௌனம் சாதித்துக் கடந்திருப்பேன்.

    ஆனால் நீங்கள் அன்னாருக்கும் அட்டிட்டு, எனக்கும் அட்டிட்டுப் பேசினால், எனக்கும் அத்திட்டில் ஒப்புண்டென்றாகுமன்றோ?

    அதனால் தான் மீறலைச் சுட்டினேன்.

    சொல்லப்போனால் உங்கள் தாக்குதல் இல்லையெனில் பெரியவர் எனக்கு ஏதாவது பதில் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். ஒருபாவமும் அறியாத இந்த முதிர்-இளைஞனை வரலாறு-தாளன் (history-sheeter) ஆக்கிவிட்டீர்கள். திருப்தியா.


    • “…would be seen as making me complicit… so…”

     🧐 oh the way we live (and die) by…

     Othisaivu is in general an open forum. I allow even uncalled-for & viscerally poisonous comments. (and sometimes I respond to them – however, in future, I may turn off comments, dunno now).

     Even when I make comments or write stuff that can be seen as rabid, they ALWAYS have a factual basis.

     Okay, am getting down from that bleddy moral highground, and getting to the slush.

     That mediocre professor (who actively encouraged mediocrity throughout his career) habitually slanders people and institutions. He is anti-Hindu. SO, oh so liberal. He spreads misinfo – many times even without a shred of evidence.

     But we will go to his protection and endeavor to protect our posterior, won’t we. And expect to engage with him so that he would throw crumbs (via his erudite responses) at us.

     One lives and learns. Or generally shuts up.

     From now onward, may be I will choose the later.

     (of course, in the end we are all toast, so nothing ever bleddy matters, yeah)


    • / expect to engage with him so that he would throw crumbs/

     I leave you to your choice of words but I will clarify what I meant: the possibility of an eminent person having to modify his indefensible assertion in public view has much value in these discussions. At the very least it would give pause to the ignorant who take such assertions as a finality.

     And I said that’s what I assert got squelched with thine interjection.

     And even that musing here in the comments was said in a lighter vein, hoping that’d be fairly obvious. Sheesh!


    • Of course it was obvious; your attempt was very well understood. But I was edgy – and continue to be.

     (many reasons for it, just heard in the morn about three MORE such ‘kidnap+rape+conversion’ tragedies of Hindu daughters – 2 in bangladesh and 1 in pak – and am off today to help a friend living in kurinji-land to deal with the machinations of the dastardly dravidians – you may call it fieldwork; of course you know the kind of ‘discussions’ that are possible in these eminent situations – especially when the wronging party is a henchman of IPS, s/o IP)

     But we are of course free to be the legendary ostriches. (but do not correct me – Ostriches do not do that – I know that damn expression is some kind of figure of speech or idiom or bleddy whatever)

     You have a rather high opinion of ’eminent persons.’ – especially of the self-hating brahmino-dravidian kind. Especially of the ‘liberal feather.’ I have seen, so far, exactly TWO people doing it in my life so far. My pranam to them. None of them was Tamil.

     But your Prof? Ha ha. Sorry. My best wishes. Could be ottokorrected to vicious. But if he, at some point of time, does revise any abominable opinion of his – please do let me know. (I have had personal run-ins with him, the details of which I can’t share in public – so would be delighted to say a warm hello to such reformed whitecollar academic gents as and when they get reformed)

     Of course we can indulge is erudite & friendly sparring. I love Luis Bunuel’s Delicate charms of the Bourgeoisie too.

     Thanks.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s