…ஐயா மகாமகோ எஸ்ரா,

உங்கள் காலில் மானசீகமாக விழுந்து உருண்டுபுரண்டு, நாத்தழுதழுக்க கண்ணீர் மல்க இறைஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். அவர் என்ன கொடுமையைத்தான் செய்தார், உங்களுக்கு? ஏனிப்படி ரவுண்டு கட்டிக்கொண்டு அடிக்கிறீர்கள் அவரை?

ஏன் உங்கள் லெவலுக்கு அவர் குடுமியைப் பிடித்து இழுத்துத் தரதரவென்று, அதல பாதாளத்துக்குக் கொண்டு வருகிறீர்கள்? என்ன பாவம் செய்தார் அவர்? :-( Read the rest of this entry »

முன்னதாக, பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரிடம் ஒரு பூங்கொத்தைக் கொடுத்தபோதே… Read the rest of this entry »

என்னுடைய கேளிக்கைப் பொழுதுபோக்குகளில் ஒன்று –  என்னுடைய செல்ல சக-திராபை திராவிடர்கள் வீரத்துடன் சுழற்றும்   இனமான எழுச்சிப்போராளி அட்டைக்கத்திகளைப் பார்த்து இறும்பூதடைவது.

என்னுடைய வாழ்க்கைக்கு ஒரு ஆழமான அர்த்தத்தை உருவாக்குபவர்கள் இவர்கள்தாம். ;-)

Read the rest of this entry »

(அல்லது) உதிரி அரசியல்வாதிகள் உணவுப் பாதுகாப்பு மசாலாதோசைமசோதா

இப்படியாகத்தானே மணிமேகலைப் பூங்கொடியாள், இத்தாலியில் பிறந்து இங்கிலாந்து அடைந்து, அங்கிருந்த இந்திய ராணியின் அரசிளங்குமரன் கரம் பற்றி, இந்தியா கண்டு, பின்னர் அந்த அரசிளங்குமரன் — உதயசூரியகுமரன் எனும் வெகுபிற்காலச் சோழனின் அப்போதைய நண்பனான விடுதலைப்புளிச்சோழனால் – படுகொலை செய்யப்பட்ட பின், தானே  அரசுகட்டில் ஏறி என்ரெகா போலிக்குளம் தொட்டு ஸ்விட்ஸர்லாந்து வங்கி வளம் பெருக்கினார்?

இப்படியாகத்தானே இம் மணிமேக்கிங்கலை, கஞ்சி மாநரகம் சென்று அங்குள்ள மெத்தப் படித்த அமர்த்யா அரைகுறைஷென் அறவண அடிகளிடம் பாடம் கேட்டு, ‘பிச்சை இடினும் ஆளுகை நன்றே’ முதலான பயிற்சிகள் பல பெற்று, தம் மக்களை கஞ்சி மட்டும் குடிக்கும் ஓட்டாண்டிகளாக்குகிறார்? Read the rest of this entry »

ஆயிரம்  முக்கியமான வேலைகள் காத்துக் கொண்டிருந்தாலும், கவைக்குதவாத வீண் வெட்டி அக்கப்போர்களில் கிடைக்கும் மகாமகோ இன்பம்ஸ் – அவற்றின் சுகமே அலாதிதான்.

’சந்திரசேகரேந்திரன்’ எனத் தன்னை அழைத்துக் கொள்பவர் ஒரு பின்னூட்டமிட்டிருக்கிறார்:

”திராவிடர்களை விழிப்புணர்வு பெறச்செய்தது அண்ணாவின் எழுத்து. அவர்களை எதுவும் எதுவும் தெரியாத மயக்கத்தில் வைத்திருக்க விரும்புவது பார்ப்பனீயம். அதற்கு பின்பாட்டு பாடிவருபவர்கள் நீங்கள்.

வெளிப்படையாய் கேட்கிறேன். அடுக்குமொழி தமிழுக்கு அடுக்காத மொழி என்கிறாரே கட்டுரையாளர் அதற்கும், அந்த மொழிநடையை “பொறுக்கி நடை” என்கிறாரே அதற்கும் இலக்கண ஆதாரத்தை காட்டட்டும். அகத்தியம்- இல்லை. ஆனால் தொல்காப்பியமும், நன்னூலும் உள்ளது. இது இரண்டிலிருந்தும் அல்லது இரண்டில் ஏதேனும் ஒன்றிலேனும் இதற்கு ஆதாரமிருந்தால் கட்டுரையாளர் காட்டட்டும், அல்லது அவரின் பக்க வாத்தியங்களான நீங்கள் காட்டுங்கள். Read the rest of this entry »

… திரைப்படப் பேருரைகளினால் என் தலை கொத்தப்பட்டு, என் தலையிலிருந்து நெடுங்குருதி பீறிட்டடிக்க, பனி மூட்டத்துக்கிடையில், நான் மூச்சிரைக்க ஒடிக் கொண்டிருக்கிறேன். உலகத்தின் தொன்மையையும் தனிமையையும் நினைவுபடுத்திக்கொண்டு எவ்வளவு பேர் இப்படி ஓடுவதை அந்த நெடும்பனிமூட்டம் பார்த்துக் கொண்டிருந்திருக்கும்.  அந்தத் தன்னளவில் தனியான மூச்சிரைப்பும் இப்படி எவ்வளவு பனி மூட்டங்களைப் பார்த்திருக்கும். ஆனால், எல்லா மூச்சிரைப்புக்களும் வெவ்வேறுதானே? ஆனாலும் மூச்சென்பது, மூக்குக்கு  ஒன்றுதானே!

எத்தனை மனிதக் கண்கள் இப்பனிமூட்டங்களைத் தீண்டியிருக்கின்றன. யாவும் கடந்து பனிப்படலம் ஆகாசம் நோக்கி உயர்ந்தபடியே தான் நெடுந்தனியாள் என்று தனக்குத்தானே சொல்லியபடியே புகையும் நீரும் காற்றுமாக நின்று கொண்டிருக்கிறது. பல்லாயிர வருடங்களில் நினைவுகளை இந்தப் பனிப்படலம் தனக்குள் எப்படிப் பொதித்து வைத்திருக்கும். அதன் இருப்பின் வழியாகவே வாழ்வு மகத்தானது எனக் காண்பிக்கும் அதனூடே எத்தனை பகலிரவுகளாகக் காலத்தைக் கடந்து, இலக்கில்லாமல் நான் ரத்தம் சொட்டச்சொட்ட ஓடிக்கொண்டே யிருக்கிறேன்… மனித வாழ்வின் சோகங்கள் இப்படியான நெடுங்குருதி நெடும்பயணங்கள் தாமோ? எவ்வளவு  நெடும்பயணங்கள் இப்படி… … … ஆ! அய்யோ!!

… தூக்கிவாரிப் போட்டுக்கொண்டு எழுந்தேன்… அடச்சே!  ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டேன். அவ்வளவுதான்எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் தளத்தைப் படித்தபடி நான் கண்ட துர்சொப்பனம்தான் இது. பயபீதிகொள்வதற்கு ஒன்றுமில்லை. ஹி ஹி.

Read the rest of this entry »

அதிஷா அவர்கள் ஒரு புத்தக அறிமுகம் செய்திருக்கிறார்கள்; அதன் தலைப்பு திராவிட இயக்கம் for dummies; வேலை அசதியால் – இந்தத் தலைப்பில் அவர் தவறு செய்திருக்கிறார் என நான் கருதுவதால், நான் கொஞ்சம் அதனைச் செப்பனிட்டு திருத்தியிருக்கிறேன்; ஏதோ என்னால் ஆன உபகாரம்.

இந்த அறிமுகத்தின் சுருக்கம்: இக்கால இளைஞர்கள் ஒன்றுமே தெரியாமல், திராவிட இயக்கத்தையும், கருணாநிதி அவர்களையும் கரித்துக் கொட்டுகிறார்கள். திஇ பல மகத்தான சாதனைகளைச் சாதித்துள்ளது. “நூறாண்டுகளுக்கு மேலாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டு தொடர்ந்து சமூகநீதிக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் போராடிவருகிறது.” ஆனால் விஜயகாந்த் குறுகிய காலத்திலேயே 10சதவிகிதம் வோட்டுக்களை அமுக்கிக் கொண்டுவிட்டார். “வருங்காலத்தில் திராவிட இயக்கம் தன்னை தமிழகத்தில் நிலைநிறுத்திக்கொள்ளவும் புதிய இளைஞர்களிடம் தன் சமூகநீதி சார்ந்த கொள்கைகளை கொண்டு செல்லவும் என்னவெல்லாம் செய்யலாம் என்கிற பரிந்துரைகளையும்” வழங்குகிறார், இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் கோவி லெனின்.

என்னுரை: அதிஷா அவர்களுக்கு மிகவும் நகைச்சுவை உணர்ச்சி அதிகம். இதைப் பற்றி மிகவும் சிலாகித்து ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன். ஆனாலும், அவரும் இளைஞர்தான் என நினைக்கிறேன். இவரும் திஇ காரர்களைப் பற்றி ஒற்றைப் புத்தகத்தைப் படித்துவிட்டு பின்புல விஷயங்களை அறியாமல் திஇ-யையும், முக-வையும் புகழ்கிறார்.  ஆக, இவர் விமர்சனம் வைக்கிற இளைஞர்களில் இவரும் ஒரு மகத்தான பங்கை வகிக்கிறார். Tautology, what else! ஆக, என் சிலாகிப்புகளில் 80%த்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். Read the rest of this entry »