முன்னதாக, பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரிடம் ஒரு பூங்கொத்தைக் கொடுத்தபோதே… Read the rest of this entry »

ஐயகோ!  நமக்கு இது தேவையா? எனக்கு மிகமிக வருத்தமாக இருக்கிறது. அழுகைஅழுகையாக வருகிறது.

பாவம், கனிமொழி அவர்கள். பெண்ணாகப் பிறந்ததுதான் அவருடைய முதல் குற்றமோ? பிற்காலத்தில் திடுதிப்பென்று கவிஞ்சரானது வெறும் வெகுதூர இரண்டாம் குற்றம்தானோ?

Read the rest of this entry »

“விமலாதித்த மாமல்லன் என்ற முகமூடியில் நரசிம்ம அய்யங்கார்கள் இணைய தளத்தில் உலா வருகிறார்கள் எச்சரிக்கை என்று தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

சரி – கணிதத் தருக்கபூர்வமாக மேற்கண்டதைப் படித்தால்:

விமலாதித்த மாமல்லன் = முகமூடி
முகமூடி = மாஸ்க்
மாஸ்க் என்பது முஸ்லீம்கள் வழிபடும் இடம் = மசூதி.

ஆக, திராவிடத் தருக்கவியலை உபயோகித்து, யோசித்தால் — மசூதித் தளங்களில் அய்யங்கார்களும் இணைந்து உலவிக் கொண்டிருந்தால், அது மத நல்லிணக்கத்தைத் தானே காட்டும்? இது ஒரு நல்ல விஷயம்தானே? இது தொடர்பாக இந்த வீரமணி அவர்கள், எவருக்கு  எச்சரிக்கை கொடுக்கவேண்டும். எனக்கு இது புரியவில்லை. ஹ்ம்ம். குழப்பம். குழப்பம்.

ஹ்ம்ம். இணைய விடுதலையில் வந்த இந்த அக்கப்போர்ச் செய்தியை நண்பர்கள் எடுத்துக் காட்டவில்லை. நானேதான் படித்தேன்! எனக்கு, ‘சாரய்யா, வொங்ளப் பத்தி அவ்தூற் வந்த்றுக்’  என்று சொல்லும் சிஷ்யகேடிகள் கிடையாது. கடவுளுக்கு நன்றி.

ஆனால் இந்தக் கட்டுரை இப்படித் தொடர்கிறது…

“இப்பொழுது 18 வயது வந்தவர்களுக்கு வாக்குரிமை இருக்கிறது. 18 வயது நிரம்பியவர்கள் பெரும்பாலும் பொறியாளர்களாக இருக்கிறார்கள்.”

ஒரு தொடர்புமே இல்லாமல் இப்படியே விரிகிறது இந்தக் கட்டுரை. Read the rest of this entry »

ஆயிரம்  முக்கியமான வேலைகள் காத்துக் கொண்டிருந்தாலும், கவைக்குதவாத வீண் வெட்டி அக்கப்போர்களில் கிடைக்கும் மகாமகோ இன்பம்ஸ் – அவற்றின் சுகமே அலாதிதான்.

’சந்திரசேகரேந்திரன்’ எனத் தன்னை அழைத்துக் கொள்பவர் ஒரு பின்னூட்டமிட்டிருக்கிறார்:

”திராவிடர்களை விழிப்புணர்வு பெறச்செய்தது அண்ணாவின் எழுத்து. அவர்களை எதுவும் எதுவும் தெரியாத மயக்கத்தில் வைத்திருக்க விரும்புவது பார்ப்பனீயம். அதற்கு பின்பாட்டு பாடிவருபவர்கள் நீங்கள்.

வெளிப்படையாய் கேட்கிறேன். அடுக்குமொழி தமிழுக்கு அடுக்காத மொழி என்கிறாரே கட்டுரையாளர் அதற்கும், அந்த மொழிநடையை “பொறுக்கி நடை” என்கிறாரே அதற்கும் இலக்கண ஆதாரத்தை காட்டட்டும். அகத்தியம்- இல்லை. ஆனால் தொல்காப்பியமும், நன்னூலும் உள்ளது. இது இரண்டிலிருந்தும் அல்லது இரண்டில் ஏதேனும் ஒன்றிலேனும் இதற்கு ஆதாரமிருந்தால் கட்டுரையாளர் காட்டட்டும், அல்லது அவரின் பக்க வாத்தியங்களான நீங்கள் காட்டுங்கள். Read the rest of this entry »

… திரைப்படப் பேருரைகளினால் என் தலை கொத்தப்பட்டு, என் தலையிலிருந்து நெடுங்குருதி பீறிட்டடிக்க, பனி மூட்டத்துக்கிடையில், நான் மூச்சிரைக்க ஒடிக் கொண்டிருக்கிறேன். உலகத்தின் தொன்மையையும் தனிமையையும் நினைவுபடுத்திக்கொண்டு எவ்வளவு பேர் இப்படி ஓடுவதை அந்த நெடும்பனிமூட்டம் பார்த்துக் கொண்டிருந்திருக்கும்.  அந்தத் தன்னளவில் தனியான மூச்சிரைப்பும் இப்படி எவ்வளவு பனி மூட்டங்களைப் பார்த்திருக்கும். ஆனால், எல்லா மூச்சிரைப்புக்களும் வெவ்வேறுதானே? ஆனாலும் மூச்சென்பது, மூக்குக்கு  ஒன்றுதானே!

எத்தனை மனிதக் கண்கள் இப்பனிமூட்டங்களைத் தீண்டியிருக்கின்றன. யாவும் கடந்து பனிப்படலம் ஆகாசம் நோக்கி உயர்ந்தபடியே தான் நெடுந்தனியாள் என்று தனக்குத்தானே சொல்லியபடியே புகையும் நீரும் காற்றுமாக நின்று கொண்டிருக்கிறது. பல்லாயிர வருடங்களில் நினைவுகளை இந்தப் பனிப்படலம் தனக்குள் எப்படிப் பொதித்து வைத்திருக்கும். அதன் இருப்பின் வழியாகவே வாழ்வு மகத்தானது எனக் காண்பிக்கும் அதனூடே எத்தனை பகலிரவுகளாகக் காலத்தைக் கடந்து, இலக்கில்லாமல் நான் ரத்தம் சொட்டச்சொட்ட ஓடிக்கொண்டே யிருக்கிறேன்… மனித வாழ்வின் சோகங்கள் இப்படியான நெடுங்குருதி நெடும்பயணங்கள் தாமோ? எவ்வளவு  நெடும்பயணங்கள் இப்படி… … … ஆ! அய்யோ!!

… தூக்கிவாரிப் போட்டுக்கொண்டு எழுந்தேன்… அடச்சே!  ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டேன். அவ்வளவுதான்எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் தளத்தைப் படித்தபடி நான் கண்ட துர்சொப்பனம்தான் இது. பயபீதிகொள்வதற்கு ஒன்றுமில்லை. ஹி ஹி.

Read the rest of this entry »

கடந்த பத்து நாட்களில் எனக்கு வந்த மின்னஞ்சல்களில் நான்கு, நான் எழுதிய ‘யுவகிருஷ்ணா’ என்பவர் பற்றிய பதிவுகளைப் பற்றி.

பொதுவாக இம்மாதிரிக் கடிதங்களைப் படித்துவிட்டு – ஆனால் பதிலளிக்க மாட்டேன். ஆனால் இவற்றில் இரண்டிற்காவது விளக்கம் அளிக்கவேண்டும் எனத் தோன்றியது – ஏனெனில் இவர்கள், தாங்கள்  ‘யுவகிருஷ்ணா’ எழுதுவதைப் படித்து – அதனால் மனவெழுச்சி கொண்டு  எழுதவந்ததாகச் சொல்லி என்னை ‘மெட்ராஸ் பாஷை’யில்  [தேவையேயில்லாமல் என் தாயையும் இந்தச் சகதியில் இழுத்து 8-) ] ’விமர்சனம்’ செய்திருக்கிறார்கள்,  – அதாவது, அவரைப் பற்றி, அபாண்டமாகக் குறை கூறியிருக்கிறேன் என்று சொல்லி, ’நீ யார்’ என,  ஒரே பொங்கலோதிபொங்கல், க்றீச்சிடல்!  (இவர்களுடைய மின்னஞ்சல்கள், பொய் மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து வந்தவைதாம் எனத்தான் தோன்றுகிறது – இவர்கள் anonymouse அல்லது anonymess வகையினர்தாம்!).

இவர்கள் என்ன அப்படி ‘மனவெழுச்சி’ கொண்டு எழுதியிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது, அவர்களும் (நல்லவேளை) சொல்லவில்லை.

எது எப்படியோ, இளம் விசிலடிச்சான்குஞ்சுகளே, உங்கள் கேள்விகள்(?) என்று நான் புரிந்துகொண்டவைகளுக்கு என் விளக்கங்கள்(!):

ஆனால், முதலில் குறைந்த பட்சம் என்னளவுக்காவது பிழையில்லாமல் (ஆம், என் இலக்கண அறிவு(!) பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்)  எழுதக் கற்றுக் கொள்ளுங்கள். பின்னர் மனவெழுச்சி கொண்டு அட்டைக்கத்தி வீசலாம்.
Read the rest of this entry »

(அல்லது)  “ரொம்ப இரைச்சலா இருக்கு இல்ல?”

ஆ! க ம் ப ன். % ^ # @ ! *&   சும்பன்.

கம்பன் அப்படி என்ன தமிழுக்கு, தமிழனுக்குச் செய்து விட்டான்?

சரி. ஒப்புக் கொள்கிறேன். அவன் ஒன்றும் பெரியதாகச் செய்து கிழித்து விடவில்லைதான். நானும் கம்பராமாயணம் முழுக்கவெல்லாம் படித்துக கரைத்துக் குடித்தவனில்லை – ஆகவே என் அரைகுறைப் படிப்பு தந்த அதிகாரத்தில், அற்பகுஷியில், நானும் இப்படித்தான் நினைக்கிறேன்.

என்ன பெரியதாகப் புடுங்கி  விட்டான் இந்தக் கொம்பன்? நேரடித் தன்மையும், புதிய பைந்தமிழ்ச் சொல்லாடல்களும் ( = ’ஜிங்குச்சான்’) கொண்டு வீரிட்டெழும் நம் திரைப்படப் பாடல் எழுத்தாளர்களின் வீரியத்துக்கும், ஆழத்துக்கும் வீச்சுக்கும் எதிரில் –  இந்தக் கம்பன் எம்மாத்திரம்!

நம்மவர்கள் அடலேறுகள் போல் ஆர்பரித்து முன்னேறிச் சென்றால் – அவன் வீட்டிலிருந்து கட்டுத்தெறிக்க, விதிர்விதிர்த்து, தட்டுத்தடுமாறி ஓட விட மாட்டானா?

கட்டுத் தறியாவது, கவி பாடுவதாவது, காட்டுக்கோழிக் கறியாவது! ஆழி சூழ் உலகாம் – அண்டப் புளுகாம்…

இதெல்லாம் இன்னாடா? ரொம்ப ஊத்திக்கினு மானாவாரியா கத வுட்ரயே கம்பா!

வொங்க வூரு டாஸ்மாக்கு சரக்கு எப்டீ? மப்பு சுர்ருன்னு ஏறுமோ?? Read the rest of this entry »