நம் தங்கத் தமிழகத்தில், திராவிடர்களின் காத்திரமான போங்களிப்புகளையும் மீறி, அப்படியும் இப்படியும் கொஞ்சம் நம்பிக்கை கொடுக்கும் விஷயங்கள் நடக்கின்றனதான். Read the rest of this entry »

குழந்தைகளுடன் வேண்டுமளவு, திகட்டுமளவு சேர்ந்து கூத்தாடிவிட்டேன், இனி பிறவிஷயங்களையும்  சொந்தக்காரியங்களையும் கவனிக்கலாம் என நினைத்துக்கொண்டிருக்கையிலே… Read the rest of this entry »

இவர் இப்படி ஏன் ‘நம்மில் எவ்ளோ பேருக்கு இதுதெரியும்‘ ரீதியில் எழுதவேண்டும்? தேவையா? நமக்கு ஏற்கனவே இருக்கும் யுவகிருஷ்ண மதிமாற விடுதலைவீரமணிய உளறல்பரப்புரைக்காரர்கள் போதமாட்டார்களா? :-(

Read the rest of this entry »

…todo and already as of now, kinda done – a desultory listing: Read the rest of this entry »

ஆ!

01/05/2017

இக்காலங்களில் பொதுவாகவே நான் நேர்கோணல் காணல்கள் செய்வதில்லை என்றாலும்… அப்படியே ஆனாலும், குறைந்த பட்சம் 15 வருட வேலை அனுபவம் இல்லாதவர்கள்கிட்டேகூட போக விருப்பமில்லை, உண்மையில் நேரமும் இல்லை என்றாலும்… Read the rest of this entry »

இது சென்ற பதிவின் (= இந்த நாட்டில் (இக்காலங்களில்) தொடர்ந்து நடக்கும் எவ்வளவோ நல்ல விஷயங்கள், பெரிதாகத் தம்பட்டம் அடிக்கப்படாமலேயேதான் இருக்கின்றன…  25/06/2016) தொடர்ச்சி

சரி.
Read the rest of this entry »

பொதுவாக, எந்தக் கட்டுரையையாவது எழுத ஆரம்பித்தால், எனக்கு ஆயிரம் வார்த்தைகளைத்தாண்டாமல் இருக்கவே முடியாது. ஆங்கிலத்தில் எழுதுவதென்றால், இது இன்னமும் அநியாயத்துக்கு நீளமாகி விடுகிறது. இந்த லட்சணத்தில் நான் எழுத்தாளனே அல்லன், இருந்தாலும் இப்படி ஒரு அரிப்பு என, என் செல்ல #எஸ்ரா போல, எனக்கு நானே நமட்டுச் சிரிப்புச் சிரித்துச் சொல்லிக் கொள்கிறேன். ஊக்கபோனஸாக, தமிழும் ஆங்கிலமும் என்னபாவம் செய்தனவோ என்கிற எண்ணத்தையும் என்னால் தவிர்க்கமுடியவில்லை! ;-) Read the rest of this entry »

உங்களால் சகித்துக்கொள்ளவே  முடியாத, சகிப்புத் தன்மையற்ற மூன்றாவது பதிவு இது. வெர்ரி, அட்டர்லி பட்டர்லி அன்சகிக்கப்ள். ஸோர்ரி. மன்னிப்பீர்களா?

…எப்படியும், இந்தப் பதிவு எழவையெல்லாம் நீங்கள் சகித்துக்கொண்டேயாகவேண்டும் என்பதெல்லாம் அனாவசியம், சரியா? இதனை மேற்கொண்டு படிப்பதற்கு மாறாக, பலப்பலவழிகளில் உங்கள் சகிப்பின்மையை எதிர்கொள்ளலாம். ஒரு எடுத்துக்காட்டாக, மேதகு ஞானி இருமேனி  முபாரக்கார் போல என்னை ஆர்எஸ்எஸ்காரன் எனப் புகழலாம். அல்லது, தாராளமாக, துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடிப் போகலாம்;  எப்படியும் எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை. :-(

ஏனெனில் ஐயன்மீர், புண்பட்டு புண்பட்டு என் பாவப்பட்ட சகிப்புத் தன்மை, அநியாயத்துக்கு அதிகமாகிவிட்டது. ;-)

Read the rest of this entry »

இரண்டுமூன்று தினங்களுக்கு முன் பத்ரி அவர்களின் முக்கியமான, சரியான நேரத்தில் வெளிவந்த பதிவில் (= விண்வெளிப் பயணங்கள்) – அதன் பின்னூட்டங்களுக்கும் சேர்த்து – ஒரு விஸ்தாரமான பின்னூட்டமிட்டிருந்தேன். ஆனால் அது வெளிவரவில்லை/பதிக்கப்படவில்லை; ஏதாவது ஸ்பேம் முடக்கம் போன்ற காரணங்கள் இருக்கும். அல்லது ஐபி பேக்கெட்டுகளை, ஏதாவது வழித்தடப் பிசாசு (=டீமன்) உண்டு ஏப்பமும் விட்டிருக்கலாம்!

ஆனால் – அதற்காக,  என் மேலான கருத்துகளைத் தெரிவிக்காமல் இருக்க முடியுமா, சொல்லுங்கள்? ;-) Read the rest of this entry »

” The most valuable thing you can make is a mistake – you can’t learn anything from being perfect. “

– Adam Osborne (1939 – 2003)

I do not know how many of us 45+ folks remember Adam, I mean THE Adam.

Perhaps not many. Our memories are short. Our capabilities in respect of studying, mapping, assimilating and knowing in breadth and depth — the details and mappings of any idea or a concept – are  rather shallow. We are designed from the beginning to be lusers, Dravidian  lusers. We offset our incredible  lack  of scholarship by manufacturing random histories (such as Aryan invasion or Dravidian superiority theories) and random geographies (such as Lemuria or Kumari-k-Kandam, if you will).

Otherwise, what would be preventing us from celebrating the memories of such a personality? I am not talking about a random Robert Caldwell or a randomer  Constantine ‘Veeramaamuniver’ Beschi here – am referring to a fantastic individual, who lived in our midst – after making epochal contributions to the spread of the cult of the portable computer.

But then, am digressing, as is my wont.

Of course, the reason why I am rejiggling my fading memories is that – Adam Osborne, the man, one of my boyhood heroes, moved on –  just about 11 years back, after living for so many years in India — on 18th March, 2003 – in our good ol’  Kodaikanal, Tamilnadu.

Snuffed out. Unsung. Unheard of.  PBUH.

… … … Having been lost in a dazed reverie, I have been thinking about him for the past few days and just thought I would share a thing or two about this fine  man…

Read the rest of this entry »

-0-0-0-0-0-

இந்தப் பதிவு – இதற்கு முந்தைய இரண்டு பதிவுகளின்…

… தொடர்ச்சி – மூன்றாம் நிகழ்வு:

மற்ற இரண்டு நிகழ்வுகள் பெங்களூரில் நடந்தன.  இது அவற்றில் ஒன்று,

1996 என நினைவு – பெங்களூர் கோரமங்களாவில் ஒரு நிறுவனம் – சிறிய, ஆனால் அதி தொழில்நுட்ப முனைவு.

மூன்றாவது மாடியில் அனைவருக்கும், ஒவ்வொரு நாளும் தரமான மதிய உணவு. கைக்குத்தலரிசிச் சோறு. தமிழ் நாட்டுச் சாம்பார் – போன்றவைகளுடன் கூடிய சத்தான உணவு. அற்ப மசாலாக்களும், பூரிக்களும், எண்ணெய் மிதக்கும் பிலாவ் சோறும் கிடையவே கிடையாது. சுமார் 30 பேர்கள் மட்டுமே இருந்ததால் அதுவும் அது ஒரு ஒரு மென்பொருள் வஸ்து (software products) தயாரிக்கும் நிறுவனமாக இருந்ததால், மேலதிகமாக எங்கள் வஸ்துவை, அதன் கருத்துப்பொருளை / கட்டமைப்பு சார்ந்து மட்டுமே நாங்கள் ஏற்கெனவே விற்றுவிட்டிருந்ததால் – எங்களால் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செவ்வனேசெய்ய முடிந்தது – மதிய உணவு, அலுவலக உள் அலங்கரிப்பு உட்பட. எங்கள் தொடங்கிகள்-குழுவில் இருந்த அனைவரும், மிகுந்த முனைப்புடன் இருந்தோம்… எவ்வளவோ கனவுகள். பல நிறைவேறினவும் கூட.

ஒரு தமிழ் இளைஞன் (ஆர்இஸி பையன்; தூத்துக்குடிக்காரன்) என் குழுவில் இருந்தான். பொதுவாக ஓரளவுக்காவது முன் அனுபவம் இல்லாதவர்களை நான் சேர்த்திக் கொள்ள மாட்டேன். ஆனால், இவனை நண்பர் ஒருவர் பரிந்துரைத்திருந்தார் – ஆக, கொஞ்ச நாட்கள் பார்க்கலாம் என நான் அவனைச் சேர்த்திக் கொண்டேன்; குழுவில் என்னையும் சேர்த்து ஆறு பேர் மட்டுமே, அவன், ஒரு கற்றுக்குட்டியாக. ஆனால் ஒரளவு சூட்டிகையான பையனாகத்தான் தோன்றினான். கொஞ்சம் அளவுக்கு மேலதிகமான தன்னம்பிக்கை இருந்தது, செய்ய எத்தனிப்பதற்கும் செய்கைக்கும் நடுவில் கொஞ்சம் இடைவெளி அதிகம். அதனால் என்ன, அவனுக்கு அது முதல் வேலை, அனுபவங்களைச் சார்ந்து அவன் கற்றுக் கொள்வான் என விட்டு விட்டேன். Read the rest of this entry »

(அல்லது) உனக்கு மென்பொருள் கட்டுமானம் பற்றி ஒரு எழவும் தெரியாது!

(அல்லது) you don’t know jackass about solution architecture!

எச்சரிக்கை: இதனைப் படித்துப் புரிந்து கொள்வதற்கு, உங்களுக்கு, ஸாஃப்ட்வேர் அன்டர்வேர்  பற்றியெல்லாம் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இது, நாம் வாழும் காலங்களில் நம்முடைய சமகால அடிப்படைப் பிரச்சினையை, அதாவது ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் கடவுள் போல் உறைந்திருக்கும்  நம்முடைய அப்பழுக்கிலா அரைகுறைத் தன்மையை  — மீடியோக்ரிட்டியைப் பற்றித்தான் பேசுகிறது

கடும் எச்சரிக்கை: இது கொஞ்சம் அதிகமாகவே நீளம்! சும்மா புலம்பிக் குறை சொல்லாமல் – முடிந்தால் படியுங்கள், முடியாவிட்டால் சோம்பேறிப் பசங்களா, உடனே ஓடுங்கடா

-0-0-0-0-0-0-

இது சுமார் 17 வருடங்களுக்கு முன் நான் பணி புரிந்து கொண்டிருந்த நிறுவனத்தின் ‘உள் சுற்றுக்காக’ — சீண்டல் நடையில் எழுதிய ஆங்கில மூலக் கட்டுரை – கடும், காராசார விவாதங்களுக்கு அடிகோலியது.

பின்னர் இது, மற்ற நிறுவனங்களில் பணி புரிந்து கொண்டிருந்த என்னுடைய பல ‘மென்பொருள்’ சார் நண்பர்களுக்குக் கிடைக்கப் பெற்று – திட்டுக்களையும், ’காட்டிக் கொடுத்து விட்டாயே எட்டப்பா!’ போன்ற ஒப்புதல் வாக்குமூலங்களும் பெற்றது.,  பின்னர், பல மற்ற  தொழிற்களில் ’கட்டமைப்பாளர்களாக’ இருப்பவர்களும் பரவலாக என்னைத் திட்ட ஏதுவாகியது.

சுமார் நான்கு மாதங்களுக்கு முன் இக்கட்டுரையை – மென்பொருள் தொழில் சார்ந்து இயங்கும் அல்லது மென்பொருட்காரர்களுடன் பொதுவாகப் பரிச்சயம் உள்ள, என் கருத்தில் மரியாதைக்குரிய பாண்டித்யமுள்ள/சிந்திக்கும் திறமையுள்ள ஐந்து  இக்கால  இளைஞர்களுக்கு அனுப்பினேன் – அவர்களுடைய கருத்துக்களைப் பெற்றேன் – ஊக்க போனஸாக, சில ஆங்கிலத் திருத்தங்களையும்.

இவர்கள் பெரும்பாலும்,  என்னுடைய பழைய கருத்துக்கள் இப்போதும், இவ்வளவு ஆண்டுகளுக்குக்குப் பிறகும் – நிகழ்கால நடைமுறைக் கந்தறகோளத்தை எதிரொலிப்பதாகத்தான் கருதுகின்றனர்.  இந்தப் பொறுமைசாலிகளுக்கு என் நன்றிகளுடன் அவர்களுடைய கருத்துகள் சிலவற்றை, என் கட்டுரையில் சேர்க்கவும் முயற்சித்திருக்கிறேன். ஆனால், இக்கட்டுரை (காட்டுரை??) யில் உள்ள பிழைகள், கருத்துக் குதிப்புகள், ஆற்றாமைகள் எல்லாம் என்னுடையவையே – ஆக, என்னுடைய தவறுகளுக்கு, பாவம் இவ்விளைஞர்களை நீங்கள் தயவுசெய்து குற்றம் சொல்லக் கூடாது, சரியா?  (இவர்களுடைய குறிப்புகள் குறித்த ஆவணங்கள் இப்பதிவின் முடிவில், பிற்சேர்க்கைகளாக, தனியாகத் தரவிறக்கம் செய்து கொள்ள ஏதுவாக…)

அவ்விளைஞர்கள் முத்துக்குமார் பொன்னம்பலம், ஸ்ரீதர் திருச்செந்துறை, அருண் ராஜூ, வெங்கட் சக்கரவர்த்தி, ஷங்கர் அருணாசலம்.

உங்களை வாழ்த்த எனக்கு வயதிருக்கிறது. உங்களை வணங்கி மகிழவும் தெம்பிருக்கிறது. நன்றி! ;-)

எது எப்படியோ… Read the rest of this entry »