the magical child

20/09/2019

…a blast from the past; these notes are some 25 years young now. :-)  (thanks, MaheshC, for reminding me of this old thingie)

வாழ்க்கை சுத்தமாகவே வெறுத்துப்போன சமயங்களில் நண்பர்களே வேண்டாம், போங்கடா எனத் தோன்றிவிடுகிறது. அவர்கள் நல்லமனதுடையவர்கள்தாம், படித்த பண்பாளர்கள்தாம். தமிழின்மீதும் பாரதத்தின்மீதும் வேண்டுமளவு கரிசனம் கொண்டவர்களும்கூட. Read the rest of this entry »

[Rambling notes from Wifey, who happened to travel down to Chennai this morn, to attend a Varahamihira Science Forum talk by VS Ramachandran, the fabulous Neurologist] Read the rest of this entry »

மனைவி+துணைவி இல்லக்கிழத்தியும், என் மகளின் தாயார் மட்டுமல்லாமல், திடுக்கிடவைக்கும் வகையில் என் மகனின் தாயாராகவும் இருக்கும் ராணித்தீ தொண்டுகிழத்தீ, சிலபல பள்ளிகளில் திருத்தொண்டு புரிந்து வருகிறார். Read the rest of this entry »

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையாவது செய்யும் இந்தப் புத்தகதானத்தை, அடுத்த பத்து நாட்களுக்குள் முடிக்கலாம் என்றிருக்கிறேன். Read the rest of this entry »

…குழந்தைகளுடன் கல்வி கற்றுக்கொள்ளும் பணி வழியாகத் தம்மை மேம்படுத்திக்கொள்ளும் தன்மையும், ஆன்மிக முதிர்ச்சியும், மனித நேயமும், பாரதத்தின் பன்முகத்தன்மையை மதிக்கும் பண்பும் மிக்க, யேசுக்றிஸ்து (இவர் உண்மையில் வரலாற்றுரீதியான ஆசாமியல்லர், கச்சிதமாக ஜோடிக்கப்பட்ட ஒரு கதம்ப பிம்பம் என்றாலுமேகூட) மலைப்பிரசங்கத்தை அடிநாதமாகக் கொண்ட க்றிஸ்தவ மதபோதகர்களால் நேர்மையாகவும் அடிப்படை மனிதப்பண்புடனும் நிர்வகிக்கப் படும் சிலபல ‘நல்ல’ பள்ளிகள் (Christian missionary schools) என நம் நாட்டில், தப்பித்தவறி எங்காவது இருக்கலாம். ஏனெனில் பாரதம் என்பது மிகப்பெரிய நிலப்பரப்புள்ள தேசம். Read the rest of this entry »

நம் பாரத அரசு – பலவிஷயங்களில் முன்னெடுக்கும் எத்தனங்களைப் பற்றி நேரடியாகவே ஓரளவு அறிவேன். அதில் இந்த விஷயமும் ஒன்று. Read the rest of this entry »

Let the DiY and EiY bug bite you. Read the rest of this entry »

This happened some 10 years back or so, and I have reproduced the journal/notes below (with a few additions) –  just to help you reconfirm your valid opinion that, I am a weirdo. Thanks. Read the rest of this entry »

இந்தச் சிறுமி அனிதா, அகாலமாக இறந்ததை முன்வைத்து ஒரு விதமானபிரமிப்புடன் வருத்தப்பட்டு, தமிழகத்துக் கல்வியின் தற்கால நிலையைக் குறித்து, தான் மேற்கொண்டு என்ன படிக்கவேண்டும் என்பதைப் பற்றியென என் மேலான கருத்துகளைக் கேட்டிருந்தாள், என்னுடைய (முன்னாள்) பிள்ளைகளில் ஒருத்தி.

அதாவது – 4½ + ½ = 5   :-)

இதற்கு என் பதில்: (அச்சிறுமியின் அனுமதியுடன் பிரசுரிக்கிறேன்)

-0-0-0-0-0-

யோ!

1. இனிமேலாவது, எனக்கு எழுதும்போது அதனைத் தமிழில் எழுத முயற்சிசெய், சரியா சுட்டிப்பெண்ணே? இந்த அனிதா உனக்கு ஒரு ரோல்-மாடெல் அல்லள். அச்சிறுமி செய்தது தியாகமல்ல. முட்டாள்தனம். இந்தத் தியாகம் என்பதே ஒரு பம்மாத்து. மனவலி, தன்னம்பிக்கை என்பவையெல்லாம் மிகமுக்கியமான விஷயங்கள். கண்டிப்பாக இந்த டீவி எழவுகளைப் பார்க்கவே பார்க்காதே. நன்றாகப் படி. தினமும் ஓடு. தமிழகத்தை விட்டுவிட்டு வேறேதாவது வெளிமாநிலத்தில் மேற்படிப்பு படிக்க முயற்சி செய். உன் மனம் விசாலமாக வேண்டும். திராவிடக் குறுகல் கூடாது. ஆகவே! (நானும் முடிந்தவரை முயற்சி செய்கிறேன், பார்க்கலாம் – எப்படியும் புத்திசாலியான உனக்கு, பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது; தோல்விகள் தற்காலிகமானவைதான், சரியா?)

2. இந்தச் சிறுமியின் இறப்பைக் குறித்து என்னுடைய கருத்து – பாவம், ஆனால்  she fell by the wayside வகை. இதன் மூல காரணம் நீட் தேர்வோ அல்லது வேறெந்த அண்மைய காலக் காரணமோ தனிப்பட்டமுறை சிக்கலோ அல்ல. இந்த நிலைக்கு  ஆதி காரணம் – தமிழகத்தின் அதிசராசரி கல்வி-சமூகச் சூழல் – கல்வித்தந்தை+திராவிட பிஸினெஸ்காரர்களின் கொள்கைளைக் கூட்டணி. தரங்களைத் தரதரவென்று கதறக்கதறக் கீழிழுத்து அதல பாதாளத்தில் தள்ளும் அயோக்கியத்தனம்.

அதாவது — ப்ளூவேல் வழியாக இறக்காதவர்கள், திராவிடத் தமிழகக் கல்வியின் பராக்கிரமம் வழியாகப் பாதிக்கப்பட்டு பிணங்களாகவோ நடைப்பிணங்களாகவோ ஆவார்கள். அவ்வளவுதான். இந்தத் திராவிட ப்ரேண்ட் கல்வி(!) பற்றி, தனியார்+திராவிடக் கூட்டுக்கொள்ளை, சமச்சீரழிவுக் கல்விபற்றியெல்லாம்  நாம் பலதடவை பேசியிருக்கிறோம் அல்லவா?

3. சரி.  அடுத்த சில நாட்களில் இச்சிறுமியும் மறக்கப்படுவாள். தேவையற்ற உயிர் விரயம்.  தேவையற்ற உணர்ச்சிகரமும் சுயபச்சாத்தாபமும் தைரியமின்மையும் தன்னில்மூழ்கலும் அதிமானுடனாதலும், வேறென்ன சொல்ல. ஆனால், இந்த விவகாரத்தைத் தொடர, எங்களுக்கு நேரமோ அவகாசமோ இல்லவேயில்லை. ஏனெனில், அடுத்து –  ஏதாவது தமிழ்ப்படம் அல்லது நடிகக்கோமாளிச் சர்ச்சையலை ஒன்று வரும். அதில் அதிதீவிரத்துடன் ஈடுபடவேண்டிய கட்டாயம் வரும், நம்மைப்போல படுபிஸியான போராளிகள் உலகத்தில் உண்டா எனத் தெரியவில்லை. :-( திராவிடம் வாழ்க. செப்டெம்பர்2017 இறுதியில் என் மரியாதைக்குரிய புரட்சித்தலைவி கனிமொழி அவர்களின் ஊழல் குறித்த விஷயங்கள் தொடர்பாக நீதிமன்ற விவகாரங்கள் வேறு வெளிவரலாம். ஆகவே அது குறித்துப் பொங்குவதற்கு ப்ளான் செய்யவேண்டுமல்லவா? ஆகவே வீணாகப் பொங்கி என் சக்தியை விரயம் செய்துகொள்வதாக இல்லை. (யார் அந்தப் பையன்? பலவருடங்களுக்கு முன் முத்துகுமாரோ குத்துகுமாரோ – தன்னை வீரத்துடன் விறகுக்கட்டையாக மாற்றிக்கொண்டானே, நினைவிருக்கிறதா? இவனும் திராவிடவீரத்தின் வெளிப்பாடுதான், ஆனால் இவன்பெயரே எனக்கு மறந்துவிட்டது! இவன் எதற்குத் தன்னை எரியூட்டிக்கொண்டான் என்பதே சனியன், நினைவுக்கு வரமாட்டேனென்கிறது! திராவிடத்தின் மறதிசக்தி என்பது மிகவும் நுட்பமானதும் வீரியமிக்கதும், அல்லவா?)

4. என்னைப் பொறுத்தவரை – தமிழகத்தில் 1967ல் ஆரம்பித்த பாரம்பரியமிக்க கந்தறகோளத் தமிழகக் கல்வியின் காரணமாக – இன்னமும் மேலதிகமாக இப்படி அகால மரணங்கள் லட்சக்கணக்கில் ஆர்பரித்து வீரஎக்காளத்துடன் உருமிமேளதாளத்துடன் நடக்காமலிருப்பதுதான் எனக்குப் பெரும் ஆச்சரியம். இதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம். 1) திரைப்பட/டீவி கேளிக்கைகள் 2) இந்துத்துவ சதி 3) என்னுடைய சுயமுன்னேற்றக்கட்டுரைகள்.

5. நீட் பரீட்சை எதற்கு, ஏன், அதன் முக்கியத்துவம், அதன் மூலம் ஏற்படக்கூடிய நன்மைகள் என்பதைப் பற்றி ஒரளவு தெரியும். ஆனால் அப்பரீட்சை எப்படிப்பட்டது என்பதைப் பற்றி விளக்குகிறேன் என்கிற பெயரில், டாக்டர் படிப்பைப் பற்றி ஒன்றும்பெரிதாக அறியாத என்னால் தேவையேயில்லாமல் உளறிக்கொட்ட முடியாது. ஆனால் ஏதாவது ஃபேஸ்புக் / டிவிட்டர் / வாட்ஸப் போன்றவற்றில் உள்ள போராளி அறிவாளிச் சான்றோர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் இது பற்றி நிறையவே தெரிந்திருக்கும் என்பது அந்த எழவுகளில் நேரத்தை வீணடிக்கும் உனக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். ஆகவே ஆளை விடு. அரைகுறைகள் ஆர்பரித்து உளறிக்கொட்டுவதைத் தூரத்திலிருந்து வேடிக்கை பார்க்கவே விருப்பம்.

6. நவோதயா பள்ளிகள் தமிழகத்திலும் இருந்திருந்தால் அவற்றிலொன்றில் புத்திசாலியான நீ நிச்சயம் படித்திருப்பாய். ஏன் அந்த அனிதாவுமே கூட,  அவற்றில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கக்கூடும். ஆக, அவள் இன்று உயிருடன் இருந்திருப்பாள். (இந்த அற்புதமான முற்றிலும்-இலவசம் (மாநில அரசு இவற்றுக்கு ஒரு நயாபைசா செலவு செய்யவேண்டியதில்லை) வகை உயர்தரப் பள்ளிகள் தமிழகத்தில் மட்டும் வராமல் இருந்ததற்கு திராவிட அயோக்கியக் கொள்ளைக்காரர்கள் தாம் காரணம்) அவை மட்டும் தமிழகத்தில் இருந்திருந்தால் இன்று சுமார் 24,000 குழந்தைகள் அதனால் பயன்பெற்றிருப்பார்கள்! ஆனால், அந்த அளவு திராவிடக் கொள்ளை நடந்திருக்காது அல்லவா?  24000 குழந்தைகளுக்கு நல்லபள்ளிச்சூழலில் இலவசமாகப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் தமிழகத்தில் திராவிடக் கல்வித்தந்தைகள், மன்னிக்கவும், மாமாக்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில், இஞ்சினீயரிங் கஞ்சினீயரிங் கல்லூரிப் பம்மாத்துகளில் சேரமாட்டார்களல்லவா? இது பிரச்சினைதானே!

7. என்னுடைய கருத்துகளுக்கு, நீ ஒரளவு செவிசாய்த்தால் போதும். ஏனெனில் அவைதான் உண்மை, வழியும் சத்தியமும் ஜீவனும் என்றெல்லாம் நான் உளற முடியாது. ஆகவே பிறர் கருத்துகளையும் கேட்டுக்கொண்டு உன் அனுபவங்களின் மூலமும் சூழற்தேவைகளின்படியும் உன் சொந்த அணுகல்களை கட்டமைத்துக் கொள்வது சிறந்தது எனப் படுகிறது. உதாரணமாக. என்னைப் பொறுத்தவரை, நீ சார்ந்திருக்கும் மக்கள் திரளுக்கு முதன்மையான, கரிசனம் உள்ள தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எனத்தான் நினைக்கிறேன்; அதே சமயம் – உனக்கு நான் முன்னமே சொல்லியிருப்பதுபோல, சர்வ நிச்சயமாக அவர், தொல்.திருமாவளவன் அல்லர் எனவும்; ஆகவே கிருஷ்ணசாமி அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார் (அதாவது சொல்லியிருந்தால்) என்பதைக் கூர்ந்து கவனிக்கவும். (பொதுவாகவே, எனக்கு அவரிடம் மரியாதை உண்டு – அதிகம் அவரைப் பற்றித் தெரியாவிட்டாலும், அவ்வப்போது அவர் குறித்து தனிப்பட்ட முறையில் சிலபல நல்ல விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன்; அவருடைய அனுதினச் செயற்பாடுகள் பற்றிய அறிவு எனக்கு லபிக்கவில்லை என்றாலும், பல்லாண்டுகளாக அவர் எழுப்பி வந்திருக்கும் கருத்துகளில் பல எனக்கு ஒத்துப்போகின்றன, அவர் சமூக மேன்மைக்காக உண்மையாகவே விழைபவர் எனப் படுகிறது – சொல்லப் போனால், இவரும் இவரைப் போன்றவர்களும் தமிழக அரசியலில் வளரவேண்டும். அவ்வளவுதான்.)

8. இந்த அகாலச் சாவு குறித்து, சமனத்துடனும் உண்மையான கரிசனத்துடனும் யார் எழுதியிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. அதாவது, நான் இன்னமும் எழுதவில்லை, எழுதப் போவதுமில்லை.

ஆனால் — இது குறித்துப் பொங்கியிருப்பவர்களில் என்னைப் பொறுத்தவரை முதன்மையானவர், என் பேராசானான எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள். ஆகவே உனக்கு போராளித்தனமான அறிவுரைகள் வேண்டுமென்றால் – தயவுசெய்து அவரை அணுகவும்.

(http://www.sramakrishnan.com/?p=6539)
அவர் — தமிழகக் கல்வியை முன்னேற்ற, போராட, கருத்துக்குண்டுகளை அள்ளிவீச என பலப்பல விஷயங்களை இணயத்திலிருந்து டவுன்லோட் செய்து தயாராக வைத்திருக்கிறார், சரியா? (இது கிண்டல்தான்; ஸீரியஸாக எடுத்துக்கொள்ளாதே!)

சரி. நிஜமாகவே உனக்கு ஏதாவது மனவுளைச்சல் ஏற்பட்டால் எதாவது உருப்படியாகப் பேசவேண்டுமென்றால் என்னைத் தொடர்புகொள். ஆனால் — அப்படியில்லாமல் ‘சும்மாதான் ஃபோன் பண்னேன், காலேல என்ன சாப்டீங்க’ வகை வெட்டி அரட்டையாக அது இருந்தால் நிஜமாகவே மனவுளைச்சலை வரவழைத்துவிடுவேன். கபர்தார். :-)

தினமும் ஓடு.

__ரா.
-0-0-0-0-0-0-

மேற்கண்டதின் மின்னஞ்சல் மூலவடிவத்தை, இன்று காலை அனுப்பினேன். அச்சிறுமி இன்னமும் தற்கொலை செய்துகொள்ளவில்லை. படித்துவிட்டுச் சிரித்தேன் என்றாள். ஆகவே, ஒரு ஆசுவாசம். :-)

சரி.  பிரச்சினையென்னவென்றால், எஸ்ராமகிருஷ்ணன் அவர்களின் இன்னொரு +1 ‘also ran’ விசிறியாக அவள் மாறாமலிருக்கவேண்டும்.

இன்று காலை, நண்பரொருவர் அனுப்பிய சுட்டியைப் படித்தேன் – இது ஆங்கிலத்தில் இருக்கிறது; ‘நீட்’ குறித்த தமிழகக் குழப்படிகளை எதிர்கொள்ளும் வகையில், மேன்மைக்கான சிலவழிகளைப் பரிந்துரைக்கும் அளவில் –  இது ஒரு முக்கியமான கட்டுரை. அவசியம் படிக்கவும்.

Explainer: How NEET has exposed the standard of science education in Tamil Nadu  (How do TN students measure up against their peers in south India?)

இம்மாதிரிக் கட்டுரைகளை இந்த கேஎஸ்நாகராஜன் போன்ற இளைஞர்கள் தமிழிலும் எழுதலாமே எனப் படுகிறது.

எது எப்படியோ, இம்மாதிரிக் கட்டுரைகளை விரித்து, வரலாற்றுக்காரணிகளை இணைத்து மேம்படுத்தி – தமிழ்ப்படுத்திஎடுக்கப்படவும் வேண்டும். இது தொடர்பாக நிறைய எழுதப் பட வேண்டும். அது மட்டும் போதாது.  மிகமுக்கியமாக நிறைய பணிகள் செய்யப் படவும்வேண்டும்.

முதலில் – திராவிடப் பெருங்கொள்ளைக்காரர்கள் அதிகார மையங்களிலிருந்தும் சமூகப் பீடங்களிலிருந்தும் துரத்தியடிக்கப்படவேண்டும்.

பார்க்கலாம், எதிர்காலம் எப்படி விரிகிறதென்று.

-0-0-0-0-0-

37/100 மட்டும்தானாடா? வோத்தாடாய், எவ்ளோ வொளச்சிர்க்கோம் – மிச்சம் கீர 63ஐயும் எங்க்ளுக்கே கொடுங்கடா!

05/04/2017

இப்படிப் பெருமைப்படுவதால் நான் சிறுமைப்படுவதாக உணரவேயில்லை! ஏனெனில் நான்  கருத்துவெடிகுண்டுகளைக் கண்டமேனிக்கும் வீசிக் கொண்டிருக்கும் மயக்கம் கொண்ட  ஒரு கவைக்குதவாத சாய்வு நாற்காலி அறிவுஜீவிப்போராளியல்லன் – வெறும் சாமானியன் தான். மன்னிக்கவும்.

… இன்று நமது சுதந்திர தினம், அதிகாலை 1.15 மணியிலிருந்து, ஒரே சீராக மழை பெய்த மணியம்.

Read the rest of this entry »

இது சோகங்களைக் குறித்த பதிவு.  ஆகவே — தேவையில்லாமல் மனவுளைச்சல் அடைவதைத் தவிர்க்க விரும்புவர்கள், வெகுசுளுவாக மனம்புண்படுபவர்கள், மதரீதியான சமனமற்றவர்கள் – இந்தப் பதிவை மும்முரமாகத் தவிர்க்கலாம். நன்றி.  (+ இதில் ~1500 வார்த்தைகள்! உங்களுக்கு இது தேவையா? தீவிரமாக யோசிக்கவும். சரியா?) Read the rest of this entry »