திருவிழாக்களும் மக்கள் தன்னிச்சையாகத் திரளும் கொண்டாட்டங்களும் (இதனை நான் – ஒரு தமிழ்க்குடிகாரக் கூவான்தனமாகச் சொல்லவில்லை, மன்னிக்கவும்!) – எனக்குப் பிடித்தமானவை;  அமைதியாகப் பராக்கு பார்த்துக்கொண்டு கற்பனையூரில் சிறகடித்துப் பறந்துகொண்டிருப்பேன். என்னென்ன படிமங்கள் அவற்றில் உறைந்துள்ளன என, என் அரைகுறைப் படிப்பறிவுடன் அகழ்வாராய்ச்சி(!) செய்வதில் அப்படியொரு முனைப்பு. மேலும் — பகட்டையும், பணவிரயங்களையும் மீறி, அவற்றில் பாரம்பரிய ஆன்மா என ஒன்று உசுரைப் பிடித்துக்கொண்டு இருப்பதை உறுதி செய்துகொள்வதில், எனக்கு அப்படியொரு ஆர்வம். Read the rest of this entry »

எனக்குப் பிடித்தமான திரைப்பட இயக்குநர்கள் எனச் சிலரை மிகஅணுக்கமாக மாளாப்பேராசையுடன் வைத்துக் கொண்டிருக்கிறேன். அவர்களில் இந்த மகாமகோ தார்கொவ்ஸ்கியும் ஒருவர். (இந்த ஜாபிதாவில் இருக்கும் இந்தியாகாரர்கள் ரித்விக் கட்டக்,  இப்போது – கொஞ்சம் யோசனைக்குப் பிறகு ஸத்யஜித் ராய்) Read the rest of this entry »

மகாமகோ பார்ஃபிட் (Derek Parfit) போன்றவர்களைப் பற்றி ஒரு நூறு வார்த்தைகளையாவது தமிழில் எழுதவேண்டும், அவர்கள் எழுதி நான் படித்துமுள்ள சிலபல புத்தகங்களைப் பற்றி, கட்டுரைகள் குறித்து என் மீதான அவற்றின் தாக்கத்தைக் குறித்து, என் விசனங்களையும் விகசிப்புகளையும் விவரித்து – குறைந்த பட்சம் ஒருகோடிட்டாவது காண்பிக்கவேண்டும் எனப் பலமுறை ஆரம்பித்து அப்பதிவுகளை நட்டாற்றில் விட்டிருக்கிறேன்; சுமார் 300க்கு மேம்பட்ட வரைவுப்பதிவுகள் இப்படிக் குறைப்பிரசவ ரீதியில் இருக்கின்றன! (தப்பித்தீர்கள்!) Read the rest of this entry »

“எவ்வளவோ வரலாற்று நாயகர்கள் இருந்திருக்கிறார்கள்… ஆனால் அவர்களில் பலரும் – பாடப்படாமல், பேசப்படாமல், போற்றப்படாமல் ஏகோபித்த இருளில் மறைந்துவிட்டார்கள்; ஏனெனில் அவர்களைப் பற்றிய நினைவுகளை எழுதக்கூடிய வீரியம் மிக்கவர்கள் இல்லை…”

க்வின்டுஸ் ஹொராடியஸ் ஃளாக்கூஸ் (65 – 8; ஏசு பிறந்ததற்கு முன்னால்) (எனது மேற்கண்ட நிர்மூலத்தின் லத்தீன்வழி ஆங்கில மூலம்= Many heroes lived . . . but all are unknown and unwept, extinguished in everlasting night, because they have no spirited chronicler)

மகாமகோ அஹ்மெத் ஷா மஸூத்,  சந்தேகத்திற்கிடமின்றி நமது சமகால வரலாற்று நாயகன் தான்! பலப்பல போற்றுதற்குரிய கல்யாண குணங்களை உடையவன்; வாழ்க்கையைத் தீவிரமாக அணுகியவன், புத்திமான். பலவான். மிக முக்கியமாக, அவன் மிக அற்புதமான மனிதன்.

MASOODOBITசர்வ நிச்சயமாக, நான் மகாமகோ வீரியமுள்ள எழுத்தாளன் என்றெல்லாம் இல்லை.   ஏன், சொல்லப்போனால், நான் எழுத்தாளனேகூட அல்லன். ஆனால், அஹ்மெத் ஷா மஸூத் போன்றவர்கள் மறக்கப் படவே கூடாது. அவர்கள், அபூர்வமாகவே பூக்கும் விடிவெள்ளிகள்.

ஆகவேதான் இதனைப் பதிக்கிறேன்..

Read the rest of this entry »

இதற்கு முகாந்திரம் – ஜெயமோகன் அவர்களுடைய ‘வளரும் வெறி‘ எனும்  6, ஃபெப்ருவரி 2016 அன்று வெளிவந்த கட்டுரை.

சுமார் நான்கு மாதங்களுக்கு முன் இதனை நான் எழுத ஆரம்பித்தேன். அரையும் குறையுமாய் இருக்கும் என்னுடைய பலப்பல வரைவுப்பதிவுகள் போலவே இதுவும் பாவப்பட்ட நிலையில் இருந்தது; இன்று கொஞ்சம் சமயம் வாய்த்திருப்பதால் தூசிதட்டி இதனைப் பதிப்பிக்கிறேன். Read the rest of this entry »

(எனக்குத் தற்போது சுமார் 70 நிமிடங்களுக்கு இணைய இணைப்பு, ஒரு லேப்டாப் எழவுடன் கிடைத்திருக்கிறது; ஆகவே இந்தப் பதிவை அவசரம் அவசரமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்; ஆகவே, என் தட்டச்சுத் தவறுகளை மன்னிக்கவும்!) Read the rest of this entry »

முதலில், மேற்கண்டவற்றை அணுகுவது தொடர்பான என் சொந்தக் கோட்பாடுகளைத் தெளிவு படுத்திவிடவேண்டும்.

Read the rest of this entry »