அண்மையில் புரட்டிப் படுகோரமாகத் துணுக்குற்ற புத்தகங்களில் இதுவும் ஒன்று. Read the rest of this entry »

Advertisements

குழந்தைகளுடன் கணிதத்தை நோண்டுவதற்குத் தோதாகவென்று பலப்பல புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் மகாமகோ சுந்தரராவ் அவர்கள் எழுதியுள்ள இப்புத்தகம். Geometric Exercises in Paper Folding – எனும் அழகு. T Sundara Row எனும் சென்னைவாசி கணித ஆசிரியர் ஒருவரினால் எழுதப்பட்டு 1893ல் வெளியிடப் பட்டது. Read the rest of this entry »

அண்மையில் படித்த பல புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது இது. Read the rest of this entry »

ராம், திருவண்ணாமலை எச்கேபி, கல்லூரி எச்கேபிகருணா என்பவரால் நடத்தப்படுகிறது. இவர் திமுக சார்பினராக இருந்தாலும் நேர்மையானவர். எனக்கு அறிமுகமானவர். இலக்கிய ஆர்வலர். உங்கள் மதிப்புக்குரிய ஜெயமோகன் இவருடைய சிறுகதையை ரசித்து பரிந்துரை செஉதிருக்கிறார்.

அந்தக் கல்லூரிக்கெஇத்ரான உங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்விர்கள் என நம்புகிறேன்.

அய்யா அனாமதேயம்,  எனக்கு இந்த எச்கேபி கருணா அவர்களைப் பற்றி ஒன்றும் பெரிதாகத் தெரியாது. தெரிந்துகொள்ளும் ஆவலும் இல்லை. நேரமும்.

Read the rest of this entry »

சில நாட்கள் முன் இவரும் (=Jiro Taniguchi) போய்ச்சேர்ந்துவிட்டார் என இன்று அறிந்துகொண்டேன்: Japanese manga artist Jiro Taniguchi dies aged 69

Read the rest of this entry »

இந்தத் தமிழேண்டா, திராவிடண்டா, வீரமறவன்டா, வீழமாட்டோம்டா, வீரிட்டெழுவோம்டா, வீரவேல்டா, வெற்றிவேல்டா, வாளாவிருக்கமாட்டோம்டா, வாளைச் சுழற்றுவோம்டா, திமிறி எழுவோம்டா, திர்ப்பி அடிப்போம்டா, நெருப்புடா, செருப்புடா++  வீரவசனக் கொந்தளிப்புக் கோமாளி வகையறா தினவாளர்களைக் கவனிக்க நேரும்போதெல்லாம் சங்கடமாகவும் கூச்சமாகவும் (கொஞ்சம் கோபமாகவும், மிகவும் வெறுப்பாகவும்) இருக்கிறது; ஜிகினா மினுமினுக்கும் அவர்களுடைய அட்டைக்கத்திகளைப் பிடுங்கி சகதிராவிடர்களுக்கு ஈந்து இனமானக் கழுதைகளின் பசியை ஆற்றலாம் எனப் படுகிறது. ஆகவே முத்தாய்ப்பாக மட்டுமே, முக்கியமான இந்தக் கருத்துப்படங்களைப் பகிர்ந்துகொள்கிறேன், இந்தப்பதிவை வெறும்வெட்டி நகைச்சுவை – என நினைக்காதீர்கள். படு ஸீரியஸ் கட்டுரைதான் இது. கவலை வேண்டேல். சரியா? (இதில் சுமார் 2350 வார்த்தைகள்; ஸாரி, கொஞ்சம் ஓவர்தான்!)

கருத்துப்படம் #1: தமிழண்டா!  ^%&*$#@!தமிழண்டா! Read the rest of this entry »

மகாமகோ பார்ஃபிட் (Derek Parfit) போன்றவர்களைப் பற்றி ஒரு நூறு வார்த்தைகளையாவது தமிழில் எழுதவேண்டும், அவர்கள் எழுதி நான் படித்துமுள்ள சிலபல புத்தகங்களைப் பற்றி, கட்டுரைகள் குறித்து என் மீதான அவற்றின் தாக்கத்தைக் குறித்து, என் விசனங்களையும் விகசிப்புகளையும் விவரித்து – குறைந்த பட்சம் ஒருகோடிட்டாவது காண்பிக்கவேண்டும் எனப் பலமுறை ஆரம்பித்து அப்பதிவுகளை நட்டாற்றில் விட்டிருக்கிறேன்; சுமார் 300க்கு மேம்பட்ட வரைவுப்பதிவுகள் இப்படிக் குறைப்பிரசவ ரீதியில் இருக்கின்றன! (தப்பித்தீர்கள்!) Read the rest of this entry »