இந்த centrifuge எழவை மிகவும் தமிழ்ப் படுத்தி எடுத்தால் ‘மைய விலக்கு விசைப்பொறிப் பிரிப்பி’ என விரியும். High speed centrifuge எழவானது – ‘அதிவேக மைய விலக்கு விசைப்பொறிப் பிரிப்பி‘ என முழ நீளத்துக்கு விரியும். தேவையா?

Read the rest of this entry »

திரியாவரத்தனமில்லாத புத்திசாலிகளுடனும் பேசுவது ஒரு அணுக்கமான அனுபவம் என்றால் அப்படிப்பட்டவர்களில், செயலூக்கமும் தளராமுயற்சியும் நமது பாரதத்தின் மீது மாளாக் கரிசனமும் நேர்மையும் உடையவர்களுடன் பேசுவது மேலதிகமாகச் சுகத்தையும் திருப்தியையும் – ஆகவே, எதிர்காலத்தின்மீது ஒரு நன்னம்பிக்கையையும் ஒருங்கே அளிக்கும் சமாச்சாரம். Madhuji is one such person who is absolutely non-partisan and a very sane headed pragmatist at that. A real doer. Read the rest of this entry »

எனக்குப் பிடித்தமான திரைப்பட இயக்குநர்கள் எனச் சிலரை மிகஅணுக்கமாக மாளாப்பேராசையுடன் வைத்துக் கொண்டிருக்கிறேன். அவர்களில் இந்த மகாமகோ தார்கொவ்ஸ்கியும் ஒருவர். (இந்த ஜாபிதாவில் இருக்கும் இந்தியாகாரர்கள் ரித்விக் கட்டக்,  இப்போது – கொஞ்சம் யோசனைக்குப் பிறகு ஸத்யஜித் ராய்) Read the rest of this entry »

(இந்தக் குறிப்புகளை நான் டிஸெம்பர்2016 வாக்கில் எழுதினேன்; ஆனால், பல வேலைகளுக்கிடையில் இதனைச் சரிபார்த்துப்  பதிவு செய்ய முடியவில்லை. இப்போது, டிமானடைஸேஷன் விவகார போராளிக்கூவான்தனங்களெல்லாம் – நிதர்சன உண்மைகளால் நொறுக்கப்பட்டாலும் – இதனை இப்போதாவது பதிப்பிக்கிறேன். நன்றி!)

Read the rest of this entry »

அண்மையில் படித்த பல புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது இது. Read the rest of this entry »

அவ்வப்போது – சீண்டுவதற்காகவும், உருப்படியான உரையாடல்களுக்கான கருப்பொருளாகவும் – என் சொந்தப் பிள்ளைகளை உள்ளடக்கிய ஒரு சிறிய, குறுகிய வட்டத்துக்கு (=இளசுகளுக்கும் பொடிசுகளுக்கும் மட்டுமே! வயது வந்தவர்களுக்கும் சமூகவளைத்தலங்களில் படுபிஸியாகப் பணிபல புரிந்து உலகத்தைத் தொடர்ந்து முன்னேற்றிக்கொண்டிருக்கும் கருத்துப்பெருச்சாளிகளுக்காக அல்ல!)  இம்மாதிரி, இணையத்திலிருந்து பீராய்ந்த – அறிவியல், கணிதம், பொறியியல், புதிர்கள், வரலாறு, அழகானபுத்தகங்கள் இன்னபிற தொடர்பான விஷயங்களை அனுப்புவேன். Read the rest of this entry »

(அல்லது) திமுக தீவட்டிக்கொள்ளைக்காரர்களின் அறப் போராட்ட நாடகம்.

‘விடுதலைச் சிறுத்தை’க்கார நண்பர் அனுப்பிய நீளோதிநீளமான ஆங்கில மின்னஞ்சலின் ஒருமாதிரியான தமிழ்ப்படுத்திஎடுத்தல் கீழே. தனிப்பட்ட  ஷேக்ஸ்பியர்மேற்கோள் / அரட்டை / குடும்பவிவரங்களைக் கத்தரித்துவிட்டேன். முடிந்தவரை ‘கெட்ட’வார்த்தைகளையும் எடுத்துவிட்டேன்; நண்பருக்குக் கோபம்வரும்போது வாயைத் திறந்தால் அது fuckin’ sonuvabitch எனத்தான் ஆரம்பிக்கும்.

தமிழக அரசியலென்றால் நம் கருணாநிதி வகையறாக்களைப் பற்றி அமர்க்களமாகக் கிண்டல் செய்வார். அண்ணாதுரை மாதிரி வழவழாகொழகொழா வெற்றிலை நடுங்கல் பேச்சிற்குப் பின் கரகரத்தகுரலில் கருனாநிதிபோலஆரம்பித்து திடீரென்று எம்ஆர் ராதா மாதிரிப் பேச ஆரம்பித்து எம்ஜிஆர் வரை ஒரு ரவுண்ட். இன்னொரு ரவுண்ட் ஆரம்பித்தால் – அவருடைய சொந்தக் கட்சியிலிருந்து ஆரம்பித்து ஈவேரா ஊடாக  நேருகாந்திஅம்பேட்கரையும் விட்டுவிடாமல் அனைவரையும் ஒரு பிடிபிடித்துவிட்டுத்தான் ஓய்வார். மூளையுள்ள, சிந்திக்கும் ஆசாமி. ஆனால், அவர் பேச்சில் நானுமேகூட கேள்விப்பட்டிருக்காத திராவிடக் கொச்சை வசைகளும் இருக்கும். :-)) ஆகவே.
Read the rest of this entry »