சில வாரங்கள் முன்னர், ஒரு இளம் இடதுசாரி இளைஞர் (தப்பிக்க முயன்றுகொண்டிருப்பவர்) மின்னஞ்சலில் தொடர்புகொண்டு, இந்த ஒத்திசைவிலிருந்து நிறைய(!) கற்றுக்கொண்டு(!!) விட்டதாகவும் அதற்குக் கைமாறாக ஏதாவது செய்தேயாக வேண்டிய விருப்பத்தையும் தெரிவித்தார். Read the rest of this entry »

யேஸ்ஸுவே! ஏன் என்னை இப்படிச் சோதிக்கிறீர்? :-( Read the rest of this entry »

இந்தத் தமிழ் அலக்கிய அரைகுறை தண்டம் இப்படித்தான் ‘கருத்துச் சுதந்திரத்தையும்’ – அது மட்டுமல்ல, ‘உண்மைகளையும்’ உயர்த்திப் பிடிக்கிறது. அரைவேக்காட்டுப் பேடி.

Read the rest of this entry »

மிகவும் படுபிஸியாக இருப்பதால், இளம் கங்கணா ரனௌத் அவர்கள் நடித்திருக்கும் ‘தலைவி’ படத்துக்கான முன்னோட்டத்தை முன்னோட்டங்களைப் பார்த்தேன் (ஹிந்தி + ஆங்கிலம்/தமிழ் ) – நான் பார்க்கப் பார்க்கவே,மேலதிகமாக லட்சக் கணக்கில் மக்கள் அலைமோதி இதனைப் பார்த்திருக்கிறார்கள்! Read the rest of this entry »

இதுதாண்டா ‘சாமான்’யன் முக ஸ்டாலின், இவ்ங்க்ளோடத்தாண்டா ‘சாமான்’ ஆட்சி! Read the rest of this entry »

“இந்தியாவில் பஞ்சதந்திரத்தைப் பற்றிக் கேள்விப்படாதோர் மிகவும் அபூர்வம்,” என மிகத் தைரியமாக ஒரு அடி அடிக்கலாம் அல்லது டமாலென்று ஒரு போடு போடலாம். அதாவது, ஜெயமோகன் செய்யலாம். Read the rest of this entry »

40 -> 42 Read the rest of this entry »

அலுப்பாக இருக்கிறது. ஏனெனில்… Read the rest of this entry »

கடந்த ஐந்தாறு மாதங்களாக, என்னைத் தொடர்புகொண்டு என்னுடன் பேசவிரும்புபவர்களில் சிலருடன் (இவர்களின் உளவியல் உந்துதல்கள் என்னவாக இருக்கக்கூடும், பாவம்?) 1-1 உரையாடி வருகிறேன். அதில் சிலபலர்  (இளைஞர்கள்!) என் வீட்டுக்கும் வந்திருக்கின்றனர், பாவம். Read the rest of this entry »

ஜெயமோகனம், சாருநிவேதிதம், எஸ்ராமகிருஷ்ணம், பீகாக்கியம், பாக்கியம், அரவிந்தம்கண்ணையம், ஆசீவகவாலேசியம்… கண்ணபிரான்ரவிஷங்கரம் … இம்மாதிரி ஆகச்சிறந்த கலைச்சொற்களை (ஒரு மாதிரி eponymபோல என வைத்துக்கொள்ளுங்கள்) எந்தெந்த குணாதிசியங்கள்-பண்புகளுக்காக, விஷயங்களுக்காக – அதாவது, அருவ உருவகப் படிமக் குறியீடுகளாக உபயோகிக்கலாம் என்பது குறித்த செய்முறை (அதாவது, செய்வினை) விளக்கம். Read the rest of this entry »

இது 2013 வாக்கில் எழுதப்பட்ட, ஆனால் 1997 வாக்கில் நடந்த கதை.

…இன்று காலையில் சமையல் செய்துகொண்டிருந்த சமயத்தில் அக்காலத்தில் நடந்த சிலபல சம்பவங்கள் குறித்து, வாட்ஸ்அப் வளவளா நண்பர் ஒருவருடன் ‘அலறும் நினைவுகள்’  அரங்கேறின. அதில் இதுவும் பாடுபொருள் – ஆகவே, பகிரப் படுகிறது; ஸ்ஸாவுங்கடே!

சரி. வேண்டுமென்கிற நேரத்தை எடுத்துக்கொண்டு ஆர அமர படிக்கவும் + அசைபோடவும்: உணவை வீணடிப்பது (தகவல் தொழில்நுட்ப ஸ்டைல்)…

மேற்கண்டதை, அது ஒரு கட்டுரைவரிசையின் கடைசிபாகமாக இருந்தாலும் தனியாகவே அதனைப் படிக்கலாம், பயப்பட வேண்டாம்; மேலும், இந்தப் பதிவில் இவ்ளோ யிம்மான் தூரம் நீங்கள் படித்துக்கொண்டே வந்திருப்பதால், உங்களுக்குத் தேவையான அளவில் ஒத்திசைவு எதிர்ப்புச் சக்தியும் சுளுக்கெழுத்தை இயல்பாக எடுத்துக் கொள்ளும் தன்மையும் முதிர்ச்சியடைந்திருக்கின்றன என்பதும் தெரிகிறது.

ஆகவே:

இது தொடர்பாக, இரண்டு முந்தைய பதிவுகள்:

  • இதில், நான் மிகவும் மதிக்கும் பத்ரி சேஷாத்ரி அவர்களை, நான் முதலில் சந்தித்தது குறித்த விவரங்கள் ++
  • இரண்டாவதில், திருமணம் போன்ற விஷயங்களில் நாம் வீணாக்கும் உணவுவகைகளைப் பற்றிய சில அக்கால நினைவுகள் ++

ஜெயமோகன் படுகாமெடியாக எழுதக் கூடியவர் என்பதை நான் மறுபடியும் மறுபடியும் சொல்லி வந்திருக்கிறேன். ஆகவே சர்வ நிச்சயமாக, நான் இதனைக் கிண்டலாகவே சொல்லவில்லை என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்..

சரி. ஜெயமோகனின் மாளா நகைச்சுவை உணர்ச்சிக்கு இதோ இன்னொரு தரவு:

எழுத்தாளனின் பார்வை November 17, 2020

(ஆனால் இது தரவு அல்ல என்று ஜெயமோகனே சொல்லிவிடுவார். ஏனெனில், தரவுகளில் எழுத்தாளனுக்கு நம்பிக்கையேயில்லை, வெறும் தரகுகளை வைத்துக்கொண்டே காரியங்களை முடித்து நம்மைக் கொல்பவன் அவன்!)

ஒரு சந்தேகம்: இது ‘எழுத்தாளனின் போர்வை’ என இருந்திருக்கவேண்டுமோ? போர்வைக்குள் இருந்துகொண்டு கொர்கொர்ரென்று குறட்டை விடும்போது தோன்றும் கனவுகள் தாம் புனைவுகளோ? அதுதான் புனைவின் ஊற்றுக்கண்ணும் +  அறமுமோ?

-0-0-0-0-0-

சரி. இவரிடம் போய், அந்தப் பால்மணம் மாறாத  ‘பாலா’ ஒரு கோரிக்கையை வைக்கிறார்; அதன் சாராம்சம்:

“ஐயா, தயை செய்து தரவுகளுடன் பேசுங்கள், கண்டமேனிக்கும் அட்ச்சிவுடாதீர்கள்.

உங்களையே தெய்வமாக, உங்கள் சொற்களையே வேதவாக்காக நம்பும் வாசகர்வட்டச் சதுரச் செவ்வகக் குளுவான்கள் நிறைய இருக்கிறார்கள்…

உங்களைப் போன்றவர்களுக்குப் பொறுப்புணர்ச்சியும் வேண்டும்.”

மாற்றுச்செவித் திறனாளர் காதில் சங்கூதியிருக்கிறார், பாவம். இத்தனைக்கும் இதே பாலா முன்பொருமுறை (அல்லது பலமுறை?) ஜெயமோக அட்ச்சிவுடல்களைப் பற்றி எழுதியிருந்தார். அது பால் தொடர்பான விஷயம், அதாவது பாலியல் என நினைவு. அதற்கும் பெரும்பேராசானிடமிருந்து மேலதிக அட்ச்சிவுடல் கிடைத்தது எனவும் நினைவு… நல்ல, தரமான நகைச்சுவை.

நம் அலக்கியவாதிகளாவது அவர்களுடைய பொறுப்புணர்ச்சியாவது… வேண்டுமென்றால் அதிக பட்சம், அட்ச்சிவுடுவதன் அதிர்வெண்ணைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள் என அவர்கள் காலடியில் விழுந்து புரண்டு கோரிக்கை வைக்கலாம், அவ்வளவுதான்.

ஆனால், அதாவது ஆகவே… இதற்காகத் தானே ஆசைப்பட்டாய் பாலா?

-0-0-0-

ஜெயமோகன் பார்வையில் ‘இலக்கிய வாசகன்’ உயர்ந்தவன்.

“எந்த ஒரு உச்சகட்ட அரசியல் அறிவுஜீவியைவிட, சமூக ஆய்வாளனை விட, இலக்கியவாசகன் கூர்மையானவன், மேலும் அறிவார்ந்தவன்  என்பதை மிகச்சாதாரணமாகப் பேசினாலே புரிந்துகொள்ள முடியும்.”

ஆனால், ஜெயமோகன் சொன்னதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், நேற்று ஒரு வாசகன் என்னுடன் பேத்தினான் என்பார், என்ன செய்ய.

நல்லவேளை, இவர் இதில் அறிவியல்காரர், தொழில் நுட்பாளர் என அனைவரையும் சகட்டுமேனிக்குச் சேர்க்கவில்லை. அதற்கு நன்றி.
அதேசமயம் – ஜெயமோகனின் அறிவியல் அறிவு திறம் புனைவு அவற்றின் வீரதீர பராக்கிரமங்கள் பற்றியெல்லாம் நாம் அறியாதவர்களில்லை – அப்படியே அவர் ஏகோபித்து இருந்தாலும் அவருடைய அறிவியலுக்கும் தரவுகளே தேவையில்லை என்பதுதானே உண்மை?

எல்லாம் சரி… தற்போது, ஒரு சராசரி ஜெயமோகி -அதாவது ஜெயமோக வாசகன், ‘கூர்மையானவனா’ என ஆராயலாம்.

ஹ்ம்ம். ஜெயமோக அகராதியின் படி கூர்மை என்றால், ஒருமாதிரி ஆமைத் தனம். அதற்கு அவர் ‘ஸம்ஸ்க்ருத அறிஞர்களுடன்’ பேசியதாக ஒரு ப்ரத்தேயகத் தரவு வைத்திருப்பார். ஊக்கபோனஸ்ஸாக மோனியர்-வில்லியம்ஸ் அகராதியும், அகராதி பிடித்தவர்களுக்காகவே அவதரித்திருக்கிறது.

கூர்மம் என்றால் ஆமை. கூர்மாவதாரத்தில் வருவதுபோல. ஆக, கூர்மை என்றால் ஆமையம், ஆமைத்தனம்.

ஆக, ஒரு சராசரி ஜெயமோக வாசகன் கொஞ்சம் ஸ்லோ. மூளை மந்தம். ஸிபியு தடுமாற்றம். இது உண்மைதான். இதற்கும் பெரிதாகத் தரவுகள் தேவையில்லை. ஏனெனில் இது எழுத்தாள, புனைவு, அனுபவ ரீதி சமாச்சார விபச்சாரம்.

சரி.

நானும் அப்படியும் இப்படியும் எவ்வளவோ ஜெயமோக வாசகர் திரளினருடன் பேசியிருக்கிறேன்.

அது அப்படியில்லை – அவர்களின் மிகப்பெரும்பான்மையோர்* பாவம், வெறும் கருத்துலக நோஞ்சான்கள், வழி/துதிபாடிகள்.

முக்கியமாக, வடிகட்டிய சோம்பேறிகள். ஒன்றை மட்டும் அறிந்ததாக பாவலா செய்துகொண்டு அதன் வழியாக உலகத்தையே அறிந்துதெளிந்துள்ளதாக ஒருமாதிரி சுயஏமாற்றுதலில் மூழ்கியிருப்பவர்கள்.

அவர்கள் எழுதும் விட்டில்பூச்சி வாசகர் கடிதங்களைப் பார்த்தாலே இளிப்புகள் தெரியவரும்.

* ஓரிரு விதிவிலக்குகள் இருக்கின்றனர் என்பதையும், ஒரு பாதுகாப்புக்காகச் சொல்லிவிடுகிறேன். இல்லையேல் ‘நீங்கள் ஜெயமோகனைக் குறித்து ஏதேனும் எதிர்மறையாகச் சொன்னால் மட்டும் ஒத்துவராது’ வகை தற்கொலைப்படை இளைஞர்கள் கோபித்துக்கொண்டு விடப்போகிறார்கள் – இவர்களில் சிலருக்கு என் வீடு தெரியும்வேறு. பாவிகள்!

-0-0-0-

இன்னொன்று: இந்த இழிநிலையைப் பற்றி சொல்லிக்கொள்ள கொஞ்சம் கூச்சமாகவும் வருத்தமாகவும் இருந்தாலும், சொல்லியே தீரவேண்டும்.  (இது நமக்கிடையே இருக்கட்டும், வெளியாட்களுக்குத் தெரியவே வேண்டாம், சரியா?)

நானும் ஒருமாதிரி இலக்கிய வாசகன் தான்.  :-(

பேர்பெற்ற புண்ணிய க்ஷேத்திரங்களுக்கெல்லாம் விமோசனத்துக்கு அலைந்தாகிவிட்டது… பல தீர்த்தங்களில் மஹாநதிகளில் தலைமுழுகியாகிவிட்டது… ஊக்கபோனஸ்ஸாக எவ்வளவோ டாக்டர்களிடம் போய்ப் பார்த்தாகிவிட்டது. ஒன்றும் தேறாது, கொஞ்சம்கூடத் தெளியாது எனக் கைவிரித்துவிட்டார்கள், பாவிகள்!

என்ன சொல்லவருகிறேன் என்றால்…

இப்படி ஒரு அனாமத்து அலக்கிய வாசகனாக இருந்தாலும்… நான் ஒன்றும் அப்படியாப்பட்ட கூர்மை படைத்தவன் அறி வாளி, அறியாத மக்கு, குறையாத குடம் ஜனிக்காத ஜடம் மடியாட மடம் தணியாத விடம் என்றெல்லாம் அல்லன். என் அளவு/ரெவல் எனக்குத் தெரியும்.

என்னைவிட பலப்பல பலப்பல விதங்களில் கூர்மையும் ஆழமும் மிக்கவர்களை, அதிலும் என்னில் பாதிவயதே ஆகியிருப்பவர்களை அறிவேன்; ஆனால் நல்லவேளை, அவர்கள் இலக்கியம் படிப்பதில்லை. முக்கியமாக, தமிழிலக்கியம்; அதிலும் குறிப்பாக, தற்காலத் தமிழ் அலக்கியம்.

பாக்கியவான்கள்.

ஒருவேளை, இந்த தமிழ் அலக்கிய எழவுகளில் நேரத்தை விரயம் செய்யாதிருந்திருந்தால், கவிதை புனைவு மண்ணாங்கட்டி எனக் குப்பைகளினூடே நடனமாடாமல் இருந்திருந்தால், நானும் புத்திசாலியாக இருந்திருப்பேனோ?

அதனாலென்ன?

தமிழ் அலக்கிய எழுத்தாள பரத்தைலோக ராஜ்ஜியம் நம்முடையது, ஹைய்யா!

ஐயய்யோ! மன்னிக்கவும். அது ‘பரலோக’ என்றிருக்கவேண்டுமோ?

(எத்தையோ எழுதிவிட்டேன் – ஆனால் இப்போது ஒழுக்கவாதிக் கோமகன்கள் வந்து அறிவுரை சொல்வார்களோ எனப் பயமாக இருக்கிறதே! இந்த எழவாளர்களுக்கு அந்த ஜெயமோகனே தேவலாம் போல…)