© S. Ramakrishnan, 2021. As always. 🙏🏿

வொரு வூர்ல வொரு பூனே இர்ந்திச்சிச்சா… Read the rest of this entry »

பெருமூச்சு. உங்களை நான் எப்படி மறக்க முடியும், டாம்?

உங்களுடைய எழுத்தின் வீரியமும் அங்கதமும் கவித்துவமும் அறிவியல்பூர்வப் புனைவுகளும் கருத்துகளும் விமர்சனமும் (ஏன், படுபீதியளிக்கும் பயங்கரக் கதைகளும் – ஸ்டீஃபன் கிங், ஹெச்பி லவ்க்ரேஃப்ட் எல்லாம் சும்மா!) –  உங்கள் சமகாலத்தில் பலப்பலருக்கு இருந்திருக்கவில்லை என்பது என் எண்ணம்.

ஏன், இப்போதும்கூட, நீங்கள் எப்போதோ எட்டிய உச்சத்தை அடைய, பலப்பல ஆங்கில அலக்கியப் பிரபலஸ்தர்கள் ப்ரம்மப் பிரயத்தனம் செய்யவேண்டியிருக்கும் எனத்தான் நினைக்கிறேன்.

-0-0-0-0-0-

ஒவ்வொரு முறை மகத்தானவர்களைப் படிக்கும்போதும் கேட்கும்போதும் – ஒரு சராசரி நுகர்வோனான,  ஓரளவுக்குத் தேர்ந்த வாசகனான நான் – கையாலாகாமல் பிலாக்கணம் வைப்பது வழக்கம். “ஏன், என் தமிழில் இப்படியெல்லாம் எழுத மாட்டேனென்கிறார்கள்?”

நம் பண்டையத் தமிழ அறிவியற்புல, கணித, தொழில்நுட்ப பாரம்பரியங்களையே(!) விடுங்கள், கிட்டே போனால்தானே அவை கானல்நீர் எனத் தெரியும்; நம்மிடம் இருந்ததெல்லாம் ‘நேர்நேர் தேமா’வும் அதனைவிட அதி உன்னதங்களான வீரதீர ‘ஆநிரை கவர்தல்’களும்தானே – இசையோ பிற நிகழ்கலை வெளிப்பாடுகளோ, சிலகாலம் முன்னால்கூட நாம் அடைந்திருந்ததாகச் சொல்லப்படும்  செம்பண்பாட்டு/செவ்வியல் உச்சங்களைக்கூட நம்மால் இக்காலங்களில் அடைய முடியவில்லையே :-( … … என ஒர்ரே சளிஒழுக அழுகை. வெட்டிப் பிலாக்கணம்.

பிரபல தற்காலத் தமிழலக்கியத்தை எடுத்துக்கொண்டால் – நமக்கு லபித்தது எஸ். ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா போன்ற அமோக அரைகுறைகள்தாமா? (ஜெயமோகன் அவர்கள் இந்த கால்வேக்காடுகளுடன் ஐக்கியமாகவில்லை (இதுவரை) என்பது நிறைவளிக்கும் விஷயம்தான்! ஆனால்… ஒருவேளை … இளைஞயிளைஞிகள் எழும்பி வந்துகொண்டிருக்கலாம் – எனக்கு இக்காலங்களில் அவ்வளவு தற்காலத் தற்குறி அலக்கியப் பிடிப்போ அறிமுகமோ இல்லை, விட்டாற்போதுமென்றுதான் இருக்கிறது.)

-0-0-கொஞ்சம் வரலாறு-0-0-0-

தனியல் ம்யூனுத்தீன் எனும் ஒரு பாகிஸ்தானி-வடைஅமெரிக்க எழுத்தாளர் குறித்த 2013 ஆங்கிலப்  பதிவொன்றை, என்னுடைய 2009 குறிப்புகளை வைத்துக்கொண்டு எழுதியிருந்தேன். அதில் தாமஸ்டிஷ் அவர்களைப் பற்றியும்:

Of course, Thomas M. Disch – one of the finest poets / essayists / shortstory writers etc etc that I know of — is also quite good with this – especially his phantasmagorical  ‘The First Annual Performance Art Festival at the Slaughter Rock Battlefield’ – I read this some 15 years back and I still could recollect most of the storyline. Haunting is the word – in The Hudson Review; sorry, this incredible and delirious shortstory is paywalled. I very, very strongly and earnestly  recommend him. And, one of these days, I must specifically write about this Thomas Disch. I seriously wish, we had authors like this in our Tamil language. Really. *sniff*

சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் ஆர். வெங்கட் ( சிங்கப்பூர்?) என்பவருடைய, என்னைக் குறித்த மாளா அலுப்பின்…

…பின்னர், அவருடன் மின்னஞ்சலில் (October, 2013) ஒரு சிறு உரையாடல் நடந்தது. அதில் தாமஸ் அவர்களைக் குறித்த சிலவும்.

அதில் அவர் மேற்கண்ட கதையைப் பற்றி எழுதியது –

I just about recovered enough to react to the story. Lesbian feminists and punk rockers conceive a mass murder as art — wow! Anarchic, vicious and biting satire at its best!

Definitely made me determined to read more of his works. You may be aware of the blog that Disch kept for the last three years of his life before his characteristically forceful and self-appointed death.

Thanks again for pointing him out. I look forward to your promised article on Disch.

ஆ! அற்புதம்! “I just about recovered enough to react to the story. Lesbian feminists and punk rockers conceive a mass murder as art — wow! Anarchic, vicious and biting satire at its best!”

அட்சரத்துக்கு லட்சம் பொன். மிகச் சுருக்கமாக கதையின் கருவைத் தொட்டுவிட்டார்.

-0-0-0-0-0-

“படுகொலைப் பாறை போர்க்களத்தில், முதல் வருடாந்திர நிகழ்கலை விழா” – இது கொஞ்சம் கரடுமுரடான மொழிபெயர்ப்பு. இதன் மூலத்தை – 1997ல் அது வந்தவுடனே ஓரிரு மாதங்களில் எங்கள் கல்லூரி நூலகத்தில் படித்துவிட்டேன் என நினைவு.

ஏனெனில், தாமஸ் டிஷ் அவர்களின் அறிவியல்புனைவுகள் பலவற்றைக் கொஞ்சம் முன்னமேயே படித்து ஒருமாதிரி கிறக்கத்தில் இருந்தேன். (இப்போது படித்தாலும் அவை கிறக்கம் கொடுக்கக் கூடுபவைதாம்!)

சரி.

இளம் நம்பி கிருஷ்ணன் அவர்களும் இந்தக் கதையால்(லும்) ஆட்கொள்ளப்பட்டவர் போல. ஆனால் என்னைப்போல வெறுமனே அழகுகளை நுகராமல், அவற்றை மொழிமாற்றம் செய்யவும் முயன்றிருக்கிறார்.

என் பார்வையில் நன்றாகவே வந்திருக்கிறது இது. மூலத்தை நிர்மூலம் செய்யாமல், அதன் ஏகப்பட்ட அமெரிக்கப் பண்பாட்டுக் குறிப்புகளை நீர்க்கடிக்கச் செய்யாமல் – நம்பி கிருஷ்ணன் அவர்கள் கத்திமேல் நடந்திருக்கிறார்.

முதலில், எனக்கு இதனை (அதுவும் இது நீளம் அதிகம் – கதையின் அடர்த்தியும் அப்படித்தான்!) எப்படி ஒரு ‘சராசரி’ தேர்ந்த தமிழ் வாசகர் எதிர்கொள்வார் எனவொரு நமைச்சல் சம்சயம் இருந்தது – ஏனெனில், மொழிபெயர்ப்பு என்பது நம்மூரில் எஸ்ராமகிருஷ்ணன்களால் வெச்சிசெய்யப்பட்ட விஷயம் வேறு; ஆகவே எனக்கு அறிமுகமான ஒரு தமிழிளைஞர் (ஆங்கிலமும் படிப்பவர் – ஆனால் ஆயிரம்தடவை முட்டிக்கொண்டும் அய்ன்கிரி நந்தினிகிரி ரேண்ட்கிரி தாண்டி, அவருக்கு அந்த எழவெடுத்த டேன் ப்ரௌன் யுவால் ஹராரி ஜேரட் டையமண்ட் குப்பைகள் தாண்டிப் போகமுடியவில்லை – சலிப்பாக இருக்கிறது!) ஒருவரிடம் இந்தச் சுட்டிகளைக் கொடுத்து ஒழுங்கு மரியாதையாகப் படிக்கச் சொன்னேன்.

சுமார் மூன்று வாரங்கள் கழிந்தன; என்னடா இது ஏதாவது தற்கொலைக் கேஸாகிவிட்டதோ எனத் துணுக்குற்றால் – அந்த தமிழிளைஞர் செவ்விளைஞர் –  மொழிமாற்றத்தைப் பின் படித்துவிட்டு, பின்னர் மூலத்தையும் ஜேஸ்டோர் வழியாகத் தரவிரக்கிப் படித்திருக்கிறார் – பிரமிப்புடன் ஒரு  குட்டி மின்னஞ்சல் வேறு. (நல்லவேளை! ஆசான் அண்ணாத்தே என்றெல்லாம் என்னை விளித்து அவமானப் படுத்தவில்லை!)

இதற்குக் காரணம் மொழிபெயர்ப்பின் சமனம். (ஆனால் படிப்பவர்களும் கொஞ்சம் உழைக்கவேண்டும்!)

நீங்கள் மூலத்தையும் படிக்கவேண்டுமென்றால் ஜேஸ்டோர் போய் பதிவு செய்துகொண்டு ஓஸியில் தரவிரக்கிக் கொள்ளலாம்.

சொல்வனத்தின் கானகமிராண்டிகளையும் மிராண்டா ரைட்ஸ்காரர்களையும் நான் கொஞ்சம் அறிவேன். ஆகவே நீங்களும் மிரளாமல் இருக்க உங்களுக்கு ஒரு சிறு துப்பு.

எது எப்படியோ, நம்பி கிருஷ்ணன் அவர்கள் தம் உயிரைக் கொடுத்து இந்தவேலை செய்திருக்கிறார். இதனைப் பதிப்பித்த சொல்வனம் காரர்களுக்கு என் முத்தங்கள்…

கரும்பு தின்னக் கூலியா வேண்டும்? அதுவும் ஓஸியில் கரும்பு கிடைத்தால்…

உடனே போய்ப் படியுங்கள், சரியா?

ஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா-1

ஸ்லாட்டர்ராக் போர்க்களத்தில் முதல் வருடாந்திர ஆற்றுகைக் கலை விழா -2

நம்பி கிருஷ்ணன் போன்ற ‘போக்கற்று, மிகவும் கரிசனமும் உழைப்பும் கொடுத்து  நமக்கு மொழிமாற்றித் தரும் ஞானவெறிக் கிறுக்கர்களை’ நாம் சர்வ நிச்சயமாகக் கொண்டாட வேண்டும்தான்!

-0-0-0-0-0-

தா ம ஸ்  டி ஷ் –  அவர் மெய்ன் டிஷ் மட்டுமல்லர். ஸைட் டிஷ்ஷும் அவரே!

கீழே குறிப்பிட்டு இருக்கும் புத்தகங்களையும் படிக்கவும்.

அவர் ஒரு தங்கச் சுரங்கம். பாவம், அகாலத்தில் தற்கொலை செய்துகொண்டு போய்ச்சேர்ந்தார்! :-(

மீண்டும், இந்த மொழிபெயர்ப்பின் வாயிலாக நம் செல்லத் தமிழர்களுக்கு தாமஸ் டிஷ் அவர்களை அறிமுகப் படுத்தியிருப்பதற்கு….

சொல்வனவாசிகளுக்கும் சொல்வனத்தில் சுற்றுலா செய்பவர்களுக்கும் – முக்கியமாக நம்பி கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்…

[குறிப்பு: எனக்கும் மேற்குறிப்பிட்டவர்களுக்கும் ஒரு கொடுக்கல்வாங்கல், பரஸ்பர சொறிதல் அப்படியிப்படி என ஒரு முடியும் இல்லை, நன்றி!]

This is an excerptise, which is being passed off as an expertise. Read the rest of this entry »

I encountered this remarkable & brilliantly fascinating story, for the first time, on BBS(?) in 1991(??) or thereabouts – may be earlier. Please do take the time to read it – because it is a bloody rewarding tale/experience. Read the rest of this entry »

பாஜக அரசு, சட்டரீதியாகவும் சரி, ஹிந்துத்துவா குண்டர்கூட்டங்களை வைத்தும் சரி, முஸ்லீம்களைக் குறிவைத்துத் தாக்குகிறது. இன்னமும் கொஞ்ச நாட்களில் இந்தியாவில் முஸ்லீம்களே இருக்கமாட்டார்கள்! என்ஆர்ஸி ஸிஏஏ போன்றவை இதற்காகவே அரங்கேற்றப் படுகின்றன!Read the rest of this entry »

A scholarly, beer-reviewed treatise on how my dear Chacha Nehru, danced his way into myBharat’s psyche.

Excerpted from the really delightful book of Eli Maor, called ‘Trigonometric Delights‘ published by Princeton University Press, 1998. (p 35-37) Read the rest of this entry »

For many, many years I have been reading (=devouring, I mean) Ursula Kroeber Le Guin’s thoughts, scribbled notes and books. Read the rest of this entry »

எஸ். விஜயகுமார் அவர்கள் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், மிக முக்கியமானதொன்று.

பாரதக் கலாச்சாரச் சுரண்டல்களுக்கும், அறமற்ற வகையில் அவை அழிக்கப் படுவதையும் குறித்த புத்தகம் – முக்கியமாக, நாடு கடத்தப்பட்ட நம் பொக்கிஷங்களான விக்கிரக மூர்த்திகளைப் பற்றியும் அவற்றை திருப்பிச் சேர்க்க நடந்துகொண்டிருக்கும் பகீரதப் பணிகளைப் பற்றியுமானது… Read the rest of this entry »

எவ்வளவுதடவை இந்த எனிக்மா ஆஃப் அரைவலைப் படித்திருப்பேன். மாணிக்கம். Read the rest of this entry »

When the grand dame of filmi protests makes facile statements about secularism, women’s rights and lefts, it is important that certain other facets of her character are also brought out.

May grand ma’am Shabana Azmi be the mother of a THOUSAND protests!

Read the rest of this entry »