இந்த அருண் நபரை, மாமாங்கங்களாக அறிவேன். கிறுக்கன். ஆகவே. (ஐய்யோ, அந்த அருண் வேறு! அவர் சென்னை தொழில் நுட்பக் கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார்!) Read the rest of this entry »

இப்பூவலகம் முட்டாக்கூவான்களால் நிரப்பப்பட்டுள்ளது என்ற பிரத்யட்ச உண்மை அனைவரும் அறிந்ததுதான். ஆகவே என்னுடைய கேள்வி: எப்படா பக்கத்து அன்ட்ரொமெடா-என்ஜிசி224 கேலக்ஸீக்கு மெட்ரொ ரெய்லு விடப்போறீங்க?

தாங்க மிடியலயேடா இங்க… பேலியோ = மண்டேல-மேல்மாடீ-காலியோ அப்டீன்னிட்டு ரவுன்டு கட்டிக்கினு மொத்தறானுங்களேடா இங்க, யென்னோட சகஅறிவிலிங்க… ரெண்டே மாசத்துல மூணு பேலியோ முட்டாக்கூவான்ங்களண்ட பேச்சு கேக்கவேண்டி வந்துட்சேடா! :-(

Read the rest of this entry »

பனைமரமே, பனைமரமே, ஏன் தொப வாயில் விழுந்தாய் பனைமரமே… :-(

ஹ்ம்ம்ம்… வேறென்ன பிலாக்கணம் வைக்க… :-(( Read the rest of this entry »

இப்படித்தான்: தலசீமியா நோயை ஒழிப்பது எப்படி ?

Read the rest of this entry »

மன்னிக்கவும்; ஆச்சரியக்குறி ஸ்டாக் தீர்ந்துவிட்டது, இந்த எழவெடுத்த பதிவை எப்படி எழுதி முடிக்கப் போகிறேன் என்றே தெரியவில்லை. :-(  இதைப் படிப்பவர்கள் மின்னஞ்சலில் தலா 1024 ஆச்சரியக்குறிகளை அனுப்பிவைக்கவும். நன்றி. Read the rest of this entry »

இன்று மதியம்வரை, நான்தான் அரவிந்தன் கண்னையன் அவர்களின் முழுமுதற் சீடன் என்கிற முற்றும் துறந்த ஞான நிலையில்,  இறுமாப்புடன் இருந்துவிட்டேன். இது மிகவும் சோகம் தரும் விஷயம். :-(

அரவிந்தன் கண்ணையன் பெயருக்கும் புகழுக்கும், குந்துமணியளவுகூடக் குந்தகம் வராமல், அவர் பாதையிலேயே அவரை விடாமல் தொடர்ந்து, என்னை மேம்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டேன்! இதுவா, ஒரு ஏகலவ்ய சிஷ்யன், தன் மகாமகோ துரோணப் பேராசானுக்குக் கொடுக்கும் மரியாதை?  :-((

ஆகையால்தான்… Read the rest of this entry »

பணியிடம் சார்ந்த சிலபல விஷயங்களால், தமிழ குடிகாரர்களின் அராஜகச் செயல்பாடுகளினால், குடித்தோகுடிக்காமலோ அறிந்தோஅறியாமலோ உமிழப்படும் ஜாதிவெறி உச்சாடனங்களால்,  அயர்வையும் குவிந்துகிடக்கும் வேலைகளைப் பார்த்துத் திகைத்துப்போய் மலைப்பையும் (= mountain bag also என்றறிக) அடைந்து கொண்டிருக்கிறேன்; ஆகவே, சக்தியும் மூச்சுவிட நேரமும் கிடைக்கும்போதெல்லாம் நகைச்சுவைக்காக (= for jewelry taste) என்று மட்டுமே, விடுதலை வினவு போன்ற தளங்களிலெல்லாம், தலையில் அடித்துக்கொண்டு தேடிப்படிக்கவேண்டிய அளவுக்கு படுகேவலமாகப் போய்க்கொண்டிருக்கிறேன். :-(

இச்சமயம், கட்டுரைக்குத் தொடர்பில்லாத, ஆனால்  தொடர்புடைய ஒரு விஷயம்:  ஜெயமோகன் அவர்களின் அண்மைய கட்டுரைகளில் ஒன்றான ‘பேய்கள்’ – இதனையும் இன்று காலை படித்துக்கொண்டிருக்கும்போது,  நாற்முக்காலியில் இருந்து கீழே வீழ்ந்து உருண்டு உருண்டு என் குண்டியை நீக்கிக்கொண்டு சிரித்தேன்.  :-))))

நன்றி, ஜெயமோகன்! என் மதிப்புக்கும் அன்புக்கும் உரிய எஸ்ரா அவர்களின் மொழிமாற்ற நடையில் மறுபடியும் எழுதவேண்டுமென்றால், என் பகலை, இப்போதுதான் உருவாக்கினீர்!  வாழ்க நின் குற்றம்! வளர்க நும் ஏத்தம்! B-)!

சரி, இந்த அதிஅற்புத அனுபூதி நிலை நகைச்சுவைத் தேடல்களில் கிடைத்த ஒரு மாணிக்கத்தைப் பற்றிய காதைதான் இது.

யாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம்!

-0-0-0-0-0-0-

விடுதலை வீரமணியார் அவர்களின், ஒரே சமயத்தில் புளகாங்கிதத்தையும் படுபீதியையும் அளிக்கும் உடும்புத்தைலமுதல்வாத விற்பனைக்கான ஏகபோக உரிமையின் பரிணாம வளர்ச்சிதான் இது!

இதைப் படித்துவிட்டு, சிரிப்பதா அழுவதா அல்லது மையமாக, ஒரு திராவிடத் தமிழனான என்மேலேயே காறித் துப்பிக்கொள்வதா என்று எனக்குச் சரியாகவே புரியவில்லை.

Read the rest of this entry »