பாரதத்தின், ஞான-தர்ம மரபுகளின் அழகான விஷயங்களில் ஒன்று என்னவென்றால், இவற்றுக்கு யார் வேண்டுமானாலும் (பாமரனும் பரிசுத்தஆவி அறிவிலியுமான அடியேன் உட்பட) வியாக்கியானம் கொடுக்கலாம். பொழிப்புரையும் பழிப்புரையும் எழுதலாம். யாரும் கழுத்தை அறுக்கவரமாட்டார்கள். புத்துருவாக்கங்களும், புதுப்பார்வைகளும், உரையாடல்களும், சமரசங்களும் – நம் நெடிய மரபுநீட்சிகளின் அடிப்படைகள். Read the rest of this entry »

Advertisements

:-( எஸ்ராமகிருஷ்ணம் தொடர்கிறது… Read the rest of this entry »

பாளாப்போற எலிக்ஸன் முடிய்ற வரிக்கும் இவ்னுங்களோட வாந்திகள பொற்த்துக்கணுமேடா! கெதி கலங்குதேடா என்க்கு! :-( Read the rest of this entry »

டெட்.காம் இணைய தளத்தில் உள்ள 8 நிமிடங்களே ஓடும் ஒரு சிறு வீடியோ ஒன்றின் ட்ரேன்ஸ்க்ரிப்ட்-ன் (உரையாடல்/பேச்சு/வசன வடிவம்)  தமிழ்மயமாக்கம் இது.

Screenshot from 2016-01-31 16:34:03
[ஷர்மீன் ஒபைத்-சினாய்]

Read the rest of this entry »

(அல்லது) இதுதாண்டா டேட்ட்ட்ட்டா ஸைன்டிஸ்ட்ட்ட்ட்ட்ட்!

… எவ்வளவு தெகிர்யம் உங்களுக்கு! எப்படியென்றா கேட்கிறீர்கள்?

இப்படித்தான்.   (ஆனால் இது ஆங்கிலத்தில் இருக்கிறது! – Imagining a Buddhist India!!)

சகலடேடாவல்லவன்  "அட அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ, தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ..." வருகிறார், ஒதுங்குங்கடா முண்டங்களா... (படம் இங்கிருந்து)

சகலடேடாவல்லவன்அட அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ, தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ” வருகிறார், ஒதுங்குங்கடா முண்டங்களா… (படம் இங்கிருந்து)

Read the rest of this entry »

சில நாட்கள் முன்பு, குஜராத் ஐஏஎஸ் அதிகாரிகள் இருவருடன் (தனித்தனியாக), குஜராத்தின் குணோத்ஸவ் திட்ட விவரங்கள் விஷயமாக அளவளாவிக் கொண்டிருந்தேன். இவர்களைப் பற்றி முன்னமே குறிப்பிட்டிருக்கிறேன். இவர்கள் நேரடியாக மோதி அவர்களின் கீழ் (முதல் அடுக்கு அல்ல – ஒரு தட்டு கீழே) பணிபுரிந்துகொண்டிருக்கும் மூத்த, நேர்மையாள அதிகாரிகள்; கூழைக் கும்பிடு போடுபவர்களோ, சமயம் வாய்த்தபோதெல்லாம் அடித்துப்பிடித்துக் கொண்டு வரிசையில் நின்று அசடும் கயமையும் வழிய ‘பூச்செண்டு’ கொடுப்பவர்களும் அல்லர். நல்ல பரவலான படிப்பும், செறிவான அனுபவங்களும், செயலூக்கமும் உடையவர்கள். நான் மதிப்பவர்கள்.

பேச்சு மெதுவாக நிர்வாகம் பற்றிய விவாதங்களை நோக்கிச் சென்றது; நாங்கள், பொதுவாக, அதிகார வர்க்கம் எப்படி நிர்வாகத்தை அணுகும், அதன் பயிற்சி முறை அதனை எப்படிச் செயல்பட ஊக்குவிக்கும், அதற்கும் அரசியல்/அரசு தலைமைக்கும் இருக்கும் உறவுகள், நடைமுறை எதார்த்தங்கள் எப்படிப்பட்டவை, வளர்ச்சிப் பாதைகளின் ஊக்குவிப்பான்கள் & அடைப்பான்கள், பிரச்சினைகளைத் தீர்ப்பதின் அங்கங்கள் எனப் பேசிக் கொண்டிருந்தோம் – இந்தப் பின்புலத்தில் மோதி அவர்களின் நிர்வாகம் குறித்த பார்வைகளையும் கொஞ்சம் விவாதித்தோம்.

இந்த அளவளாவல்களிலிருந்தும், என் அனுபவங்களிலிருந்தும் சில குறிப்புகள்: Read the rest of this entry »

(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (20/n)

சாளரம் #12: வழிப்பாதை நாய்கள்[1] குரைத்துக்கொண்டிருக்கலாம், ஆனால் ஒட்டகச்சரக்கு நெடும்பயணங்கள் தொடர்ந்துகொண்டே இருப்பவை…

‘Dogs bark, but Caravans roll on’ – என்கிற அரேபிய மூல வாசகம் எனக்குப் பெரும் மனவெழுச்சியைப் பல காலமாகக் கொடுத்து வருவது. அற்புதமான குறியீடாகவும், ஏன் படிமமாகவேகூட விரித்தறியத் தக்கது.

நம் தமிழ் நாட்டில் எவ்வளவோ எதிர்மறையும் கவைக்குதவாவையுமான சங்கதிகள் இருக்கின்றன. ஆனாலும் இவற்றையும் இவற்றின் ஆதாரசுருதியான திராவிட இயக்க எச்சங்களையும் மீறி,  நம் சமூகம் எப்படியாவது மேலெழுந்து வரும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தமிழகம் எனும் நிலப்பரப்பிலும் வாழும் தமிழர்களையும், தமிழச் சூழலையும் — நிலமாகவும், கவிதையாகவும், கதையாகவும், திரைப்படமாகவும், மேடைப் பேச்சுகளாகவும், அரைவேக்காட்டு அரசியல் பகடைகளாகவும் மட்டுமே பார்த்து, உபயோகித்து, அவற்றை விற்று தன்னை வளர்த்துக்கொண்ட அறிவுஜீவி அரைவாளிகளும், காப்பிக்கடைக் காரர்களும், அரசியல் உதிரிகளும் நிரம்பிய — தற்போதைய நிலையில், இன்னமும்  குறிப்பிடத்தக்க அளவில் தரம்  வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கக் கூடிய விஷயம்தான்.

albert-einstein-good-quotes-sayings-indifference-people

எப்படி இதனைச் சொல்கிறேன் என்றால், இதற்காகப் பலவிதங்களில் நடந்துகொண்டிருக்கும் சிறு முயற்சிகளில் பலவற்றை நான் அறிவேன். அடுத்தவர்களுக்குத் தெரியாமல், விளம்பரங்கள் பெறாமல் (அவற்றைப் பெற விரும்பாமல்) நம் தமிழகத்தின், இந்தியாவின் மேன்மைக்காக, வளர்ச்சிக்காக – வெகு இயல்பாகவும், சுறுசுறுப்புடனும் – முனகலோ சுயபச்சாத்தாபமோ கர்வமோ துளிக்கூட  இல்லாமல், மகிழ்ச்சியுடன் பாடுபடும் அற்புத மனிதர்களை நான் அறிவேன்.

இம்முயற்சிகளில் பின்னிருக்கும் மகானுபாவர்கள் பொதுவாக இப்படித்தான் சிந்திக்கிறார்கள் என்பதையும் நான் உணர்கிறேன். அதாவது:

‘நம் தாக்கத்தில், நம்மால் துப்புரவாகச் செய்து முடித்துவிடக்கூடிய செயல்களையே நமக்குச் செய்து முடிக்க நேரம் இல்லை. இப்படி இருக்கையில், சரியாக இல்லாத மற்ற விஷயங்களைப் பற்றி, நம்மை மீறிய செயல்பாடுகளைப் பற்றி யோசிக்க, செயல்பட நமக்கேது நேரம்?’ Read the rest of this entry »