வணக்கம், நண்பர்களே!

தமிழகத்தில் தேர்தல்கள் வர மிகக் குறைந்த நாட்களே இருக்கின்றன. இச்சமயம் சில விஷயங்கள் சொல்லப்படாவிட்டால் அவை சொல்லப்படாமலே இருந்துவிடக்கூடும்.

நிறைய உண்மைகள், விஷயங்கள் மக்களை சென்றடைவதே இல்லை. எவ்வளவோ ஆபாசங்கள், சுரண்டல்கள்… மக்களுக்குத் தெரியாமல் புதைக்கப் பட்ட செய்திகள். நேர்மை உறங்கும் நேரங்கள்… முடிந்தவரை நாம் இவைகளை வெளிக்கொணர வேண்டும்.

இந்த தேர்தல்கள்  நம் தமிழ் மக்களுக்கு ஒரு படிப்பினை – இம்முறையாவது நம் தமிழ்மக்கள் கயமையே உருவான பெரு  நிதிக் குடும்பத்துக்கு தகுந்த பாடம் புகட்டட்டும்…  கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழகத்தையும் (நேரடியாக – இலவசங்கள், கேபிள் டிவி, முட்டாள் படங்கள், அரைவேக்காட்டு எழுத்துக்கள், வெட்டி விழாக்கள், ஊழலோதி ஊழல்) ஈழத்தையும் (கயமையோடு மறைமுகமாக – ஆயுதப்போர் ஆதரிப்பு, வெட்டிப்பேச்சு வீரத்தனம், ஏதும்பேசா கோழைத்தனம், நம்ப வைத்துக் கழுத்தறுத்தல், ஒப்பாரி, உண்ணும் விரதம் இன்னபிற),   சுடுகாடாக ஆக்கியவர்களுக்கு, மக்களைப் படு கேவலமான பிச்சைக்காரர்கள் ஆக்கியவர்களுக்கு, படு தோல்வி அளிப்போம்.

மேலும் கருணாநிதி குடும்பத்தினரின் அட்டகாசம் அதிகரித்து பூதாகாரமாகி வருகிறது. எதற்கு எடுத்தாலும் தனக்குத்தானே ஆபாச விழா எடுத்துக்கொள்வதும், பகற்கொலைகளும், கொள்ளைகளும், அடிவருடிகளின் ஜால்ரா சப்தங்களும் மூச்சு முட்டவைக்கின்றன… இதற்கு மாற்று எப்படி இருந்தாலும் அது ஆதரிக்கப்பட வேண்டியதே. இல்லா விட்டால், இவ்வுதிரிகள் தமிழகத்தையே காயடித்து விடுவார்கள்.

ஆகவே நம் தமிழ்நாட்டை  குட்டிச்சுவராக்கும் திருடர் முன்னேற்றக் கழகத்திடமிருந்து காப்பாற்றவேண்டும்  எனும் பேராசையுடன் – வாய்மையே வெல்லும். கயமை தோற்கும். இது நிச்சயம் – என்று மனதிற்குப் பட்டாலும், சொல்ல வேண்டியதைச் சொல்லவேண்டும் என்பதினால் இப்பதிவுகள் ஆரம்பிக்கப் படுகின்றன.