விடுதலை வீரமணி அவர்களின் தறுதலைப் பொய்கள் (+கேரவன் பத்திரிகையின் ஊடகப்பேடித்தனம்)

October 6, 2017

உண்மையில், இவர் விடுதலை வீரமணி என்பதிலிருந்து படிப்படியாகத் தேய்ந்து திராவிடலை வீரமணியாகவே ஆகிவிட்டார்! மனிதர், தொடர்ந்து அதல பாதாளத்தில் வீழ்ந்து கொண்டேயிருக்கிறார்.

அடிப்படையில் ஒரு புத்திசாலியாகவும் உழைத்துச் சாப்பிடக்கூடியவருமாகவும் இருந்திருக்கக்கூடிய ஒரு மனிதரை, இந்தக் கருமாந்திர  திராவிடம்,  தீராவிட அரசியல்வாதிகளைப் போய் அண்டிப்பிழைக்கும் பிழைப்புவாதியாக்கி, ஊக்கபோனஸாக கூச்ச நாச்சமேயில்லாத ஒரு புளுகுணி மாங்கொட்டையாகவும் உருமாற்றிவிட்டது, என்ன செய்ய!

குறிப்புகள்:

1. அம்பேட்கர் தலைமை வகித்த இந்திய அரசியல் சட்டத்திற்கான வரைவுக் கமிட்டி – அரசியல் ஸாஸனத்தின் 48ஆம் ஷரத்தில் (வேளாண்மை + கால்நடைகளைப் பேணுதல் பற்றியது – Directive Principles of State Policy)ல் ஒரு ஷரத்து) சொல்வது:  “The State shall endeavour to organise agriculture and animal husbandry on modern and scientific lines and shall, in particular, take steps for preserving and improving the breeds, and prohibiting the slaughter, of cows and calves and other milch and draught cattle.”

2. மனிதவுரிமை, சமத்துவம், அசட்டுவம் என எந்தக் கொடிதூக்கும் பிரச்சினையாக இருந்தாலும், நம் அறிவுஜீவிகளும் இடதுசாரிகளும்  அம்பேட்கர்  அம்பேட்கர் என அரற்றிக்கொண்டே இருப்பார்கள். அதனால்தான் மறுபடியும் சொல்கிறேன்: அம்பேட்கர் இந்த வரைவுக் கமிட்டியின் தலைவராக இருந்து அதனைப் பிறர்  ஆலோசனைகளுடனும் செறிவான விவாதங்களுடனும் வழி நடத்தி, பகுத்துத் (1948-50) தொகுத்தளித்த பல ஷரத்துகளில் ஒன்றின் பகுதியின் சாராம்சம் –  அதாவது – “அரசானது — பசுக்களையும் கன்றுகளையும். பால் தரும் பிற விலங்கினங்களையும் விவசாயத்திற்கு உபயோகப்படும் விலங்குகளையும் வதைசெய்வதை / இறைச்சிக்காக வெட்டப்படுவதைத் தடைசெய்ய முயலவேண்டும்.

3. இந்த அரசியல் ஸாஸனக் கருதுகோள்களின் படி –  பசுவதைத் தடுப்புச் சட்டம பல மாநிலங்களில் இருந்தாலும், எல்லா மாநிலங்களிலும் இல்லை – என்பது தற்போதைய நிலவரம்.

4. 1960களின் பிற்பாதியில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள் – தொடர்ந்து, காங்கிரஸ் வகைக் கபடியாட்டமான ‘சிறுபான்மையினருக்குத் தேவையற்ற செல்லம் கொடுத்து’ அவர்களையும், தேவையற்ற சோஷலிஸ அரைகுறைத்தனத்தால் நாட்டையும் குட்டிச்சுவராக்கும் பாணி மேலாண்மையைக் கடைபிடித்தார். ஆகவே, அவர் பெரிதாக இந்த ஜந்துக்களின் உரிமைகளைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அரசியல் ஸாஸனம் அதிகாரபூர்வமாக அமலாக்கப்பட்ட 1950லிருந்து  1966 வரை – இம்மாதிரிக் கருத்துகள் மேல் சட்டங்கள் இயற்றப்படாததால் இதற்காக சிலபல சிறிய அளவு போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தன.

5. பசுப் பாதுகாப்புக் கூட்டமைப்பு என்றொரு தற்காலிக அமைப்பின் குடையின்கீழ் திரண்ட ஹிந்து+சீக்கிய+பௌத்த அமைப்புகள் – தில்லியில் ஒரு போராட்டத்தை நடத்தி, நாடாளுமன்றத்துக்கு ஒரு மஹஜர் (அறிக்கை) ஒன்றை அளிக்கப்போவதாக முன்னமேயே தெரிவித்திருந்தன.

6. இச்செயல்பாடுகளின் ஒரு அங்கமாக நவம்பர் 7, 1966 அன்று இந்தியா முழுவதிலிருந்தும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேலான மக்கள் (பலர் ஹிந்து அமைப்புகள் சார்ந்தவர்கள், போராட்டக்காரர்களில் முஸ்லீம்களும் இருந்தார்கள்; நிறைய பௌத்த அமைப்புகளும் சீக்கிய அமைப்புகளும் முக்கியமாக ஆரியஸமாஜ் அமைப்பும் பங்கு பெற்றன; பல மதிக்கத்தக்க மதத்தலைவர்கள் – துவாரகை, பூரி சங்கராச்சாரியார்கள் உட்பட + சில காந்தியர்களும்) திரண்டனர்.

7. நாடு முழுவதிலிருந்தும் கோபக்கார கும்பல் சேர்ந்தும், தில்லி அரச்சு+காவல்துறை அதனைப் பொருட்படுத்தாததும் இந்திராகாந்தி அரசின் ‘கும்பல் கட்டுப்பாடு’ முஸ்தீபுகள் குறித்த மெத்தனத்தினாலும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தன.

8. குறைந்த பட்சம் பத்தாயிரம் பேராவது நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் கோபக் காரர்கள், ஆனால் கொலைகாரர்கள் அல்லர்.

(கேரவன் பத்திரிகை பொய் சொல்வது போல – இவர்களையும் நாடாளுமன்றத்தை ஒழித்து அபரிமிதமாகக் கொலைகளைச் செய்ய முயன்ற ஜிஹாதி வெறியர்களுடன் (லஷ்கரீ தய்யிபா, ஜைய்ஷே மொஹெம்மத் – 2001 தாக்குதல்கள் ) இதனைப் பொருத்திப் பார்ப்பது என்பது கடைந்தெடுத்த ஊடகப்பேடித்தனம் அல்லது திராவிடத்தனம் – — வழி நெடுகப் பொய்கள், உளறாறுகள், அதிகபட்சம் அரைகுறைப் புரிதல்கள்…)

9. நாடாளுமன்றத்துக்குள் புக முடியாத கும்பலின் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசி, பிரம்படி கொடுத்துப் பின்னர் – காவல்துறையானது சுடவும் சுட்டது. அரசுக் கணிப்புகளின்படி 8பேர்தான் ஆனால் அரசுசாரா/பங்கேற்ற அமைப்புகளின்படி குறைந்த பட்சம் 350 பேர் சுடப்பட்டு இறந்தனர். (ஆனால் இதில் பங்குபெற்ற எனக்கு அறிமுகமுள்ள பெரியவர் ஒருவர் (காந்தியர் – இவர் மூலமாகத்தான் நான் இந்த நிகழ்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டேன்; பழைய காங்கிரெஸ்காரர், காமராஜ் பக்தர்) சொன்னார் – குறைந்த பட்சம் இரண்டாயிரம் பேராவது சுடப்பட்டு இறந்திருப்பார்கள் என்று – ஏனெனில் பெருமளவில் பொதுமக்கள் இதில் தன்னெழுச்சியுடன் பங்குபெற்றார்கள் என்று – மேலும் இச்சடலங்கள் ஊரடங்கு உத்தரவின்போது கமுக்கமாக அகற்றப்பட்டு எரிக்கப்பட்டன என்றும்; எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் இம்மாதிரி நிகழ்வுகளெல்லாம் தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்படும்; ஏனெனில் – இப்படிப்பட்ட பொதுமக்கள் போராட்டங்களைப் பற்றி நம் வரலாற்றுப் புத்தகங்களோ அறிவுஜீவிகளோ மனிதவுரிமைக் காரர்களோ – கமுக்கமாக ஒன்றுமே பேசுவதில்லையே! என்ன அறவுணரச்சியோ என்ன வரலாற்றுப் புரிதல்களோ, சலிப்புத்தான் வருகுதய்யா! போங்காட்டமுதல்வாதம் மனிதவுரிமை செய்யும்போது பிணம் தின்னும் ஊடகங்கள், வேறேன்ன சொல்ல!)

10. இப்படிச் சுடப்பட்டபின் கும்பல் கலையும்போது -. பல கடைகள் கொளுத்தப்பட்டன, சேதம் வன்முறை இன்னபிற; ஒரிரு காங்கிரெஸ் பெருந்தலைகள் வீடுகள் தாக்கப்பட்டன. இவையெல்லாம் நடந்திருக்கவேண்டாம்தான் – ஆனால் ஒரு கொலையைக்கூட இந்தக் கூட்டமைப்பினர் செய்யவில்லை; ஆனால் கொலை செய்யப்பட்டார்கள். (என்றாலும் இதற்றின் மொத்த பாதிப்பின் மதிப்பு தமிழ் நாட்டில் ஆம்பூரில் அண்மையில் நிகழ்ந்த உதிரி இஸ்லாமிய அட்டூழியங்களினால் ஏற்பட்ட நஷ்டத்தைவிட, சமூக நலன் ஒட்டுமொத்தப் பாதிப்பைவிடக் குறைவே — ஆம்பூர் அட்டூழியங்கள், தமிழகத்தில் இஸ்லாமிக்ஸ்டேட் பொறுக்கிகளுக்கு ஆதரவு, என் தம்பி – நடைமுறை தமிழக இஸ்லாம் (2/3)  15/07/2015)

11. ஒரே நாளில் நிலைமை கட்டுக்கடங்கிவிட்டது. அச்சமயம் உள்துறை அமைச்சராகக இருந்த குல்ஸாரிலால் நந்தா இந்த நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்யவைக்கப்பட்டுப் பின்னர் யெஷ்வந்த்ராவ் சவாண் அப்பதவியை வகித்தார்.

12. காவல்துறையினர், அரசாங்கம் – இப்போராட்டத்தை அணுகியதற்கும் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானவர்களுக்கு நியாயம் கேட்டும், பசுவதைச் சட்டத்திற்கும் போராட ஆரம்பித்த ஹிந்து சாமியார்களை (இவர்களில் இருவர் கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் உண்ணாவிரதமிருந்து மரணமடையும் தருவாயில் இருந்தநர்) – சவாண் அவர்கள் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து தங்கள் விரதத்தை வாபஸ் பெறவைத்தனர் என்பது என் நினைவு.

13. இந்தப் போராட்டத்தைச் சிரமேற்றி நடத்தியது ஆர்எஸ்எஸ் அல்ல; ஆனால் ஸ்வயம் சேவகர்கள் பங்கு பெற்றனர்.

13. நிர்வாண ஹிந்து சாமியார்கள் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. (விடுதலை வீரமணிக்கு ஒரினச் சேர்க்கையில் ஆர்வம் வந்து இப்படிப் புரளிகளைக் கிளப்பி விடுகிறாரோ? அப்படியானால் நிம்மதியாக தம் வீட்டிலேயே இவற்றை அரங்கேற்றிக் கொள்ளலாமே! எனிப்படிக் கற்பனையாக ஒரு சித்திரத்தை விரித்து சுயமைதுனம் செய்துகொள்ளவேண்டும்?)

14. யாரும் காமராஜரைக் குறிவைத்துக் கொலை செய்ய முயற்சிக்கவில்லை. (ஆனால் காமராஜரைக் கண்டமேனிக்கும், நாக்கில் நரம்பில்லாமல் திட்டியது வீரமணியின் நண்பர் கருணாநிதி – அண்டங்காக்கா, எருமைத் தோலன், ரஷ்யாவுக்குப் போன எருமை, தீவட்டிக் கொள்ளைக்காரன், கோமாளிக் கோமகன்,   ‘கருவாட்டுக்காரி சிவகாமியின் சீமந்த புத்திரன் காமராஜன்,’  கட்டைபீடிக்கார காமராஜன், கரிக்கட்டை, முதுகுத் தோலை உரித்தால் டமாரம் செய்யலாம், அறிவிலி,  படிக்காத பன்னாடை, நனச்ச பனை, எரிஞ்ச பனை, மொட்டைப் பனை, மரமேறி சாணான், கிராமத்து நாட்டான், பனையேறி, காண்டாமிருகம், ஆண்மையற்றவன், ஒம்போது, அலி, பல கோடிரூபா ஸ்விஸ் பேங்குல, ஹைதராபாத்தில மாளிகை … … – இந்தப் பொறுக்கித்தன வெளிப்பாட்டைக் கண்டிக்கத் துப்பில்லை நம் வீரமணிக்கு!)

15. தில்லியில் காமராஜர் வீடு – இன்னொரு காங்கிரஸ் பெருந்தகை வீட்டின் (கொத்த ரகுராமைய்யா என நினைவு, தவறாக இருந்தால் திருத்திக்கொள்கிறேன்) அருகில் இருந்ததால் – குண்டடி பட்டுத் திரும்பிக் கொண்டிருந்த போராட்டக் காரர்களின் பாதையில் இருந்ததால் அதுவும் தாக்கப்பட்டது; சிலர் சுவரேறிக் குதித்து வீட்டிற்குத் தீவைக்க முயன்றனர் – ஆனால் காவல் துறையினரால் விரட்டி அடிக்கப் பட்டனர். அவ்வளவுதான்.

16. அவ்வளவுதான் இந்தக் கதை.

17. நம் தேசத்தின் சட்டத்தின்படி, யார் தவறு செய்தாலும் (நான் உட்பட) அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

18. ஆனால், பொதுவாகவே – சொகுசாகப் பொய் சொல்வது, மனதாறப் புளுகுவது வகையறாக்களுக்குச் சட்டப்படி ஒரு தண்டனையுமில்லை. ஆகவே எவர் வேண்டுமானாலும், உதிரி திராவிடக் காரர்கள் + வெட்டிப் போராளிகள் உட்பட, ஆனந்தமாகப் புளுகலாம். இருந்தாலும் நான் மனதறிந்து புளுகுவதாக இல்லை. நன்றி.

…ஹ்ம்ம்ம்… ஆனாலும், எப்படியெல்லாம் புருடா விடுகிறார்கள் இந்த விடுதலைக் காரர்களும் கேரவான் பேடிகளும்…

ஆச்சரியமாகவே இருக்கிறது எனக்கு.  :-(

பின்குறிப்பு: இந்த கேரவன் கட்டுரையை எழுதிய இஷான் மார்வெல் எனும் அரைவேக்காட்டு வெறுப்பாளரின் கருத்துகளை மேலும் படித்து இன்புறவும்.

7 Responses to “விடுதலை வீரமணி அவர்களின் தறுதலைப் பொய்கள் (+கேரவன் பத்திரிகையின் ஊடகப்பேடித்தனம்)”


  1. ஒங்க மாதிரி அரை டவுசர்களுக்கு கோபம் வந்து வீரமணிக்கு எதிர்வினையாற்றும் அளவுக்கு இருக்கிறதென்றால் வீரமணி வெற்றி பெற்ற ஆளு தான். அவர் எப்படிப் பட்டவராக இருந்தாலும்.!


    • உண்மைதான். உங்கள் வாயால் ‘அரை டவுசர்’ எனப் பெயர் வாங்கும் பேறுபெற்ற என்னைக் குறித்து எனக்கே பெருமையாக இருக்கிறதென்றால், என்னால் புகழப்படும் வீரமணி அவர்களுக்கு எவ்வளவு பெருமிதம் இருக்கவேண்டும்?

      பின்குறிப்பு: குனிந்து பார்த்துக்கொண்டேன். ஒரு கைலியைத்தான் கட்டியிருக்கிறேன். ஆனாலும் உங்களுக்கு ஞான திருஷ்டி அதிகம்தான். நீங்களும் குனிந்து பார்த்துக்கொள்ளவும். வெற்றிடம்போல ஏதாவது இருக்கலாம். நான் கியாரண்டி கொடுக்கமுடியாது. மன்னிக்கவும்.

  2. Sridhar Tiruchendurai Says:

    வெற்றிடமாக இருக்காது. கழகக் கண்மணிகள் மூளை அங்கு தான் இருக்கும்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...