விடுதலை வீரமணியின் தொடரும் புளுகுகள் – ‘பெரியார்’ ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருதா? அல்லது விருதாவா??

May 2, 2019

இன்று ஒரு அனுகூல சத்ரு நண்பர் மூலமாக இந்தத் திராவிட டகீல் புளுகைப் பற்றி இன்று அறிந்துகொண்டேன். (கொஞ்சம் பொறுமையாகப் படிக்கவும்!)

அவர் ஒரு ஃபேஸ்புக் சுட்டியை அனுப்பியிருந்தார். ஜகன்னாத் ஸ்ரீனிவாசன் எனும் அன்பர் ஒருவர் இந்தப் பெரியாரிய யுனெஸ்கோ பொய்மை பற்றி எழுதியதை வைத்து, ஏகத்துக்கும் பொங்கி, இந்த திராவிடலை அரைகுறையார் வீரமணியார் ஒரு அறிக்கை வெளியிட்டதைப் பற்றித் தான் அது.
-0-0-0-0-

நிரந்திர விடலை வீரமணி அவர்களின் அறிக்கை:

அதற்கான, ஜகன்னாத் அவர்களின் எதிர்வினை.

-0-0-0-0-

சரிதான். பிரச்சினை என்னவென்றால் நான் இந்த ஃபில் ஸுக்கர்மேன் புத்தகங்கள் சிலவற்றைப் படித்திருக்கிறேன்; வறட்டு நாஸ்திகவாதத்தைப் பேசும் அரைகுறைப் புத்தகங்களை எழுதியிருப்பவர் இந்த ஆசாமி – ஆராய்ச்சி என்பதின் கிட்டவே போகாமல், காற்றுவாக்கில் வந்ததை படிப்பறிவோ பின்புலமோ இல்லாமல் அட்ச்சிவுடுபவர்; வீரமணியாருக்குப் பொருத்தமான ஜோடிதான்!  (இன்னொரு அக்கப்போருக்காக இந்த ஆள் எழுதிய எழவுகளை ஒரு காலத்தில் படித்திருக்கிறேன்; வாழ்க்கையை எப்படியெல்லாம் வீணடிக்கிறேன்! :-( )

ஆகவே, ஜகன்னாத் அவர்களின் காத்திரமான எதிர்வினை  /கருத்துகளுக்கு அப்பாற்பட்டு:

1. ஆச்சரியத்துக்குரிய வகையில், பெரியாருக்கு ஒரு விருதும் சான்றிதழும் யுனெஸ்கோவினால் கொடுக்கப் படாததால், அதனைப் பற்றி ஒரு காத்திரமான தரவுபூர்வமான விவரமும் இல்லை. இதனை என்னால் ஆணித்தரமாகச் சொல்லமுடியும்.

ஆகவே கொடுக்கப்படவில்லை என்பதைப் பற்றியும் ஒரு மசுத்துக்கும் விவரம் இல்லை.

ஆனால் திராவிட லாஜிக் என்பது திராபை லாஜிக். இது எப்படி இருக்கிறதென்றால்…

எனக்கு நொபெல் பரிசு (சகல துறைகளிலும், பலவருடங்களுக்குத் தொடர்ச்சியாகக்) கொடுக்கப்படவில்லை என்கிற விவரம் இணையத்தில், பொதுஅறிவுப் புலத்தில் இருக்காது.

ஏனெனில் நான் வாங்கவில்லை – ஆனால் மேற்படி எழுதியிருக்கிறேன்!  ஆகவே, திருட்டுத் திராவிட லாஜிக் எழவின் படி – நான் மெய்யாலுமே அந்தப் பரிசில்களை ‘வாங்கி’யிருக்கிறேன்.

எப்படி இருக்கிறது கதை!

2. வீரமணி பகர்கிறார்: “க்ஸ்போர்டு பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள நூல் Atheism and Secularity என்பதாகும்.”

 

இல்லை. அதனை வெளியிட்டது க்ரீன்வுட் பதிப்பகம். ஏபிஸி-க்ளியோ குழுமத்தைச் சார்ந்தது.

 

இதற்கும் ‘ஆக்ஸ்போர்டு ‘ பல்கலைக்கழக எழவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

(திராவிட உதிரிகளுக்கு எதற்கெடுத்தாலும் அந்த கேம்ப்ரிட்ஜும் யேலும் ஆக்ஸ்போர்டும்தான்! அவைகள் என்னபாவம் செய்தனவோ!

ஆம், அண்ணாதான் உலகிலேயே முதல்முறையாக ‘பிகாஸ்’ (because) எனும் வார்த்தையை மூன்றுமுறை ஒர்ரே வாக்கியத்தில் உபயோகப்படுத்தினார். அதைக்கேட்ட வெள்ளைக்காரக் கூவான் தன் மூக்கில் உடனடியாக விரலை வைத்துக்கொண்டானன்றோ?)

2. வீரமணி பகபகர்கிறார்: “Phic Zucker Man (தொகுதி 1 ) என்பவரால் எழுதப்பட்டதாகும்

இல்லை. அவர் எழுதவில்லை. அப்புத்தகத்தைத் தொகுத்தது இந்த ஃபில். அதுவும் அவர் ‘ஃபிக்‘ அல்லர். (ஒரு பெயரைச் சரியாக எழுதத்தெரியவில்லை; புத்தகத்தையும் படிக்கவில்லை – இந்த தண்டகருமாந்திரங்களுடனெல்லாம் பொருத வேண்டிய நிலை எனக்கு வரவேண்டுமா?)

3. வீரமணி: ” (தொகுதி 1 ) ”  ” அந்த நூலின் 142 ஆம் பக்கம் இவ்வாறு கூறுகிறது.

இல்லை; அது தொகுதி 2ல் இருக்கிறது.

அதுவும் 143ஆம் பக்கத்தில், 142ஆம் பக்கத்தில் அல்ல!

அடிப்படை விஷயங்களைக் கூடச் சரிபார்க்கத்தெரியாத அறிவிலிகள்!

4. அது இன்னையா நரிஸெட்டி எனும் தெலுகு பகுத்தறிவாளரால் எழுதப்பட்டது.

 

இவரும் வீரமணி வகை பகுத்தறிவாள நாஸ்திகர்தாம். இன்னுமொரு மதச்சார்பின்மைத் திலகம்!

ஹிந்து நம்பிக்கைகளை தரவுகளே இல்லாமல் விளாசும் அதே சமயத்தில், மிகவும் கவனமான பகுத்தறிவுடன் இஸ்லாம், க்றிஸ்தவம், பௌத்தம் பக்கமே போகமாட்டார்! (ஒரு விதமான பயம் கலந்த நடுக்கம்தான் காரணமாக இருக்கவேண்டும்; மேலும் கூலிக்கு மாரடிக்கும் வாழ்வில், வீரமணிபோல அவருக்கும் ‘சுதந்திரம்’ இல்லை; வெறும் வெறுப்பியத் தந்திரம் மட்டும்தான் இருக்கிறது. ஆகவே இவரை குள்ளநரி ஸெட்டி எனவும் கருதலாம்!

சுட்டுப்போட்டாலும் தமிழ்வராத, தமிழச் சூழலை அறியாத ஆசாமியாதலால், விலாவாரியாக திராவிடர் கழகம் பெரியார் யுனெஸ்கோ என்று கலந்துகட்டி அட்ச்சிவுட்டிருக்கிறார். (ஊக்க போனஸாக – இவர் எழுதிய பலவிவரங்கள் புளுகுகளன்றி வேறொரு ஆகச்சிறந்த சுக்குமில்லை – ஆனால் ரிச்சர்ட் டாகின்ஸ் அடிவருடியாகவும் இருப்பதால் கொஞ்சம் தேவலாம்!)

5. சரி. இப்படி இவர் யுனெஸ்கோ கினெஸ்கோ என அட்ச்சிவுடுவதற்கு என்ன ஆதாரம் என்று பார்த்தால்..

 

அடடே – நம்மூர் ‘ரேஷனலிஸ்ட்’ பத்திரிகைகள்தாம்! வரிசையில் நின்று ரேஷன் வாங்கி, படையல் வைத்துவிட்டாரே பார்க்கலாம்! சரியான, சோம்பேறிப் பகுத்தறிவாளர்!

‘த மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ எனும் குப்பை, நம் வீரமணியின் பெரியார் திராவிடர்கழக’  மடம் பதிப்பிப்பது! http://www.modernrationalist.com/ 

இன்னாங்கடா?

நீங்களே ரூம்புபோட்டு ரோசிச்சி கண்டுபிடித்துப் புளுகியதை,  தேவைமெனெக்கெட்டு ஒரு கூமுட்டை மேற்கோள் காட்டி எழுதியதை, நீங்களே மறுபடியும் சுட்டிக்காட்டிப் பெருமைப் பட்டுக்கொள்வீர்களா?

அதுவும் வரிக்கு வரி புளுகு. உங்களுக்கெல்லாம் திராவிட இளைஞக் குஞ்சாமணிகளின் ஏகோபித்த ஆதரவு ஒன்றுதான் கேடு!

திராவிடப் பேடித்தனத்துக்கும் புளுகுணி மாங்கொட்டைத் தனத்துக்கும் இது இன்னுமொரு சான்றுதான்!

நன்றி!

இதுதாண்டா வீரமணி! இதுதாண்டா பஹூத் அறிவு!

 
 

4 Responses to “விடுதலை வீரமணியின் தொடரும் புளுகுகள் – ‘பெரியார்’ ஈவெராவுக்கு யுனெஸ்கோ விருதா? அல்லது விருதாவா??”

  1. Sridhar Tiruchendurai Says:

    ஜெகன்னாதனை ஜெயக்குமார் என்று குறிப்பிட்டு உள்ளது.


    • நன்றி. மாற்றிவிட்டேன். அந்த அனுகூலசத்ருவும் தவற்றைச் சுட்டியிருக்கிறார். உலகநாயகனை வெற்றிச்செல்வனாக உருமாற்றியதற்கும் வீரமணிதான் காரணம். நன்றி! ;-)


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...