ராம்நாத் கோவிந்த், நம் எதிர்கால ஜனாதிபதி – “ஏதாவது ‘தலித்’களுக்கு உருப்படியாகச் செய்திருக்கிறாரா இவர்?” + பிற உளறல்கள்

July 7, 2017

ராம்நாத் கோவிந்த், நம் உதவாக்கரை தொழில்முறை அறிவுஜீவிகள், உதிரி அரசியல்வாதிகள் – பல குறிப்புகள் — தொடர்கின்றன… (இவ்வரிசையின் முதல் பகுதி. இரண்டாம் பகுதி; இவற்றை வாசித்துவிட்டு வந்து கீழே படித்தால் ஓரளவு புரியலாம். ஆனால், உங்களுக்கு மேம்போக்கான சொதப்பலுளறல் கருத்துகள்தாம் வேண்டுமென்றால் நீங்கள் தாராளமாக விடுதலைவீரமணிகளிடமும் திருமாவளவன்களிடமும் மண்வெட்டி மம்பட்டிய இசுடாலிர்களிடமும் சரணடையலாம். நன்றி!)

…ஆனால் அம்மணிகளே அம்மணர்களே! கவலை வேண்டேல். மிகக் கண்டிப்பாக, இதுதான் கடைசிப் பாகம், சரியா? (ஆனால் 1600+ வார்த்தைகள்! உங்களுக்கு இது தேவையா? ஆலோசிக்கவும்!)

-0-0-0-0-0-
ஏதாவது ‘தலித்’களுக்கு உருப்படியாகச் செய்திருக்கிறாரா இவர்?

அய்யன்மீர் – இவர் ‘தலித்’களுக்கு மட்டுமல்ல, பிறருக்கும் முடிந்ததை, வேண்டிய அளவுக்கு மேலேயே செய்திருக்கிறார்.

தன் மாணவப் பருவத்தில் இருந்து, தொடர்ந்து உரிமைகளுக்கு மட்டுமே வெட்டித்தனமாகப் போராடாமல் – கடமைகளுக்காகவும் போராடியிருக்கிறார் இந்த கோவிந்த்.

பட்டியல் இனத்தவரின் உரிமைகள் (பணியில் இடஒதுக்கீடு இன்னபிற) பாதிக்கும்படிக்கு(!) மத்திய ஆட்சி (திமுகவும் இதில் ஒரு அங்கம்)1997 வாக்கில் எடுத்த நடவடிக்கைகள் சில – பின்னர் வாஜ்பெயி காலத்தில் மூன்று அரசுச்சட்டத் திருத்தங்கள் மூலம் சரிசெய்யப்பட்டதற்கு கோவிந்த் அவர்களே முக்கிய காரணம்; இது ஒன்றே போதும் வெட்டிப்பேச்சு-வீரவசன ‘தலித்’ தலைவர்களைவிட கோவிந்த் அவர்கள், ‘தலித்’களுக்கு நிறையவே செய்திருக்கிறார் என்பதற்கு! (ஆனால் – உண்மையைச் சொல்லவேண்டும்: இந்தர்குமார் குஜ்ரால் அரசு 1997ல் எடுத்த நடவடிக்கைகள் ஒன்றும் அவ்வளவு மோசமானவையல்ல எனத்தான் நான் இன்னமும் நினைக்கிறேன்! ஆனால்…)

அதே சமயம் – வெட்டித்தனமான இடஒதுக்கீட்டுச் சித்தாந்தங்களுக்கும் எதிராகப் போராடியிருக்கிறார் இவர்.

இவற்றைத் தவிர, கோவிந்த் அவர்கள் பலப்பல வருடங்கள் – இலவசமாக சட்ட ஆலோசனைகளை நலிந்த பிரிவினருக்கும் பெண்களுக்கும் வழங்கியிருக்கிறார். ‘தலித்’களுக்குள்ளே க்ஷீணித்த நிலையில் இருந்த தம் கோலி ஜாதியினருக்கு ஒரு சமாஜம் அமைத்து – அவர்களுக்கு வெறியை ஊட்டுவதற்கு மாறாக, படிப்பறிவுக்காகப் பாடுபட்டிருக்கிறார் + தனக்குக் கொடுக்கப்பட்ட (எம்பி தொகுதி மேம்பாட்டு) நிதி மூலம் பள்ளிக்கூடக் கட்டிடங்கள் கட்ட ஏதுவாக இருந்திருக்கிறார்.

ஆரவாரமில்லாமல் பல உயர்மட்டக் குழுக்களில் (பெரும்பாலும் – இவை கல்வி சார்ந்தவை; இப்படித்தான் இவரைப் பற்றிச் சுமார் பத்து வருடங்களுக்கும் முன் அறிந்துகொண்டேன்) பணியாற்றியிருக்கிறார்; ஆனால் ஒரு தடவையும் அதிகார துஷ்பிரயோகம் செய்யவில்லை.

…பிரச்சினை என்னவென்றால் – கண்ட கழுதைகள், திக வீரமணி போன்றவர்கள், இசுடாலிர் வகையறாக்கள்-  இப்படி விட்டேற்றியாக ‘இவர் என்ன பிடுங்கியிருக்கிறார்’ எனப் பேசினால் பரவாயில்லை – அது அவர்கள் ரத்தத்தில் ஊறிய திராவிடத்தனம், உதிரிமனப்பான்மை என விட்டுவிடலாம்…

ஆனால் இந்தத் திருமாவளவன்? மிகவும் வெட்கக் கேடாக இருக்கிறது இவர் இப்படியெல்லாம் உளறல் கேள்விகளைக் கேட்பது. ஒரு ஹோம்வர்க் எழவையும் செய்யாமல் பொத்தாம்பொதுவாக ஏதோ தான் மட்டுமே ‘தலித்’களுக்காக உழைப்பதாகவும் கோவிந்த் அவர்கள் அப்படியல்லர்  (ஏனெனில் அவர் ஆர்எஸ்எஸ் ஆகவே ஒவ்வாது) என மறைமுகமாகச் சொல்லிக்கொண்டும்… என்ன எழவு முதிர்ச்சியில்லாத அற்ப அணுகுமுறை!

ஆனால் இதனை நீங்கள் – அண்ணன் திருமாவளவன் தம் கட்சிச்சாதியினரில் சிலபலருக்கு வேண்டிய வருமானம் வர ‘ஆவன’ செய்துவருவதையும் (அவ்வப்போது விடுதலைச் சிறுத்தைக் கட்சி ஆசாமிகள் நெடுஞ்சாலைகளில் பங்காளிச் சண்டைகளில் உதைக்கப்படுவதைக் கேள்விப்பட்டிருப்பீர்களே!), அதன் சில இளைஞர்கள் உதிரிகளாக உருமாற உழைப்பதையும் (அவ்வப்போது இக்கட்சியினர் தங்கள் அடாவடிச் செயல்களால், கொலை செய்யப்பட்டதையெல்லாம் கேள்விப் பட்டிருப்பீர்களே!), மோதல் ரீதியாக மட்டுமே ‘தலித்’களின் உரையாடல்களை நடத்துவதையும் (திருமாவளவனாரின் அமோகமான மேடைப் பேச்சுகளில் படு ஆபாசமான, சீண்டல்தனமான விடலைப் பேச்சுகளைக் கேட்டிருப்பீர்களே!) — கொஞ்சம் கருத்தில் கொண்டால், இவற்றில் பின்புலத்தில் பார்த்தால் – இவர்கள் எப்படி ‘தலித்’ முன்னேற்றத்துக்கு உழைக்கிறார்கள் என்பது புரியும்…

என்னிடம் 9-10 வகுப்பு படித்த கட்டுமஸ்தான (அக்கால) மாணவன் ஒருவனை இந்த விசிக காரர்கள் பிடித்து அடியாளாக ஆக்கியேவிட்டார்கள்; இவனுக்கு ஒரு நாளைக்கு ரூ800/- கொடுக்கிறார்கள் என்றான் + மூன்றுவேளை ஓஸிச் சாப்பாடு. இவன் வேலை என்னவென்றால் அவன் ஒட்டிக்கொண்டிருக்கும் குறுந்தலைவன் வண்டியின் பின்னால் ஒரு இன்னொவா வண்டியில் பிற நான்கைந்து குண்டர்களுடன் போவது. குட்கா மென்றுகொண்டு, கண்ணில் மினுமினுப்புடன் ‘ஊர்க்காவல்’ அடியுதை, முறுக்குக் கம்பியைச் சுழற்றுதல் (நல்லவேளை வீச்சறிவாள் இல்லை!) வேலை. டேய், இப்பனாலும் ஏதோ பரவாயில்ல, பத்துவருஷத்துக்கு அப்பறம் என்னடா பண்ணுவ என்றால் ‘அண்ணன் பாத்துக்குவாரு!’

பையா, உங்களையெல்லாம் இப்படி ‘கவனிக்க’ வேண்டும் என்றால் உன் குறுந்தலைவன், உங்களுக்காக மட்டுமே ஒவ்வொரு நாளும் ரூ8000 சம்பாதிக்கவேண்டுமே – அவருடையது என்ன தொழில் என்றால் ‘பிஸினெஸ்!’ வீட்டில அம்மாஅப்பா என்னடா சொல்கிறார்கள் என்றால் ‘தண்ணி தெளிச்சு வுட்டுட்டாங்க, அவ்ளோதான்!’  எனக்கு, ஒர்ரே கோபம். கையலாகாத்தனம். என்ன செய்ய. மணியாக உருவாகியிருக்க வேண்டிய பையன் இப்படிக் கூறுகெட்டு அலைவதைப் பார்க்கச் சகிக்கவில்லை. என்ன செய்ய. :-(

…திமுக அஇஅதிமுக உதிரிக் கட்சிகளுக்கு என்றால் அதன்களுடைய இப்படிப்பட்ட திராவிடக் கொள்ளைப் பாரம்பரியம் அப்படி! ஆனால் விசிக போன்ற ‘விடுதலை’ சமாச்சாரக் கட்சிகள்? அசிங்கமாக அல்லவா இருக்கிறது!

இதெல்லாம் ஒரு கட்சி! இதுவா ‘தலித்’ இளைஞர்களுக்கு விமோசனம் கொடுக்கப் போகிறது?

இப்படி ‘தலித்’களுக்காக அல்லும் பகலும் உழைக்கும் திருமாவளவனார்கள், பலகோடிச் சொத்துகளில் புரண்டுகொண்டிருக்கும் விடுதலைவீரமணிகள்தாம் – ராம்நாத் கோவிந்த் அவர்கள் என்ன பெரிதாகக் கிழித்துவிட்டார், என்ன பெரிதாக ‘தலித்’களுக்குச் செய்துவிட்டார் எனக் கேட்கிறார்கள்.  என்ன கொடுமையப்பா இது.
ஆஹா! இவர் இன்னொரு பிரதிபா பாட்டில்!

அய்யா? அப்படியா என்ன? எவ்வளவு ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன – நம் கோவிந்த் அவர்கள் மீது, சொல்லுங்கள்?

பிரதிபா, அவருடைய பொதுவாழ்வில் என்ன சாதித்திருக்கிறார்? இதைப் பற்றி ஏதாவது தெரியுமா உங்கள் மரமண்டைக்கு?

எப்படி அய்யா, இப்படிக் கூசாமல், நாக்கில் நரம்பில்லாமல் வெகு சுளுவாகப் பொய் சொல்கிறீர்கள்?  கருத்தைக் கக்குகிறீர்கள்??

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்: 1) உங்களுக்கு உலக அறிவோ படிப்பறிவோ இல்லை. 2) நீங்கள் ஒரு மண்ணாங்கட்டி.

நன்றி.

ஜனாதிபதி பதவிக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா?

ஏன், ‘திருப்பி அடி’ திருமாவளவன் அவர்களோ மேதகு கனிமொழியோ அல்லது விடுதலை வீரமணியோ நம் ஜனாதிபதியாக வேண்டுமா என்ன? பதவியின் மாண்புக்கு ஏற்றபடி ஆட்கள் அங்கு உட்கார வைக்கப் படவேண்டாமா?

அல்லது நீதித் துறையையே அசிங்கப் படுத்திய ‘நீதிபதி’ கர்ணனை ஜனாதிபதி வேட்பாளராக ஆதரிக்கவேண்டுமா? இவரும் ‘தலித்’தானே?

பாஜக வேறு யாரை நிறுத்தியிருந்தாலும் அவர் ‘முஸ்லீம்’ அல்லர், ‘தலித்’ அல்லர் என ஒப்பாரியிடுவீர்கள்! மதவாதம், இனவாதம், ஜாதீயவாதம் என ஊளையிடுவீர்கள்! ஆனால் – பாஜக ஒரு ‘தலித்’தை நிறுத்தினால் வேறு ஆளே கிடைக்கவில்லையா எனப் ப்ளேட்டைத் திருப்பிப் போட்டுக் கும்மியடிப்பீர்கள்! சதித்திட்டம் கிதித்திட்டம் என உளறிக் கொட்டுவீர்கள்!

நல்லா நடத்துங்கடா வொங்க அரசியல் பிஸினெஸ்ஸ…
கேஆர் நாராயணனும் ‘தலித்’தான்! ஆனால் அவருடன் பொருத்திப் பார்த்தால் ராம்நாத் சாதித்திருப்பது என்ன?
(முதலில் யோசித்தேன், இந்த கேஆர் நாராயணப் பழங்குப்பைகளைக் கிளறவேண்டாமென்று; ஆனால் கருத்துதிர்ப்பாள உளறல்கள் அதிகமாகிக் கொண்டிருப்பதால் – இது; மன்னிக்கவேண்டாம்!)

கேஆர் ‘தலித்’ஆக இருந்திருக்கலாம். பலவகைகளில் ஓரளவுக்கு நல்லபடியாகவே இருந்திருக்கலாம். ஆனாலும் அவரைத் தேவை மெனக்கெட்டுப் போற்றும்போது சில விஷயங்களைக் கருத்தில் கொள்ளவேண்டும். (அதேபோல – ராம்நாத் கோவிந்த் அவர்களைத் தேவையேயில்லாமல், முகாந்திரமும் இல்லாமல் தூற்றும்போதும் சில விஷயங்களைக் கருத்தில் கொள்ளவேண்டும்)

கேஆர் நாராயணன் அவர்கள் புத்திசாலி என்பதில் ஐயமில்லை. (ராம்நாத் அவர்களும் அப்படியே)

கேஆர் நாராயணன் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். ஆங்கில வழிக் கல்வி கிடைக்கப் பெற்றவர். டாடா குழுமத்தின் மூலமாக நிதிஉதவி பெற்று (ஒரு நண்பர் பரிந்துரையின்மேல் தான்) வெளி நாட்டில் படிக்கும் வாய்ப்புகளைப் பெற்றவர். (ராம்நாத் கோவிந்த் அவர்கள் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். ஹிந்திவழிக் கல்வி. படித்ததெல்லாம் இந்தியாவில். ஆனாலும் இவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்குரைஞராகப் பணிபுரியுமளவுக்கு உயர்ந்தார்)

கேஆர் நாராயணன் அவர்களுக்கு –  அவர் பேராசிரியர் (ஹரால்ட் லஸ்கி என நினைவு, இத்தகவல் தவறாக இருந்தால் திருத்திக் கொள்கிறேன்) நேருவுக்கு வெகுவாகப் பரிந்துரைத்ததால் – நேரடியாக ‘இந்தியன் ஃபாரின் ஸர்வீஸ்’ அமைப்பில் சேர்ந்து வெளிநாடு வெளிநாடாகப் போக முடிந்தது. இத்தனைக்கும் 1948ல் இருந்து ஐஎஃப்எஸ்-க்குள் நுழைய வேண்டுமென்றால் ஒரு பொதுப் பரீட்சை (இப்போது இருக்கும் ஸிவில் ஸர்வீஸஸ் பரீட்சைகள் போல்) எழுதித் தேர்வு செய்யப்படவேண்டும். ஆனால் 1949ஆம் ஆண்டு தம் வெள்ளைக்கார நண்பரின் ‘பரிந்துரை’ப்படி நேருவால் நேரடியாக ஐஎஃப்எஸ்-க்குள் சேர்த்துக் கொள்ளப்பட்ட கேஆர் அவர்கள் – ஒரு சுக்கு நுழைவுப் பரீட்சையையும் எழுதவில்லை. (ஆனால், ராம் நாத் அவர்கள் இப்படிப்பட்ட ஒரு குறுக்குவழி விஷயத்தைக் கூடச் செய்ததில்லை! என்ன அநியாயம் பாருங்கள்!)

தன் பெண் சித்ரா நாராயணன் அவர்கள், 1978ல் அதே ஐஎஃப்எஸ்-க்குள் நுழையும்போது கேஆர் நாராயணன், மிகமிக வசதியானவராகவே இருந்தார். கேஆர் குழந்தைகளின் படிப்பெல்லாம் வசதிவாய்ப்பு இருந்தவர்கள், பெரும்பணக்காரர்கள் அனுபவித்துக்கொண்டிருந்த பள்ளிகளில்தான். இருந்தாலும், சித்ரா அவர்கள் பட்டியல் இனத்தவரின் ஒதுக்கீடு மூலமாக மட்டுமே ஐஎஃப்எஸ்-க்குள் நுழைந்தார். இது, அரசியல் சட்டதிட்டங்கள்படி ஒரு பிரச்சினையுமில்லை. கேஆர் ஏமாற்றவில்லை. ஆனால் இவர் இப்படி நுழைந்ததற்குப் பதிலாக உண்மையாகவே ஏழையும் வசதிவாய்ப்புகளுமற்ற ‘தலித்’ ஒருவர் நுழைந்திருக்கலாம் எனப் படுகிறது.  கேஆர் செய்ததில் சட்டப்படி ஒரு பிரச்சினையுமில்லை என்றாலும், சரிதான் என்றாலும் – தார்மீக ரீதியில் இடிக்கிறது.  (ராம்நாத் அவர்கள் இப்படிச் சலுகைகளைப் பெறவுமில்லை; தம் குடும்பத்தினருக்கு இப்படி ‘ஆவன’ செய்யவுமில்லை)

இந்த சித்ரா அவர்களுக்கு மாய்ந்து மாய்ந்து ‘நல்ல’ இடங்களில் மட்டுமே தூதரகங்களில் வேலை கிடைப்பதற்கு ‘ஆவன’ செய்யப்பட்டது. பொதுவாக ஐஎஃப்எஸ் பணியில் ஐரோப்பா, வட அமெரிக்கா போன்றவைதான் உச்சாணிக் கிளைகள், ஆஃப்ரிகா, தென்னமெரிக்கா, கீழை நாடுகள் போன்றவை இரண்டாமிடம்தான்! ஆனால் அவ்ருடைய வேலைத்திறன்+தகுதியையும் மீறி, சித்ரா அவர்கள் பெரும்பாலும் உச்சாணிக் கிளைகளிலேயே இருந்தார். அதே சமயம் உண்மையாகவே திறனுடையவர்கள் – பிற ‘தலித்’ அதிகாரிகள் உட்பட – திறனுக்கேற்ற பொறுப்புகளை வகிப்பதை நசுக்கினார். இவை நடக்கும்போதெல்லாம் கேஆர் அப்பனார் 1) முதலில் நேரடியாகக் களத்தில் இறங்கினார் 2) பின்னர் ‘அந்தப் பக்கம்’ திரும்பிக்கொண்டு தனக்கு ஒன்றுமே தெரியாதது போல் நடந்துகொண்டார்.

இது மட்டுமல்ல. இன்னொரு கேவலத்தையும் செய்தார் இந்த அம்மணி. 2012ல் இவர் அப்போது பதவி வகித்த ஸ்விட்ஸர்லேண்டில் பணிமூப்பு பெற்றிருக்கவேண்டும்.  அரசுச் சலுகைகளை விட்டிருக்கவேண்டும். ஆனால் பணிமூப்பு ஆகிய ஒன்றரை வருடங்கள் பின்னரும் இவர் 1) தன் அலுவலகத்தைக் காலி செய்து தரவில்லை 2) அலுவலக வேலையையும் எப்படியும் செய்யவில்லை 3) ஒரு சாதாரணப் பேட்டை ரவுடிபோல, தான் வசிக்க இந்திய அரசு ஏற்பாடு செய்துகொடுத்திருந்த வீட்டையும் காலி செய்யவில்லை  4) தூதரகப் பணியைச் சரியாகச் செய்யக்கூடிய ஒருவரையும் உள்ளே வரவும் விடவில்லை – இத்தனைக்கும் நியாயமாக, பெர்ன் வந்த மூன்று வருடங்களில் 2011லேயே இவர் ஸ்விட்ஸர்லேண்டிலிருந்து பணிமாற்றம் ஆகியிருக்கவேண்டும் – ஆனால் அம்மணி அப்படி நகரவேமாட்டேன் என ஒரு உதிரித்தனமான பிடிவாதம் – அதனால்தான் 2012 வரை ‘அலுவலக ரீதியில்’ அங்கு அவரால் இருக்க முடிந்தது!  இதற்குப் பின் நடந்ததுதான் மேற்கண்ட அழிச்சாட்டியம். (இது எப்படி எனக்குத் தெரியும் என்றால் – அப்போது 2012-13 வாக்கில் இங்கிலாந்திலிருந்து பெர்ன் (ஸ்விட்ஸர்லேண்ட்) மாற்றலான ஒரு தூதரக அதிகாரியை எனக்குத் தெரியும். இவர்தான் அம்மணியில் இடத்தில் உட்கார்ந்திருக்கவேண்டும், அதாவது அம்மணி பணிமூப்பு பெற்றவுடன்! ஆனால் அம்மணி விட்டால்தானே! நகர்ந்தால் தானே! மாதக் கணக்கில் காத்திருந்து காத்திருந்து வெறுத்துப் போய்விட்டார் இவர்! இதைவிடக் கேவலமான ரவுடித்தனத்தை வேறு யாராவது செய்திருப்பார்களா என்பது சந்தேகமே!)

இப்போது ஒரு விஷயம்: கேஆர் நாராயணன் அவர்கள் 2005 வாக்கிலேயே இறந்துவிட்டார் என்பது உண்மையென்றாலும் – அவர் கண்டுகொள்ளாமல் கமுக்கமாகப் போட்டுக்கொடுத்த ராஜபாட்டையில் பயணம் செய்துதான், அம்மணி இவ்வளவு அழிச்சாட்டியம் செய்திருக்கிறார் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். (இன்னொரு விஷயம்: ராம்நாத் அவர்கள் எவ்வளவோ உயர்பதவிகளை வகித்திருந்தாலும் தன் பிள்ளைகளுக்குச் சலுகைகளைப் பெற்றுத் தந்ததில்லை –  அநியாயக் கேஆர் நாராயணச் சலுகைகளையே விடுங்கள்!)

இப்போது அம்மணி இதெல்லாம் செய்துகொண்டிருக்கிறாராம். நன்றி. எப்படியோ இந்தியாவை விட்டொழிந்து வேறெங்கோ குப்பை கொட்டிக் கொண்டிருந்தால் சரி, வேறென்ன சொல்ல!

…கேஆர் நாராயணன் அவர்கள் ஊடகப்பேடிகளின் கூடாரமான ‘த ஹிந்து’ தினசரிப் பத்திரிகையில் ஒரு காலத்தில் ‘வேலை’ செய்திருக்கிறார்.  இது ஒன்றே போதும் – அவர் ஊடகப்பேடிகளின் கண்மணியாவதற்கு! (பிரச்சினை என்னவென்றால் –  ராம் நாத் அப்படியல்லர்)

கேஆர் அவர்கள் பொதுமக்களுக்கு என்பதையே விடுங்கள் – ‘தலித்’ மக்கள் திரளுக்குக் கூட (எனக்குத் தெரிந்த, நான் அறிந்த அளவில்) ஒன்றும் காத்திரமாகச் செய்யவில்லை. யோசித்துப் பார்த்தால் அப்படிச் செய்தேயிருந்திருக்கவேண்டும் என்பதும் இல்லை. இன்னொருவருக்குத் தொந்திரவு கொடுக்காமல் தானுண்டு தன்வேலையுண்டு என இருப்பதும்கூடச் சரியான விஷயம்தானே!

ஆனால், அவர் (எனக்குத் தெரிந்து) பணம் பண்ணவில்லை என்பது சரியே என்பதைத் தவிர பிறருக்குச் சர்வ நிச்சயமாகத் தொந்திரவு கொடுத்திருக்கிறார் – அவர் எழுதிய(!) புத்தகங்களைப்(!!) பற்றிச் சொல்லவில்லை இங்கு, மன்னிக்கவும்!  (ஆனால் ராம்நாத் அவர்கள் அப்படியல்லர் – பணமும் பண்ணவில்லை; பிறருக்கு உபத்திரவமும் கொடுக்கவில்லை; மாறாக முடிந்தபோதெல்லாம் உதவியிருக்கிறார். பாவம். அதனால் தான் இவரை, கேஆர் அவர்களுடன் பொருத்திப் பார்க்கிறார்கள், நம் செல்லங்களான ஊடகப்பேடிகளும் காங்கிரஸ்காரர்களும்!)

என்ன சொல்லவருகிறேன் என்றால் – 1) கேஆர் அவர்கள், முடிந்தபோதெல்லாம் வசதிகளை வளைத்துப் போட்டுக்கொண்டார் இவற்றில் சில காரியங்கள் நேரடியாகவே அயோக்கியத்தனமானவைகூட 2) இதனாலேயே அவர் படுமோசமானவர் என்றாகி விடாது – நம்மில் பலரும் இப்படித்தான் 3) ஆனால் ராம்நாத் அவர்கள் அப்படியல்லர், மிக நேர்மையான ஆரவாரமற்ற ஆசாமி 4) இருந்தாலும் ராம்நாத் அவர்களைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருப்போம்; ஏனெனில் அவரிடம், ஒரு காலத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் அங்கம் வகித்த தீட்டு இருக்கிறது + அவருடைய ஆங்கிலம் கொஞ்சம் சரி செய்யப்படவேண்டும். நன்றி.

திருமாவளவன் சொல்கிறார் – கேஆர் நாராயணனையும் ராம்நாத் கோவிந்தையும் சமமாகப் பார்க்கமுடியாதாம்! உண்மைதானே! :-)

பாஜக சதி முயற்சியில் ஈடுபடுகிறதாம்! ஒர்ரே சிரிப்பாக இருக்கிறதப்பா இவருடைய பேச்சு! :-) பாஜகவுக்கு உள்நோக்கமாம்! ஆனால் உண்மையென்னவென்றால் எல்லாமே வெளிப்படையாகத்தானே அய்யா இருக்கிறது? (ஆனாலும், திருமாவளவன் அவர்களுக்கு படுஸீரியஸ்ஸான நகைச்சுவை உணர்ச்சி அதிகமாக இருப்பதால் – சுட்டியில் உள்ள விடியோவைப் பார்க்கும்போது உங்களுக்குச் சிரித்துச் சிரித்து விலாவலி வந்தால் நான் ஜவாப்தாரியல்லன்)

…திருமாவளவன் தொடர்கிறார் “கேஆர் நாராயணன், அம்பேத்கர் சிந்தனையை உள்வாங்கிய ஒருவர்!” ஹ்ம்ம்… இப்படியும் அம்பேட்கர் மேல் பழி சுமத்தலாமோ! :-)

ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு மதச்சார்பற்றவர்-சான்றிதழ் இல்லை. ஆகவே.

இந்த மதச்சார்பின்மை எழவு போல விலா நோகச் சிரிக்கவைக்கும் பொய்மை, வேறொன்றில்லை!

ஆமாண்டா! அவர் சர்வ நிச்சயமாகப் பேடியல்லர். போதுமா?

ராம்நாத் கோவிந்த் ‘தலித்’தான், ஆனால் ‘தலித்’ அல்லர்!

“அவர் தலித் என்பதனால் விடுதலைச் சிறுத்தைகள் மகிழ்ச்சி அடைவதற்கு ஏதுமில்லை!” என்கிறார் திருமாவளவன்.

அதாவது அவர் ‘தலித்’ ஆனால் ‘தலித்‘ அல்லர்! எனக்கு ஏற்படும் புல்லரிப்புக்கு அளவே இல்லை!

…ஆனால், ‘தலித் அரசியல்’ என்பது இக்காலங்களில் மிகச் சோகமான நிலையில் இருக்கும் ஒன்று. திக்குத் தெரியாத காடுகளும், மோதல்வாத முட்டுச் சந்துகளும், ஊடக உச்சாடனப் பப்பரப்பாக்களும் நிரம்பியது. இஸ்லாமியக் கொலைவாத அமைப்புகளாலும் க்றிஸ்தவ மதமாற்ற நிறுவனங்களாலும் விசிறி விடப் படுவது. அதன் தலைவர்களும் பெரும்பாலும், தலைமை தாங்குவதற்கு வேண்டிய கல்யாண குணங்களைக் கொண்டவர்கள் அல்லர். மாறாக, அடாவடி ஆட்டங்கள் + தடாலடிப் பேச்சுகள் மூலமாகவே காலட்சேபம் செய்துகொண்டிருப்பவர்கள்.

…ஊக்க போனஸாக, இந்த ஜந்துக்களுக்கு, ஒருவிதமான தொலை நோக்கும் இல்லை. எதைப் பேசினால் ஊடகப்பேடிகள் ஓடிவந்து ‘கவர்’ செய்வார்கள், எந்தப் பிரச்சினைத் தீயை எப்போது விசிறிக் குளிர் காயலாம், பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதைப் பேணுவதன் மூலம் அவற்றைத் தொடர்ந்து அறுவடை செய்வது எப்படி – என்றே பொழுது போய்க்கொண்டிருக்கிறது.

கல்வியாவது, வளர்ச்சியாவது, சுபிட்சமாவது, மேன்மையாவது, மசுராவது!  இவற்றுக்காக உழைத்தால் நாக்கை வழிக்கத்தான் முடியும், புறங்கையைக் கூட நக்க முடியாது. போங்கடா!

இந்த பாவப்பட்ட அரசியலிலும் ஏகப்பட்ட கந்தறகோளப் பிரிவினைகள் வேறு. சாமர்/ஜாதவ் ஜாதியைச் சார்ந்த மாயாவதிகள் வால்மீகிகளை நசுக்குவர். தமிழகத்து விடுதலைச் சிறுத்தைகள் தோட்டி/அருந்ததியர்களையும், ஒட்டர்களையும் நசுக்குவர். ஹ்ம்ம்ம்… அடுக்குவரிசையுணர்ச்சி என்பது மானுட அடிப்படை சுபாவங்களில் ஒன்றுதானே! இஸ்லாமில் இல்லாததா இந்த அழிச்சாட்டியம்? க்றிஸ்தவத்தில் இல்லையா என்ன?  ஆக, இங்கும் இருந்துவிட்டுப் போகட்டும். :-(

நிலைமை இப்படி இருக்கையிலே – தொல் திருமாவளவன் போன்ற முறுக்கியமீசைக்கார ஆக்ரோஷ ‘அத்து மீறு’  வகை ‘தலித்’ தலைவர்களுக்கு மத்தியில் — அதிகம் பேசாத, வெட்டிச் சச்சரவுகளில் ஈடுபடாத, செயலூக்கமும் நேர்மையும் உடைய — மழுங்கச் சிரைத்துக்கொண்ட மீசையற்ற கோவிந்துகள் பலகோடியாயிரம் மடங்கு மேல்தான்.

… ஏனெனில் பொருளாதார வளர்ச்சியும் சுபிட்சமும் வேண்டுமென்றால் பொதுவாழ்க்கையில் ரவுடித்தனம் அகலவேண்டும். மிதவாதமும், நல்லிணக்கமும், பொய்மையின்மையும் சர்வ வியாபிகளாக வேண்டும்.

உயர் பதவிகளில் அமர்பவர்களுக்கு அவற்றுக்கேற்ற அடிப்படைத் தலைமைத் தகுதிகள் இருக்கவேண்டும். அவர்கள் அவற்றின் மாண்பினைக் காப்பவர்களாக இருக்கவேண்டும். கண்ணியம் மிக்கவர்களாக இருக்கவேண்டும்; அனைத்து மக்கள் திரள்களையும் அரவணைத்துச் செல்லும் பக்குவம் நிறைந்தவர்களாக இருக்கவேண்டும். குறைகுடங்களாகவோ, உழைப்பை வெறுக்கும் சொகுசுக்காரர்களாகவோ, உதிரிகளாகவோ, ஊழல்வாதிகளாகவோ இருக்கக்கூடாது. அதனால்தான் மீராகுமார்.

ஆகவே, ராம்நாத் கோவிந்த்.

ஆமென்.

—-

3 Responses to “ராம்நாத் கோவிந்த், நம் எதிர்கால ஜனாதிபதி – “ஏதாவது ‘தலித்’களுக்கு உருப்படியாகச் செய்திருக்கிறாரா இவர்?” + பிற உளறல்கள்”


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...