அட்ச்சு வுடு தல வீரமணி ஸ்பெஷல்: மொட்டத்தலைக்கும், மசுத்துக்கும் பகுத்தறிவு முடிச்சுபோடுவது எப்படி?

August 6, 2015

மேற்கண்ட கட்டுரையின் நீதி:

டப்பா ஒரு ஆண்: ஆக, டப்பாவிலிருந்து சாப்பிடுபவர்களுக்கு வழுக்கை விழுந்தேயாகவேண்டும். (கவனிக்கவும்: பொதுவாக ஆண்களுக்குத் தான் வழுக்கை விழும்!)

டப்பி ஒரு பெண்: ஆக டப்பியிலிருந்து சாப்பிட்டால் ஒரு எழவும் ஆகாது. ஆகவே – 90 வயதிளம் ஆண்களும்கூட அமோகமாகத் தலைவாரிப் பின்னிப் பூச்சூடிக்கொள்ளலாம். (கவனிக்கவும்: பொதுவாக ஆண்களுக்குத் தான் வழுக்கை விழும்!)

திராவிட இயக்கக் கொள்கைகளில் தலையாயது – தலைமுடி உதிர்தல் குறித்த கரிசனம்தான், வாழ்க.

-0-0-0-0-0-0-0-

 

இருமனங்கள் சுயமரியாதையுடன் இணையும் விழா
அழைப்பிழவ்

டபாய்க்காமல் அனைவரும் வருக!

இனமான இளவல் தெருநரைச் செல்வன் டப்பா + தெருநிறைச்செல்வி டப்பி
சுயமரியாதைத் தாலியறுப்புத் திருமணம்!

தேதி: 1/4/2016
இடம்: பெரியார் திடல்
முகூர்த்தம்: எம கண்டம்

வரவேற்புரை: திராவிடத் திலகம் சவுரிராசனார்
வசவுரை: இனமானக் காவலர் நெடுமுடிக் கிள்ளியார்
வாழ்த்துரை: நெல்சன் மண்டேலமசாலாஇல்லாதார்
முடிவுரை: இயக்க இளவல் மண்டைமழித்தார்

விழாவுக்கு வருபவர்களுக்கு ஒருகிலோ உதிர்ந்தமுடி இலவசம்!
விழாமல்க்கு வருபவர்களுக்கு முடி டை அடித்துவிடப்படும் (இது மயிர்மை பதிப்பக ஆஃபர்!)
தாலியணிந்துகொண்டு வருபவர்களுக்கு தாலியறுப்பு செய்து விடப்படும்!
ஃபுல் தாலி மீல்ஸ் + பீஃப் பிரியாணி இலவசம்!!

இந்த அரிய வாய்ப்பைத் தவற விடாதீர்!
அலைகடலென ஆர்பரித்து வாரீர்!

மூளையில்லாத திராவிடர்களே, ஒன்று சேருங்கள்!
உங்களிடம் இழப்பதற்கு உங்கள் மசுர் தவிர வேறோன்றுமில்லை!!

சுபம்.

-0-0-0-0-0-0-

…இல்லையில்லை – மன்னிக்கவும், சும்மா திராவிடத்துக்கு அட்ச்சு வுட்டேன்… மேற்கண்டதை அப்படியே சீரியஸாக எடுத்துக்கொண்டுவிட்டீர்களா?  அந்தக் கட்டுரையில் மேற்கண்டதை விட அபத்தமான, பகுத்தறிவு சார்ந்த ஏகோபித்த உளறல்கள் பலப்பல இருக்கின்றன.

…யோசித்தால், பாவம் – விடுதலை வீரமணி அவர்கள் இதனை எழுதியிருக்கமாட்டார் – பகுத்தறிவுப் பாசறையில் பயிற்சிபெறும் வெறும் ஒரு சோட்டா எள்த்தாளன் அல்லது அக்மார்க் திராவிட அரைகுறை மொளிபெயர்ப்பாளன் தான் இந்த அற்புத வேலையைச் செய்திருப்பான். இது எனக்குத் தெரியாமலில்லை.

ஆனால் இந்த பத்திரிகையின் ஆசிறியர் என்ற பொறுப்பில் வீரமணி அவர்கள் உள்ளதால், எல்லா இகழும் அவருக்கே!

இப்படிப்பட்ட அரைவேக்காடு கூட இல்லாத கட்டுரை எழவுகளைப் பதிக்கும் ஒரு அமைப்பிற்கு/மனிதருக்கு பொறியியல்அறிவியல் பகுத்தறிவு என்று பேசுவதையே விடுங்கள் – ஒரு பெரிய பல்கலைக் கழகத்தை நடத்தி அதன் மாணவர்களைக் குட்டிச்சுவர்களாக்கும் உரிமை இருக்கிறதா?

இருக்கிறது! இதுதாண்டா திராவிட இயக்க சமதர்மம்!

…அதாவது அனைவரையும் (ஏன், ஒரேயொருவரைக்கூட!) மேன்மைப் படுத்த முடியாததால், அனைவரையும் படுசுலபமாகக் கீழே  அறியாமைச் சகதியில் தள்ளி உருட்டிப் புளகாங்கிதமடையவைப்பது!

என்ன சோகம்.

-0-0-0-0-0-0-

…பிரச்சினை என்னவென்றால் – திராவிடத் திலகங்களுக்கு அவர்களுக்கு பகுத்தறிவு ஞானஸ்நானம் முடிந்தவுடன் – அவர்களுடைய மூளை ஆழ்ந்த அவமான உணர்ச்சியால் தூக்கு போட்டுக்கொண்டு பரிதாபமாக நாக்கு தொங்கி ரத்தம் கக்கிச் செத்துப் போய்விடுகிறது. ஆகவே, மேற்படி திலகங்களுக்கு, மேல்மாடி அமோகமாகக் காலியாகி டுலெட் விளம்பரம் தொங்காதகுறை!  மண்டே நிரந்தர ஹாலிடே!

இதனால் பலவிதமான பக்கவிளைவுகள், அடிவிளைவுகள்… எடுத்துக்காட்டாக – அவர்களுடைய பாவப்பட்ட தலைமுடி மேல் நோக்கி வளராமல், கீழே, உள்நோக்கி மண்டையோட்டுக்குள் வளர ஆரம்பிக்கிறது. உள்ளே மூளை என்பது மருந்துக்குக்கூடக் கிடையாததால், அது ஆனந்தமாகப் பல்கிப் பெருகுகிறது.  இந்த அனுபூதி மருத்துவ நிலையின் பெயர் மண்டேலமசாலாஇல்லியேம்மா!

இதனைப் படிக்கும் போக்கத்த வாசகர்கள் – அய்யோ இவள் என்னவோ ஏதோ யாரோ எனத் துணுக்குற்று மனவுளைச்சல் அடையவேண்டாம். ஏனெனில் ஐயன்மீர் – இவள், நமக்கெல்லாம் நன்றாகவே முன்னறிமுகமாகியுள்ள பல்மனரிஈடிமா பிரச்சினையின் அத்தை மகள் தான்.

காலாகாலத்தில் இவர்கள் இருவரும் தாலியறுப்புத் திருமணம் என்று ஒன்றை சுயமரியாதையுடன் நடத்திக்கொள்வார்கள், கவலை வேண்டேல்! திராவிடத் தண்ணீர் தன் படுமட்டத்தை அடையும்.

-0-0-0-0-0-0-0-0-0-

கடைசியில் – நேரடியாக, விஷயத்துக்கு வருகிறேன். B-)

பிஸ்ஃபினொல் எ டைக்ளைய்ஸிடில் ஈதர் (Bisphenol A diglycidyl ether) எனும் சேர்மம் (compound) நாம் உபயோகிக்கும் ப்லாஸ்டிக் பொருட்களில் ஒரு கோந்து போன்ற பொருளாக (binder), அதிலுள்ள பல சேர்மங்களை ஒருங்கிணைக்க உபயோகிக்கப் படுகிறது – இம்மாதிரி கோந்துகள் பல இருந்தாலும்,  சிலபல தொழில் நுட்ப+பொருளாதார ரீதியான காரணங்களால் இந்த பிஸ்ஃபினொல் பரவலாக, பலப்பல பத்தாண்டுகளாக உபயோகப்படுத்தப் படுகிறது. நாம் உண்ணும் அரிசிச் சோற்றில், கஞ்சியானது சோற்றுப் பருக்கைகளை ஒன்றுக்கொன்று ஒட்டிக்கொள்ளச் செய்வது போன்றதுதான் இது.

ஆக, ஒவ்வொரு முறை நாம் இம்மாதிரி ப்லாஸ்டிக் பாத்திரங்களில் இருந்து நாம் உணவுண்ணும்போதும் – இந்த கோந்து கரைந்து நம் உணவிலும் கலக்குமோ என்ற கலக்கம் —  ஊடகப்பேடிகளாலும், அறிவற்ற ‘விடுதலை’ போன்ற அரைகுறைகளாலும், தன்னார்வக்குண்டு நிறுவன அயோக்கியர்களாலும் விசிறிவிடப்படுவது நாம் வெகு சுலபமாக அவதானிக்கக்கூடியதுதான்; மேலும்,  நாம் அறியாத, புரிந்துகொள்ளவே முடியாத — இந்த அறிவியல், வேதியியல் போன்றவை நமக்குள் இனம்புரியாத பயபீதி பேதியியலை உண்டு பண்ணுவதும் நாம் புரிந்து கொள்ளக் கூடியதே…

…உதாரணத்துக்கு  கீழ்கண்டவற்றைப் படித்து, அவை உங்கள் மூளையில் மயக்கத்தையும், அடிவயிற்றுக் கலக்கத்தையும் உண்டுபண்ணுவதை உணர்கிறீர்களா:

முதல் அடுக்கு: ஓஸொன்ந்யூட்ரினோ!! அணுசக்தி!!! கதிரியக்கம்!!!

இரண்டாம் அடுக்கு: ஞாநி! உதயகுமார்!! வைக்கோ வீரர்!!!

மூன்றாம் அடுக்கு: நோம் சாம்ஸ்கி! பச்சைமூத்திரம்*!! திராவிடம்!!!

பயபீதி எப்படி இருக்கிறது?

மேலும் அணுசக்தி பற்றி ஒரு அணுவைக் கூட அறியாதவராக நீங்கள் இருந்தால்… ங்கொம்மாள… ஓட்றா டேய்… கக்கூஸ் எங்கடா! :-(
-0-0-0-0-0-0-0-

பிஸ்ஃபினோல் பற்றி பல்லாண்டுகாலமாகப் பல ஆய்வுகள் நடந்திருக்கின்றன. பிஸ்ஃபினோல் பற்றி தேவையற்ற, உண்மைக்குப் புறம்பான பல செய்திகள் (=கேன்ஸர்!) பரப்பப் பட்டாலும் – நம் நாடு உட்பட பல நாடுகள், தேவைக்கு மிக அதிகமான எச்சரிக்கை உணர்ச்சியுடன் இதனைக் கட்டுப்படுத்தித்தான் வருகின்றன. (பார்க்க: Microwaving food in plastic: Dangerous or not?   –    — Bisphenol A diglycidyl ether – IARC Monograph — International Agency for Research on Cancer (IARC) – Summaries & Evaluations – BISPHENOL A DIGLYCIDYL ETHER (Group 3))

இருந்தாலும் சிலவருடங்களுக்கு ஒரு முறை இம்மாதிரி பிஸ்ஃபினோல் சேர்மங்களைப் பற்றி, பயபீதி வதந்திகள் கிளப்பப்படும். சுவாரசியத்துடன் அவை கிண்டப்பட்டுப் பரிமாறப் படும். அடுத்த பயபீதிப் பப்பரப்பா வரும்வரை இது நடக்கும்.

நானே இந்த பிஸ்ஃபினோல் பயபீதி பற்றி முட்டாக்கூவான்கள் அனுப்பிய மின்னஞ்சல்களை, குறைந்த பட்சம் இரண்டு முறையாவது வறுத்தெடுத்திருக்கிறேன்.

…இப்போது இந்தக் கூவான்கள் வரிசையில் அதற்குத் தேவையான தகுதியுடன்/மூளையுடன் (=0) ஐக்கியமாகியிருப்பது விடுதலைக் கழுதைகள்!

-0-0-0-0-0-

சரி.

இந்த பிஸ்ஃபினோல் பற்றி – அதற்கும் தலைமுடி உதிர்தலுக்கும்(!) உள்ள தொடர்பு பற்றி ஒரு நிறுவனம் ஆராய்ச்சி செய்கிறது.

இந்த ஆராய்ச்சி(!) முடிவுகளை வைத்துக்கொண்டு அது, ஒரு ஆய்வு ஆவணத்தையும், ப்ரெஸ் ரிலீஸ் (ஊடகச் செய்திக் குறிப்பு) ஒன்றையும்  அது வெளியிடுகிறது.

இந்த குறிப்புகளை வைத்துக்கொண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா தினசரி, ஒரு பத்தியை ஒப்பேற்றுகிறது.

இந்த ஒப்பேற்றலை வைத்துக்கொண்டு, யுவகிருஷ்ணா போல ஈயடிச்சான் காப்பியடிக்கப்பட்ட  இன்னுமொரு திராவிடத்தனமாகத் திரிக்கப்பட்ட ஒப்பேற்றலைச் செய்கிறது, விடுதலை.

இந்த ஒப்பேற்றலைப் பார்த்து பயபீதியும் ஆக்ரோஷமும் அடைந்த நான், இந்தப் பதிவு எழவை தேவைமெனெக்கெட்டு எழுதிக்கொண்டிருக்கிறேண்.

சரி, என்ன மசுத்துக்குத்தான் இதில் பிரச்சினை?

-0-0-0-0-0-0-0-
அம்மணர்களே, அம்மணிகளே!

இந்த விவகாரம் முழுவதுமே பிரச்சினைகளின் அணுவகுப்புதான்!

0. இந்த ஆராய்ச்சியின் முடிவு: பிஸ்ஃபினோல் உள்ள ப்லாஸ்டிக் டப்பாடப்பிகளிலிருந்து உணவுண்பவர்களுக்கு (தலை)மயிருதிர்தல் அதிகம். Oh what a hair-raising story! :-(

1. இந்த ஆராய்ச்சியைச் செய்தது ஹேர்லைன் எனும் பெங்களூர் நிறுவனம் (Hairline International Hair Clinic and Research Centre, Bangalore); இது கூடுவுட்டுக்கூடுபாயும் சித்துவேலைகளைப் போல – மண்டைவிட்டு மண்டைபாயும் மசுத்தைப் பற்றிக் கவலைப்படும் நிறுவனம். வாலிபவயோதிகப் பகுத்தறிவாளர்களுக்கு உள்ள வாழ்க்கைரீதியான தலையாய பிரச்சினை என்பது மண்டையில் முடி இருக்கிறதா என்பதுதான் என்பதால் – இந்த நிறுவனம் அமோகமாக, பலப்பல கிளைகளுடன் வளர்ந்திருக்கிறது.

2. இந்த நிறுவனத்தை அணுகுபவர்கள், வாடிக்கையாளர்கள் – மசுர்முதல் வாதிகள் மட்டுமே – என்பதைத் தாங்கள் முதற்கண்மசுர் புரிந்துகொள்ளவேண்டும்; இம்மாதிரி மாற்றுமசுர் திறனாளிகளை வைத்துக்கொண்டுதான், இவர்களை மட்டுமேதான் வைத்துக்கொண்டு இந்த நிறுவனம் தன் மகாமகோ ஆராய்ச்சியைச் செய்திருக்கிறது. (இந்த மசுர்ப்பிடுங்கி நிறுவனத்துக்கு வெளியே ஆனந்தமாகப் பலர் தலைமுடியுடன், முடியில்லாமல் உலவிக்கொண்டிருப்பது, இதன் ஆராய்ச்சியில் படவேயில்லை!)

3. தங்கள் நிறுவனத்துக்கு வந்துள்ள மசுர் மோகிகளை வைத்துக்கொண்டு, அதுவும் விழுந்த/உதிர்ந்த முடிகளை ஒவ்வொன்றாக எண்ணி,  ஒரு ஆராய்ச்சி எழவைச் செய்து, கன்ட்ரோல் ஸாம்பிள் டேடா என ஒரு  எழவும் பார்க்காமல் ஒரு ஆராய்ச்சியை ஒப்பேற்றியிருக்கிறது இந்த மசுர் நடும் நிறுவனம்!

4. ஆக – வெகு சுலபமாக ப்லாஸ்டிக் டப்பாமுதல்வாதத்தையும், மசுருதிர்தலையும் இணைத்து ஒரு ஆராய்ச்சி முடிவெழவைச் செய்திருக்கிறது இந்த நிறுவனம்.  (பார்க்க: Association of Bisphenol A with Hair Loss in Indian Patients.)

5. இந்த முடிவுகளை வைத்துக்கொண்டு, கொஞ்சம் விஸ்தாரமாக டைம்ஸ் தினசரி, ஒரு பத்தியை வெளியிடுகிறது; இதனை மட்டும் படித்தால், ஒரு சரியாகச் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் முடிவாக, அதன் விளைவுகளைக் கறாராக ஆய்வதாக ஒரு தோற்றம் ஏற்படுகிறது. ஆனால், இந்தப் பத்தியும் ஒரு அரைகுறைத்தனம்தாம். (பார்க்க: Eating out of plastic box? You could lose your hair)

6. இப்போது விடுதலை, மினுக்கிக்கொண்டு, மேற்கண்ட பத்தியை கமுக்கமாகக் காப்பியடித்து, ஒரு திராவிடலைத்தனமான அறிவியல் அவியல் கட்டுரையை வெளியிட்டு அற்ப பயபீதியைக் கிளப்புகிறது! (பார்க்க:  பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வைக்கப்படும் உணவுகளை உண்பதால் முடி உதிர்தல் பிரச்சினை: ஆய்வில் தகவல்)

-0-0-0-0-0-0-0-

ங்கோத்தா, அந்த இனமானப் பகுத்தறிவையே விடுங்கள், வெறும் சாதா அறிவைப் பரப்பக்கூடிய அருகதைகூட ஒரு சுக்குக்கும் இல்லாத ஒரு குசுக் கும்பல், ஆரியம்-திராவிடம் என ஒரு மதிக்கக்கூடிய ஆராய்ச்சியாலும் ஆதரிக்கப்படாத கவைக்குதவாத வெறுப்புரைப் பரப்பியங்களைத் தொடர்ந்து பரப்பிக்கொண்டே இருப்பதுதான் சோகம்.

அதைவிடப் படுமோசமான சோகம், இந்தக் கும்பல் கல்வி நிறுவனங்களையும் மகாமகோ அமோகமாக நடத்திக் கொண்டிருப்பதுதான்!

அதன் மாணவர்களைப் பொறுத்தவரை, என் முழிபெயர்ப்புப் பேராசான் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதக்கூடுவதைப் போல:  For them, good want! (=அவர்களுக்கு நன்றாக வேண்டும்!)

நன்றி.

* GreenPiss

-0-0-0-0-0-0-

விடுதலை அறிவியல் தொடர்பான பதிவுகள்:

2 Responses to “அட்ச்சு வுடு தல வீரமணி ஸ்பெஷல்: மொட்டத்தலைக்கும், மசுத்துக்கும் பகுத்தறிவு முடிச்சுபோடுவது எப்படி?”


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...