வேற்றுக்கிரகவாசி ‘ஏலியன்’ டகீல் புரளியைக் கிளப்பும் திராவிடப் பகுத்தறிவுத் திலக ‘விடுதலை’

October 8, 2017

இந்தக் தெராவிடனுங்களுக்கு மேல்மாடிகாலி அத்தொட்டு அவ்னுங்கோ, மூளயேயில்லாத பரிசுத்தக் கூவானுங்கோண்றது அல்லாருக்கும் தெர்யும் நைய்னா… ஆனாக்க அந்தக் கூமுட்டெங்கோ, இப்படிப் படுமோசமாக்கீற முட்டாக் கபோதி அரெகொறெங்கோண்ற வெஷயம், றொம்ப பேர்க்குத் தெர்யாதுன்னிட்டு இந்த பதிவு எளவ எள்தறேன், கொஞ்சம் மன்னிச்சுக்குங்கபா… (+மன்னிச்டுங்கம்மா!)

…என்க்கு கோவம் தாஸ்தியாய்டிச்சி… நான் வேற இன்னாதாம்பா ஸெய்வேன், ஸொல்ங்க… இந்த ஸோமாறீங்கோ ஸயன்ஸையும் வுட்டுவெக்க மாட்டேன்றானுங்க்ளே! ரவுண்டு கட்டிக்கினு அல்லா (PBUH)  ஸப்ஜெக்டுங்களயும் அடிக்கறானுங்களேபா!

…இத்துல இன்னொரு வெஷயமும்கீது, ஸர்யா? அது இன்னாக்காட்டீ – என்னோட உசுரினும் உசுரான மசுறிலும் மசுறான மெட்றாஸ் பாஷையோட டச் வுட்டுப்போவக்கூடாது பாருங்க…. அத்தொட்டுதாம்பா கபால்னு இப்டீ எள்தறேன்!

இத்தப் பட்ச்சிட்டு மண்டேல அட்ச்சிக்கிட்டே சிர்ச்சி சிர்ச்சி வொங்க்ளுக்கு ஹார்ட்டு அட்டாக்கு வந்திட்ச்சின்னா, அத்துக்கு நான் பொற்ப்பில்ல, இன்னாத்த நாண் சொல்றது, ஸர்யா?

ஏனெனில் – #இதுதாண்டாதிராவிடப்பகுத்தறிவு!

-0-0-0-0-0-0-0-

உலகின் முதல் வேற்றுகிரகவாசி: பிரேசில் காவல்துறையினர் ஒளிப்படம் வெளியிட்டனர்!

:-) இந்த விடுதலைக்கட்டுரை எழவை – முழுவதும் தேவைமெனெக்கெட்டு வெட்டியொட்டியிருக்கிறேன்; முடிந்தால் படித்து இன்புறவும்.

புதன், 04 அக்டோபர் 2017 15:50

பிரேசில், அக்.4 உலகின் முதல் நிஜ வேற்றுகிரகவாசி என பிரே சில் காவல்துறையினர் ஒளிப் படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

பிரேசில் காவல்துறையினர் வெளியிட்ட இந்த ஒளிப்பட மானது வேற்றுகிரகவாசி குறித்து பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுவரும் அமைப்பினர் தங்களின் இணை யதளத்தில் பதிவேற்றியுள்ளனர்.

பிரேசிலின் பெர்குமெட்ர் பகுதியில் வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகள் நடைபெற்றுவருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த பகுதிக்கு விரைந்த காவல் துறையினர் நள்ளிரவில் குறித்த உருவத்தை தங்களது மொபைல் போனில் ஒளிப்படமெடுத்துள் ளனர்.

ஆனால் குறித்த ஒளிப்படம் புகழ்பெற்ற திரைப்படக் காட்சி போன்று இருப்பதாகவும், இது திருத்தப்பட்ட ஒளிப்படம் எனவும் சிலர் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் 13 ஆம் தேதி பெர்குமெட்ர்  பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் முதலில் குறித்த உரு வத்தை கண்டுள்ளனர். உடன டியாக தங்களிடம் இருந்த போ னில் பதிவு செய்துள்ளதாக காவல்துறைதரப்பு தெரிவித்துள் ளது. அந்த வேற்றுகிரக உரு வத்தின் நீண்ட கைகளில் வெறும் 3 விரல்களே இருந்துள்ளது. வெள்ளை நிறத்தில் இருந்த அந்த உருவம் நல்ல உயரமாக இருந்தது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அச்சம் காரண மாக அந்த உருவத்தை நெருங் காமல் காவல்துறையினர் அங் கிருந்து கடந்து சென்றுள்ளனர்.

மேலும் அந்த உருவம் அப் பகுதியில் சுற்றித்திரிவதாக இளைஞர்கள் சிலர் மீண்டும் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

-0-0-0-0-0-

பகுத்தறிவுக் திலகங்களின் விடுதலைக் கொசுத்தொல்லை தாங்கவே முடியவில்லை! என்ன செய்வது சொல்லுங்கள். :-(

உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு, The Only Rationalist Daily News Paper, … …” …என்றெல்லாம் தங்களைப் பற்றிக் கூசாமல் புளுகிக்கொள்ளும் இந்தப் பகுத்தறிவுப் பதர்கள், இம்மாதிரி அற்பக் குப்பை வதந்தியைப் பரப்புவதற்கு முன்னர் என்ன செய்திருக்கவேண்டும்?

குறைந்தபட்சம் ஹோம்வர்க் செய்திருக்கவேண்டும். பகுத்தறிவு என்றால் அது என்ன மயிர் என யோசித்திருக்கவேண்டும். பின்னர் என்ன மசுத்துக்குத் தங்களைத் தாங்களே பகுத்தறிவு உடையவர்கள் எனக் கேனைத்தனமாகச் சொல்லிக்கொண்டு கழுதைபோலக் கனைத்துக்கொண்டு அலைகிறோம் என யோசித்திருக்கவேண்டும். பின்னர் ஆய்ந்து அறிந்து – இப்புரளிகளை அக்குவேறு ஆணிவேராகப் பிய்த்து எறிந்திருக்கவேண்டும்.

ஆனால் – அவர்களுடைய பிரச்சினை என்னவென்றால் – அவர்கள் பச்சைத் திராவிடர்கள்! :-(

ஆக – உட்கார்ந்த இடத்திலிருந்தே – இந்த விடுதலைக்காரர்கள் பகுத்தறிவுடன் இச்செய்தியை லவட்டிய இடம் – இங்கிலாந்தில் இருந்து வரும் ‘தெஹெல்கா’ அல்லது ‘நக்கீரன்’ அல்லது ‘விகடன்’ போன்ற பத்திரிகை; நம்பகத் தன்மை என்பதே துளிக்கூட அற்ற பப்பரப்பாக்களும் கிளுகிளுப்புகளும் நிறைந்த மஞ்சள் பத்திரிகை. டெய்லிஸ்டார். டேப்லாய்ட் வகை. சுட்டி.

இந்த வெட்டியொட்டித் திருடல்,  கூக்ல் ட்ரேன்ஸ்லேடரை உபயோகப்படுத்தல் போன்ற சாதாரண திருடல்வகைகளைக் கூடச் சரியாகச் செய்யத் தெரியவில்லை – இந்த விடுதலை அரைகுறைகளுக்கு…

இதனால் பல திடுக்கிடவைக்கும் நகைச்சுவைகள்!

இந்தத் திருட்டுத்தனத்தில் முதல்கோணல் என்னவென்றால்… நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் – ஹிந்திக்கு எதிராகச் சதிராட்டம் – பிராமணர்கள் அனைத்துப் பதவிகளையும் தொழில்களையும் கல்விசாலை இடங்களையும் ஆக்கிரமிப்பதை எதிர்த்துச் சேறாட்டம் – இசுடாலிருக்கு ஜால்ரா குதிராட்டம் … … போன்ற அதிமுக்கியமான வேலைகள் இருக்கும்போது இம்மாதிரி அதி அறிவியல்பூர்வமான காட்டுரைகளுக்கு ஏன் வரவேண்டும்?

அறிவியலுக்கும் திராவிடத்துக்கும் என்ன சம்பந்தம்? பேசாமல் வழக்கமாக உளறும் விஷயங்களைத் தொடர்ந்து உளறிக்கொண்டு ஆனந்தமாகப் பகுத்தறிவுக் காலட்சேபம் செய்துகொண்டிருக்கலாமே!

பிரச்சினை என்னவென்றால் — இந்தத் திராவிடத் துப்புக்கெட்டவன்களுக்கு அர்ஜெண்டினாவுக்கும் ப்ரேஸிலுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. அடிப்படை பூகோள அறிவில்லாத அறிவிலிகள், நாலு வார்த்தைகளை எழுத்துக்கூட்டிப் படிக்க முனைப்பில்லாத பெருந்தகைகள் — தங்கள் வெற்றுக் கோள மூளையை வைத்துக்கொண்டு முட்டாக்கூத்தனமாகப் பகுத்தறிவு கிகுத்தறிவு எனப் பினாத்துகிறார்கள்! சாவுக் கிராக்கிகள்!

டெய்லிஸ்டார் புரளி சொல்வது – இந்த நகைச்சுவை ஏலியன் விஷயம் அர்ஜெண்டினாவில் நடந்ததாக… ஆனால் நம் பகுத்தறிவுக் திலகங்கள் பகர்வது?? :-)

விடுதலைத் திராவிடர்களானவர்கள், முதலில் தங்கள் பூகோள அறிவை அதன் தற்போதைய அளவான 0விலிருந்து — சராசரி சாதாரண  மானுட அளவாக இருப்பதில் அதிகபட்சம் 0.00000000000000000000001% அளவுக்காவது அதிகப்படுத்திக்கொள்ளவேண்டும். இது அவர்களுக்கு மிகவும் கஷ்டம்தான், பாவம்.

ஏனெனில் திராவிடர்கள் மண்டையில், மூளைக்கு இட ஒதுக்கீடு இல்லை, என்ன செய்வது சொல்லுங்கள். :-(

-0-0-0-0-0-0-

பாவி திராவிடர்கள், சொதப்பி விட்டார்கள்! …குறைந்த பட்சம் ஒரு கிண்டலையாவது செய்திருக்கலாம். ஆனால் அதைச் செய்வதற்கும் கொஞ்சமாவது மூளை வேண்டுமே!

அரைகுறைகள் ஆராய்ச்சி(!) செய்கிறார்கள் என்பதை விலாவாரியாக ‘வேற்றுகிரகவாசி குறித்து பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுவரும் அமைப்பினர் தங்களின் இணை யதளத்தில் பதிவேற்றியுள்ளனர்‘ என எழுதுகிறார்கள். இது உலகமெலாம் திராவிடர முட்டாக்கூவான்கள் பரவி வருவதைப் பற்றி, குறிப்பாக ‘பிரேஸில்(!) நாட்டில் திராவிடம்’ பற்றியெல்லாம் புளகாங்கிதமுற்று எழுதுவாக வைத்துக்கொள்வதோ என்ன எழவோ!

அதே சமயம், இந்த ஏலியன் அரைகுறைத்தனத்தைப் பற்றி உண்மையாக எழுதுபவர்களைப் பற்றி – ‘ஆனால் குறித்த ஒளிப்படம் புகழ்பெற்ற திரைப்படக் காட்சி போன்று இருப்பதாகவும், இது திருத்தப்பட்ட ஒளிப்படம் எனவும் சிலர் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.‘  என எழுதுகின்றனர். அதாவது, இந்தச் ‘சிலர்‘ அணுகுமுறை சந்தேகாஸ்பதமான முறையில் இருப்பதாக ஒரு தொனி. ஆகவே பொருட்படுத்தத் தக்கதாக இல்லையெனும் அறிவு. நன்றி.

சரி. இவை இரண்டு விதமான எதிரெதிர் செய்திகள் – உங்கள் மசுர் நிறைந்த மண்டையின்மூலமாக, பகுத்தறிவுத் திராவிடர்களாகிய நீங்கள் என்னதான் சொல்லவருகிறீர்கள்?

இங்குதான் – மொட்டையாகவும் திராவிட மொண்ணைத்தனத்துடனும் செய்திக்கட்டுரை முடிவு வருகிறது! — ‘இருப்பினும் அச்சம் காரண மாக அந்த உருவத்தை நெருங் காமல் காவல்துறையினர் அங் கிருந்து கடந்து சென்றுள்ளனர். மேலும் அந்த உருவம் அப் பகுதியில் சுற்றித்திரிவதாக இளைஞர்கள் சிலர் மீண்டும் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

ஒரு மசுரு பகுத்தறிவுசார் முடிவுக் கருத்தும் இல்லை. பேடிகள். திராவிட இளைஞர்கள் முட்டாக்கூவான்களாக மட்டுமல்லாமல், கோழைகளாகவும் இருக்கவேண்டும் என்பது இவர்களின் ஆழ்ந்த, அறிவார்ந்த அவா போலும். வேறென்ன சொல்ல.

…திராவிட இளைஞ இனமானப் பகுத்தறிவு அடலேறுகள், ஏலியன் வேதாள பேய்பிசாசுகளுக்குப் பயந்துகொண்டு – பேதியெடுத்து (ஆனால், ஆஸ்பத்திரிக்குச் செல்லாமல்) உடனடியாகக் காவல் துறையிடம் தஞ்சம் அடையவேண்டும் எனவா சொல்கிறார்கள்? இந்த அற்பக் கோமாளிகளால், வரும் காலங்களில் தமிழகக் காவல்துறையினர் படக்கூடிய பாட்டை நினைத்தால் பரிதாபமாகவே இருக்கிறது. காவல் நிலையங்களில் ‘அம்மா ஃபினாயில்’ (அல்லது ‘கலைங்கர் ஃபினாய்ல்’) திட்டம் அமலாக்கப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லையோ?

-0-0-0-0-

எப்படிப்பட்ட வாய்ப்பு இது? ஒரு விதமான அடிப்படையும் அற்ற மூடநம்பிக்கைகளையும் அரைகுறைத்தனங்களையும் தரவுகள் பூர்வமாக எதிர்க்க – ஆணித்தரமான அறிவியல் கோட்பாடுகளை முன்வைக்கக் கிடைத்த தருணத்தை – உளறிக்கொட்டி, தங்கள் முட்டாக்கூத்தனத்தை மண்டையில் உள்ள மகத்தான வெற்றிடத்தை வெளிப்படுத்திக்கொண்டு விட்டார்கள். ஆனால், இது ஒரு வகையில் தமிழகத்துக்கும் நல்லதுதான். திராவிடர்களின் உண்மை சொரூபம் (= 0)  இதைவிடப் பட்டவர்த்தனமாக வெளியே வரமுடியாதல்லவா?

சரி. திருடிய இடங்கள் ஆங்கிலத் தளங்கள். நமக்கோ ஆங்கிலம் வராது. ஆகவே தமிழில் இவ்விஷயம் குறித்து வந்துள்ள தரமான புத்தகங்களையாவது படிக்கலாமே. நண்பர் அருண் நரசிம்மன் அவர்கள் எழுதியுள்ள அழகான சிறு புத்தகம் ஒன்று இருக்கிறதே! (ஏலியன்கள் இருக்கிறார்களா?)

ஆனால், விடுதலைத் திராவிடர்கள் பிரச்சினையும் புரிகிறது. ஏனெனில், தமிழில் வந்திருக்கும் புத்தகங்களைப் படிக்கவேண்டுமென்றால், தமிழில் நாலு வார்த்தை படிக்க, புரிந்துகொள்ள முடியவேண்டுமே! அதுவும் சுட்டுப்போட்டாலும் வராதே! பிரச்சினை, மகாமகோ பிரச்சினை…

மாறாக, வாயோர நுரைதள்ள வெறுப்பியத்தைப் பரப்பி, அதில் குளிர்காய்வது மிகமிக எளிது. அதற்காகத்தானே அய்யன்மீர் ‘விடுதலை’ இருக்கிறது. வாழ்க!

ஏனெனில் – #இதுதாண்டாதிராவிடப்பகுத்தறிவு!

உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு, The Only Rationalist Daily News Paper, … …”  வாழ்க!

-0-0-0-0-

10 Responses to “வேற்றுக்கிரகவாசி ‘ஏலியன்’ டகீல் புரளியைக் கிளப்பும் திராவிடப் பகுத்தறிவுத் திலக ‘விடுதலை’”

  1. Anonymous Says:

    அய்யா,இதுபோன்ற அரிய அறிவியல் செய்திகளை அள்ளித்தரும் உலகின் ஒரே பகுத்தறிவு நாளேட்டைத் தினமும் படித்து அடையும் வாசிப்பின்பத்தை விவரித்தல் அரிது, உங்களுக்கேன் பொறாமை? அவ்வப்போது இந்த நாளேட்டைப் படிக்கும் உங்களால் அன்றாடம் படிக்க முடியுமா? இதை ஒரு பகுத்தறிவு திராவிடச் சவாலாக உங்கள்முன் வைக்கிறேன்.

  2. Sridharan S Says:

    அய்யா,இதுபோன்ற அரிய அறிவியல் செய்திகளை அள்ளித்தரும் உலகின் ஒரே பகுத்தறிவு நாளேட்டைத் தினமும் படித்து அடையும் வாசிப்பின்பத்தை விவரித்தல் அரிது, உங்களுக்கேன் பொறாமை? அவ்வப்போது இந்த நாளேட்டைப் படிக்கும் உங்களால் அன்றாடம் படிக்க முடியுமா? இதை ஒரு பகுத்தறிவு திராவிடச் சவாலாக உங்கள்முன் வைக்கிறேன்.


    • நீங்கள் சுட்டிய தட்டச்சுப் பிழைகளைத் திருத்திக்கொண்டேன், நன்றி. :-)

      • Sridharan S Says:

        சில வரிகளில் பின்னூட்டமிடும் நான், ஒவ்வொரு எழுத்தாகத் தட்டச்சு செய்து தரவேற்றிய பிறகு படித்துப் பார்த்தால் அந்த சில வரிகளிலேயே பிழைகளைச் செய்திருப்பேன். ஆனால், ஆயிரம் சொற்களைத் தாண்டிய தங்களது பதிவுகளில் கூடத் தட்டச்சுப் பிழைகளைக் காண்பது அரிதே! இன்றைய சூழலில், சிறந்த மொழியாளுமை மற்றும் உண்மையை உரத்துக்கூறும் நெஞ்சுரம் கொண்ட (எழுத்தாளர்கள் உள்ளிட்ட) மிகச்சிலரில் தாங்களும் ஒருவர் என்பதைத் தங்களைப் படிக்கும் அனைவரும் அறிவர். இங்கே நன்றிக்கடன்பட்டவர்கள் கற்றுக்கொள்பவர்களே, நன்றி!


      • அய்யா ஸ்ரீதரன், ‘ஆ’ என்று சொல்வதைத் தவிர வேறுவழியில்லை.

        மற்றபடி, தொடர்ந்து என் தவறுகளைத் திருத்தவம். நன்றி.

      • க்ருஷ்ணகுமார் Says:

        பாட்டெழுதிப் பேர்வாங்கும் புலவர்கள் இருக்கும் உலகில் குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கத் தவம் இருக்கும் புரலவர்களும் இருக்கிறார்கள் என் செய :-)

        திருத்தவம்

        திருத்தவும்

        ஆயிரம் பொற்காசு மைனஸ் 1

        நன்றி

  3. Prabhu Deva Says:

    சரியாக நினைவில்லை. இவர்கள் இதற்கு முன் ஒருமுறை “தி ஆனியன்” பத்திரிகையில் வந்ததை சீரியசாக மொழிபெயர்த்துப் போட்டார்கள். பகுத்தறிவு அடிக்கடி பல்லிளிக்கும். தமிழகத்தில் முழுநீள நகைச்சுவை பத்திரிகை இல்லாத குறையை விடுதலை தான் தீர்த்துவருகிறது.

  4. Sivakumar Viswanathan Says:

    இதை எழுதியவர் உருவத்தை ஒரு metaphor ஆக உபயோகித்திருக்கிறார். இது ஒரு உள்குத்து கட்டுரை.
    அதாவது இவர்கள் பகுத்தறிவு ஒரு உருவமாக தெளிவில்லாமல், இலக்கில்லாமல் சுற்றித்திரிந்துகொண்டே இருக்கும். பொதுவாகவே மக்களிடம் இருந்து alienated ஆக இருக்கும். அவ்வப்போது வெளிப்படும். அதைப்பார்த்து பயந்து காவல்துறை, நிர்வாகம் கடந்து போய்விடும். பொதுமக்கள் மீண்டும் மீண்டும் புகார் செய்துகொண்டே இருப்பார்கள். அதை வைத்துக்கொண்டு யாரும் ஒரு முடிவுக்கும் வரமுடியாது.
    முக்கியமாக அந்த வேற்றுகிரக உரு வத்தின் நீண்ட கைகளில் வெறும் 3 விரல்களே இருந்துள்ளது…


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...